எத்தனையோ ஆடைகள் வந்தாலும் எளியவர் முதல் வறியவர் வரை பட்டாடைகள் மீதான ஈர்ப்பே அதிகமாக உள்ளது. அதுவும் இந்தியாவில் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் விலைக்கு அப்பாற்பட்டு அவரவர் வசதிக்கேற்ப பட்டாடைதான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியுள்ளதைக் காணலாம். காரணம் அதன் விலை அதிகம் என்பது ஒருபுறம், மற்றொன்று “ஆள் பாதி, ஆடை பாதி” என்பார்களே அதுபோல மற்றவர் முன்னிலையில் தங்களது மதிப்பை உயர்த்திக் காட்டும் என்பதாலும்தான். உலகின் பல பகுதிகளில் இன்று பட்டு உற்பத்தியும், பட்டாடை நெசவும் நடந்து வந்தாலும் இன்றளவும் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பட்டு உற்பத்தியின் முன்னோடிகளான சீனர்கள் பத்தியும், அவர்கள் மேற்குலக நாடுகளுடன் பட்டு வணிகம் செய்த பட்டு சாலை பற்றியும் பல தகவல்களை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பட்டு சாலையின் துவக்கம்:
சீனாவின் ஹன் வம்சத்தின் போது முறையாக நிறுவப்பட்ட வணிக வழித்தடங்களின் ஒரு தொடர்பாக இந்தப் பட்டு சாலை இருந்தது. இது பண்டைய உலகின் வர்த்தகங்களுடன் தொடர்புபட்டது. பட்டு சாலை கிழக்கிலிருந்து மேற்கிற்கான ஒரு வழிப்பாதை அல்ல. ‘சில்க் ரோட்ஸ்’ என்ற பெயரில் வரலாற்று அறிஞர்கள் அதிக அளவில் ரசிக்கிறார்கள். இருப்பினும் ‘பட்டு சாலை’ மிகவும் பொதுவான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பெயராக உள்ளது. ஜெர்மானிய புவியியலாளரும், பயணியுமான பெர்டினாண்ட் வான் ரிச்தோபென் 1877-ல் ‘சீடென்ஸ்ட்ராஸ்’ (பட்டுச் சாலையில்) அல்லது ‘சீடென்ஸ்ட்ரஸன்’ (பட்டுப் பாதைகளை) என்ற இரண்டு வார்த்தைகளைக் கொண்டுவந்தார். ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம் மேற்கு நாடுகளுடனான வர்த்தகத்தை புறக்கணித்துப் பாதைகளை மூடியபோது கி.மு.130ஆம் ஆண்டு தொடங்கி பிப்ரவரி 1453வரை ஹன் சாம்ராஜ்யம் பட்டு சாலை வழியான அதிகாரப்பூர்வமான வர்த்தகத்தைத் தொடர்ந்தது.
பெர்சியன் பெருஞ்சாலை:
ஹன் வம்சத்திற்கு முன்பிருந்தே பட்டு சாலையின் வரலாறு துவங்குகிறது . இருப்பினும் பெர்சியன் பெருஞ்சாலை என்பது பட்டு சாலையின் பிரதான தமனிகளில் ஒன்றாகும். இது அகீமானிய பேரரசின் (கி.மு 500 முதல் 330வரை) காலத்தில் நிறுவப்பட்டது . பெர்சிய பெருஞ்சாலை வட பெர்சியாவின் சூசன் பகுதியில் (நவீன ஈரானில்) துவங்கி ஆசியா மைனரின் (நவீன துருக்கி) மத்தியதரைக் கடல் வரை நீண்டது. சாம்ராஜ்யம் முழுவதும் குதிரைகளுடன் கூடிய தூதுவர்கள் செய்திகளை உடனடியாக வழங்குவதற்குப் பாதை வழியே பல தபால் நிலையங்கள் இருந்தது. பாரசீக தூதர்களுடைய வேகத்தையும், செயல்திறனையும் பற்றி ஹெரடோடஸ் இவ்வாறு எழுதினார்:
“இந்தப் பாரசீக தூது அஞ்சலைவிட வேகமாகப் பயணிக்கும் வாகனம் உலகில் எதுவும் இல்லை. இந்தத் தூதுவர்கள் தங்களது பணியை நிறைவேற்ற இரவு, மழை, வெப்பம், இருள் என்று எதையும் தடையெனக் கருதுவதில்லை”
பெர்சியர்கள் ராயல் சாலையை கவனமாகப் பராமரித்து வந்தனர். காலப்போக்கில் சிறிய பக்க சாலைகள் வழியாக அதை விரிவாக்கினர். இந்த பாதைகள் இந்தியத் துணை கண்டத்திற்குள் நுழைந்து மெசபடோமியா முழுவதும் விரிவாக்கப்பட்டு எகிப்திற்குள் சென்றது..
