HAARP என்னும் அழிவாயுதம்

மனிதனின் நாகரீக வளர்ச்சி இதுவரையில் காடு, மலை, நதி, உயிரினங்கள் என இயற்கையை மட்டுமே அழித்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது அவன் அடைந்துள்ள அதீத நாகரீக அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தையே அழிக்கவல்லது.

ஆம், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம். “சவூதி அரேபியாவில் ஓரிரு மாதங்களுக்கு முன் செயற்கை முறையில் மழை வரவைத்து வெற்றி கண்டனர்”, என் நண்பன் பெருமையாக பேசிக்கொண்டிர்ந்தான். நான் இடையில் மறித்து “அதிநவீன அறிவியல் கண்டுப்பிடிப்பு இயற்கைக்கு மட்டும் அல்ல மனித இனத்திற்கே ஆபத்து என்று நம்மாழ்வார் கூறியுள்ளார்” என்றேன் என் அருமை நண்பன் செந்தமிழில் வாழ்த்திவிட்டு சென்றார்

சரி ….. ஹார்ப் பற்றிய சிந்தனைக்கு செல்வோம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலுள்ள HAARP ஆராய்ச்சி மையம் – படம் news.uaf.edu

ஹார்ப் (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும். இது வானிலை மாற்றம் மற்றும் ஒரு மின்காந்த போரை நிகழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது. இதுசார்ந்த விளக்கத்தில் ‘உயர் அதிர்வெண் செயல் சூரிய உதய ஆராய்ச்சி திட்டம் என்று அழைக்கப்படும் ஆயுத வகை ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, ஹார்ப் ஆனது  ஒட்டத்தக்க மின்காந்த காற்றின் மூலம் மேல் வளிமண்டலத்தை தாக்குகிறது’ என்கிறது.

இந்த ஹார்ப் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பெர்னாட் ஈஸ்டுண்ட் என்ற அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி, சில இடங்களில் மழைபொழிவு அதிகமாக இருப்பதையும் சில இடங்களில் கடும் வரட்சி நிலவுவதையும் கண்டு வருந்தினார். வானிலையின் இந்த ஓரவஞ்சனையை மனிதனால் மாற்றியமைக்க முடியாதா என்று கனவு கண்டார். ஏன் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பக் கூடாது என்று ஒரு கேள்வி எழுப்பிக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார். அவரது ஆராய்ச்சி வெற்றிபெற்றது. ஆனால் தனது அடிப்படை ஆராய்ச்சி எதிர்காலத்தில் ஒரு அதிபயங்கர ஆயுதமாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

நம்முடைய வளிமண்டலம் பல அடுக்குகளைக் கொண்டது. அவற்றில் அயனோஸ்பியர் எனப்படும் அயனி மண்டலம் நமது தகவல் தொழில்நுட்பத்துக்கும், மழை மேகங்களைக் காப்பதற்கும் அரணாகவும் அடிப்படையாகவும் விளங்குகிறது. அத்தகைய அயனி மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அனுப்பவோ அல்லது புதிய மேகங்களை உருவாக்கவோ முடியும் என்று பெர்னாட் கண்டுபிடித்தார். வான் இயற்பியல் துறையில் வியத்தகு சாத்தியங்களுக்கு வித்திட்ட இவரது ‘ஹார்ப்’ கண்டுபிடிப்பின் சக்தியை வெகுசீக்கிரமே புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இதன் முழுக் கட்டுப்பாட்டையும் தனது பாதுகாப்புத்துறையின் கீழ் கொண்டு வந்தது.

வானிலை ஆராய்ச்சித்துறையின்கீழ் சென்றிருக்க வேண்டிய ஹார்ப் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடும் ஆராய்ச்சியும் அமெரிக்க வான்படை மற்றும் கடற்படையின்கீழ் சென்றதால் சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி துருவ ஆரம்பித்தனர். தற்போது இவர்கள் வெளிப்படுத்திவரும் விஷயங்கள் உலக நாடுகளை உறைய வைத்திருக்கின்றன. மழையில்லாமல் வரண்டு கிடக்கும் இடத்துக்கு மழை கொடுக்கலாம் என்ற ஒரு மனிதநேய கண்டுபிடிப்பு, ஒர் அதிபயங்கர ஆயுதமாக மாறியிருப்பதாக கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப் ஆராய்ச்சி மையத்தில் 180 ஆண்டெனாக்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஈ.எல்.எஃப் என்று அழைக்கப்படும் மிகக்குறைந்த அலைவரிசை மூலம் மின்காந்த அலைகளை உருவாக்கக்கூடிய ஆண்டெனாக்கள். இவற்றின் அசுர சக்தியை புரிந்து கொள்வது எளிது.

இவை ஈ.எல்.எஃப் என்று அழைக்கப்படும் மிகக்குறைந்த அலைவரிசை மூலம் மின்காந்த அலைகளை உருவாக்கக்கூடிய ஆண்டெனாக்கள் – படம் ompilation11.com

உலகின் பெரிய வானொலி நிலையம் ஒன்று 50 கிலோவாட் சக்தியை பயன்படுத்தி தனக்கான மின்காந்த அதிர்வலைகளை வளி மண்டலத்தில் ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொண்டால், ஹார்ப் அண்டெனாக்கள் 3.6 மில்லியன் வாட் சக்தியை பயன்படுத்தி மின்காந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்பும் திறன் கொண்டவை. ஒரு வானொலி நிலையம் ஏற்படுத்தும் அதிர்வலைகளைவிட இது 7500 மடங்கு அதிகம்.

ஹார்ப் ஏற்படுத்தும் மின்காந்த அதிர்வலைகளை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு பருவநிலை மாற்றத்தையும் ஒரு நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் எந்த நாட்டின் செயற்கைக் கோள்களையும் இந்த ஹார்ப்பின் சக்தியால் முடக்கமுடியும்.  எந்தவொரு நாட்டின் மீதும் அல்லது தாக்குதல் தேவைப்படும் ஒரு பகுதியில் இடைவிடாமல் பல நாட்கள் மழைபெய்யச் செய்யமுடியும்.

ஆனால் உங்கள் மீது வானிலை வழியாக ஒரு போர் தொடுக்கப்பட்டது என்று நீங்கள் உணரும் முன்பே வெள்ளத்திலோ, புயலிலோ சிக்கிகொள்ளும் கொடூரத்தை ஹார்ப் நிகழ்த்தி முடித்துவிடக்கூடும்

ஜப்பானை நிலைகுலையச் செய்த சுனாமியை அமெரிக்கா ஹார்ப் தொழில்நுட்பம் வழியாக் தொடுத்த தாக்குதல் என்பதாக விவாதிக்கப்பட்டாலும், அமெரிக்கா அதை ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் வல்லரசுகளின் கையில் கிடைத்திருக்கும் ஹார்ப் ஒரு அதிபயங்கர வானிலை ஆயுதம்!

நாம் இயற்கைக்கு எதிராக போக போக இயற்கை நம்மை அழித்தே தீரும்.

இயற்கையை காப்போம்

Related Articles

Exit mobile version