Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

2019 இன் ஜனாதிபதி தேர்தலை திறமையாக கையாள சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியுமா?

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே மீதமுள்ள உள்ள நிலையில், இம்முறை களமிறங்கும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சாரங்களுககாக சமூக ஊடகங்களைத் திறம்பட கையாண்டு, பொதுமக்களை ஏதாவதொரு வகையில் திசை திருப்ப அவர்கள் முயற்சிப்பதைப் அறியமுடிகிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் அதிமுக்கிய நோக்கம் அனைத்தும் வாக்காளர்களினதும்  இதயங்களையும் மனதையும் வென்றெடுப்பதாகும். மேலும் வேட்பாளர்கள் இதற்காக பல்வேறு உத்திகளைத் தமது பிரச்சாரங்களின் போது கடைபிடிக்கிறார்கள். இதில் பகுத்தறிவுசார் தூண்டல், உணர்ச்சிபூர்வமான அணுகுதல், சக தொடர்புகளை அணிதிரட்டல், பிரபலங்களின் பிரச்சாரம் மற்றும் வெகுஜனங்களை வஞ்சித்தல்  என்பன அடங்கும்.

டிஜிட்டல் வழித் திரிபுபடுத்தல்

பல நூற்றாண்டுகளாக, வேட்பாளர்கள் மக்கள் தம்மை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக மேடைப் பேச்சுகளையும் மற்றும் துண்டுப்பிரசுரங்களையும் பயன்படுத்தினர். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன ஊடகங்களின் எழுச்சியுடன் செய்தித்தாள்கள், வானொலி அலைவரிசைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் என்பனவற்றை பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்று, பிரச்சாரகர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆகிய இரு தரப்பினரும் சமூக ஊடகங்களை, அரசியல் மற்றும் தேர்தலைப் பற்றி கலந்துரையாடும் அல்லது விவாதிக்கும் களமாக பயன்படுத்துகின்றனர்.

பொதுமக்களின் உணர்வுகள் சார்ந்த கொள்கைகளை  திரிபுபடுத்தும் செயற்பாடானது தேர்தல் பிரச்சார மேடைகளில் இடம்பெறுவது புதிதல்ல.  மேலும் டிஜிட்டல் ஊடகங்கள் மக்களின் கருத்துக்களைத் திரிபுபடுத்த பல புதிய வழிமுறைகளுக்கு வழிவகுத்துள்ளன. மேலும் இந்த விடயத்திற்கான சான்றுகள் மற்றும் பகுப்பாய்வுகள் என்பன சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. ஆகவே இவ் விடயத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வொன்று  டிஜிட்டல் ஊடகங்களை உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் தீவிர ஆதரவாளர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வாஷிங்டன் டி.சி. யில் அமைந்துள்ள ஆலோசனை குழுவான ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ வெளியிட்டுள்ள ‘ஃப்ரீடம் ஒன் தி நெட் 2019’ என்ற அறிக்கையில் இது முக்கியமனதொரு கணிப்பாகும்.

”டிஜிட்டல் ஊடக தளங்களே ஜனநாயகத்திற்கான புதிய போர்க்களமாகும். இணையத்தில் தகவல்களின் போக்கை வடிவமைப்பது இப்போது தேர்தல்கள் மூலம் இடம்பெறும் ஜனநாயக அதிகார பரிமாற்றத்தை சீர்குலைக்க முற்படுபவர்களின் ஒரு முக்கிய உத்தி ஆகும்.” என ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். 

உலகின் 87% இணைய பயனர்களைக் கொண்ட 65 நாடுகளில் இணைய சுதந்திரத்தை ‘FOTN 2019’ மதிப்பிட்டுள்ளது. ஜூன் 2018 முதல் மே 2019 வரை அதன் உள்ளடக்கல் காலப்பகுதியில், 30 நாடுகள் தேர்தல்களை  அல்லது வாக்கெடுப்புகளை நடத்தியிருந்தன. 

இதில் 30 நாடுகளில் 24 நாடுகள் ‘தகவல் நடவடிக்கைகளால்’ அல்லது ‘ஆன்லைன் விவாதங்கள் அரசாங்கத்துக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிகளுக்கோ மறைமுகமாக ஆதரவாக கையாளப்படும் போதோ’.  பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ‘FOTN 2019’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது: இவ்வாறு நடைபெறுவதற்கு சமூக ஊடகங்களே முதன்மை சாதனமாகும். 

