மாற்றத்தை ஏற்படுத்திய பெண்- சுதா வர்க்கீஸ்

இந்தியாவிற்கு அதன் பலமும், பலவீனமும் மக்கள் தொகை தான். இன்னும் ஏட்டுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத மக்களும்  இந்த நிலப்ப்ரப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு விதத்தில், இந்த கணக்கெடுப்புகள் எந்த பிழையும் இல்லாமல் சரியான முறையில் எடுக்கப்பட்டிருந்தால் கூட நமது அரசால் தீட்டப்படும் திட்டங்களும், அதற்கு ஒதுக்கப்படும் நிதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, செயல் திட்டங்களும் வேறு வடிவம் பெறும். இதனால் ஒரு நிலையான மேன்மை மிக்க வளர்ச்சி சார்ந்த மாற்றம் ஏற்படும். மேலே குறிப்பிட்ட செயல் நிகழ்வது அவ்வளவு எளிதல்ல. அதனாலேயே இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பல தன்னார்வலர்களை ஊக்குவித்து  நம் நாட்டின் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளனர்.

அவ்வழியே மேம்பாடு பல துறைகளிலும், பல விதங்களிலும் தேவைப்படுவதால் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் சிலர் தான் இச்சமூகத்திற்கு தனது தேவையை உணர்ந்து செயல்படுகின்றனர்.  இதில் ஒரு பெண்ணாக பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன் மாதிரி பெண்களின் சாதனைக் கதைகளை ”Changemaker campaign” மூலம் மக்களிடம் “UN Women India” ன் துணையுடன் எடுத்துச் செல்வதில்  “MG Motor”-ம் ”The Better India” -வும் பெருமகிழ்ச்சி அடைகின்றது.அந்த வரிசையில் நாம் இங்கு காண இருப்பது சுதா வர்க்கீஸ்.

சமூக ஏற்றத்தாழ்வு

சுதா வர்க்கீஸ், பீகாரில் உள்ள முசாஹர் சமூகத்தின் வளர்ச்சிக்காக கேரளாவிலிருந்து பீகாருக்கு வரவில்லை. பீகாருக்கு வந்து சமூகப்பணியில் ஈடுபடும்போது இந்த சமூகம் ஒதுக்கப்ப்டுவதையும், ஒடுக்கப்படுவதையும் பார்த்திருக்கிறார். அதன் பின் தான் இவர்களுக்கென்று மூழு ஈடுபாட்டோடு பணியாற்ற தொடங்கினார். முசாஹர்களை அவ்வாறு அழைப்பதற்கு அவர்கள் எலிகளை அடித்துச் சாப்பிடுவதே காரணம் என்கிறார் சுதா. அவர்கள் ஏன் எலியை சாப்பிட வேண்டும் என்கின்ற கேள்வியில் தான் உண்மையான தீண்டாமையே தொடங்குகிறது என்பது என் கருத்து. கேட்டையத்தில் வசதி வாய்ப்போடு வாழ்ந்து வந்த சுதாவுக்கு முதலில் பிகாரை தனது இளம் வயதில் வந்து பார்க்கையில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது எனலாம். ஏனெனில் பிகாரில் உள்ள முசாஹர் சமூக மக்களைப் பார்க்கையில் தான் இந்தியாவில் சாதி என்ற பெயர் கொண்டு தீண்டாமை கொடுமைகளும், உரிமை நிராகரிப்புகளும் நடக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். முதலில் பிகாரில் உள்ள ஒரு கிருத்துவ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் சுதா, அங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட சுதா 1987ல் முசாஹர் சமூகத்திற்காக ”நாரி குஜான்” என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி செயல்படத் தொடங்கினார்.

 

சுதா தன்னுடைய “நாரி குஞ்சன்” அமைப்பை தொடங்குவதற்கு முன்பு அந்த முசாஹர்கள் தன்னை அவர்களோடு ஒருவராக நினைக்க வைக்க அவர்கள் வாழும் மண்குடிசையில், அவர்களோடே வாழ்ந்திருக்கிறார்.

Musahar Rat Eaters (Pic: straitstimes)

நாரி குஞ்சான்

1987ல் ”நாரி குஜான்” அமைப்பை அவர் நிறுவும் போது அந்த முசாஹர் சமூக பெண்களுக்காக தான் முக்கியமாக பணிபுரிய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். முதலில் அந்த பெண்களிடம், அவர்களது சமூக உரிமையைப் பற்றி எடுத்துரைத்து அவர்களின் அடைப்படை சட்ட அறிவை மேம்படுத்தினார். அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தியதோடு, அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் வரும்படி இவரது செயல்பாடுகள் இருந்தது.

மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி,பெண்கள், தானே சம்பாதிக்கும்படி வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்தார். முதலில் இவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணியாற்றத் தொடங்கிய சுதாவை வசை பாடியவர்கள் தான் அதிகம். ஆனால், இவருக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதை சிறிது கூட பொருட்படுத்தாமல், முசாஹர் சமூக மக்களின் எதிர்காலத் தேவை என்னவென்பதை கருத்தில் கொண்டு தனது இலக்கை நோக்கி திடமாக பயணித்தார்.

