இராமேஸ்வரமும் தனுஷ்கோடியும்

தமிழகத்தின், சுற்றுலா தலம் என்று  நம் மனதில் நினைக்கும்போது சற்றும் யோசனை இன்றி நினைவுக்கு வரும் சில இடங்களில் இராமேஸ்வரமும் ஒன்று.

காந்தமதனா பர்வதம், ஆதாம் பாலம், நம்பு நாயகி அம்மன் கோவில், பஞ்சமுக அனுமான் கோவில், கோதண்டராமர் கோவில், அக்னி தீர்த்தம், அரியமான் கடற்கரை, ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், உத்திரகோசமங்கை, இராமலிங்கவிலாசம் அரண்மனை, குருசடை தீவு, கோவில் குளங்கள், நீர் பறவை சரணாலயம், சாட்சி அனுமான் கோவில், ஜடா தீர்த்தம், விழுதி தீர்த்தம் என்று அனைத்து தரபட்ட மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் சுற்றுலா தலமாகவும்,அன்மீக தலமாகவும் இருந்து வருகிறது. ஏன் இந்தியாவிலிருந்தும், உலகத்தின் பல்வேறு  நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பாம்பன் பாலம்

இன்னும் சொல்லப்போனால் இராமேஸ்வரம் அடையும் போதே நமக்கு இனம் புரியாத ஒரு ஆற்பரிப்பு ஏற்படும். குறிப்பாக கடலை கடந்து தான் இராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பலரது மனதில் பாம்பன் ரயில் பாலத்தின் மீது பயணிக்கும்போதே அலாதி இன்பம் தொற்றிக்கொள்ளும். இராமேஸ்வரத்தை 2.3 கி.மீ நீளம் கொண்ட பாம்பன் பாலம் தமிழகத்திற்குள்ளாக்கியது ஒரு தனி சிறப்பு தான். இந்த 2.3  கி மீட்டரில் ,ரயிலில் மணிக்கு 1.5 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் போது, இரண்டு பக்கமும் வீசுகின்ற மெல்லிய கடல் காற்று அதற்கேற்ப அலைகள் எழுப்பும் ஓசை, இவை அனைத்தையும் ரயில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டு உணரும் போது நம் மனதில் இளையராஜாவின் மெலடி மெட்டுக்கள் நம் நினைவில் வருவதை தடுக்க முடியாது.

இதை ராஜா சார் மெட்டில் வந்த வரிகளில் பாட வேண்டுமென்றால்

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னே

பொண்ணமா சின்ன கண்ணே……

Pamban Bridge (Pic: 6thstation)

தனித்தீவு இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் என்பது ஒரு தனி தீவு. இந்த தீவை சுற்றி சிறுதீவுகள் இருக்கின்றன. தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க சென்ற போது இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக கதைகள் சொல்லும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் ஆகிய இரண்டிற்கும் முதன்மையாக உள்ளது. இவ்விடம் இராமநாதசுவாமி கோவிலையும், இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததை  மைய வரலாறாக கொண்டுள்ளது.

இராமேஸ்வரம் தனது காலக்கட்டங்களில் சில மன்னர்களின் கீழ் ஆளப்பட்டிருக்கிறது.  (கி.பி 1012–1040 ) இந்த காலக்கட்டத்தில் சோழ மன்னர் இராசேந்திர சோழன் கீழ் சிறு காலம் இருந்திருக்கிறது.பின் (கி.பி 1215–1624) காலக்கட்டங்களில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பதினான்காம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் எதிர்ப்பை முறியடித்து, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தளபதி மாலிக் கபூர் இராமேஸ்வாரம் வந்தடைந்தார். அந்த வெற்றியை நினைவுக்கூறும் வகையில்  அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார். பதினைந்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்கால இராமேஸ்வரம் பகுதிகள் பாண்டிய ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன. கிபி 1520ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது, பின் மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர். 18வது நூற்றாண்டில் சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725–1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது. கிபி 1795யில் இராமேசுவரம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது.அதற்கு பின் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.

