எல்லா நாளும் தந்தையர் தினம்தாங்க…

எனது நண்பர்களுடன் ஒரு அனிமேஷன் குறும்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, கதை இப்படித்தான் ஆரம்பிக்கும் ஒரு தந்தை தன் மகளுடன் மிதி வண்டியில் ஏரிக்கு தினமும் சொல்கிறார். ஒரு நாள் அந்த ஏரியை தாண்டி படகில் பயணம் செய்து வெளியூர் செல்ல வேண்டிய சூழல்!, மகளிடம் கண்டிப்பாக விரைவில் வருவதாய் உறுதி கொடுத்து செல்கிறார்.

சென்றவர் வரவில்லை, தினமும் அந்த பெண் குழந்தை அந்த ஏரிக்கு வருகிறது. எவ்வளவு பெரிய காற்று, மழை, புயல் அத்தனையிலும் வருகிறது (அந்த காட்சியை பார்க்கும் போது ஏற்படும் சிலிர்ப்பை கண்டிப்பாய் தவிர்க்க முடியாது) காலங்கள் ஓடுகிறது, அந்த குழந்தை குமரி ஆகிறாள்!. தன் கணவனுடன் வருகிறாள், பின் குழந்தையுடனும் வருகிறாள் முதுமை அடைகிறாள் அந்த மிதி வண்டியை தள்ள கூட சீவன் அற்று இருக்கிறாள், இருப்பினும் வருகிறாள். பனி முழுவதும் அந்த ஏரியை மூடி உறைந்து நிற்கிறது ஏரியினுள் இறங்கி நடக்கிறாள் நடு ஏரியில் ஒரு உடைந்த படகை காண்கிறாள்!,  இப்பொழுது விட்டுச் சென்ற அந்த இளம் தந்தை வருகிறார் இவளும் குழந்தை ஆகி தன் தந்தையுடன் போவதாய் முடியும் அந்தப் படம்…

(openculture.com)

என் தோழியின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் கேலி செய்வோம் என்று வேகமாக துடைத்தாள். தன் அப்பா வருவேன் என்று சொன்ன ஒற்றை வாரத்தையை நம்பி தன் ஆயுள் முழுவதும் காத்து நின்ற அந்தச் சிறுமிமீது இரக்கம் கொள்வதா இல்லை  அவ்வளவு நம்பிக்கை கொடுத்த அப்பாவை பற்றி சிந்திப்பதா ?! (Father and daughter அந்த குறும்படம் ஆஸ்கர் வாங்குன படம் தாராளமா பாக்கலாம்)

இதே ஒற்றை வரியை கொஞ்சம் மாற்றி மனித இனத்தின் கடைசி விதைகளாக சில மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அவர்களுக்கு தெரியாமலே அனுப்பப்பட, தன் மகளிடம் சொன்ன அதே ஒற்றைச் சொல்லுக்காக டைம் டிராவல்-லா பண்ணி வருவார் ஹீரோ. இது நம்ம கிரிஷ்டோபர் நோலன் கை வண்ணத்தில் வந்த இன்டர்ஸ்டெல்லர் படம். இந்த உலகத்துல எல்லா குழந்தைகளுக்கும் முதல் ஹீரோ அவுங்க அவுங்க அப்பாதான். இந்த அம்மாக்கள்தான் அப்பாட்ட சொல்லவா? அப்பாட்ட சொல்லவானு பயமுறுத்தி அவர வில்லன் ஆக்கிட்டாங்க. (சரக்கு அடிக்கும் அப்பாக்கள் தனி பாஸ்).

முதல் சைக்கிள் ஓட்டுன அனுபவம், முதல் நீச்சல்னு இப்படி  எல்லா முதல் அனுபவத்துலயும் அப்பாவோட கை நம்மள இறுக்கமா புடுச்சுருக்கும்! நமக்கு எவ்வளவு வயசு ஆனாலும் அந்த கைய அவர் எடுக்க மாட்டார். அந்த படத்துல வர மாதிரிலா நம்ம அப்பா சொன்ன எல்லா வாக்குறுதியும் நிறைவேத்திருக்க மாட்டாரு. (எங்க அப்பால்லாம் நிறையா மக்களே) ஆனா பையன் ஆசைப்பட்டான்னு உடனே சரினு சொல்லி அதுக்காக பணம் சேக்கும் போதுதான் நமக்கு உடம்புக்கு முடியாம போகும். அப்பறம் என்ன, சேத்த பணத்த ஆஸ்பத்ரியில மொய் எழுதிட்டு நமக்கு பிடிக்காத அப்பாவாஆவாரு! பாவம் பாஸ் இந்த அப்பாக்கள்.

அவர் குடிகார அப்பாவாவே இருந்தாலும், அந்த போதையிலும் என் பிள்ளை பிரியமா சாப்டும்னு முட்ட பொரட்டா வாங்கிட்டு வருவாரு, ஊட்டிலாம் விடுவாரு. (காலையில் இந்த அப்பா வகையறா வேற மாதிரி இருப்பாங்க) எல்லா பசங்களுக்கும் அவுங்க அப்பா எவ்ளோ பெரிய டெரர் அப்பாவா இருந்தாலும் ஒருநாள் உங்களிடம் மனம் விட்டு பேசுவார். அந்த இடத்தை நாம்தான் தர வேண்டும். என் தங்கச்சி திருமணம் ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்த நேரம் நான் எம்.பி.ஏ படித்துகொண்டு இருந்தேன். வீட்டுல யாரும் இல்லை. என்னை கூப்பிட்டு தங்கச்சிக்கு எவ்வளவு நகை போடுறோம், கல்யாண செலவு என்ன, யாரிடம் எவ்வளவு இதற்காக கடன் வாங்குகிறோம் என்று சொல்லி என் அண்ணன்கள் தரும் பணம் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு போய் விட்டார். அதன் பின்தான் புரிந்து இது எல்லாம் நானாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் என்று.  நான் வளர்ந்து விட்டேன் என்பதை உணர்த்திய தருணம் அது.

