குழந்தை வளர்ப்பில், பிறந்தது முதல், 5 வயது வரை இருக்கும் காலக்கட்டம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. குழந்தை வளரும் சூழலும் அந்த குழந்தையின் நரம்பு மண்டலம் வடிவம் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், அந்த குழந்தையின் சுற்றுச்சூழலை அமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அந்த முதல் பருவத்தில் வளரும் போது அதன் மனதிற்கு கிடைக்கின்ற வடிவத்திற்கும் சூழலுக்கும் தொடர்பு உள்ளது.
இந்த நரம்பியல் தொடர்புகள் குழந்தைகளின் பார்வை, செவி மற்றும் மொழி திறன்களை கட்டுப்படுத்த மூளையின் பாகங்களின் வடிவத்திற்கும் திறனுக்கும் காரணியாக உள்ளது. இது குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன், செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல், கஷ்டமான சூழ்நிலைகளை வினைதிறனுடன் முகம் கொடுப்பது தொடர்பில் செல்வாக்கினை செலுத்தி நிற்கின்றது.
மூளை உருவாகும்போது, நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்கு பிரதிபலிப்பாக நரம்பியல் இணைப்புகள் வடிவமைக்கப்பட்டு மாற்றப்படுகின்றன. நல்ல அனுபவங்கள் நல்ல ஊட்டச்சத்து, உணர்ச்சி மற்றும் தூண்டல் செயல்பாடுகள், குழந்தை வளர்ப்பு தொடர்பிலான ஈடுபாடுகள், குடும்ப உறுப்பினர்களால் வழங்கப்படும் பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கும்.
இதற்கு மாறாக, புறக்கணிக்கப்படுதல், வன்முறை, சுற்றுப்புற சூழல் மாசு போன்ற எதிர்மறை அனுபவங்களால், குழந்தைகளிடம் மன அழுத்தத்தை உருவாக்கும் தன்மை கொண்ட கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கப்படுகிறது. இதனால் மூளை வளர்ச்சியின் நரம்பு இணைப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி கனிசமாக பாதிக்கப்படலாம்.
போதுமான போஷாக்கை பெறாத குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பாதிக்கப்படும்; உலகில், இன்றைக்கும் குறந்தது 155 மில்லியன் குழந்தைகள் குள்ளமான தோற்றத்தை உடையவர்களாக மாறுவதற்கு போதிய போஷாக்கின்மையே காரணம் என்கின்றது ஒரு ஆய்வு.
2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், உலகில் சுமார் 246 மில்லியன் குழந்தைகள் பிரச்சனைக்குரிய சூழலில் வளருவதாகவும், வன்முறைகளுக்கு ஆளாகி, அதில் 75 மில்லியன் குழந்தைகள் 5 வயதிற்கு முன்பே மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் மாசின் காரணமாக குழந்தைகள் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும், இதன் விளைவாக நரம்பு தசை சிதைவு ஏற்படும். இன்றைக்கும் உலகெங்கிலும் 300 மில்லியன் குழந்தைகள், சர்வதேச அளவில் குறிப்பிட்டிருக்கும் வரையறைக்கு 6 மடங்கு அதிகமாக நஞ்சு கலக்கப்பட்ட காற்று உள்ள பகுதியில் வளருகின்றனர்.
இலங்கையில் , 5 வயதிற்கும் குறைவான குழந்தைகளில் 17 சதவிகிதம் குழந்தைகள் வறுமையின் காரணத்தாலும், வேறு சில காரணங்களினாலும் வளர்ச்சி குன்றி வாழும் அபாய சூழ்நிலையில் வளருகின்றனர். 5 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளில் 800 குழந்தைகள், வளர்ச்சி குன்றிய குறைபாட்டால் பெற்றோர்களை விட்டு வேறு தனியார் விடுதியில் தங்கியிருக்கின்றனர்.
இலங்கை அரசின் மொத்த நிதி நிலையில் 0.0001 சதவிகிதம் தான் ஆரம்பகால் குழந்தை வளர்ப்பு திட்டங்களுக்கு செலவழிக்கின்றது. இது தெற்கு ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடுகள் ஆரம்ப கால குழந்தை வளப்பிற்கு ஒதுக்கும் நிதிகளிலேயே மிகவும் குறைந்த சதமிகிதமாகும். இது தெற்கு சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் ஆரம்ப கால குழந்தை வளர்ப்பிற்கு ஒதுக்கும் நிதியை விட குறைவுதான். இது மிகவும் கவலைக்கிடமான செய்தியாகும்.
இதன் விளைவாக “UNICEF” உலகமெங்கும் இருக்கும் பெற்றோர்களுக்கு பரிந்துரைக்கும் மூன்று சிறிய வழிகள் என்னவென்றால், சத்தான உணவு,ஊக்கப்ப்டுத்துதல் மற்றும் பாதுகாத்தல். “உண், விளையாடு, நேசி” என்பதே அது.
குழந்தை வளர்ப்பு என்பது அந்த குழந்தையின் வீட்டில் மட்டும் ஏற்படுகின்ற ஒன்றல்ல என்பதைத் UNICEF அமைப்பு உணர்ந்துள்ளது. இலங்கையில் 3 வயதிலிருந்து 5 வயது வரை இருக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதம் குழந்தைகள் தான் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர். இதனால் இலங்கையில் இந்த அமைப்பு 3 வயது முதல் 5 வயது வரை இருக்கும் குழந்தை பருவத்தில், குழந்தைக்கு வழங்க வேண்டிய ஆரம்பக் கல்வியின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
UNICEF அமைப்பானது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக ஒரு வருடமாவது முன்பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய புதிய மனு ஒன்றிற்கு கையொப்பமிடும் ஊடாக பொதுமக்களை வலியுறுத்துமாறு வேண்டுகிறது.
இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும், இலங்கை மென்மேலும் செழிப்படையவும் , அனைத்து குழந்தைகளுக்கும் முழு அறிவாற்றல் கிடைக்கப்பெறச் செய்ய வேண்டியது அவசியம். இது ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் 5 வயதிற்குள், சரியான போஷாக்கு வழங்குதல் மூலமாகவும், தொடக்கத்திலே மனதை உருவகப்படுத்துதல் மூலமாகவும், சரியான பாதுகாப்பு மற்றும் எந்த பாகுபாடுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால கல்வியை அவசியம் வழங்குதல் மூலமாகவும் நிகழ்த்திட வேண்டும்.
மேலதிக தேடல்களுக்கும் விபரங்களுக்கும் மற்றும் விண்ணப்படித்தை நிரப்பிக்கொள்ள : www.unicef.lk/eatplaylove