Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் தொழினுட்பப் புரட்சி

இயற்கையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் தன் ஆறாம் அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி, நவீன அறிவியல் ஆற்றலை கற்றுக்கொண்டதே, நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் தகவல் தொழினுட்ப வழிமுறைகளாகும். நம் வாழ்க்கையில் எங்கு திரும்பினாலும் தொழில்நுட்பம். ஒரு குழந்தை பிறப்பது முதல் இறப்பது வரை அதன் வாழ்க்கையில் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே தொழினுட்பத்தின் மூலமாக குறைந்த நேரத்தில் அதிக நலன்களைப் பெற்றுக் கொள்ளவும், விரைவான தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் முடிகிறது. இந்தத் தகவல் தொழினுட்பமென்பது நாள்தோறும் புதிய தன்மைக்கு ஏற்றவண்ணம் தன்னை இற்றைபடுத்திக்கொண்டே (Update) செல்கின்றது. அதன் வேகத்திற்கு ஏற்றவாறு மனிதனும்  தன் அறிவின் வளர்ச்சியை வேகப்படுத்திக்கொண்டே செல்கிறான். நாம் தினமும் பயன்படுத்தும் இந்த தகவல் தொழினுட்ப சாதனங்களை சரியான இடங்களில் தேர்ந்தெடுப்பதென்பது மிக முக்கியமானதொன்றாகும்.

அத்தகைய சாதனங்கள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கபடுவதால் உள்நாட்டின் பொருளாதாரமும் உயர்வடைகின்றது. இந்தப் பதிவில் அப்படியானதொரு நிறுவனத்தை அறிமுகம் செய்து வைக்கிறோம்.

EWIS கொழும்பு ஸ்தாபனம் – ஒரு அறிமுகம்

EWIS கொழும்பு ஸ்தாபனமானது EWIS குடுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும்.  அம்பாந்தோட்டை நகரில் சூரியவெவ பகுதியில், சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில்  அமைந்துள்ள இந்நிறுவனம் தரமான தகவல் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இலங்கையின் IT சந்தைக்கு சிறந்த கணனிளை தயாரித்து வருகின்ற இந்நிறுவனத்த்தில் 60 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இலங்கையில் தகவல் தொழினுட்பத் துறையின் முன்னோடியான IBM நிறுவனத்தின் வர்த்தகப் பங்காளி என்ற விருதினைப் EWIS நிறுவனம் பெற்றுள்ளது. HP நிறுவனத்தின் வணிகப் பங்காளியான EWIS நிறுவனம் , 2004 ஆம் ஆண்டில் HP கணனிகள் மற்றும் சர்வர்கள், அதன் தயாரிப்புக் கருவியின் ஒரு பகுதியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  EWIS , இலங்கையில் கணனி உற்பத்தியில் Microsoft OEM உடன் இணைந்த ISO 9001:2008 தறச்சான்றிதழ் கொண்ட ஒரே நிறுவனமாகும்.

Ewis நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்

“நமக்கே நமக்கான கணனிகள்”

உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்து பணிபுரியும் எமது இந்தப் பயணத்தின் போது, வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை சர்வதேச தயாரிப்புகளால் முற்றுமுழுதாக  பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர்ந்துகொண்டமையால் EWIS நிறுவனமானது தன் சொந்த தயாரிப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் “நமக்கே நமக்கான கணனிகள்” என்ற திட்டத்தினை ஆரம்பித்தது.

நமக்கே நமக்கான கணனித்திட்டம்

இத்திட்டத்திற்காக, உலகப்பிரபல்ய நிறுவங்களான மைக்ரோசொப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்கூடத்தை இலங்கையின் அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் அமைத்துள்ளது. பிரத்தியேக கணனிகள், All In One கணனிகள்,லேப்டாப்கள், டேப்லட்கள், கையடக்கத் தொலைபேசிகள் என பரந்துபட்ட தயாரிப்புகளை தற்கால சூழலுக்கு ஏற்றவிதமாக நவீன தொழினுட்ப உதவியுடன் தயாரித்து இலங்கையின் பொருளாதாரத்தின் தரத்தை உயர்த்தி வருகிறது.

