மொடர்னா தடுப்பூசி பற்றி அறிந்துகொள்வோம்

முழு உலகிற்கும் சமமாக தடுப்பூசிகள் கிடைக்கபெற் வேண்டும் எனும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நோக்கத்தின் அடிப்படையில்  COVAX திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவினால் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் அண்மையில்  இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்துது.

ஐக்கிய அமெரிக்காவினால்  வழங்கப்பட்ட தடுப்பூசிளை பெற்றுகொள்ளும் இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் – பட உதவி- இலங்கைக்கான அமெரிக்க  தூதரகம்

கொரோனா தொற்றினால்  ஏற்படும் கடுமையான பாதிப்புகளினால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளில் Moderna தடுப்பூசியும் ஒன்றாகும்.முதற்கட்ட ஆராய்ச்சி தரவுகளின்படி, இத் தடுப்பூசி நோயைத் தடுப்பதற்கான 94% அதீத செயல்திறனைக் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. சில புதிய COVID வைரஸ் திரிபுகளையும் (Varrients) இது வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதாக வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட பூர்வாங்க ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டது. இது அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான மொடர்னா இன்க். எனும் நிறுவனத்தால் ஸ்பெயினில் அமைந்துள்ள உற்பத்தி சாலையில் தயாரிக்கப்படும் தடுப்பூசியாகும். உலக சுகாதார அமைப்பு நடத்தும் கோவாக்ஸ் (Covax) அறக்கட்டளை மூலமாக இந்த தடுப்பூசி இலங்கைக்கு விநியோகிக்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர் (Pfizer) தடுப்பூசியினை ஒத்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இத்தடுப்பூசியினை பராமரிப்பதற்கு -50 முதல் -20 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர் சாதன உபகரணங்கள் தேவைப்படுகிறது. ஆகையினால், ஆரம்ப காலங்களில் பொருத்தமான உட்கட்டமைப்பு இல்லாத பல நாடுகளினால் இத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆராய்ச்சிகளின் உதவியினால் அந் நாடுகளில் இருந்த குறிப்பிட்ட உட்கட்டமைப்பு சிக்கலுக்கு தீர்வு பெறப்பட்டது. அதன் பயனாக திறக்கப்படாத தடுப்பூசிகள் 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 30 நாட்களுக்கு வைத்திருக்க முடியும் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஃபைசர் மற்றும் மொடர்னா இரண்டும் mRNA தடுப்பூசிகள் என்று அறியப்படும் தடுப்பூசி வகையை சார்ந்தது. மேலும் CORONA வைரஸின் ஸ்பைக் (Spike) புரத பகுதியை உருவாக்க தேவையான mRNA  சேமிக்கப்பட்ட தரவுகளில் ஒரு பகுதி மட்டுமே இந்த வகை தடுப்பூசிக்கு தேவைப்படுகிறது. mRNA பகுதியை மறைப்பதற்கு வேறு எந்த வைரஸையும் ஒரு கடத்தியாக பயன்படுத்தாமல்  லிப்பிட் நானோ துகள்கள் (LNP) உறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

புகைப்பட உதவி-  bloomberg,com

இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக வழங்கப்பட வேண்டும் அத்துடன், இரண்டு தவணைகளுக்கும் இடையில் குறைந்தது 28 நாட்கள் இடைவெளி இருப்பது அவசியம். வேறு தடுப்பூசிகளைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய பக்க விளைவுகளைப் போல் இத் தடுப்பூசியின் பின்னரும் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆயினும் அவ்வாறான விளைவுகள் மிக குறுகிய காலத்தில் குணமடையுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது என்பதும் அறியதரப்பட்டுள்ளது.

தடுப்பூசி இடப்பட்ட பகுதியில் வலி, வீக்கம், மற்றும் தோல் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை பொதுவாக ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் ஆகும்.

எவ்வாறாயினும், ஏனைய தடுப்பூசிகள் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் COVID-19 தொற்றிலிருந்து  100% பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய முடியாது. ஆகையினால், உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பிற்காக தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் நீங்கள் இதுவரை கடைபிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். 

Related Articles

Exit mobile version