Mahila Band (Pic: ruralindiaonline)

சமூகப்பணியின் சோதனைகள்

எந்த ஒரு சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடும்போதும், சம்மந்தப்பட்ட சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், சமூகப்பணியாளரின் இலக்கை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. 1987ல் தொடங்கப்பட்ட அமைப்பு, ஒரே குறிக்கோளைக் கொண்டு 30 வருடம் செயல் பட்டிருப்பதே மிகப்பெரிய சாதனை. இவருக்கு பதமஸ்ரீ கிடைத்திருக்காதா என்ன?

ஆம் இவரது சமூகப்பணிக்கு இந்திய அரசு இவருக்கு உயரிய விருதான பத்ஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்திருக்கின்றது.

கிட்டத்தட்ட 30 வருடமாக செயல்பட்டார் சுதா, சரி, 30 ஆண்டுகளின் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றார் என்பது தான் மெய்சிலிர்க்க வைக்கும் கதை.

சோதனைகள் என்பது கொஞ்ச நஞ்சமில்லை, முதலில் முசாஹரக்ளுடன் நிற்பதற்காக பலரிடமிருந்து வசைபாட்டுக்களை வாங்கியிருக்கிறார் சுதா. முசாஹர்களின் பகுதிக்கே சென்று அவர்களுக்கென்று எல்லா அத்தியாவசியங்களையும் செய்து கொடுத்திருக்கிறார் ஒரு தனி பெண்ணாக. இதை எழுத்துக்களில் புரிய வைப்பது கடினம். ஏனென்றால், கஷ்டமாக தாங்கள் சிலவற்றை உணராத ஒன்றை, அது உங்களுடைய கஷ்டம் தான் என்று உணர வைத்து, சக மனிதர்கள் போல வாழ ஏதுவாக அவர்களது மன நிலையை முதலில் மாற்ற முயற்சி செய்திருக்கிறார். இதெல்லாம் சாதாரண ஒரு செயலே இல்லை.

School Going Girls (Pic: vqronline)

சாதனைகள்

850 சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி, அந்தக்குழுக்களில் இருக்கும் பெண்கள் சுயமாக சம்பாதித்து வாழும் நிலையை ஏற்படுத்தியுள்ளார். அங்கு இருக்கும் இளம் பெண்களிடம் இருக்கும் ஆற்றலைக் கண்டறிந்த சுதா, அந்த பெண்களுக்கென்று ஒரு தனி பள்ளியை நிறுவி, அங்கேயே அவர்களுக்கென்று தற்காப்புப் பயிற்சியும் வழங்கி ஊக்குவிக்கிறார். அவர்களுக்கு ஏன் தற்காப்பு கலை என்கிறீர்களா?… இன்றைக்கு சென்னையில் நடந்த சம்பவங்களை நினைக்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும் தற்காப்புக் கலை தேவைப்படுவது உங்களுக்கே புரியும். ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் பெண்கள் பிற சமூகத்தினரை பார்த்தாலே நாணி, வெடகப்பட்டு ஒதுங்கி நடந்து செல்லும் வழக்கத்தை இன்றும் சினிமாக்களில் சித்தரிக்கின்ற படைப்பாளிகளிடம் இந்த முசாஹர் சமூகத்து பெண்களை அறிமுகப்படுத்தி வைத்தால் தான் எதிர்கால இந்தியா எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதே அவர்களுக்கு புரியும்.

Martial Art (Pic: creativeboom)

இங்கிருந்து பல மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூடிய விரைவில் நம் இந்தியாவிற்கு கிடைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லும் சுதா. இந்த சமூகத்தினரை, என்று மற்றவர்கள் வியந்து பார்க்கின்றார்களோ அன்று தான் தன்னுடைய கடமை முடிந்ததாக தான் கருதுவேன் என்கின்றார் சுதா வர்க்கீஸ். பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சுதா வர்க்கீஸுக்கு ஒரு சல்யூட்.

ஒவ்வொரு நாளும் புதிய தளத்தை அமைத்து இந்தியாவின் வருங்காலத்தை நோக்கி நகரும், இந்தியாவின் சாதனைப் பெண்களை “UN Women India” ன் துணையுடன் “M G Motor”ம்  “The Better India” வும் இணைந்து கொண்டாடுகிறது.

இத்தகைய பிரச்சாரங்களுக்கு ஆதரவாக நீங்கள் முடிந்தவரை நன்கொடை வழங்கலாம். தானம் செய்ய, இந்த இணைப்பைப் பார்க்கவும்:

https://milaap.org/fundraisers/mgchangemakers

மேலும் M G Motor India நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள,

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பையும், இன்ஸ்டாக்ராம் இணைப்பையும் காணலாம்.

https://www.facebook.com/MGMotorIN/

https://www.instagram.com/mgmotorin/

Web Title: Sudha Varghese, A True Changemakers Lady, Tamil Article

Featured Image Credit: thebetterindia

Related Articles

Exit mobile version