மலேசியாவில் வாழும் இந்தியர்கள்

குடிபெயர்ந்து வாழும் வழக்கம் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் உண்டு. இவ்வழக்கம் வெவ்வேறு காரணங்களுக்காக நிகழ்கின்ற ஒன்றாகும். பொதுவாகக் கருதப்படும் காரணங்கள் வேலைவாய்ப்பு தேடி இடம் பெயர்வது மற்றும் சுய தொழிலை புதிய இடத்தில் அமைத்து செய்ய முற்படுவது. இது நபருக்கு நபர் வேறுபடும் கருத்துகளை பொறுத்தும் மாறும். சுருக்கமாக நிலம், வளம், குணம் மற்றும் மக்களின் இணக்கத்தனமை அனைத்தையும் பொருத்து மாறும். மக்கள் தொகையில் 2 ஆவது பெரிய நாடு என்பதாலோ, நம் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் பழக்கத்தை நாம் அதிகம் காண முடிகின்றது. இந்தியர்கள், மேலே குறிப்பிட்டவாறு வேறு வேறு காரணங்களுக்காக எல்லை தாண்டி சென்று பிழைப்பு நடத்தி அதில் சிலர் வெற்றியும் கண்டுள்ளனர்.

மலேசியாவும் அங்கு குடிபெயர்பவர்களும்

மலேசியாவில் முதல் இந்தியன் கால் பதித்தது 2 ஆம் நூற்றாண்டில் தான். மலேசியாவின் இன்றைய கேடா நமது விஜேந்திர சோழனின் சாம்ராஜ்யத்திற்குட்பட்டு இருந்தது. காலம் தாழ்த்தியும் வணிகத்தை கடல் கடந்து சிறந்த கண்கானிப்புடன் செய்ய இயலாத நிலையினால் பிரிட்டிஷ் காலனித்துவ காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் விளைவினால் வெஜேந்திரரின் கடாரம், இப்போதைய கேடாவாக இருக்கிறது. இவ்வாறு வரலாற்றில் ஒரு குறிப்பு இருக்க, இந்தியா வணிகத்தை கருத்தில் கொண்டு கடல் கடந்த தொடர்பு வைத்திருந்தாலும், சராசரி மக்கள் தனது வாழ்வாதாரத்திற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் வேலை தேடி வேறு நாட்டிற்கு சென்றது அநேகமாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களாகத்தான் இருக்கும். தற்காலிக தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையே நாட்டின் வளர்ச்சிக்கு பெறும் உறுதுணையாக இருக்கும் என்பதை நம்பும் மலேசியாவுக்கு வேலை தேடி சீனர்கள், இந்தியர்கள் மற்றும் இந்தோனேசியர்கள் என குடிபெயர்ந்துள்ளனர். மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கென்று ஒரு வரலாறே இருக்கிறது. அதாவது இந்தியாவும் மலேசியாவும் சுதந்திரம் பெறும் முன்பே இந்தியர்கள் வேலை தேடி மலேசியாவிற்கு குடிபெயந்த அந்த வரலாற்றில் இரு நாட்டு மக்களுக்கிடையே நல்லிணக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. பிரிட்டிஷியர்கள் அங்கே ஆட்சி செய்த போது மலேசியாவிற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் பல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டதாக சில செய்திகள் உள்ளன.

வேலை தேடி சென்ற சிலர், சில காலம் வேலைக் காரணமாக மலேசியாவில் இருந்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புவது வழக்கம். மலேசியாவில் கலப்பு திருமணம் நடக்கவும் இந்த குடிப்பெயர்வு காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் சில செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. 1957ல் மலேசியா சுதந்திரம் அடைந்த கையோடு ”மலேசிய இந்தியர்கள் காங்கிரஸ்” என்ற கட்சி அங்கே இருக்கும் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்படும் அளவிற்கு கனிசமான அளவு இந்தியர்கள் அங்கு வாழ்ந்தனர், இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மலேசிய இந்தியர்கள் என்று கூறும் போது அதில் பெரும்பாலானோர் தமிழர்களாகத் தான் இருந்தனர். மலேசியாவில் வாழும் தமிழர்கள் முதலில் கப்பல் வழியாகத்தான் மலேசியாவிற்கு சென்ற்றிருக்கிறார்கள். அங்கிருக்கும் இயல்பான  வாழ்க்க்கை முறையில் தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி தாமும் விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற கன்வோடே மாய்ந்த தமிழர்கள் பலர். பர்மா, வங்கதேசம் மார்கமாக நிலத்திலே பல மாதங்கள் பயணித்து ம்லேசியா சென்றடைந்த சிலரும் உள்ளதாக தகவல். மலாய மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மலேசிய நாட்டில் முழுநேர தமிழ், ஆங்கிலம், சீன மொழி மற்றும் தென்கிழக்கு சீனர்கள் பேசும் கண்டோனீசிய மொசிகளிலும் தொலைக்காட்சிகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும் தான் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அங்கிருக்கும் இந்தியர்களில் தமிழர்கள் தான் அதிகம் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அந்த தமிழ் தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் பேச்சில் ஒரு பிற மொழிச் சொல்லையும் கண்டுபிடிக்கமுடியாது என்றார் எனது மலேசிய நண்பரொருவர். குடிபெயர்ந்தவருக்கு இருக்கும் தமிழ் மொழி அறிவும் ஆர்வமும் நம்மூர் தொலைக்காட்சி  வர்ணனையாளர்களுக்கு இருக்கிறதா என்பது8 சந்தேகம் தான்.

