Infinity Pro ஆனது தொழில்நுட்பத்தை அனைவருக்கும் மலிவானதாக மாற்றும் இலக்குடன் டயலொக்கிலிருந்து வரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசித் தொடரின் ஒரு பகுதி இதுவாகும். பொதுவாக உயர் தரத்திலான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் காணப்படுகின்ற பெருமளவிலான வன்பொருட்களையும் விசேட அம்சங்களையும் கொண்டிருக்கின்றமையால், குறைந்த விலையில் சிறந்த பெறுமதியை Infinity Pro ஆனது கொண்டு வருகின்றது. அத்தோடு, இது வழமையான பாவனையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றபோதும், கடுமையான பாவனைக்குத் தேவையான உறுதியையும் கொண்டிருக்கின்றது.
விசேடமாக தொலைத்தொடர்பாடல் கம்பனிக்காக தயாரிக்கப்பட்டுள்ள Infinity Pro ஆனது சம்பெயின் தங்கத்தில் பிரீமியர் சதுர வடிவ பகுதியை கொண்டிருக்கின்றது. இது, கையடக்கத் தெலைபேசிக்கு உயர்தரமான தோற்றத்தை வழங்குகின்றது. பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட சட்டகமானது செம்மைப்படுத்தப்பட்ட உலோகப் பூச்சைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு, இலகுவாகப் பிடிக்கும் வகையில் வளைந்த பின் பகுதியையும் கொண்டிருக்கின்றது.
இந்த கையடக்கத் தொலைபேசியானது பக்கவாட்டில் மிகவும் மெல்லிய உளிச்சாயுமோரத்தைக் கொண்டிருக்கின்றது. எனவே, இக்கையடக்கத் தொலைபேசியின் முன்பகுதியின் பெரும்பாலான பகுதி ஐந்து அங்குல திரைக்கு வழங்கப்படுகின்றது. இந்த கையடக்கத் தொலைபேசியின் பின் பகுதியின் மேல் பகுதியில், துருத்தப்பட்ட டயலொக் இலட்சினையும், ஒலிபெருக்கி வலையும் அமைந்திருக்கின்றது.
விசேட அம்சங்கள்
Infinity Pro ஆனது 1.0GHz quad-core processor ஐ கொண்டிருக்கின்றது அத்தோடு 3GB RAM ஐயும் கொண்டிருக்கின்றது. எனவே, இந்தக் கையடக்கத் தொலைபேசி மந்தமாகாமல், சந்தையிலுள்ள எந்தவொரு செயலியையும் (App) பயன்படுத்தலாம். இதில் 16GB உள்ளக நினைவகமும் இருக்கின்றது. இதன் பின்பகுதியில் ஒரு MicroSD செருகுவாயின் ஊடாக 128 GB வரை உள்ளக நினைவகத்தை மேம்படுத்தலாம். இந்த கையடக்கத் தொலைபேசியானது Android 6.0 இனால் இயக்கப்படுகின்றது. கீழே வரும் அறிவிப்புக்கள் மற்றும் வேகமான கட்டமைப்பு Icon கள் உள்ளிட்டு, நீங்கள் பழக்கப்பட்டிருக்கின்ற அனைத்து தரநிலை கட்டமைப்புக்களும் இதில் உள்ளடங்கியிருக்கின்றன.
இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டிருக்கின்ற ஐந்து அங்குல திரையானது 16.7M கலர்கள், 293 ppi மற்றும் 720×1280 வர்ண தீர்வுகளைக் கொண்டிருப்பதனால், தெளிவான படத்தைக் காணலாம். இந்தக் கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களைப் பார்ப்பதும், விளையாடுவதும் சிந்த ஒன்றாக அமையும்
இந்தக் கையடக்கத் தொலைபேசியில் கழற்ற முடியாத பற்றரி காணப்படுகின்றது. எனவே, முழு நாளும் கையடக்கத் தொலைபேசியில் சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை, அவசரமாக சார்ஜ் செய்ய வேண்டி ஏற்பட்டால், அவசரமாகவும் சார்ஜ் செய்ய முடியும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு மணித்தியாலம் கதைக்கலாம்.
இதன் பின்பகுதியில் 8MP கமரா உள்ளது. அதேவேளை செல்ஃபி அல்லது வீடியோ அழைப்புகளுக்கான முன்பகுதி கமரா 5MP ஐ கொண்டிருக்கின்றது.
Infinity Pro ஆனது HSPA+ மற்றும் LTE வலையமைப்பில் தரநிலை தொடர்பாடல் நெறிமுறைகளைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு, 802.11 b/g/n Wi-Fi மற்றும் bluetooth ஐயும் கொண்டிருக்கின்றது. இதேவேளை, தரநிலை USB தொடர்பு மற்றும் headphone செருகு பகுதியையும் கொண்டிருக்கின்றது.
முடிவு
Infinity Pro ஆனது சிறந்த கட்டமைப்பையும், சிறந்த உணர்வையும் கொண்ட, சிறந்த தோற்றத்தை உடைய கையடக்கத் தொலைபேசியாகும். இதன் பெரியளவிலான திரையானது வீடியோக்களை தெளிவாகப் பார்ப்பதற்கு உதவுகின்றது. இதன் quad-core processor ஆனது, இணைய விளையாட்டுக்கள் மற்றும் பாரிய க்ராஃபிக் வேலைகளுகத் தேவையான வேகத்தை வழங்குகின்றது. இந்த கையடக்கத் தொலைபேசியானது அதிகளவிலான சக்திகளைக் கொண்டிருக்கின்றது. எனவே, menu கள் மற்றும் apps களை கையாள்வதும், பல்வேறு வேலைகளை செய்வதும் மிக மென்மையான அனுபவமாக இருக்கும்.
Infinity Pro ஆனது 14,990 ரூபா என்ற அதன் விலைக்குப், அதிகளவிலான பெறுமதியைக் கொண்டிருக்கின்றது. நாடு முழுவதிலுமுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில், ஒரு வருட உத்தரவாதத்துடன் இதனைப் பெறலாம்.
ஆக்கம் – அன்றூ ஹாவ்சன்