நமக்கு பிடித்த இருசக்கர வாகனத்தை சாலையில் எங்கேயாவது பார்க்கும்போது, இந்த பைக் நமக்கு ஒருநாள் சொந்தம் ஆகாத என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கும் உண்டு.
யாருக்கு தான் அதில் அமர்ந்து ஊரை சுற்ற வேண்டும் என்கிற ஆசை வராது.
சிலமுறை நமது பட்ஜெட்டில் நமக்கு பிடித்த பைக் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் பல தருணங்களில் நமக்கு பிடித்த எந்தவொரு பைக்கும் நம் நினைக்கும் தொகையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். பிறகு அதுவொரு கனவாகவே இருந்துவிடும்.
வாங்க இன்று நாம் உலகின் விலை உயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான பைக்ஸ் பற்றி அறிந்துக்கொள்வோம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ‘காஸ்மிக் ஸ்டார்ஷிப்’
உலகில் விரல் விட்டு எண்ணப்படும் விலை உயர்ந்த பைக் வகைகளில் இதுவும் ஒன்று. இதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் ஆகும். இதன் சுவாரசியமான அம்சம் என்னவென்றால் இந்த விலை பைக்கின் வேகத்தை வைத்தல்ல, இந்த பைக்கில் ஓவியம் வரைந்த ஓவியர் ஆர்ம்ஸ்ட்ராங் ஆவர். இவர் உலகின் தலைசிறந்த ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்யுபின் AJS 500
போர்க்யுபின் என்கிற இந்த இருசக்கர வாகனம் ரேசிங்கில் பயன்படுவதற்காக தயாரிக்கப்பட்டது. தற்போது இதுபோன்ற வாகனம் உலகம் முழுவதிலும் நான்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வடிவம் பழைய காலத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது காரணம் அனைத்து தரப்பு மக்களையும் கவருவதே இதன் நோக்கமாகும். இந்த பைக்கின் முக்கிய அம்சம் என்ஜினை குளிர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளும் திறன் இதனில் உள்ளது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களின் எஞ்சின்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும் இதனை தவிர்க்க இதனுள் ஒரு கூலிங் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் தற்போதைய சந்தை விலை 7,50,000 டாலர் ஆகும்.
டாட்ஜ் டாமஹாக் V10
பைக்கர் உலகில் ஒரு வினோதத்தை உருவாக்கிய நிறுவனம் டாட்ஜ் டாமஹாக். இவர்கள் இருசக்கர வாகன பிரியர்களை கவரும் நோக்கத்தில் தயாரித்த பைக்கில் இரண்டு சக்கரத்திற்கு பதிலாக நான்கு சக்கரங்களை வைத்து சாதனை புரிந்தனர். முதன் முதலில் இந்த பைக் 2003 ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு சக்கரங்கள் மற்ற வாகனங்களைவிட எடை கூடிய வாகனமாக இருந்தாலும் மணிக்கு 420 மயில்கள் செல்லக்கூடிய அதிநவீன அம்சம் இந்த பைக்கில் உள்ளது. இந்த வாகனத்தின் விலை 5,55,000 டாலர்கள் ஆகும்.
பிரிட்டிஷ் விண்டேஜ் பிளேக்
வேகம் பிடித்தவர்களுக்கு இந்த பைக் நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது பார்ப்பதற்கு பழமையாக தெரிந்தாலும் இதனுள் இருக்கும் அம்சம் முற்றிலும் நவீனமானது. 1000 CC எஞ்சின், நவீன டிஸ்க் பிரேக் மற்றும் இதன் வடிவம் இதனின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த பைக் நீண்ட தொலைவான பயணங்களுக்கு சிறந்ததாக அமையும். இந்த பைக்கின் விலை 4 லட்சம் டாலர் ஆகும்.
ஈகோஸ் FE Ti XX
ஈகோஸ் நிறுவனம் ஷங்கர் சர் திரைப்படம் மாதிரி பிரம்மாண்டத்திற்கு உலகம் முழுவதிலும் பெயர்போன நிறுவனமாகும். ஈகோஸ் டைட்டானியம் சீரிஸ் வரிசையில் ஈகோஸ் FE Ti XX உலகின் பிரம்மாண்ட பைக் வரிசையில் கருதப்படுகிறது. இந்த பைக்கின் இன்றைய சந்தை விலை சுமார் மூன்று லட்சம் டாலர் ஆகும். மேலும் இந்த பைக் வாங்கினால் டைட்டானியம் கைகடிகாரம் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்சிஆர் எம் 16
என்சிஆர் உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன நிறுவனம் ஆகும். சூப்பர்பைக் செய்வதில் இந்நிறுவனம் என்றுமே சர்ச்சையில் இருக்கும். என்சிஆர் எம் 16 ஆரம்ப விலை 1,60,000 டாலர்கள் ஆகும். இந்த சூப்பர் பைக் உலகில் இருக்கும் மற்ற சூப்பர் பைக்களின் முன்மாதிரி என்றே சொல்லலாம்.
எம்டிடி டர்பைன் ஸ்ட்ரீட்பைட்டர்
இந்த பைக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால் பிரபல கார் நிறுவனமான ரால்ஸ் ரோயிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 249 மயில் வேகம் இதனின் மற்றொரு சிறப்பம்சம். இந்த பைக்கில் இரும்பு பயன் படுத்தாமல் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணத்தினால் இதன் எடை மிகவும் குறைவாகும். இதன் விலை 1,75,000 டாலர் ஆகும்.
எம்வி அகஸ்டா F4CC
இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த இருசக்கர வாகனம் மிகவும் அபூர்வமானது. இதுபோன்று 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த பைக்கின் விலை 1,20,000 டாலர்கள் ஆகும். மேலும் இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் இதன் சிறப்பம்சம் ஆகும். இதன் மற்றொரு சிறப்பு அம்சம் இந்த பைக்கின் பொருட்கள் கைகளால் பொருத்தப்பட்டது.
வைரஸ் 987 C3 4V V
பெயரே விநோதமாக இருக்கிறதா. இதுதான் இந்த பைக்கின் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும். இந்த நிறுவனம் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்கள் செய்வதில் வல்லமை வாய்ந்தது. இதுபோன்று ஒன்றை மீண்டும் தயாரிப்பது என்பது முடியாத ஒன்றாகும் இதன் சந்தை விலை 91,000 டாலர்கள் ஆகும்.
என்சிஆர் லேகேரா 1200
இதன் சிறப்பம்சம் இதன் எடை ஏனென்றால் இந்த பைக்கின் எடை 47 கிலோ ஆகும். வேகமான மற்றும் எடை குறைவாக இருப்பது இதனை மற்ற பைக்களின் முன்னிலையில் தனித்துவமாக காட்டுகின்றது. இதன் சந்தை விலை 72,000 டாலர்கள் ஆகும்.
இன்று உலகில் இருக்கும் விலைவாசிக்கு அனைத்துமே விலை உயர்ந்த பொருளே பிடித்ததை வாங்க முடியவில்லை என்றால் என்ன, பிடித்ததை பற்றி அறிந்து கொள்வதிலோ ஆசை கொள்வதில் தவறில்லை. ‘நிலவை தொட முயற்சி செய் நட்சத்திரமாவது கையில் எட்டும்’ இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் செய்யவும் மிகவும் பிடிந்திருந்தால் கமென்ட் செய்யவும். உங்களது கருத்து எங்களது தரத்தை உயர்த்த உதவும். மீண்டும் ஒரு சுவாரசியாமான தகவலுடன் சந்திப்போம்
Featured image credit: wallpapersxl.com