தென் தமிழகத்தில் மாத்திரமே சிறப்பு பெற்றிருந்த ஜல்லிக்கட்டுக்காக ஏன் 2017 ஆம் ஆண்டு தமிழகமே மெரினாவில் திரண்டுவந்து போராட்டம் நடத்தியது? இதற்கு விடைகான வரலாற்றில் நாம் சங்ககாலம் வரையில் சென்று பார்க்கவேண்டும் . ஏறுதழுவுதல் , ஏறுகோள் , மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, என பெயர்களைப்பெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டே இது . இவ்விளையாட்டு முல்லைநில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாக பண்டைக்காலத்தில் இருந்தது . முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று மிகப்பெரிய பண்பாட்டு திருவிழாவாக பொங்கல் திருநாளையொட்டி நிகழ்த்தப்படுகின்றது.