மிகவேகமாக கணப்பொழுதுகளை கழிக்கும் நம் வாழ்க்கையில் தொடர்பாடல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த வேகத்திற்கு நடுவில், தொடர்பாடலை எப்படி கையாளுகிறோம் ? எப்படி அதுசார்ந்த தொழில்நுட்பத்தையும், செயலிகளையும் நிர்வகிக்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியும், தொடர்புகளும் தங்கியுள்ளது என்றே சொல்லலாம். அப்படி, தொடர்பாடலில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க கூடியதாகவும், மிக இலகுவாக அனைத்தையும் கையாளக்கூடியதாகவும் உருவாக்கம் பெற்றதே Dialog Self Care செயலியாகும். முதன்முதலில் 2013ம் ஆண்டு இந்த செயலியை Dialog நிறுவனமானது அறிமுகம் செய்திருந்தது. இதன்போது நிறுவனத்தினதும், செயலியினதும் முதன்மையான நோக்கமாகவிருந்தது, வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்து தொடர்பாடல்சார் தொழிற்பாடுகளையும் மேற்கொள்வதன் மூலம் அவர்களது தேவைகளை இலகுவாக நிர்வகித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இலங்கையில் இது முதன் முதலில் Dialog நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டபோது, தொடர்பாடலின் முக்கிய பாய்ச்சலாக இது பார்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சேவைகளை ஒரே செயலியைக் கொண்டு செய்து முடிக்கக் கூடியதாகவிருப்பது இதன் விஷேட அம்சமாகும். இது அறிமுகபடுத்தப்பட்ட காலவோட்டத்தில், இந்த செயலியின் பயன்பாடும், அதன் பிரபலத்தன்மையும் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற செயலியாக இதனை மாற்றியிருக்கிறது.
Dialog Self Care செயலியானது இலங்கையினர் அதிகம் பயன்படுத்தும் செயலியாக அமைந்துள்ளதுடன், அண்மையில் இது மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட இலங்கையின் மிகச்சில செயலிகளிலொன்று என்கிற பெருமையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த செயலியானது தற்சமயம் சுமார் 300 சேவைகளை ஒரே தளத்தில் மிக இலகுவாகவும், நேர்த்தியாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக வடிவமைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செயலின் திறனுக்கும், பயன்பாட்டுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக 2016ம் ஆண்டு பார்சிலோனா நகரில் இடம்பெற்ற Mobile World Congressல் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தொடர்பாடல் தீர்வை வழங்கும் செயலிக்கான விருது Dialog Self Careக்கே கிடைக்கப் பெற்றது.
Dialog Self Careயின் அம்சங்கள்
இந்த செயலி இலங்கையில் உள்ளவர்களுக்கேன பிரதானமாக வடிவமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் இந்த செயலியை கையாளக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Dialog Self Care செயலியானது முதன்மையாக வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கவே எதிர்பார்க்கிறது. குறிப்பாக, கொடுப்பனவை மேற்கொள்ளல், அழைப்பு இசையை (Ring tones) தரவிறக்கம் செய்தல், பாவனை தொடர்பான அறிவுறுத்தல் என்பவற்றை வழங்குவதுடன், முடிந்தவரை பாவனையாளர்களை காகித பாவனையிலிருந்து விலக்கி சுற்றுசூழல் (Ecosystem) பொறுப்புணர்வுடன் செயற்பட ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த ஊக்குவிப்புக்கு வலுசேர்க்கும் விதமாக பாவனையாளர்கள் இந்தச் செயலியை பயன்படுத்தும்போது அதன் பாவனைக்காக பிரத்தியேகமாக எந்த கட்டணமோ, இணைய அளவோ அறவிடப்படுவதில்லை. முற்றிலும் இலவசமாகவே பயன்பாட்டளர்களுக்கு வழங்கப்படுகிறது.
Dialog Self Care செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:
- தொலைபேசி அழைப்புக்கான கடனை கோரவோ, பெறவோ முடியும். (Request/Share call credit)
- Club Vision உறுப்பினர்களுக்கு விஷேட சேவைகளை பெற முடியும்.
- Dialog சேவைகளின் மிகுதியை அறிய முடிதல்.
- Dialog சேவைக்கான கொடுப்பனவை செய்தல்.
- மேலதிகசேர் சேவைகளை (Value added services) தொழிற்படுத்தல் அல்லது நீக்கம் செய்தல்.
- அழைப்பு இசையை (Ringtones) தரவிறக்கம் செய்தல்.
- இணைய பாவனையை கண்காணித்தல்.
- இணைய பொதிகளை மேம்படுத்தல்.
- Dialog தொலைக்காட்சியின் அலைவரிசையை செயற்படுத்தல் அல்லது நீக்குதல்.
- Dialog வைபைகளை (WIFI) இனம் காணுதல்.
- வாடிக்கையாளர் சேவையை கோருதல்.
