நவீனமயமாக்குதல் என்பது என்றைக்கும் தொழில் சார்ந்தும், வசதி வாய்ப்பைச் சார்ந்துமே பார்க்கப்படுகின்றது. எல்லா மாறுதல்களும் வந்தபின் இன்றைக்கும் இந்திய திரு நாட்டின் பெரும்பாலான படிவங்களில் பாலினத்தை குறிப்பிடும் இடத்தில், ஆண் மற்றும் பெண் இவர்கள் இருவருக்கு மட்டும் தான் குறியீடுகள் இருக்கும். என்றைக்கு மூன்றாம் பாலினத்தவருக்கு படிவங்களில் இடம் அளிக்கின்றோமோ? அன்று முதல் தான் உண்மையிலேயே மூன்றாம் பாலினத்தவரை இந்த சமூகம் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ள தொடங்கியதற்கான அடையாளம். நான் சொல்வது சரிதானே? இன்றைக்கும் மூன்றாம் பாலினத்தவர் பொது இடங்களில் நடந்து செல்கையில் சுற்றியுள்ளவர் முகம் சுழிக்கின்ற போக்கு ஆங்காங்கே இருக்கின்றது. பலர் தனது வீட்டில் வளரும் குழந்தைகளிடம் மூன்றாம் பாலினத்தவரைப் பற்றிய புரிதலை எப்படி எடுத்து சொல்கிறார்கள் என்பதில் கேள்விகள் எழுகின்றது. ஏன் இன்றைக்கும் அவர்கள் படும் அவமானங்கள் செய்திகளாக வந்துகொண்டு தானே இருக்கின்றது? பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையைக் கூட மிகுந்த பொருட்செலவில் தான் அவர்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கின்றது.
இவர்களை போன்றோர் தினம் தினம் படும் பாடுகளைக் கண்டு, இவர்களோடு சமூகத்தில் துணை நிற்க பல சமூக ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றது. இதில் ஒரு பெண்ணாக பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன் மாதிரி பெண்களின் சாதனைக் கதைகளை ”changemaker campaign” மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதில் “MG Motor”-ம் ”The Better India” -வும் பெருமகிழ்ச்சி அடைகின்றது. இந்த முன்மாதிரி பெண்களில் நாம் முதன் முதலில் காண இருப்பது “கல்கி சுப்ரமணியம்” பற்றி…
கல்கியின் சிறு வயது
கல்கி ஒரு தென்னிந்திய பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரு மகள், மகன் அல்ல.
இரண்டு அழகான மகள்களைப் பெற்ற பாரம்பரிய சுப்பிரமணிய குடும்பத்திற்கு, முதல் மகனின் வருகையை முன்னொருபோதும் இல்லாத மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். குடும்பத்தில் அசைக்க முடியாத மகிழ்ச்சி போது, 13 வயதான சிறுவனுக்கோ போராட்டமான வாழ்க்கையாக இருந்தது, இது நவீன நாளில் “பாலின டிஸ்ஃபோர்பியா” என குறிப்பிடப்படும் ஒரு உடல் ரீதியான மாற்றமாகும். அவரது உடல் அல்லது நியமிக்கப்பட்ட பாலினத்திற்கும் அவர் அடையாளம் காணப்பட்ட பாலினத்திற்கும் இடையிலான மோதல் முரண்பாடை தான் “பாலின டிஸ்ஃபோர்பியா” என்பர்.
தனது 13 ஆவது வயதில், அவர் ஒரு பையனாக இருந்தும் தனக்குள் இருக்கும், அடையாளம் கண்டுகொள்ள முடியாத குழப்பமான உணர்வை தன் தாயுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் இதேபோன்ற போராட்டங்களை மற்ற குழந்தைகளும் எதிர்கொள்வார்கள் “அதைப் பொருட்படுத்தாதே” என்று அவருக்கு கூறப்பட்டது. இதெல்லாம் நான்கு அறைக்குள் வாழ்ந்தாலும் தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் இடைவெளியால் வரும் குழப்பமோ? அல்லது அவரது தாய்க்கு புரியும்படி இவரால் அந்த வயதில் வெளிப்படுத்தத் தெரியாததால் வந்த குழப்பமோ? என்பது நமக்கு ஒரு புரியாத புதிர் தான். இருப்பினும், இப்படி ஒரு சூழலை ஒவ்வொரு திருநங்கையும் தனது வீட்டில் கடந்து தான் வாசல் தாண்டி சுயமாக வாழ வெளியே வருவர் என்பதை நினைக்கையில் என் நெஞ்சம் கலங்குகிறது.
