அதிகரித்து வரும் கொரொனா பலி | இந்தவார ஒப்பீடு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக அளவில் பலியானோரின் எண்ணிக்கை 1,60,000 மேல் இருக்கும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.4 மில்லியனை தாண்டியிருக்கிறது.
பலி எண்ணிக்கை அடிப்படையில் உலக நாடுகள் சிலவற்றின் இந்த வார புள்ளிவிபரங்களை தேடிப்பார்த்தோம்.

அமேரிக்கா

பட உதவி:  BBC

அமெரிக்காவில் தான் பலியானவர்கள் தொகை அதிகம். 40,000 ற்கும் மேற்பட்டவர்களின் உயிரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது உறுதியாகியுள்ளது.

இத்தாலி

ஆரம்பம் முதலே வேகமாக உயிர்பலி ஏற்படுத்திய நாடுகளில் மோசமான விளைவுகளை தோற்றுவித்த இத்தாலியில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 23,000+ ஆகும்.

ஸ்பெயின்

இத்தாலியை போலவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிர்களை பலிகொடுக்க ஆரம்பித்த ஸ்பெயின் நாட்டில் தற்சமயம் வரை 20,000+ உயிர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ்

ஸ்பெயினை போலவே 20,000 தாண்டும் நிலையில் உள்ள பிரான்ஸில் நிகழ்ந்துள்ள உயிர் பலிகளின் எண்ணிக்கை இதுவரை 19,000+ ஆகும்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் இந்த ஒரு நாளில் மாத்திரம் 500 பேர் வரை இறந்துள்ளனர். இத்துடன் அவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 16,000 தாண்டியுள்ளது. இங்கு ஒரேநாளில் 5000ற்கும் மேலானோருக்கு வைரஸ் தொற்று உதியாதியானது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம்

கொரோனா தாக்கத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முனைந்த பெல்ஜியத்தில் பலி எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38000ஐ தாண்டியுள்ளது.

ஈரான்

80,000 பேருக்கும் மேல் இதுவரை வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் மரண அளவு 5000ஐ தாண்டியுள்ளது

சீனா

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் சீனாவில் உயிரிழப்புகள் 4000+ ஆகவும். பாதிக்கப்பட்டவர்கள் 82000+ ஆகவும் உள்ளது.

ஜெர்மனி

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலகளவில் நான்காவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியில் இறப்புவிகிதம் குறைவு தான். 145,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்ட் நிலையில் பலி எண்ணிக்கை 4500+ ஆக உள்ளது. ஒரு படி மேல், மூன்றாவது இடத்தில் உள்ள பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்கள் 150,000 தாண்டியபோதும் மரணித்தவர்கள் 19000 ஐ தாண்டியுள்ளனர்.

நெதர்லாந்து

3500 பேருக்கும் அதிகமான உயிர்பலியும், 32000 ற்கும் மேலான பாதிப்புகளும் பதிவாகியுள்ளது.

பிரேசில்

பிரேசிலின் சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் விமான நிலைய ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக
முகமூடிகளை அணிந்துள்ளனர். பட உதவி: euronews.com

லத்தின் அமேரிக்காவில் முதலாவது கொரொனா தொற்று பிரேசில் நாட்டிலேயே பதிவானது. மரண எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்கள் 38000+ ஆகும்.

துருக்கி, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை முறையே 2000+, 1500+, 1300+ என கூடிக்கொண்டு வருவதை போலவே, பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 86,000+, 35,000+, 27,000+ என பதிவாகியுள்ளது.

ஸ்வீடனில் 14000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்ட நிலையில் 1500+ மரணங்கள் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் 17000ஐ தாண்டியுள்ள இந்தியாவில், பலி எண்ணிக்கை 500+ஐ தாண்டியுள்ளது.

இலங்கையில் 250+ பாதிப்பும், 7 மரணமும் பதிவாகியுள்ளது.

Related Articles

Exit mobile version