BREXIT எதிர்பார்த்தது என்ன ? நடந்தது என்ன ?

2016ம் ஆண்டில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான அரசியல் சம்பவங்களில் June 23ம் திகதிக்கும் தனியான இடமொன்று உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவ உரிமையை தக்கவைத்து கொள்வதா ? அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா ? என மக்களின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற நாள் அதுவாகும். இதன்போது, ஐக்கிய இராச்சியத்தின் வாக்குரிமை கொண்ட மக்களில் 52%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள். இதன்பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான இரண்டு வருட செயன்முறை காலத்தினை புதிய பிரதமர் தெரேசா மே (Theresa May) வருகின்ற 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கிறார். இதற்கு இடையில், வாக்கெடுப்பு நடந்து சுமார் ஆறுமாத காலம் கடந்துள்ளநிலையில், பிரித்தானிய மக்கள் தற்போதும் தங்கள் நிலையில் மாறாக்கொள்கைகளுடன் இருக்கிறார்களா / என சிந்திக்கவேண்டிய நிலையினை பிரித்தானிய அரசுக்கு தற்போதைய கருத்து கணிப்புக்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.

(livejournal.com)

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவ உரிமையை தக்கவைத்து கொள்வதா ? அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா ? (livejournal.com)

BREEXIT ஏன் ?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்கிற முடிவு சடுதியாக எடுக்கபட்டது அல்ல. காலாகாலமாக, ஐரோப்பிய கண்டத்தில் வல்லமை கொண்ட நாடாக பிரித்தானியா உள்ளபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தினால், தமது முடிவுகள் கட்டுபடுத்தப்படுவதாகவும், சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க இயலாமையின் காரணமாகவும், பிரித்தானியாவின் வல்லமை பாதிக்கபடுவதாக நம்பிய பிரித்தானிய மக்களின் ஆண்டாண்டுகால கோரிக்கையே ஜூன் 23ம் திகதி சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக உறுதிப்படுத்தபட்டது.

உண்மையில் BREEXITஇற்கான காரணங்களாக பிரித்தானியர்களால் சொல்லப்படுபவற்றை மேலுள்ள சுட்டியினூடு அறிந்துகொள்ள முடியும். இதன் பிரகாரம், ஜூன் 23ம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சுமார் 52%மானவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்கிற முடிவுக்கு ஆதரவாக வாக்களிக்க, 48%மானவர்கள் தொடர்ந்தும் ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவத்தை தக்கவைத்துகொள்ளவேண்டும் என்பதனை ஆதரித்து இருந்தார்கள்.

இந்த வாக்களிப்பில், ஐக்கிய இராச்சியத்தினுள் உள்ளடக்கப்படும் ஸ்கொட்லாந்து நாட்டின் 62%மானவர்களும், வட அயர்லாந்து நாட்டவர்களில் 55.8%மானவர்களும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவத்தை தக்கவைத்துகொள்ள வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள். ஆனாலும், சனத்தொகை அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேசங்களில் அதிகமானோர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களிக்க, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஐக்கிய இராச்சியமும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

(bbc.com)

ஐக்கிய இராச்சியத்தின் வாக்குரிமை கொண்ட மக்களில் 52%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள் (bbc.com)

தற்போதைய நிலையில் மக்கள் எண்ணவோட்டம் என்ன ?

வாக்களிப்பு முடிவடைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளநிலையில், ஒட்டுமொத்த ஐக்கிய இராச்சிய மக்களின் மனதில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை அண்மைய CNN அறிக்கை தெளிவாக புலப்படுத்துகிறது.

இதன்பிரகாரம், முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 52%மானவர்கள் விலகுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், தற்போது 47% மானவர்களே அத்தகைய நிலைப்பாட்ட கொண்டுள்ளனர். அதுபோல, தொடர்ந்தும் அங்கத்துவத்தை கொண்டிருக்கவேண்டும் என ஆதரவு தெரிவித்தோர்களிலும் வீழ்ச்சிநிலை ஏற்பட்டு இருக்கிறது. இவற்றைவிட, கடந்த ஆறு மாதங்களில் பொருளாதாரரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் சுமார் 8%மான தரப்பினரை தீர்வொன்றை ஆதரிக்கமுடியாத குழப்பநிலைக்குள்ளாக்கியிருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சிநிலை காலாண்டுக்கு 0.7% என்கிற நிலையிலிருந்து 0.5%மாக குறைவடைந்திருக்கிறது. பணவீக்கநிலை 0.5%இலிருந்து கடந்த நவம்பரில் மட்டும் 1.2%மாக அதிகரித்திருக்கிறது.