Ewis நிறுவனத்தின் தயாரிப்புகள்

இந்நிறுவனத்தில், EWIS PERIPHERALS PVT Ltd  என்பது , E-W தகவல் தொழிநுட்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இது ஆண்டுக்கு  7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயீட்டி E-W தகவல் தொழினுட்பத்தின் வர்த்தகத்தில் தவிக்கமுடியாத ஒரு பகுதியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ளும் ஸ்தாபனங்கள் பின்வருமாறு:

  • Lexmark Printers, Solutions and related consumables 
  • Ricoh Multifunction Printers, Projectors, Duplicators, Production Printers
  • Konica Minolta Multifunctional & Production Printers
  • Casio Projectors & Fuji data cartridges
  • Aros / Riello Power Solutions
  • Regional Distributor for IBM Toners
  • Keymax products
  • Ewis Solar power Solutions
  • OPEN SYSTEM TECHNOLOGIES

இவ் உற்பத்தி மற்றும் தீர்வுகளை சந்தைப்படுத்துவோர்:

  • Microsoft Enterprise solutions
  • Backup solutions
  • Total threat management solutions
  • Enterprise mail solutions

EWIS ன் பங்களிப்பும் சேவைகளும்

கடந்த 30 ஆண்டுகளில் 1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு EWIS ஆதரவு வழங்கியுள்ளது. EWIS ன்  சேவை மையங்கள் நாடுமுழுவதும் பரந்தளவில் அமைந்துள்ளன, தன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு விரிவான ஆதரவும் சேவையும் வழங்கிவருகின்றது.

மருத்துவ விநியோக மேலாண்மையில் தகவல் தொழினுட்பத்தின் அறிமுகம்

வாடிக்கையாளர் தகவல் உதவிகள்

  • Automation of the Examination process
  • Turnkey solution for Leco
  • Automation of the Attorney General’s Department
  • MRP implementation at State Pharmaceutical Manufacturing Corporation
  • Data center infrastructure to support the Crib
  • Automation of the National Medical Supplies Distribution
  • Ceylon Petroleum Corporation Network Infrastructure project
  • Outsourcing of population & Housing Census in Sri Lanka
  • Lanka Sathosa Retail Management System
  • CHOGM 2013 Event Management Solution
  • Largest CCTV Surveillance Systems
  • The Largest Personal Computer Deployment in Sri Lanka

கல்வித்துறைக்கு EWIS ஆற்றிவரும் பங்களிப்புகள்

 பாடசாலைகளுக்கான விஞ்ஞான ஆய்வுகூடம்  

வசதிகள் தேவையுள்ள பாடசாலைகளுக்கு கணனி மையங்கள் அமைத்துக்கொடுப்பது.

கல்வி அமைச்சுடன் இணைந்து பயிற்சி மையங்களை நடாத்துவது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு லேப்டாப்களை அன்பளிப்பாக வழங்குவது.

2013 ல் Olympiad போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்துகொண்டோருக்கு Notebookகளை நன்கொடையாக  வழங்கியமை.

பல்கலைக்கழக, பாடசாலை மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் மாணவர்களுக்கு  இலங்கையின் முதலாவது கணனி தயாரிப்பு தொழிற்கூடத்தினை பார்வையிடும் வசதிகளை எற்படுத்தித் தருவது.

சுற்றுச்சூழலுக்கான பங்களிப்பு

கடந்த பல தசாப்தங்களாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க பொது மக்களுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை EWIS முன்னெடுத்து வந்துள்ளது.

இத்தகைய பல சாதனைகளை புரிந்துவரும் எமது நாட்டின் நிறுவனமான EWIS, தமது வாடிக்கையாளர்களுக்கென எதிர்வரும் காலத்தில் பாரிய சேவைகளை முன்னெடுக்கவும் தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வண்ணம் எமது இலங்கை நாட்டின் தொழினுட்ப துறையில் புரட்சிகளை புரிந்து வரும் இந்நிறுவனத்துடன் துணைநிற்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் தகவல் தொழினுட்ப உற்பத்திகளும் இடம்பெறுவது எமக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட நிச்சயம் உதவிடும்.

Related Articles