இப்படி பல்வேறு ஆட்சியின் கீழ் இராமேஸ்வரம் இருந்ததால். இங்கு நாம் அனைத்து மதத்தை சார்ந்த் மக்களையும் பரவலாக காண முடியும். மீன் பிடி தொழில் தான் இராமேஸ்வரத்தின் முதன்மையான தொழில். இங்கு செய்யப்பட்டு வரும் மற்ற தொழில்களெல்லாம் சுற்றுலா பயணிகளையும் ஆன்மீகத்தையும் மையம் கொண்டவை. இது மீனவ பெருங்குடி மக்களுக்கென உரிய நிலம். இப்படி இருக்க எல்லை கடந்ததாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பது மிக வேதனைக்குரிய ஒன்று. இதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் உள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது திரும்பி வருவார்களா மாட்டார்களா என்ற கேள்வி இன்றும் அவர்கள் உறவினர்கள் மனதில் எழுந்து கொண்டே தான் இருக்கின்றது. மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்பும் வரை குடும்ப்பத்தாரின் நெஞ்சம் பதைபதைத்து கொண்டே தான் இருக்கும். இதனால் மீன் பிடி தொழிலை விட்டு விட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டார்கள் சில மீனவர்கள். இராமேஸ்வரத்தில் பிடிக்கப்படும் மீன்கள்  நாட்டின் பல இடங்களுக்கு வணிகம் சார்ந்து கொண்டு செல்லப்படுகிறது.

அட, இராமேஸ்வரம் வரைக்கும் வந்துடோம்ல தனுஷ்கோடிய பாக்காம  போன எப்படி? வாங்க பார்க்காலம்.

Rameshwaram (Pic: coinaphoto)

தனுஷ்கோடி

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 14 கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலது புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடது புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீறும் இந்தியைப்பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும்வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.

1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய ஆழிப்பேரலை, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது. மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது. இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது.

தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 2000 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன. தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து

நான் முதல் முறையாக தனுஷ்கோடிக்கு சென்று  வந்த் பின் இந்த பெயரும் பெயர்சார்ந்த இடமும் மீது எப்போது ஏன்எதற்கு  என்றுதெரியாமல் எனக்கு ஒரு மிக பெரிய ஈர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. சற்றே அமானுஷ்யம்பரவிய மணற்பரப்பு, ஓயாமல்அடித்துக் கொண்டு இருக்கும் கடல்காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக்கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும்இந்தியப் பெருங்கடலையும்தனக்கான எல்லைகளாகவரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்துபோன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி..

புயலுக்கு முன் தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னைதூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது.பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டுகொண்டிருந்த 18 – 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம்வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது.

Danushkodi (Pic: youtube)

ஆங்கிலேயர் காலம்

1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும், தலைமன்னாரிலும் ஒரேபோன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில்(1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின்என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில்இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்துநடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடிசென்று வந்து கொண்டிருந்தன.

சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடிவரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL) என்றுஅழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும்இணைத்தது தான். 80  ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால்சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம்.

சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம், தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால் அங்கிருந்து தலைமன்னார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும், கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலான இந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபார நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்த ரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்த ரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும்போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்துகொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும் முடிவுக்கு வந்தது.

தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொரு நம்பிக்கை உண்டு. மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவுசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு. அதனால் வாரணாசியில் இருந்து தனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில்இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில்பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும்பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது. சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக் காற்றானது அடிக்கடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டு மூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவதுமுண்டு.

இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில்பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும் குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு.

மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் புயலுக்குப் பின் என்று பார்த்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்த தலம் மட்டுமே. சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை. தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம். மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி அலுவலகம், சுங்கத்துறை அலுவலகம்,மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்று பரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்பு போன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவிலிருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள் போக்குவரத்தும் அதிகம்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமானக் காற்றும். தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இவையெல்லாம் ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது. இது எல்லாம் 1964-ம் ஆண்டு டிசம்பர்-24 அன்று தாக்கியப் புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் காணாமல் போனது. அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்று வரையிலும் இன்னும் மீளவே இல்லை

மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில்  இன்று 200 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது. விடியற் காலை நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.

இந்நிலையில் தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளை செய்தால் அந்த இடம் வாழ தகுதியான இடமா? என்று வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி வாழத் தகுந்த இடமா? என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

Sea Life (Pic: rediff)

புயலுக்குப் பின் தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரைஅடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின்மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு……….

Web Title: Danushkodi A Part Of TamilNadu

Featured Image Credit: newindianexpress

Related Articles

Exit mobile version