உலக சுகாதார அமைப்பை (WHO) பொறுத்தவரையில், உலக சனத்தொகையில் 15% ஆனோர் மாற்றுத்திறனாளிகள், அவர்களில் 2-4% ஆன மக்கள் கவலைக்கிடமான நிலையில் வாழ்கின்றனர். ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை ஒதுக்கி வைப்பதென்பது பலருக்கு வேடிக்கையாக தோன்றும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மாற்றுத்திறனாளிகளின் நிலை இதுவே.
ஏற்கனவே பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் தமது சமத்துவத்திற்காக போராடிவரும் நிலையில் மாற்றுத்திறனாளி பெண்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது. அவர்கள் வெவ்வேறு நிலைகளில் களங்கத்தையும் புறக்கணிப்பையும் அனுபவித்த வண்ணம் உள்ளனர்.
வேலைத்தளங்களில் மாற்றுத்திறனாளிகள் சமமற்று நடாத்தப்படுகின்றனர். பொறிமுறையில் இருக்கும் பக்கச்சார்புத்தன்மை காரணமாக திறமைமிக்க தம் சகாக்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.
மாற்றுத்திறனாளிகள் மிக மோசமான சுகாதார விளைவுகளை அனுபவிக்கின்றனர். பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் இருந்து தீவிரமாக ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், போதிய கல்வித்தகுதியை பெற இயலாமல் அமைப்பினுள்ளாகவே ஓரங்கட்டப்படுகின்றனர், அத்துடன் அதிக வறுமையின் கொடுமையை அனுபவிப்பதும் இவர்களே. இதற்கு இலங்கை ஐ.நா.பெண்கள் அமைப்பு மாற்றுத்திறனாளியான பெண்களை குறித்து 2019ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை சான்று பகர்கிறது.
இந்த பிரச்சினை பற்றி மேலும் ஆராயும் நோக்கில், மொரீஷியஸை சேர்ந்த சமூக-பொருளியலாளரும் பாலியல் ஆய்வாளருமான நளினி பர்ன் அவர்களை அணுகினோம். இவர் மனித உரிமைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் பார்வையில் பாலின சமத்துவத்திற்கான நிதியிடலில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். ஒரு பாலின சமத்துவ நிபுணராக பல நாடுகளில் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்றியுள்ளார் . அவற்றில் அண்மையில் இலங்கையில் ஐ.நா. பெண்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பாலின வரவு செலவு திட்டத்தின் மூலமாக தேசிய மாற்றுத்திறனாளிகளை உள்ளீர்த்தலுக்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்தமையும் அடங்கும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வலுவளிப்பது ஏன் அவசியமாகிறது, குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இது ஏன் முக்கியம்?
இது ஏன் முக்கியமானது என்றால் ஒவ்வொரு தனிநபருக்கும் உரிமைகள் உள்ளன. அவ்வுரிமைகள் மதிக்கப்பட வேண்டும், காக்கப்பட வேண்டும், அத்துடன் உணரப்பட வேண்டும். நாடுகள் அனைத்தும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாடுகளில் கையெழுத்திட்டிருந்தாலும், மாற்றுத்திறனாளிகளே தமக்காமான உரிமைகளுக்காக போராட வேண்டி உள்ளது.
2016ல் இலங்கை அரசு நடாத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மாநாட்டினை (CRPD) மேம்படுத்தவும் அங்கீகரிக்கவும் இவை உந்துசக்தியாக அமைந்தன. ‘நாமின்றி எமக்கில்லை’ என்ற சக்தி வாய்ந்த மகுடவாசகமானது மாற்றுத்திறனாளிகளை (PwDகள்) தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் வலுவூட்டும் துடிப்பான உறுதிமொழியாகும்.
மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறார்களே முடிவெடுத்தல் மற்றும் பொது நடவடிக்கைகளை எடுப்பதிலும் அதிகமாக பின்தங்கியுள்ளனர். அத்துடன் அவர்களே பொது வெளியில் பெரிதும் வெளிப்படாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தமது சொந்த அபிலாஷைகளுக்கு குரல்கொடுக்கவும், தமது கோரிக்கைகளை வகுக்கவும், தமது உரிமைகளை உணர எடுக்கப்படும் நடவடிக்கைகளை வடிவமைக்கவும் இயலுமானவர்களாக இருக்கவேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படாமையை தற்போதைய அரசு கட்டமைப்பானது எவ்வாறு உறுதி செய்கிறது?
சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் நிலையில், சர்வதேச மற்றும் பிராந்திய மட்டங்களில் அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கிடையிலான அரங்குகளில் பங்கேற்கிறது. மற்றும், மாற்றுத்திறனாளிகளின் ஆசிய பசிபிக் தசாப்தத்தின் (2013-2022) கீழ் குறித்த வாக்களிப்புகளை கொடுத்திருக்கின்றது..
முந்தைய பிராந்திய கடமைகளை அடுத்து “ஊனமுற்ற தன்மை குறித்த தேசிய கொள்கை” (NPD) 2003 வகுக்கப்பட்டது. 2014ல் NPDஐ செயல்படுத்த தேசிய ஊனமுற்றோர் செயல் திட்டம் (NAPD) ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2016ல் இலங்கை அரசு CRPDற்கு ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு அது CRPD அமுலாக்கம் குறித்து கட்டாய ஆரம்ப தேசிய அறிக்கையை தயாரித்தது. இந்த ஆரம்ப அறிக்கையில் பாகுபாடு இல்லாமையை உறுதி செய்வதற்கான திட்டமிடலில் கொள்கையின் பல கருவிகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
CRPDன் ஒப்புதலுக்குப் பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டாமை குறித்த பிரச்சினை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான தேசிய செயல் திட்டத்தில் (NAPPPHR) சேர்க்கப்பட்டுள்ளது. இது NAPPPHR 2017-2023 இல் இன்னும் விரிவாக உற்றுநோக்கப்பட்டுள்ளது.
PwD களுக்கு பாகுபாடு காட்டாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு 15 தனித்தனியான இலக்குப்பகுதிகள் உள்ளன. கட்டமைப்பில் இன்னும் இடைவெளிகள் உள்ளன. பாகுபாட்டை சட்டபூர்வ குற்றமாக மாற்றுவதற்கான ஊனமுற்றோருக்கான மசோதாவின் ஒப்புதலுக்கான வேலை தொடர்ந்து செயலில் உள்ளது.
- கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்பு குறித்து தங்கள் கருத்துக்கள் யாவை?
இலங்கையிலும், பல நாடுகளைப் போலவே, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கும் இடையே பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கூடுதலாக, வெவ்வேறு கிராமப்புறங்களுக்குள்ளும், மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. மக்கள் ஏழையாக இருக்கும்போது, சிறு வர்த்தகம் மற்றும் சேவைகளைத் தவிர்த்து, எந்த வணிகங்களை மேற்கொள்ள முடியும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது.
ஏனென்றால், சக்திமிக்க நுகர்வோரின் கொள்வனவு சக்தியும் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. கிராமப்புறங்களில் மிகக் குறைந்தளவிலான நேர்த்தியான வேலைகளும், குறைந்த வசதிகளுமே உள்ளன. கிடைக்கக்கூடிய பெரும்பாலான பணிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட இல்லை அத்துடன் ஆபத்தானவை.
எனவே, சுய வேலைவாய்ப்பின் மூலமாக நிறைவான வாழ்க்கைக்காக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆயினும்கூட இது பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி அதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலர் முதலில் பொருளாதார ரீதியாக செயற்படவே கூடுதலான சுமைகளை சுமக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டின் இலங்கை தொழிலாளர் அணி கணக்கெடுப்பின்படி, 12.9% ஆண்கள் மற்றும் 3.8% பெண்கள் “ஊனமுற்றோர் அல்லது பலவீனமானவர்கள்” என்பதால் பொருளாதார ரீதியாக செயலற்றவர்கள் என்று அறிவித்தனர். பெண்கள் மத்தியில் இயலாமை அதிகமாக இருந்தாலும் கூட, இங்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் தொகை மிகக் குறைந்த சதவீதமாக இருப்பது , , பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின்
ஆழத்தை இது விளக்குகிறது: அவர்கள் ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்புப் பணிக் கடமைகளை செய்கின்றனர். ஒட்டுமொத்தமாக, 5.9% ஆண்களுடன் ஒப்பிடும்போது 62.1% பெண்கள் வீட்டுப் பணிகளால் பொருளாதார ரீதியாக செயலற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- வேலைத்தளத்தில் உள்ளீர்ப்பதற்கான வெளியை முதலாளிகள் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?