Migrating to Malaysia (Pic: edition.cnn.com)

மலேசியாவில் இந்தியர்களின் தொழில்

1870 களில் பிரிட்டிஷியர்கள் மலேசியாவின் வளங்களைக் கொண்டு வணிகம் செய்யத் தொடங்கிய காலம் தொட்டு தான், சர்வதேச பொருளாதார வளையத்திற்குள் மலேசியாவின் வணிகமும் வந்தது. மலேசியாவின் பிரதான தயாரிப்புகளான காபி, சக்கரை மற்றும் தகரங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போது அந்தந்த பொருள்கள் சார்ந்த தேவையைக் கருத்தில் கொண்டு பலரை வேலை வாய்ப்பு வழங்கினர். அப்போது மலேசியாவிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சென்று காபி தோட்டங்களிலும், இன்னபிற தொழிற் கூடங்களிலும் வேலை செய்தனர். பிறகு ஐரோப்பியர்கள் மலேசியாவிற்குள் வந்த போது, ஐரோப்பியர்கள் அங்குள்ள மண் வளத்தையும் தனது தேவைகளையும் கருத்தில் கொண்டு ரப்பர் தோட்டங்கள் அமைத்தனர். அது இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. பற்றாக்குறைக்கு வங்கதேசத்திலிருந்தும் பலர் மலேசியாவிற்கு வேலைக் காரணமாக குடிபெயர்ந்தனர்.. அப்படி இயற்கை வளங்களை கருத்தில் கொண்டு தனது வணிகத்தை வலுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மலேசியா இன்று தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்கள் இடம் பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவு, மின் சாதனத் தொழிற்சாலைகள், மின்னணு தொழிற்கூடங்கள், மருத்துவ தொழில் நுட்பம், பாமாயில் உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு என பல துறைகளில் வணிகம் புரிந்து பலருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி, இன்றும் வளர்ந்து வருகின்றது மலேசியா. குறிப்பாக மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்யும் தொழில் அங்கு பிரதானமாக நடைபெற்று வருகிறது. மேலே குறிப்பிட்ட துறைகளில் தனது திறனுக்கு தகுந்தவாறு பணிகளை அநேக துறைகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தியர்களின் மலேசியா

நமது இந்தியர்களுக்கு மலேசியா மீது மோகம் அதிகம் இருப்பதற்கு காரணம், அந்த நாட்டின் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு தான். அதுமட்டுமல்லாமல் வெளி நாட்டினர் தனது பணியின் பொருட்டு மலேசியாவில் தங்குவதற்கு அதிக பட்சமாக வழங்கும்  கால அளவு 10 வருடமாகும். இது எந்த நாடும் அளிக்காத கால அளவாகும். அங்கே இருக்கும் தட்பவெப்ப நிலை கூடிய வரையில் இந்தியாவின் தட்ப வெப்ப நிலையை ஒற்றியே இருப்பதும், இந்தியர்களுக்கு இன்னொரு சிறப்பு.

மலேசிய நாட்டு மக்கள் தொகையில் 8 விழுக்காடு இந்தியர்களே என்றபோதிலும், பல துறைகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு சமீப வருடங்களில் எழுந்துள்ளது உண்மை தான். அதற்கு ஆதியான காரணம் காழ்ப்புணர்ச்சியே ஆகும். மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கென்று வசதிகள் ஏற்படுத்த கொண்ட முயற்சியில் இன்று அன்றாடம் இந்திய உணவுகளுக்கு ஒத்த அம்சங்களை கொண்ட உணவுப் பழக்க வழக்கமே இன்றும் கடைபிடிக்கும் அளவிற்கு மலேசியாவில் இந்திய வாழ்க்கை முறை தொன்மையானதாக இருந்திருக்கிறது. சீனர்களுக்கு அடுத்தபடியாக அங்கே வேற்று நாட்டினர் என்றால் இந்தியர்கள் தான் எனலாம். ஆயினும் இந்தியர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகள் பெருகிக்கொண்டே தான் போகின்றது. இந்த பிரச்சனையை மலேசிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இந்தியர்கள் ஒன்று கூடி ஒரு புகார் மனுவை எடுத்து சென்றதற்கு, மலேசிய காவல்துறை, இந்தியர்களை, அரசு அலுவலகத்துக்குள்ளே அனுமதிக்காமல், அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