2017 ஆம் ஆண்டில், ஆன்லைன் உள்ளடக்க திரிபுபடுத்தல்களில் ஐந்து முக்கிய முறைகளை  ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அடையாளம் கண்டுள்ளது:

  1. பிரச்சார செய்திகள் 
  2. வெளிப்படையான போலி செய்திகள்
  3. கட்டணம் செலுத்தப்பட்ட  வர்ணனையாளர்கள்
  4. ‘Bots’ (தானியங்கி கணக்குகள்) மற்றும்
  5. உண்மையான சமூக ஊடக கணக்குகளை அபகரித்தல்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள இக் கட்டடமானது ஓர் ‘ட்ரொல் பார்ம் (troll farm)’ ஆகும். இறுதியாக நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது அதனை  சீர்குலைப்பதையும் வாக்காளர்களின் கருத்துக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதையும்  நோக்கங்களாக கொண்ட பிரச்சார உள்ளடக்கத்தை இங்கிருந்தே இணையத்தில் உலவவிட்டனர்.
புகைப்பட உதவி: pri.org

இல்லை முதல் இருக்கின்றது வரை

ஆரம்பக் காலகட்டத்தில், தேர்தலை மையமாகக் கொண்ட சமூக ஊடக திரிபுபடுத்தல்களில் வெளிநாட்டு ஆட்சியாளர்களாலேயே அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டது. உண்மையில், ரஷ்யா, சீனா போன்ற சர்வாதிகார சக்திகள் சைபர் தாக்குதல்களிலும் (cyberattacks) மற்றும் ஜனநாயக நாடுகள் தகவல்பரிமாற்றுப் போரிலும் சிக்கியுள்ளன.

ஆனால் இப்போது, ஜனநாயக நாடுகளுக்கு புதியதொரு அச்சுறுத்தல் எழுந்துள்ளது, அது யாதெனின் ‘FOTN 2019′ அறிக்கையின் படி  , ‘ஜனரஞ்சக தலைவர்களும் அவர்களின் ஆன்லைன் ஆதரவாளர் அணிகளும் உள்நாட்டில் அரசியலை சிதைக்க முற்படுகின்றன’ என்பதேயாகும். 

“உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார மற்றும் ஜனரஞ்சகவாத அரசியல்வாதிகள் வாக்குப் பெட்டியைக் கைப்பற்ற மனித இயல்பு மற்றும் கணினி வழிமுறை ஆகிய இரண்டையும் துஷ்பிரயோகித்துக் கொண்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இயங்குகிறார்கள்” என்று ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ இன் தலைவர் மைக் அப்ரமோவிட்ஸ் மேலும் விளக்கினார்.

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான தொழில்நுட்ப-உத்திகள் பயன்படுத்தப்படுவதை ஆராய்ச்சிகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றிற்கான இரு எடுத்துக்காட்டுகள்:

  • நுண் – இலக்குகள் – இது சமூக ஊடகங்கள் அல்லது தேடுபொறிகளின் ஊடக நுகர்வோரின் உளவியல், புவியியல் மற்றும் நடத்தை புள்ளிவிவர தரவுகளை பாரியளவிலான தொகுதிகளாக சேகரித்து அதன் மூலம் செயலாக்குவதை நம்பியுள்ளது. பாரிய தரவு பகுப்பாய்வுகள் மூலம் ஒவ்வொரு பயனரினதும் கொள்முதல் நடத்தைகள், ஆர்வங்கள் மற்றும் கருத்துகளை விவரணையாக்க துணைபுரிகிறது. இது சட்டபூர்வமானதொரு சந்தைப்படுத்தல் அணுகுமுறை ஆயினும் தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்காளர்களின் எண்ணிக்கையை மிகவும் குறிப்பிட்ட பிரிவுகளாக உடைக்க இது போன்ற தரவுத்தொகுப்புகளைப் பெறுவது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமே, ஏனெனில் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பிலும், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலும் இதுபோன்ற தரவுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன என்பது இப்போது தெரியவந்துள்ளது. 

 

  • நுண் – செல்வாக்கு செலுத்துபவர் – பாலியல் ரீதியான படங்கள் மற்றும் பாப்-கலாசார செய்திகளில் அரசியல் ஒப்புதல்களைக் கலத்தல். இது பிலிப்பைன்ஸில் 2019ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது கவனிக்கப்பட்ட மற்றுமொரு திரிபுபடுத்தல் உத்தியாகும். உள்ளடக்கம் மற்றும் செலவு வரம்புகளினால் விமர்சனங்களுக்கு உட்பட்ட சமூக ஊடக தளங்களில் உலாவவிடப்படும் நேரடி பிரச்சார விளம்பரம் போலல்லாமல், இக் கட்டணம் செலுத்தப்பட்ட இடுகைகள் குறைந்த செலவில், மேலும் சமூக ஊடகங்களின் பகிர்வு-இயக்க இயக்கவியலின் அடிப்படையில், அதிகளவிலான நம்பகத்தன்மையுடன் தோன்றும். பல சமீபத்திய தேர்தல்களின் போது இத் திரிபுபடுத்தலினால் தவறான தராதரமற்ற சதி கோட்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட இன அல்லது மத குழுக்களை இழிவுபடுத்தும் அல்லது குறிவைக்கும் கோபமூட்டக்கூடிய நோக்குகளை உள்ளடக்கிய இடுகைகளாக பரவல் அடைந்தன. இவ்வாறான திரிபுபடுத்தும் போக்குகள் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

