பெண்களைப் பொருத்தவரையிலும் தினசரி வாழ்வில் செய்யும் பணிகள் மற்றும் அவர்கள் கொண்டுள்ள பொறுப்புக்கள் எத்தகையது என கணக்கிட்டுக் கொள்ள முடியாது. அநேகமாக நீங்கள் நாள் ஒன்றில் அதிகப்படியான நேரத்தை அலுவலகத்தில் கழிப்பவராக இருக்கலாம் அல்லது வீட்டிலாக இருக்கலாம். எவ்வாறாயினும் அதிக பணிச்சுமைகளுக்கு மத்தியில் இருக்கும் நாம், நாளை மிகுந்த ஓய்வு மிக்கதானதாக வைத்துக்கொள்ளவே விரும்புகின்றோம்.வேலைப்பளு மிக்க பெண் ஒருவர் மனமகிழ்ச்சியோடு இருப்பது சுகமான வாழ்விற்கு மிக அவசியமானதாகும்.
அலுவலகத்திலும், வீட்டிலும்
“அன்று ஆண் வேட்டைக்குச் செல்ல பெண் அதனைச் சமைத்துக் கொடுத்தாள், என்றாலும் இன்று பெண் வேட்டைக்கும் சென்று அதனைச் சமைத்தும் கொடுக்கின்றாள்” எனக் கூறுவதுண்டு. தற்காலத்தில் பெண் வீட்டுப் பணிகளைப் போன்றே அலுவலகப் பணிகளையும் அதிகமாகச் செய்துவருகின்ற காரணத்தினாலேயே இவ்வாறு கூறப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்கின்ற காரணத்தினால் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையிலான எட்டு மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகின்றது. அரசாங்கத் தொழிலாக இருந்தாலும், தனியார்த் துறையில் பணிபுரிந்தாலும் செய்யவேண்டிய பணிகளுக்கு மட்டும் குறைவிருக்காது.
தனது பணியை சரியாகச் செய்வது, கொடுக்கப்படும் பணிகளை குறைகளின்றி பூர்த்தி செய்வது, போட்டிமிக்க சூழலை வெற்றிகரமானதாக சமாளிப்பது போன்றன நினைக்கும் அளவு சுலபமான செயல்கள் அல்ல. என்றாலும் இன்றைய காலகட்டத்தில் அதிகமான பெண்கள் இந்த செயற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தொழில் முறையில் உயர்வடைவது மாத்திரமில்லாமல், வீட்டுப்பணிகளையும் நிறைவாகச் செய்துவருகின்றனர்.
பெண்கள் வீட்டுப் பணிகளுக்கு, அலுவலக வேலைகளுக்கு மத்தியில் இரண்டாமிடம் கொடுப்பதில்லை. சமையல், வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளல், பிள்ளைகள் இருப்பார்கள் எனின் அவர்களின் வேலைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற அனைத்தையும் பெண்கள் அலுவலகப் பணிகளுடன் சமமாகச் செய்துவருகின்றனர்.
அலுவலக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து சுயதொழில் செய்து தனது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் பெண்களும் இக்காலத்தில் இருக்கின்றார்கள். ஓர்கிட் அல்லது அந்தூரியன் வளர்ப்பது முதல் ஆடை வியாபாரம், சட்ட துறைசார்ந்த நிறுவனத்தை செயற்படுத்திச் செல்வது போன்ற பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இதனை வாசிப்பவர்களும் உங்கள் மத்தியில் இருக்கின்றார்கள். இதனிடையே நீங்கள் முகம் கொடுக்கும் இடையூறுகள், சிரமங்கள் மற்றும் போட்டித் தன்மைகள் பற்றி புதிதாக நினைவூட்ட வேண்டியது எதுவும் இல்லை.
பொழுதுபோக்குகள் இருக்கின்றதா?
வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் எவ்வாறான வேலைப்பளுவினைக் கொண்டிருந்த போதிலும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்காக நேரத்தை ஒதுக்குவது பொதுவானதாகும். இந்த பொழுதுபோக்குகள் ஆடை ஆபரணங்கள், உணவு, வீட்டுத் தோட்டம், சுற்றுலாப் பயணங்கள், யோகா அல்லது உடற்பயிற்சி செய்தல், நடனம் போன்ற பல்வேறாக அமையலாம். சுறுசுறுப்பான பொழுதுபோக்குகளை இன்றைய கால பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். உடலை வனப்பாக வைத்துக்கொள்ள சுறுசுறுப்பான பொழுதுபோக்குகள் உதவி செய்வதனால் இவற்றின் மீதான நாட்டம் பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
சமூக சேவைகளைச் செய்யும் பெண்ணா?
முன்னைய காலத்தில் சமூக சேவைகள் மற்றும் தொண்டுகள் போன்றனவிற்காக உருவாக்கப்படும் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளில் அதிகமாக ஆண்களே ஈடுபட்டு வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் வேலைபார்க்கும் இடத்திலும் அது தவிர்ந்த வெளியிடத்திலும் சமூக சேவைகளில் பெண்கள் முன்னிலையில் இருந்து செயற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
அடைக்கலம் இல்லாத இடத்தில் அடைக்கலமாகவும், குரல் இல்லாத இடத்தில் குரலாகவும் மாற, இரக்ககுணத்திற்கும், மென்மையான மனதிற்கும் பெண்களைத் தவிர பொறுத்தமானவர்கள் யார்? வறுமையான பாடசாலைகளில் தேவைகளை பூர்த்தி செய்வது, அநாதரவான உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற பல்வேறு விதமான சேவைகள் மற்றும் சமூகப்பணிகள் அறக்கட்டளைச் செயற்பாடுகள் போன்றவற்றை, அன்றாட வீட்டுப்பணிகள், அலுவலகப்பணிகளிடையே செய்துவருவது அவர்களின் இரக்ககுணம் காரணமாகவே ஆகும்.
எவ்வாறாயினும் இவ்வாறான அனைத்து பணிகளுக்கிடையே பெண்கள் தமது அழகு, உடல் குறித்தும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். காரணம் உடல் சிரமங்கள் காணப்படுமாயின் மன மகிழ்ச்சியுடன், சுதந்திரமாக பணிகளைச் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். இதனை நீங்கள் அனைவரும் அனுபவ ரீதியாக உணர்ந்தும் இருப்பீர்கள். அதே போன்று அணியும் எத்தகைய ஆடையாக இருந்தாலும் தங்கள் தோற்றத்தை, உடல் வனப்பை, அழகானதாக வைத்துக்கொள்ள பெண்கள் அதிக கவனத்தை எடுப்பார்கள் என்றே நாம் நினைக்கின்றோம். இது சுய நம்பிக்கைக்கும், சமூகத்தில் உங்கள் தோற்றம் தொடர்பிலாக முதல் மதிப்பீட்டிற்கும் பிரதான காரணியாக அமையும் என்பதையும் கூற வேண்டியதில்லை.
பெண்களின் இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் உடலை சிரமமின்றி சுகமானதாக வைத்துக் கொள்வதற்கும், அழகை மேம்படுத்தவும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் விஷேடமாக நினைவு படுத்தவேண்டிய அவசியம் எமக்குண்டு.
amanté மூலமாக அன்றாட பயன்பாட்டிற்காக every dé collection என்ற நாமத்தில் ப்ரா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு வசதியானதாகவும், உடல் அழகை சரியாக பராமரித்துக் கொள்ளவும் ப்ரா வகைகளை தேர்வு செய்து கொள்ளும் போது நம்பகமான உயர் தரம்மிக்க உற்பத்திகளில் இருந்து தேர்வு செய்து கொள்வது அறிவு பூர்வமானதாகும்.
Cover: MAS BRANDS (PVT) LTD (amanté)