சீனாவுடனான மேற்கு நாடுகளின் தொடர்பு:
மாவீரர் அலெக்சாண்டர் பெர்சியாவைக் கைப்பற்றிய பிறகு, கி.மு 339ல் அலெக்ஸாண்டிரியா நகரத்தை பெர்கானா பள்ளத்தாக்கில் (நவீன தாஜிக்ஸ்தான்) நிறுவினார். தனது காயமடைந்த வீரர்களை நகரில் விட்டுவிட்டு அலெக்சாண்டர் சென்றார். காலப்போக்கில் இந்த மாசிடோனியப் போர்வீரர்கள் அங்கிருந்த உள்நாட்டு மக்களோடு கலப்புத் திருமணம் புரிந்து கிரெகோ-பாக்ட்ரிய கலாச்சாரத்தை உருவாக்கினர். பிறகு இந்த நாகரிகம் அலெக்சாண்டரின் மரணத்தைத் தொடர்ந்து சேலூசிட் பேரரசின் கீழ் வளர்ந்தது. மன்னன் முதலாம் எத்தியடைமாஸ் (கி.மு 260-195) கீழ் கிரேக்க-பாக்டீரியர்கள் தங்கள் குடியிருப்புகளை விரிவாக்கினர். கிரேக்க சரித்திராசிரியரான ஸ்ட்ராபோ (கி.மு 63-24) “கிரேக்கர்கள் செரெஸ் வரை தங்கள் இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்கள்” என்கிறார்.. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் செரெஸ் என்ற பெயர் மூலமாகத்தான் சீனாவை அறிந்திருந்தனர். அதாவது `பட்டு வந்த நிலம்’ என்று பொருள். சீனாவிற்கும், மேற்கிற்கும் இடையிலான முதல் தொடர்பு கி.மு.200ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
வழக்கமாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சியோன்கினு பழங்குடியினரால் சீனாவின் ஹன் வம்சத்தினர் (கி.மு. 220 முதல் 202 வரை) தொந்தரவு செய்யப்பட்டனர். கி.மு.138ஆம் ஆண்டில் சியோக்னுவை தோற்கடிக்க உதவுவதற்கு யூஜியோ மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது தூதுவர் ழாங் கியானை அனுப்பினார் பேரரசர் ‘வூ’. மத்திய ஆசியாவில் பல கலாச்சாரங்களையும், நாகரிகங்களையும் தொடர்புபடுத்த இந்தப் பயணம் உதவியாக இருந்தது. அவர்களில் ‘தேயுவன்’, ‘பெரிய அயோனியர்கள்’ ஆகியோரும் அலெக்சாண்டரின் படையிலிருந்து கழட்டிவிடப்பட்ட கிரெகோ-பாக்ட்ரியர்களின் எச்சங்கள் என்பதைக் கண்டுணர்ந்தார். வலிமைமிக்க குதிரைகளைக் கொண்டிருந்த தேயுவானை ழாங் கியான் இத்தகவலை வூ விடம் தெரிவித்தார். மேலும் சியோன்கினுவிற்கு எதிராகத் திறம்பட பயன்படுத்தப்படலாம். ழாங் கியான் பயணத்தின் விளைவு சீனாவிற்கும், மேற்கிற்கும் இடையிலான தொடர்பை மட்டுமல்லாது குதிரைப்படையைச் சித்தப்படுத்துவதற்காக நிலம் முழுவதும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான குதிரை இலாயங்களை உண்டாக்கி இனப்பெருக்கம் செய்தனர். போர்க்களங்களில் குதிரைப்படைகளுக்கும், சாரட்டு வண்டிகளுக்கும் சங் (கி.மு 1600 – 1046) வம்சத்தினர் பயன்படுத்தி வந்ததால் நீண்ட காலமாக குதிரையை அறிந்திருந்தனர் சீனர்கள். ஆனால் பிற்காலங்களில் உயரம் மற்றும் வேகத்திற்காக மேற்கத்திய குதிரையை விரும்பி வளர்த்தனர் சீனர்கள். தேயானின் மேற்கு குதிரைகளைக் கொண்டு ஹன் பேரரசு சியோன்குனை தோற்கடித்தது. இந்த வெற்றி மேற்கத்திய நாடுகளுடன் வேறு பொருட்களையும் வர்த்தகம் செய்ய பேரரசர் ‘வூ’ ஊக்கப்படுத்தினார். எனவே கி.மு 130இல் பட்டு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
கி.மு. 171-138க்கு இடையில் பார்தியாவின் முதலாம் மித்திரிடேட்ஸ் மெசபடோமியாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் பரப்புரை செய்தார்.