கண்காணிப்பு தளங்கள்

அரசியல் நன்மைகளுக்காக சமூக ஊடகங்களை இத்தகைய விதத்தில்  ‘ஆயுதமயமாக்கலால்’ ஜனநாயக நாடுகளுக்கு இதுவொரு கடுமையான சவாலாக அமைகின்றது. பேச்சு சுதந்திரத்தை அதன் அதியுச்ச சுதந்திர நிலையுடன் (தணிக்கை அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்காமல்) எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்ற கேள்விக்கு இன்னும் திறம்பட பதிலளிக்கப்படவில்லை. 

அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களும் அவற்றிக்கென்ற தனி விதிமுறைகளை கொண்டுள்ளன. இவ்வாறான, தவறான பயன்பாடுகளைத சரியானமுறையில் நிவர்த்தி செய்ய  ஃபேஸ்புக் அதற்கென்ற சமூக தரநிலைகளையும், யூ-டியூப் அதற்கென்ற சமூக வழிகாட்டுதல்களையும் கொண்டுள்ளன. இருப்பினும், நடைமுறையில் பில்லியன்கணக்கான உள்ளடக்கங்களைக் கண்காணிப்பது கடினமாகும். மேலும் விதிமுறைகளை மீற எத்தனிப்பவர்கள் இவற்றை மீறுவதற்கு புதிய வழிமுறைகளைக் கண்டறிவது சாத்தியமேயாகும்.

தேர்தல் அதிகாரிகள் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளால் அனுமதிக்கப்பட்டவற்றிற்குள் மட்டுமே பிரச்சார நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கின்றனர், இதனால் வாக்காளர்கள் தேவையற்ற முறையில் பாதிப்படையாமலும் மேலும் அனைத்து வேட்பாளர்களுக்கும்  சமநிலையான ஒரு தேர்தல்களத்தில் போட்டியிடவும் ஏதுவாகயிருக்கும். 

உதாரணமாக, செப்டம்பர் 21ம் திகதி அன்று, இலங்கையின் தேர்தல் ஆணையம் 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல் வர்த்தமானியை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களில் சமூக ஊடகங்கள் இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளன — பிரிவு 30 இன் படி தேர்தலின் போது சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகள் அவர்களுக்கு பொருத்தமான இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது வெகுஜன ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் சமூக ஊடக பயனர்களின் கடமை மற்றும் பொறுப்பு என்று பிரிவு 31 கூறுகிறது.

பாரிய அளவிலான பயனர் உருவாக்கிய உள்ளடக்கங்கள் வழிமுறைகளுக்கு உட்பட்டவையா என்பதனை தேர்தல் ஆணையம் எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பது இன்னும் கேள்விக்குரிய விடயமேயாகும். மிக முக்கியமாக இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்?, குறிப்பாக புனைப்பெயர் கணக்குகளை அல்லது பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படும் ஆனால் பிரச்சாரங்களுடன் நேரடியாக இணைக்கப்படாத கணக்குகளை பயன்படுத்துபவர்களை எவ்வாறு இனங்காண முடியும். 

நிச்சயமாக, பிரதான ஊடகங்கள் ஏராளமான புனைகதைகள், பாதி உண்மைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை பரப்பும் குற்றத்தை இழைக்கிறார்கள்.  இலங்கையில் பொதுமக்களின் கருத்து ஒரு அமைதியான ஏரியாக இருப்பின் அதில் பேரலைகளை உருவாக்கி அந்த அமைதியின்மையை கலைப்பது உள்ளூர் தொலைக்காட்சிகள் , மற்றும் வானொலி அலைவரிசைகளேயாகும். 

வெகுஜன ஊடகங்களுடன் ஒப்பிடுகையில், சமூக ஊடகங்கள் இச் சந்தர்ப்பத்தில் சிற்றலைகளை மட்டுமே உருவாக்குகின்றன – ஆயினும் அவை பொது மக்களின் மனதை முழுமையாக திசைதிருப்பும் அதாவது சேறு அல்லது விஷம் கலந்த நீரினைப் போன்ற அதி ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஆற்றலை உடயவையாகும்.

Related Articles