வேலைத்தளத்தில் PwDகள் மற்றும் WwDகளை உள்ளீர்ப்பதற்கான வெளியை உருவாக்குவதற்கு வேலைத்தளங்களுக்கு மறுசீரமைப்பு தேவைப்படலாம். தகவல் ரீதியான அணுகல் தவிர பௌதிக ரீதியான அணுகல், வேலைக்கு சென்று வருவதற்கான வசதிகள், தேவையான உதவும் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், சுகாதார வசதிகள் உட்பட அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
PwD களுக்கு பணியிடமும் பணி நிலைமைகளும் ஏற்கத்தக்கதா? அதாவது சக தொழிலாளர்கள் பாகுபாடு காட்டக்கூடாது மற்றும் PwD களை ஒதுக்கக்கூடாது. பாலின உணர்திறன் மற்றும் மாறுபட்ட பணியிடத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஆண்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் இதன் பொருள். சில்லறை மற்றும் சேவைத் தொழில்களில், வாடிக்கையாளரின் விழிப்புணர்வு மேலும் உள்ளார்ந்த பணியிடங்களை ஊக்குவிக்கும்.
பொதுத்துறையில், இது NPD மற்றும் பொது சிவில் சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம். தனியார் துறையில், முதலாளிகளுக்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதில் முதலாளிகளின் சங்கங்கள் முக்கியமானவை ஆகும்.
அவர்கள் முன்மாதிரிகளை ஊக்குவிக்க முடியும் மற்றும் PwD களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க விரும்பும் உறுப்பினர்களுக்கு பொதுவான வசதிகளை வழங்க முடியும், அத்துடன் வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிட்ட திறன்களுக்கான பயிற்சித் திட்டங்களை செயற்படுத்தலாம்.இதில் பொருள் செலவு பக்கத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனத்திற்கு கூடுதல் திறன்களையும் கொண்டு வரக்கூடிய PwD களைப் பயன்படுத்துவதும் முக்கியமானது.
அறுதியாக, உள்ளீர்த்த வேலைவாய்ப்பை செயல்படுத்தக்கூடிய ஒரு கொள்கை சூழலையும், ஒரு கட்டமைப்பையும் உருவாக்கி செயல்படுத்துவதற்கான பொறுப்பு அரசுக்கு உள்ளது, இது பங்கேற்பு முறையில், ஊனமுற்றோர் உரிமை அமைப்புகளின் பங்களிப்புடன் உருவாக்கப்படவேண்டும்.
PwD ஐ மேம்படுத்துவதில் கல்வி அமைப்பின் பங்கு யாது?
குடும்ப மற்றும் சமூக அடிப்படையிலான பாகுபாட்டின் ஆதாரங்களை முறியடிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் கல்வி அமைப்பு தன் பங்கை ஆற்றலாம் மற்றும் இளம் சிறுமிகளை மேலும் உள்ளீர்க்கலாம். ஒரு வகையில் பணியிடங்களை பற்றி நாம் குறிப்பிட்டதை போலவே கல்வி நிறுவனங்களிலும் அணுகலை இயல்பு, தரம் மற்றும் ஏற்புடைமை ஆகியன மீது யாதாயினும் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும்.
PwD களை உள்ளடக்கிய பாடசாலைகளை மேம்படுத்துவது பிழையான எண்ணங்களை எதிர்ப்பதற்கான ஒரு வழியாகும். இதற்கு, கல்வி முறை மற்றும் அதன் விளைவுகளை ஆதரிக்கும் பல்துறை மற்றும் இடஞ்சார்ந்த அணுகுமுறை முக்கியமானது .
- கொள்கை மற்றும் பாதீட்டில் திருத்தம் செய்ய வேண்டிய சில முக்கிய பகுதிகள் யாவை?
கொள்கை மட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய இடைவெளிகள் இன்னும் உள்ளன. CRPD தொடர்பான ஆரம்ப அறிக்கையானது, CRPD உடன் சீரமைக்கும் பொருட்டு, NPD க்கு புதுப்பித்தல் தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இது NAPPPHR 2017-2021 இல் உள்ள செயல்களில் ஒன்றாகும், ஆனால் இந்த கொள்கை கட்டமைப்பானது CRPD ஐ செயல்படுத்துவதற்கான பிராந்திய கட்டமைப்போடு ஒத்திசைக்கப்பட வேண்டும், மேலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டும்.
ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக் குறைப்பதற்கான கொள்கை ஒருங்கிணைப்பு தேசிய மட்டத்திலும் தேவை. கொள்கை மறுஆய்வு மற்றும் செயல்படுத்தலில் நாம் பின்தங்கியுள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். தேசிய அளவில் கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பில் இயலாமை பிரச்சினைகள் பிரதானமாக இல்லாதபோது, துறைசார் செயல்பாட்டில் பின்னடைவுகள் உள்ளன. சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான கட்டளை கொண்ட அமைச்சகம், துறைச் செயலாக்கத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு போதுமான திறனைக் கொள்ளாமல் இருக்கலாம்.