(bigcommerce.com)

போங்க பாஸ் எங்க அப்பாலாம், எப்ப பாத்தாலும் சிடு சிடு அப்பா, சிரிக்கவே மாட்டாரு! அப்டிப்பட்ட அப்பா வளர்ந்த சூழல், இல்ல பணி புரியிர சூழல் பத்திலாம் நாம் கவலை  பட்டுருக்கமா? நமக்கு தேவையான எல்லாவற்றையும் அம்மாவின் மூலமாவே வாங்கி ஆண் குழந்தைக்கும் அப்பாக்களுக்குமான இடைவெளி ஏக்கர் கணக்கில் ஆயிருச்சு!. இப்போ இருக்கிற பெண் குழந்தைகளுக்கும் அப்பாகளுகளுக்குமான உறவு  “தெறி பேபி அளவு இல்லை என்றாலும், ப்ளீஸ் பா.. என்று எதையும் முன் நின்று கேட்கும் அளவு அப்பாக்கள் பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம் தந்து உள்ளார்கள். (ஆண் குழந்தைகளுக்கு அம்மாவும் பெண் குழந்தைகளுக்கு அப்பாவும் தான் அதிகமாக புடிக்கும்னு ஆய்வுகள் சொல்லுது மக்களே).

அப்பாக்கள் தங்களை அம்மா புள்ளையா, பொண்டாட்டி தாசனா இந்த உலகத்துக்கு காட்டிக்க கூடாதுனு தான் இந்த ஆங்ரி பேர்ட் முகமூடிய மாட்டிகிறாங்க!. நான் பள்ளிக்கூடம் படுச்ச சமயம் ஒரு தீபாவளி அன்னைக்கு எங்க அம்மாவுக்கு பயங்கர காய்ச்சல். கறி சமைச்சு, வடை சுட்டு, எங்களுக்கு புது துணி கொடுத்துனு எல்லாம் பண்ணி 10 நிமிசத்துக்கு ஒரு தடவ அம்மாவையும் பாத்துகிட்டாரு! போங்க தம்பி எங்க வீட்டில் எங்க அப்பா தான் டெய்லியும் சமயல் அப்டினு செல்றிங்களா?. ஆனா அதுவரை எங்க அம்மா சொன்னது உங்க அப்பா தண்ணி குடுச்ச செம்ப கூட எடுத்து வைக்க மாட்டாருனு!. நாங்களும் பார்த்தது இல்லை . அதனால் அப்பாக்கள் மேல நாம வச்சுருக்க அந்த மாய பிம்பத்தை உடைத்தெறியணும்.  எல்லா அப்பாவும் எம்டன் மகன் அப்பா இல்லை மை லார்ட்!.

சொல்டிங்கள்ல பாஸ்! இப்பவே எங்க அப்பாவ கட்டி புடுச்சு முத்தம் கொடுத்து அப்பாக்கள் தின வாழ்த்துக்கள் சொல்றேனு கெளம்புனா சாரிப்பா சில்றை இல்லனோ, சிவகாமி உன் பிள்ளைக்கு ஒரு நாள் முத்தும்னு (பைத்தியம்) சொன்னேன் கேட்டியா? இங்க பாரு போன்ற பதில் தான் கிடைக்கும். ஏன்னா அவர் அப்பா பாஸ். முடுஞ்ச வர நமக்கும் அவர புடிக்கும்னு உணர்த்துனாலே போதும்…

குறும்படத்துல ஆரம்பிச்சோம் குறும் படத்துலயே முடிப்பமே, ஒரு பெரும் சூறாவளி வீசுகிறது அந்த நகரத்தின் பல வீடுகள் உடைகிறது, கம்பங்கள் சாய்கிறது ஒரு கொடியில் ஒரு சட்டை மட்டும் அந்த சூறாவளியில்  சிக்கி  தொங்கி நிற்கிறது. இன்னும் காற்று வேகமாக வீசுகிறது. அந்த சட்டையின் ஒற்றை கை மட்டும்  அந்த கொடியை பிடித்து தொங்குகிறது. சூறாவளி நின்று பழைய சூழல் திரும்புகிறது அந்த சட்டை தனக்குள் இருக்கும் ஓரு பெண் துணியையும், ஓரு குழந்தையின் துணியையும் வெளியே எடுப்பதோடு படம் முடியும். (பேர் தெரியாத வெளிநாட்டு அனிமேஷன் குறும்படம் இது தெருஞ்சா சொல்லுங்க)

ஒரு தந்தை சந்திக்கும் அத்தனை போராட்டத்திற்கும் பின் தன் குடும்பத்தின் நலன் மட்டுமே பிரதானமாக இருக்கும். அப்ப அப்பாக்கள் கஷ்டத்த எப்படி புரிஞ்சுகிறது?,ரொம்ப சுலபம். நாமளும் அப்பா ஆவோம் பாய்ஸ். அப்ப இருக்கு….

எல்லா நாளும் தந்தையர் தினம்தான் மக்களே! அப்பாவ புருஞ்சுகிட்டா….

Related Articles

Exit mobile version