Dialog Self Care செயலியானது Dialog வாடிக்கையாளர்களது செயல்பாடுகளையும், அனுபவத்தையும் எளிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டே உருவாக்கபட்டதாகும். இந்த செயலிக்குள் உள்நுழையும்போதே வாடிக்கையாளர்கள் இலகுவாக தொலைபேசி சேவை, இணைய சேவை , தொலைகாட்சி சேவை உட்பட இதர அனைத்து சேவைகளையும் கையாளக்கூடியவகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கு உகந்த குறியீட்டை (Icon / Symbol) அழுத்துவதன் மூலமாக தேவையான சேவைப்பகுதிக்குள் உள்நுழைந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
உதாரணமாக, தொலைபேசி சேவையின் பாவனையை அறியவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும், முன்புபோல Dialog வாடிக்கையாளரொருவர் வீட்டிலிருந்து சென்று நேரத்தை செலவிடவோ அல்லது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு முழிக்கவோ தேவையில்லை. மாறாக, Dialog Self Care செயலியின் மூலமாக பாவனையின் அளவை அறிந்துகொண்டு, அதற்க்கு தகுந்தால்போலகட்டணத்தை செலுத்தவோ அல்லது பயன்பாட்டை மேம்படுத்திக் கொள்ளவோ முடியும். அதிலும், கட்டணங்களை உங்களது கடனட்டை அல்லது வரவட்டையை பயன்படுத்தி இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளை Dialog Self Care செயலி தன்னகத்தே கொண்டுள்ளதன் காரணமாக, உங்கள் வேலை மேலும் இலகுவானதாகிறது.
Dialog இணையத்தை உங்கள் தொலைபேசிக்கும், வீட்டுக்கும் பயன்படுத்துமொருவராக நீங்கள் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் எந்தவொரு மூலையிலிருந்தாலும் உங்கள் தொலைபெசியினதும், வீட்டினதும் இணைய பாவனையையும் Dialog Self Care செயலி மூலமாக அறிந்துகொள்ள முடிவதுடன், வீட்டுக்கான இணையப் பொதியின் அளவு தீர்ந்துவிட்டால் மிக இலகுவாக செயலியின் மூலமாகவே பாவனை அளவை நீடித்துக் கொள்ளவும் முடியும். இவை அனைத்தையுமே மிகக்குறைவான நேரத்தில், வினைத்திறனாக செய்து முடிக்கும் வசதியை Dialog Self Care செயலி உங்கள் கைகளுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது.
மேலதிகமாக, வாடிக்கையாளர் சேவையை தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு பெறுவது சிரமம் எனக் கருதினால், அதனையும் Dialog Self Care செயலியின் ஊடாக தேவையான விடயத்தைக் குறிப்பிட்டு கோரிக்கையை வழங்குவதன் மூலம், அனைத்துவகை Dialog சார் பிரச்சனைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மேலதிகமாக ஏதேனும் தேவைப்படின் Dialog பிரதிநிதிகளே உங்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை வழங்குவார்கள்.
Dialog Self Care செயலியின் மிகமுக்கிய பயன்பாடுகளிலொன்று, பயன்பாட்டாளர்களின் நிதிசார் தேவைகளை eZ Cash சேவை மூலமாக பராமரிக்கவும் , நிர்வகிக்கவும் வழியமைத்து கொடுக்கிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தவாறே வேண்டியவர்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடிவதுடன், தத்தமது பட்டியல்களுக்கான (Bills) கொடுப்பனவை செலுத்தவும் அனுமதிக்கிறது.
eZ Cash சேவையின் சிறப்பம்சங்கள்
- கணக்கு மீதியை பார்வையிட முடியும்.
- பணபரிமாற்றத்தை செய்ய முடியும்.
- பட்டியல்களை செலுத்த முடியும்.
- வியாபாரிகளுக்கான கொடுப்பனவை செய்தல்.
- eZ Cashயின் பாதுகாப்பு குறியீட்டை பராமரிக்க முடியும்.
- சேவை கட்டணம் தொடர்பான தகவலை அறிய முடிதல்.
Dialog சேவையின் மற்றுமொரு கிளையான Star Points சேவையையும் Dialog Self Care செயலியின் ஊடாக நிர்வகிக்க முடிவது சிறப்பம்சமாகும். Dialog Self Care செயலியானது Star Points மிகுதியை பார்வையிட, Star Points புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள, Star Points பரிமாற்ற நிரலை பார்வையிட மற்றும் Star Points புள்ளிகளை நன்கொடையாக வழங்கவோ, பரிமாற்றம் செய்யவோ அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த செயலியானது வாடிக்கையாளர்களின் தொலைபேசி GPS உதவியுடன் மிகத்துல்லியமாக Wi-Fi hotspotsகளை இனம்கண்டு வாடிக்கையாளர்களுக்கு மிகசிறந்த இணையபாவனை கிடைப்பதை உறுதி செய்கிறது. அதுமட்டுமல்லாது, மேற்கூறிய GPS உதவியுடன் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தை இனம்காணவும் உதவி புரிகிறது.
Dialog Self Care செயலியானது வாடிக்கையாளர்களின் கைகளிலேயே பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை கொண்டு சேர்த்துள்ளது என சொல்லலாம். பாவனையாளர்கள் கணப்பொழுதிலேயே தமது சேவைகள் தொடர்பான தகவலை பெறவோ, சேவைகளை மாற்றியமைக்கவோ, புதிய சேவைகளை பெற்றுக்கொள்ளவோ, வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவோ வழியமைத்து கொடுத்திருக்கிறது. Dialog வாடிக்கையாளர் எந்தமூலையிலிருந்தாலும், தமக்கான சேவையை தாமே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய அல்லது சேவை தொடர்பான தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை இந்தச் செயலி உருவாக்கியிருக்கிறது. உண்மையில், Dialog Self Care தொலைத்தொடர்பு சேவையை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகளுக்கான முழுநிறைவான தீர்வு எனக் குறிப்பிட முடியும்.
இந்த Dialog Self Care செயலியை நீங்கள் iOS, Android, மற்றும் Windows Phone தொலைபேசிகளில் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். அத்துடன், இந்த செயலி Star Points மற்றும் eZ Cash சேவைகளை உள்ளடக்கி உள்ளதால், Dialog சேவை வழங்குனர் தவிர்த்து ஏனைய சேவை வழங்குனர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இதனை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.