NPD ஐ ஊனமுற்றோருக்கான தேசிய செயல் திட்டமாக மாற்றியமைக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பதும் கவலைக்குரிய விஷயம். ஆனால் இந்தத் திட்டத்தை ஒரு திட்டமாக செயல்படுத்துவதைக் கண்காணிக்க முடியவில்லை
- சமத்துவத்தை அடைவதற்கு பாலின ரீதியான பாதீடு ஏன் முக்கியமானது?
பாலின-பொறுப்புமிக்க பாதீடு (GRB) என்பது பெண்களின் அதிகாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் வரவு செலவுத் திட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் சீரமைப்பதாகும். அரசு, எவ்வளவு வளங்களை திரட்டுகிறது மற்றும் அது எவ்வாறு வளங்களை ஒதுக்குகிறது என்பது குறித்த நிதிக் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் கண்காணிப்பதிலும் பரந்த பங்குதாரர்கள் பங்கேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது பற்றியும் இது உள்ளது.
இந்த அடிப்படையில், இது வெளிப்படைத்தன்மை பற்றியது. யார் பணம் செலுத்துகிறார்கள், யார் பயனடைவார்கள்? பொது நிதி மேலாண்மை அமைப்புகள் எவ்வாறு வெளிப்படையானதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாறலாம் , மேலும் பாலின-பொறுப்புமிக்க நிதிக் கொள்கைகளில் எவ்வாறு கவனம் செலுத்த முடியும்? பாலின சமத்துவ கடமைகளை திறம்பட செயல்படுத்த நிதியியல் வெளியை எவ்வாறு உருவாக்க முடியும்? முன்னர் கோடிட்டுக் காட்டப்பட்ட கட்டமைப்பைப் பொறுத்தவரை, சட்டங்களையும் கொள்கைகளையும் தரையிலும் முடிவுகளாகவும் விளைவுகளாகவும் மாற்றியமைக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
(மேலும் தகவலுக்கு, GRBமற்றும் WwDகளுக்கான பொருளாதார அணுகலை மேம்படுத்தல் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்வையிடவும்.)
- மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய நாம் எவ்வாறான முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும்?
அணுகுமுறையானது இடைவெட்டாக இருக்கவேண்டும் (பாலினம், இனம், மதம் போன்ற அனைத்து சமூக மற்றும் அரசியல் அடையாளங்களையும் இணைத்து குறிப்பிடுதல்). இடைவெட்டான ஒருங்கிணைப்புக்கும் தனிமைப்படுத்தல்களை நொறுக்குவதற்குமான சாத்தியப்பாடு உள்ளது. மேலதிகமாக, எமது பல இலக்குகள் மாற்றுத்திரனாளிகள் மேம்பாடு பட்டியே உள்ளன, குறிப்பாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எமது குறிக்கோள்களில் முக்கியமானவை. GRBஐ ஓரிடத்தில் நிலை நிறுத்தும்பொருட்டு இலக்குகளின் ஓர் கொத்தணியை SDG தளத்தின் மீது கட்டமைத்தல் மற்றும் நிறுவன வழிமுறைகள் மற்றும் வளங்கள் மூலம் பாதீட்டின் பல்வேறு நீரோடைகளை ஒன்றாக ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அல்லது இன்னும் துல்லியமாக, சம வாய்ப்பையும் சமமான விளைவுகளையும் கோருவதற்கு அவர்கள் பலப்படுத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, SDG மகுடவாசகமான ‘யாரையும் கைவிடாதீர்கள்’ என்பது நிச்சயமாக பின்பற்றப்படவேண்டும்.
மேலும், ‘அதிக பின்வாங்கி இருப்பவர்களுக்கு முதல் செல்லுங்கள்’ என்ற அழைப்பு, நிதியியல் வெளியை விரிவுபடுத்துவதற்கான நிதி மற்றும் ஆதாரங்களுக்கான முன்னுரிமைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கவனம் செலுத்துவதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இந்த முன்னுரிமைகள் மாவட்ட மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், அங்கு சூழல்-குறித்த ஒரு குறுக்குவெட்டு அணுகுமுறை மிகவும் நியாயமான முறையில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக ஊனம் தொடர்பான பிரிவுபடுத்தப் பட்ட தரவு கிடைக்கும்போது,.
இந்த அணுகுமுறை வலுவான பாலினம் மற்றும் ஊனம்சார் கொள்கை, திட்டமிடல் மற்றும் தேசிய மட்டத்தில் முதலீடு ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது CRPD மற்றும் CEDAW ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, இந்த முடிவுகளை அடைய பொது நிர்வாக அமைப்புகள் பதிலளிப்பதை உறுதிசெய்ய முடியும்.