Indians in Malaysia (Pic: thequint.com)

மலேசிய இந்தியர்களின் உரிமை

இது போன்று பல சம்பவங்களில் மலேசியா வாழ் இந்தியர்கள் ஒதுக்கபடுவதாக உணரப்படும் அளவிற்கு பதாங் ஜாவா என்ற இடத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான மகாமாரியம்மன் கோயிலை அந்நாட்டு அரசு இடித்துத் தள்ளியிருக்கிறது. இந்தியர்களின் உரிமைத் தொடர்பாக அரசிடம் முறையிட முற்படும் போதெல்லாம், மலேசிய அரசின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முறையிட வருவோர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது மலேசிய அரசு. அந்த நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றதால் தான் சுதந்திரத்திற்கு பின் மலேசிய இஸ்லாமியர்களுக்கு இருப்பது போன்ற சம உரிமை இந்தியர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கருதுகின்றனர் மலேசியா வாழ் இந்தியர்கள். பல முறையிட்டும் பலனில்லை என்கின்றனர். இவ்வளவு சிக்கலுக்கும் காரணம் பிடிட்டிஷியர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களில் தெளிவு இல்லாத நிலைப்பாடு தான் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் தெரியச்செய்த ஹிந்த்ராஃப்  ஊர்வலத்திற்கு பின்னும் இந்திய அரசு மலேசிய அரசுடன் வெறும் பேச்சுவர்த்தையோடு இதன் மீதுள்ள கவனத்தை முடித்துக்கொண்டது தான் வருந்தத்தக்க ஒன்று.

ஆனால் மலேசிய இந்தியர்கள் கருதுவது போல பிரிட்டிஷியர்களின் தெளிவில்லா சட்டங்கள்  மட்டுமே காரணமாக இருந்திட முடியாது. பிரிட்டிஷியர்கள் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தான் திரு.கே. தம்புசாமி என்கின்ற தமிழர் ”பத்து குகை”யைக் கண்டறிந்து, பத்து குகையின் நிழைவாயிலின் வளைவுகளில் வேல் போன்ற வடிவம் இருப்பதை கண்டு, அங்கு கடவுள் முருகனுக்கென்று கோயில் எழுப்பினார். அந்த ”பத்து குகை” இருக்கும் பகுதியில் தான் இன்று உலகிலேயே பெரிய முருகர் சிலையை, நிறுவியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Malaysian Police (Pic: youtube.com)

தாய்மொழி வழிக்கல்வி

மலேசியாவில் இந்தியர்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறதென்றால் அது அந்த நாட்டு அரசு சீனர்கள் தனது பிள்ளைகளை படிக்க வைக்க சீன மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது போல், இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கும் பள்ளியை நிறுவ அனுமதி அளித்துள்ளது.மேலும் ஆங்கில மொழி வழிக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனமும் அங்கு உள்ளது. இது மலேசிய மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அப்பாற்பட்டது. தனது நாட்டிற்கு  குடிபெயர்ந்தவர்களின் தாய்மொழி வழிக் கல்விக்கு அனுமதி அளித்த மலேசியா நிச்சயர் அடுத்த சந்ததியினரைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவது புலப்படுகிறது. இது அங்கு வாழும் இந்தியர்களுக்கு, தாய்மொழிக் கல்வியில் பயிலுவதற்கு ஏதுவாக இருந்ததோடு, மலேசிய நாட்டின் பிற்கால வளர்சிக்கும் வித்திட்டது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு மலேசியாவிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டு இருப்பது கூடுதல் பலம்.

Tamil Schools (Pic: bukitlanjan.blogspot.in)

ஆயிரம் விவாதங்கள் இருப்பினும், பல விவாதங்கள் வந்தாலும், அடுத்த சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு குடி பெயர்ந்தவர்கள் நலனுக்காக சில சட்ட திருத்தங்களை ஏற்படுத்தி தந்த மலேசிய அரசின் நோக்கங்கள் பல வளர்ந்த நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

Web Title : Indian Migrants in Malaysia

Featured Image: lonelyplanet.com

Related Articles

Exit mobile version