சீலூசிட் மன்னர் ஏழாம் ஆன்டியோகஸ் (கி.மு. 138 – 129) இந்த விரிவாக்கத்தை எதிர்த்தார். மேலும் அவரது சகோதரர் டெமட்ரிஸின் மரணத்திற்காகப் பழிவாங்க விரும்பியவர் மித்திரிடேட்ஸின் வாரிசான இரண்டாம் பிரேட்ஸின் பார்த்தியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டார். ஆன்டியோகஸின் தோல்வியால்,பார்த்தீய ஆட்சியின் கீழ் வந்தது மெசபடோமியா. அதோடு பட்டு சாலையின் கட்டுப்பாட்டையும் பெற்றது. பின்னர் பார்த்தியர்களே சீனாவிற்கும், மேற்கிற்குமான வணிகத்தின் இடைத்தரகர்கள் ஆனார்கள்.
பட்டு சாலையில் வணிகம் செய்யப்பட்ட பொருட்கள்:
பலவிதமான விற்பனைப் பொருட்கள் பட்டு சாலையில் பயணம் செய்தபோதும் மேற்கில் அதிலும் குறிப்பாக ரோமில் சீனப் பட்டு பிரபலமடைந்ததால் இந்தச் சாலையின் பெயரும் பட்டு சாலை என்றேயாயிற்று. சீனப் பட்டு மிகவும் பிரபலமடைந்ததே இதற்குக் காரணம். சீனாவிலிருந்து இந்தியாவின் வழியாக மெசபடோமியா முழுவதும் பிரபலமாகி எகிப்து, ஆப்பிரிக்க கண்டம், கிரீஸ், ரோம் மற்றும் பிரிட்டன் வரை அப்படியே நீண்டது இந்தப் பட்டு சாலை. பார்த்தியன் பேரரசின் ஒரு பகுதியான வட மெசபடோமியன் பிராந்தியம் (இன்றைய ஈரான்) சீனாவுடனான வர்த்தகத்தில் மிக முக்கியமான பங்காளியாக மாறியது, முக்கியமாக கலாச்சாரப் பரிமாற்றங்களை ஆரம்பித்தது. ஹன் வம்சத்தின் போது சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் மற்றும் துப்பாக்கிக் குண்டு, மேலும் சீனக் கண்டுபிடிப்பு ஆகியவை பட்டைக் காட்டிலும் கலாச்சாரப் பரிமாற்றத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. கிழக்கின் வளமான மசாலாப் பொருட்களும் அதிக பங்களிப்பைத் தந்தன. ஆனாலும், ரோம பேரரசர் அகஸ்தஸ் (கி.மு. 27 – கி. மு. 14) காலத்தில் சீனாவிற்கும், மேற்கிற்கும் இடையேயான வர்த்தகம் எகிப்து , கிரீஸ், மற்றும் குறிப்பாக ரோமில் குறிப்பாகப் பின்தங்கியிருந்தது.
