Roar தமிழ் – ஒரு வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.

2019ல் மீள்வடிவம் பெற்ற Roar தமிழ் digital ஊடகமானது இத் தமிழர் திருநாளில் முதலாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாகிறது. 

“தகவல் பகிரும் பல்வேறு ஊடகங்கள் உங்கள் வசம் உலாவரும் நிலையில், டிஜிட்டல் தமிழில் அறிவுசார் தகவலை பகிரும் ஒரே சமூகவலைதள ஊடகமாக roar தமிழ் காத்திரமானதொரு மாற்றத்தை நிகழ்த்திக்காட்டும்”

என நாம் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்ததன் படி, 2019 தமிழர் திருநாளில் இருந்து தமிழை உலகிற்கு உலகை தமிழிற்கு எனும் தொனிப்பொருளில் தமது புதிய பயணத்தை ஆரம்பித்து, இலங்கையை சார்ந்த ஆக்கங்களோடு எமது தமிழ் மண்ணின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் சார்ந்த ஆக்கங்களையும் மேலும் உலக அளவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பையும், அறிவுசார் தகவல்கள் பலவற்றையும் இந்த ஒரு வருடத்தில் படைத்திருப்பதை பெருமையுடன் நினைத்துப்பார்க்கிறோம்.

Roar தமிழின் பேஸ்புக் பக்கத்தில் மாத்திரமின்றி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப் தளத்தில் நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவானது, நாம் காத்திராமான பாதையில் பயணிப்பதை எமக்கு உணரவைத்து ஊக்கமளித்தது.

இதோ! எமது இந்த ஒரு வருட பயணத்தில் நிகழ்த்திய சாதனைகளுல் சில…

புதிய வடிவில் தகவல்களை வாசகர்களிடம் சேர்க்கும் நோக்கில், சிறப்பான வடிவமைப்புடன் கூடிய சிறு காணொளிகளை வாக்கிய வடிவில் அமைத்து (Text based videos) பார்வையாளர்களுக்கு வழங்கினோம். பின்னாளில் அவை வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குரல் பதிவேற்றப்பட்டும் வெளியாகத் துவங்கியது. இலகுவாகவும் விரைவாகவும் தகவல் பெற உதவும் Infographic  எனும் வடிவமைப்பு முறையிலான ஏராளமான ஆக்கங்களை செய்தோம்.  இன்ஸ்டாகிராமில் எமது ஆக்கங்களை காட்சிப்படுத்தினோம். அதன் விளைவாக குறைந்த சில மாதங்களிலேயே  8000+ ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இணைந்துகொண்டனர். இப்போதும் தினம் தினம் பல புதிய வாசகர்கள் இணைந்தவண்ணமுள்ளனர்.

எமது roar தமிழில் வாசகர்களும் பங்காளர்களாக வேண்டும் என்கிற நோக்கில், roar top contributor எனும் பரிசுப்போட்டி, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டி நிகழ்வானது கட்டுரை மற்றும் ஆவணப்படம் எனும் இருபிரிவுகளில் அறிமுகம் செய்யபட்டது. பலரும் விருப்பத்துடன் போட்டிகளுக்கு தமது படைப்புகளை அனுப்பிய வண்ணமுள்ளனர்.  

இவை தவிரவும் roar digital media நிறுவனத்தின் தமிழ் பிரிவாகிய நாம் பல முன்ணணி நிறுவங்களுடன் இணைந்து அவர்களது அணுசரனையுடன் பல்வேறு ஆக்கங்களை எமது வாசகர்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிவந்துள்ளோம்.

இலங்கையை முன்நிறுத்தி களமாடும் விருந்தினர்களுடன் கதைபேசும் வலைகாணல் எனும் புதிய நிகழ்ச்சியையும், youtube/roarதமிழ் வாயிலாக நாம் அறிமுகம் செய்திருந்தோம்.

இத்தகைய பல்வேறு முயற்சிகளின் பலனாக அறிவுசார் தகவல்களை தமிழில் வழங்கும் இலங்கையின் முன்னணி மற்றும் ஒரே தமிழ் டிஜிட்டல் ஊடகமாக நாம் மகுடம் சூடியுள்ளோம்.

இச்சந்தர்ப்பத்தில், எம் வாசகர்களுக்கும் எமை பின்தொடரும் விசுவாசிகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இனிவரும் காலங்களில் தமிழில் பல புதிய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு சுவாரஸ்யமானதும் காத்திரமானதுமான படைப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதையும் அறியத்தருகிறோம்.

அறிவுசார் தகவல்களை தமிழ் மக்களிடையே சேர்க்கும் எமது எண்ணத்திற்கு வலு சேர்த்து ஒத்துழைப்பு நல்கிய, தரம் மிக்க எழுத்தாளர்களை கொண்ட எம் ஆசிரியர் குழுவினருக்கும், எமது பேஸ்புக் வாயிலாக எமைப் பின்தொடரும் 2 லட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேலான விசுவாசிகளுக்கும் மற்றும் தினம் தினம் எம் ஆக்கங்களை வாசித்து பின்னூட்டமிடும் எமது வாசகர்களுக்கும் எமது மனப்பூர்மான நன்றிகள்.

உங்கள் ஆதரவு என்றென்றும் தொடரட்டும்!

நன்றி,

roar தமிழ்.

Related Articles

Exit mobile version