அன்னையர் ஆடல்!
அன்னையரின் முக்கியத்துவம் வழக்கமான மகாபாரதக் கதைகளில் பெண்களின் முக்கியத்துவம் என்பது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருக்கும். திரௌபதி போன்ற சில பாத்திரங்கள் தவிர்த்து ஏனைய பெண் பாத்திரங்கள், மற்ற ஆடவரின் அன்னை, மனைவி, சகோதரி என்றளவில் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுவார்கள். ஆனால் ஜெயமோகனின் மாபெரும் நாவலான வெண்முரசு, இது வரை அறியப்படாத பாத்திரங்களை விரிவாகவும், நன்கு அறியப்பட்ட பாத்திரங்களை மிக நுணுகியும் அறியுமாறு அமைக்கப்பட்டது. எனவே இந்த பாரதக்கதையில் பெண் பாத்திரங்கள், குறிப்பாக அன்னையர்களின் முக்கியத்துவம் கனிசமானது. […]