ரோமப் பேரரசில் பட்டு:
அகஸ்தஸ் பேரரசர் ஆவதற்கு முன்னதாக ஆக்டேவியன் சீசர் பட்டு ஆடைகள் குறித்த தனது எதிரிகளான மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா VII ஆகியோரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். அவர்கள் இருவருமே சீனப் பட்டுக்கு ஆதரவானவர்களாக இருந்தனர். இது உரிமைப் பிரச்சனையானது சீசருக்கு. ஆக்டேவியன் சீசர் அந்தோணி மற்றும் கிளியோபாட்ரா ஆகியோரிடம் வெற்றியைப் பெற்றபோதும், பட்டின் புகழைக் குறைக்க அவர் எதையும் செய்ய முடியவில்லை. சரித்திர ஆசிரியர் டூரன்ட் இவ்வாறு எழுதுகிறார் “ரோமர்கள் மரங்களைக் கொண்டு காய்கறி மற்றும் பழங்களைப் பறித்து, அதன் எடைக்கு இணையாக பட்டை வாங்கினர்”. பெரும்பாலான இந்தப் பட்டு நூல்கள் கோஸ் தீவுக்கு வந்தன. அங்கு ரோம நகரப் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் பிற நகரங்களுக்கான ஆடைகள் தயாரிக்கப்பட்டது.
ஆரேலியஸுக்குப் பிறகு கூட கி.மு. 476-ல் ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை அங்கு அதிக விலை என்றபோதும் கூட பட்டு பிரபலமாகவே இருந்தது. ரோம் அதன் கிழக்குப் பகுதியில் பைசண்டைன் சாம்ராஜ்ஜியத்தின் செல்வ வளத்திலேயே பிழைத்திருந்தது.ரோமில் பாட்டின் ஊடுருவலை அதிகப்படுத்தியது இந்த சாம்ராஜ்ஜியத்திதான்.. கி.மு. 60இல்தான் சீனாவின் மரங்களில் பட்டு வளரவில்லை என்பதையும், அது புழுக்களிலிருந்து பெறப்படுகிறது என்பதையும் மேற்குலக நாடுகள் அறிந்துகொண்டது. சீனர்கள் பட்டு உற்பத்தி குறித்த தகவல்களை வேண்டுமென்றே இரகசியமாக வைத்திருந்தார்கள். பிறகு அது வெளியே தெரிய வந்தபோது, பட்டுப் புழுக்களையும், பட்டு அறுவடை செய்யும் முறைகளையும் கவனமாக பாதுகாத்தார்கள். சீனப் பட்டுக்கு அதிகமான விலையைச் செலுத்தி சோர்வான பைசண்டைன் சக்கரவர்த்தியான ஜஸ்டினியன் (கி.பி 527- 565) பட்டுப் புழுக்களை திருடுவதற்கும், அவற்றைக் கடத்தி வருவதற்கும் இரண்டு தூதர்களைத் துறவிகள் வேடத்தில் சீனாவிற்கு அனுப்பினார். இந்த திட்டம் வெற்றியடைந்து பைசண்டைன் பட்டு தொழிற்சாலையைத் தொடங்கினார். 1453-ல் பைசண்டைன் பேரரசு துருக்கியர்களிடம் வீழ்ந்த பிறகு, ஒட்டோமான் பேரரசு சில்க் சாலை மூடியதுடன் மேற்குடனான அனைத்து உறவுகளையும் வெட்டியது.
பட்டுச் சாலையின் சட்டங்கள்:
பட்டு சாலையின் ஆகச் சிறந்த சிறப்பம்சம் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகும். கலை, மதம், தத்துவம், தொழில்நுட்பம், மொழி, விஞ்ஞானம், கட்டிடக்கலை மற்றும் நாகரிகத்தின் ஒவ்வொரு மூலப்பொருளும் பட்டு சாலை வழியாகவே பல நாடுகளுக்கும் வியாபாரிகள் மூலமாக வர்த்தக பொருட்களுடன் சேர்த்து எடுத்துச் செல்லப்பட்டன. கி.மு. 542இல் பட்டு சாலை வழியாகவே பிளேக் நோய் பரவி கான்ஸ்டாண்டினோபிலுக்கு வந்து பைசண்டைன் சாம்ராஜ்யத்தையே அழித்தது. பட்டு சாலையை மூடத் தொடங்கிய பிறகு உலகளாவிய தொடர்பு மற்றும் உலகளாவிய சமுதாயத்தின் துவக்கத்திற்கு வழிவகுத்த (1453-1660 CE) காலகட்டத்தில் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தைத் திசைதிருப்புவதற்கு கடல் வழிப் பட்டு சாலையைத் துவங்கினர்.