அதுபோல, வாக்களிப்புக்கு பின்னதாக நிதி மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வாறான நிலையில் உள்ளீர்கள் என மக்களிடம் கேட்கபட்ட கேள்விக்கு 44%மான மக்கள் மிகமோசமான நிதியியல் நிலையினை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வெறும் 24%மான மக்கள் மாத்திரமே, நிதியியல் ஸ்திரத்தன்மையை பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக, வாக்கெடுப்பிற்கு பின்னதாக ஐக்கிய இராச்சியத்தில் இனவாத தாக்குதல்கள் மிகப்பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. பலசமயங்களில் அவை வன்முறையில் முடிவடைந்ததுடன், இன்றளவிலும் அவை தொடர்ந்துகொண்டே உள்ளன என்பது கவலைக்குரியதாகும். இதனை தவிர்த்து,  பொருளாதார வளர்ச்சிநிலை காலாண்டுக்கு 0.7% என்கிற நிலையிலிருந்து 0.5%மாக குறைவடைந்திருக்கிறது. பணவீக்கநிலை 0.5%இலிருந்து கடந்த நவம்பரில் மட்டும் 1.2%மாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களின் பங்குவிலைகள் எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. குறிப்பாக, எதிர்வரும் 2021வரை குறித்த மோசமான பொருளாதாரநிலை தொடரும் என எதிர்பார்க்கும் ஐக்கிய இராச்சிய அரசு, குறித்த நிலையினை சீர்படுத்த அல்லது எதிர்கொள்ள பாதீட்டில் சுமார் 122 பில்லியன் பவுண்ட்ஸ் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது. இதைவிடவும், நாணய பெறுமதியில் மிகப்பெரும் வீழ்ச்சிநிலை ஏற்பட்டு இருக்கிறது. உதாரணமாக, ஒரு பவுண்ட்ஸ் 220 இலங்கை ரூபாய்களுக்கு சமானதாக இருந்தநிலையில், தற்போது , ஒரு பவுண்ட்ஸ் 180 இலங்கை ரூபாய் என்கிற நிலையிலேயே உள்ளது.  

ஐக்கிய இராச்சிய சனத்தொகையில் வயதுபரம்பலின் அடிப்படையில், இளையவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிகின்ற செயல்பாடானது தமது நாட்டினையும், தமது பொருளாதாரத்தையும் பாதிப்படையச் செய்யும் என உறுதியாக நம்புகிறார்கள்.

வயதுமுதிர்ந்த சனத்தொகையினர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலமாக நீண்டகாலத்தில் நன்மைகளே உண்டு என தீர்க்கமாக நம்புகிறார்கள்.

ஆனாலும், வயதுமுதிர்ந்த சனத்தொகையினர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலமாக நீண்டகாலத்தில் நன்மைகளே உண்டு என தீர்க்கமாக நம்புகிறார்கள். இவர்களில் 55%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதுடன், ஜக்கிய இராச்சியத்திற்குள் அந்நிய குடியேற்றம் ஏற்படுவது குறைக்கபடும் என்றும், பெரும்பாலானோர் வெளியேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம், பிரித்தானியாவின் குடியுரிமை கொண்டவர்களின் வேலைவாய்ப்பும், பொருளாதாரநிலையும் மேம்படுத்தப்படும் என எண்ணுகிறார்கள்.

இனி என்ன ?

முதலாவது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஆதரவு மிகநெருக்கமான முறையிலேயே வழங்கப்பட்டு இருந்தது. இதன்விளைவாக, இரண்டாவதாக மற்றுமொரு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்கிற கருத்து விமர்சகர்களிடமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏனைய நாடுகளிடமும் வலுப்பெற்று வருகின்றது. ஆனால், CNN அறிக்கைகளின்படி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுமார் 55%மானவர்கள் இரண்டாவது வாக்கெடுப்புக்கு எதிரானநிலையினையே கொண்டுள்ளார்கள்.

(euractiv.com)

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் பெற்ற சில நன்மைகளை இழக்கவிருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் இணைந்து இருந்ததன் காரணமாக, பல்வேறு நன்மைகளை பெற்ற ஏனைய நாடுகள் ஐக்கிய இராசியத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பெற்ற பல்வேறு நன்மைகளை இழக்கநேரிடும். (euractiv.com)

எனவே, ஐக்கிய இராச்சிய அரசும் இரண்டாவது வாக்கெடுப்பில் அதிக ஆர்வத்தினை வெளிக்காட்டாது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறது. இதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் பெற்ற சில நன்மைகளை இழக்கவிருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் இணைந்து இருந்ததன் காரணமாக, பல்வேறு நன்மைகளை பெற்ற ஏனைய நாடுகள் ஜக்கிய இராசியத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பெற்ற பல்வேறு நன்மைகளை இழக்கநேரிடும்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரால் Brexitக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட டேவிட்  டேவிஸ் அவர்களினால், மார்ச் 2017ல் முன்னெடுக்கப்படவுள்ள செயன்முறைகள் 2019ல் நிறைவுறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவரும் ஜக்கிய இராச்சியத்துடன், “ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஏனைய ஜரோப்பிய நாட்டு மக்களுக்கு என்ன ஆகும் ?” , ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஜக்கிய இராச்சிய நாட்டு மக்களுக்கு என்ன ஆகும் ?” , “ வெளிநாட்டு குடியேற்றவாதிகளுக்கு என்ன நடக்கும் ?” இதுபோன்ற கேள்விகளுக்கும் தெளிவான விடைகள் கிடைக்கபெறும்.

Related Articles

Exit mobile version