இவரது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள் கூட இவருக்கு சுலபமானதாக கடக்கவில்லை. தனது தோற்றத்திலும் குணாதிசயங்களிலும் பெண்மையைக் கொண்டிருப்பதற்காகத் தாக்கப்பட்டார். அவர் பெண்களுக்குள் பொருந்தக்கூடியவராக இருப்பதால், அவர் வயது ஒற்ற ஆண் சிறுவர்கள் அவரை நேசிக்கவும் மாட்டர்.
மீண்டு வந்த கல்கி
இந்த வகையான சமூக நிராகரிப்புகள், பெரும்பாலான குழந்தைகளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை சோதித்து பார்க்கும், சில நேரங்களில் அவர்களது மன வலிமையையும் உடைத்துவிடும். அப்படியான ஒரு தனிமைப்படுத்தும் சூழலே பல இளைஞர்களுக்கு தன்னை வளர்த்துக் கொள்வதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறது. அதைப் போன்ற சூழலால் பாதிக்கப்படும் இளைஞர்கள் அதனிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது புரியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கும் பழக்கம் சில காலங்கள் முன்பு வரை சமூகத்திற்கு பெரும் சவாலாக இருந்ததெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதிலிருந்து மீண்டு சுயமாக இந்த சமூகத்தில் வாழத்துணியும் கல்கி போன்றோரின் மீது மதிப்பு வருகிறது. இவரும் நம் எதிர்கால இந்தியாவின் தூண்களில் ஒருவர் தான் என்பதை மனதில் கொண்டு அடுத்த வரியை படிக்கத் தொடங்குவோம். அந்தச் சூழலில் ஒருவருக்கு வரும் கோபத்திற்கும், துணிச்சலுக்கும் ஒரு மயிர் இழை தான் வேறுபாடு.
தனிமை, தன்னை பலப்படுத்தியதாக கூறும் கல்கி, தனியாக இருந்தபோது, தனக்குத் துணையாக இருந்தது, தன் கல்வி தான் என்று கூறுகிறார். கல்வியில் சிறந்து விளங்கியவர்களின் குடும்பத்திலிருந்து வந்தமையால், படிப்பு தனக்கு இயல்பாகவே நன்றாக வந்தது என்றும் கூறும் கல்கிக்கு, கல்வி தான் உறுதுணையாக இருந்திருக்கின்றது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அதனை அவரும் ஆணித்தரமாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
கல்வி மற்றும் சாதனை
ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் பட்டம் பெற்ற கல்கி, இரட்டை முதுகலைப் பட்டம் வைத்திருப்பவர் ஆவார். இதுவே இளம் பருவத்தில் பல இன்னல்களையும் தாண்டி, சமூகத்தில் தனிமைப்படுத்தும் சூழல்களையும் தாண்டி, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சாதனையாளர் கல்கி சுப்ரமணியத்தின் கடந்த கால கதைகள். சுயமாக, சொந்த காலில் சம்பாதித்து வாழத் தொடங்கிய காலத்தில் SRS என்ற ஒரு செக்ஸ் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
தனது அடையாளத்துடன் முரண்பட்ட இளைஞன் முதல் இன்றைக்கு ஒரு நடிகர்-எழுத்தாளர்-சமூக ஆர்வலர் ’கல்கி சுப்ரமணியம்’ என்று மாறிய கதையை நாம் கண்டோம்.
இன்று, கல்கி நாட்டின் மிகவும் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற டிரான்ஸ்ஜெண்டர் ஆர்வலர்களில் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறார். அவர் சந்தித்ததைப் போன்ற இடையூறுகளையே, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்திக்கின்றார்கள். காலத்தின் மாற்றத்திலும் திருநங்கையை பொது மக்கள் பார்க்கும் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சகோதரி
இதனை நன்கு உணர்ந்த கல்கி தொடங்கிய ஒரு சமூக அக்கறை கொண்ட அமைப்பு தான் “சகோதரி” என்கின்ற ”Sahodari Foundation”.
கல்கி ஒரு சரியான பார்வையோடு தொடங்கிய “சகோதரி அமைப்பு”, கொண்டு திருநங்கைகளின் சமூக அந்தஸ்திற்கும், அவர்களில் சுய நிதி மேம்படவும் ஒட்டு மொத்த சமூகமும் அவர்கள் மீது கொண்ட பார்வை மாறவும், திருநங்கைகளுடன் இருந்து திடமாக பணியாற்றி வருகின்றது.
2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சகோதரி அமைப்பு, மூன்றாம் பாலினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு, திட்டங்கள் வகுத்து அவர்களது செயல்திறனை ஆராய்ந்து அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு, அவர்களே சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம், அவர்களுக்குள் சுயமாக வாழமுடியும் என்கின்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு, மூன்றாம் பாலினத்திற்கான “Matrimonial Website” ஒன்றையும் தொடங்கி, பல முற்போக்கான முயற்சிகளையும் அறிமுகம் செய்ததால், அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றது. அது மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தினர் செய்துகொள்ளும் திருமணமோ, விவாகரத்தோ சட்டப்படி செல்லும் என்று நவம்பர் 2017ல் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதற்கு உறுதுணையாக நிற்கும்.
அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதோடு, ஃபேஸ்புக்கின் 12 மிகுந்த ஊக்கமளிக்கும் பெண்கள் வரிசையில் ஒரு பெண்ணாக இருந்து சமூக ஊடகத்தை, ஒரு சமூக மேம்பாட்டுக்கான தளமாக பயன்படுத்தி பல மூன்றாம் பாலினத்தவரின் தன்னம்பிக்கைக்கு காரணமாக விளங்குகிறார் கல்கி. அது மட்டுமல்லாமல் புன்னகைப்பூ கீதாவின் தயாரிப்பில் பெண் இயக்குனர் விஜயபத்மாவின் இயக்கத்தில் உருவான, ’நர்த்தகி’, என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வரலாறு படைத்துள்ளார் கல்கி.
இன்று சமூகத்தில் நாம் தினம் தினம் சாலைகளில் பார்க்கின்ற மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கை முறையையும் நாம் சற்று சிந்தித்து பார்க்கையில் நிச்சயம் மிகவும் பின் தங்கிய நிதி நிலையில் தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆனால் சாதனையாளர் கல்கி இன்று சொந்தமாக சம்பாதித்து வாழும் வாழ்க்கை நிலை, ஒரு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவரின் சராசரி வாழ்க்கை நிலையை ஒற்றது என்ற உண்மையை உங்களுக்கு கூறினால், அதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் அது தான் உண்மை.
சாதனையாளர் கல்கி இந்த நிலையை அடைவதற்கு அவருடன் உறுதுணையாக இருந்தது அவரது கல்வியும் அவரது திறமையும் மட்டும் தான். அதோடு இன்னொன்றையும் இங்கு குறிப்பிட நான் கடமைப் பட்டிருக்கிறேன். அது அவருக்குள் இருந்த எண்ணங்கள். அவரால் இந்த சமூகம் மூன்றாம் பாலினத்தவரை சாடுவது போன்றதொரு விதத்தில் வாழ்ந்து, ரயில்களிலும், பேருந்துகளிலும் வந்து போகும் இளைஞர்களுக்கு இடையூறாக இருந்து, மீதம் உள்ள குறைந்த காலத்தை கடந்து சென்றிருக்க முடியும். ஆனால், நாமும் மற்றவர்களைப் போல கௌரவமாகவும், கன்னியத்தோடும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தனது கடினமான போராட்ட நாட்களை கடந்துள்ளார்.
இன்றைக்கு மூன்றாம் பாலினத்தினர், தான் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளாக கூறுவதைக் காட்டிலும், கல்கி கடந்து வந்த பாதையில் இருக்கும் பிரச்சனைகள் பன்மடங்கு அதிகம் தான். இன்றைக்கும் கல்கியின் ’சகோதரி’ எந்த மூன்றாம் பாலினத்தரையும் ஊக்குவிக்காமல் கடந்து செல்லும் நோக்கத்தில் செயல்படவில்லை. தான் அரவணைத்துக் கொண்ட அனைத்து மூன்றாம் பாலினத்தவரையும் சரியாக வழி நடத்தும் போக்கில் செயல்படுகின்றது. இதற்கு கல்கியின் “சகோதரி அமைப்பின்” மூலம் பயன்பெற்று, சொந்தக்காலில் நின்று சுயமாக வாழும் சகோதரிகளே ஆதாரம்.
ஒவ்வொரு நாளும் புதிய தளத்தை அமைத்து இந்தியாவின் வருங்காலத்தை நோக்கி நகரும், இந்தியாவின் சாதனைப் பெண்களை ” M G Motor”ம் “Better India” வும் இணைந்து கொண்டாடுகிறது.
இத்தகைய பிரச்சாரங்களுக்கு ஆதரவாக நீங்கள் முடிந்தவரை நன்கொடை வழங்கலாம். தானம் செய்ய, இந்த இணைப்பைப் பார்க்கவும்:
https://milaap.org/fundraisers/mgchangemakers
மேலும் M G Motor India நிறுவனத்தைப்பற்றி தெரிந்து கொள்ள,
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பையும், இன்ஸ்டாக்ராம் இணைப்பையும் காணலாம்.
https://www.facebook.com/MGMotorIN/
https://www.instagram.com/mgmotorin/
Web Title: Kalki Subramaniam, A True Changemakers Lady, Tamil Article
Feature Image Credit: sahodarifoundation