இனையத்தில் பெண்களுக்கு எதிரான வெறுக்கதக்க பேச்சுகளை கட்டுப்படுத்த போராடும் United Creatives செயற்திட்டம்

ஊடக வெளியீடு

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளைப் போலவே இலங்கையும் இணைய வெறுப்புணர்ச்சி பேச்சுகள், பாகுபாடுகள் மற்றும் தவறான தகவல் வெளியீடு ஆகியவற்றின் விளைவுகளிலிருந்து விடுபடவில்லை. இருப்பினும், சமீபகாலங்களில், இந்த சிக்கல்கள் குறித்த கவனப்பாடு அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது, இதற்கு COVID-19 பெருந்தொற்று அதிகமானவர்களை இணையத்தை நோக்கி திருப்பியுள்ளதும் பகுதியளவு காரணமாக அமைந்தது. மேலும், இணையம் ஒவ்வொரு நாளும் வெகுஜனங்களை எளிதில் சென்றடைவதற்கு பல புதிய வாய்ப்புகளை தரும்,  வளர்ந்து வரும் இடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது. 

COVID-19 காலத்தில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள். 

COVID-19 பெருந்தொற்றின் வருகையைத் தொடர்ந்து, குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான இணைய வன்முறைகள் வியக்கத்தக்க அளவில் பெரும் அதிகரிப்பை கண்டுள்ளன. இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையில் ஐ.நா. பெண்கள் நடத்திய ஆய்வின் பிரகாரம், அவர்களின் முதல் COVID-19 முடக்க மாதங்களில் (மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரை), பெண்கள் குறித்த தவறான பேஸ்புக் பதிவுகள் மற்றும் ட்வீட்டர் பதிவுகளின்  அளவு மற்றும் அவை உருவாக்கிய சமூக ஊடக ஈடுபாடு ஆகியன 2019 உடன் ஒப்பிடும்போது 168% அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் கூகிள் போக்குகள் பற்றிய பகுப்பாய்வுகளும் அடங்கியுள்ளன.  இது உள்ளூர் மொழி அவதூறுகள் உட்பட பெண்கள் பற்றிய தவறான கருத்துக்களை வெளிப்படுத்தும் அவதூறு வார்த்தைகளுக்கான தேடல் தொகுதிகள் ஒவ்வொரு நாட்டிலும் 25% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்தால் அதிகரித்துள்ளாமை தெரியவருகிறது.

இணையத்தின் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கருத்துப் பரம்பல் மற்றும் பிற இணைய வெறுப்பு, வன்முறை மற்றும் தவறான தகவல்களின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளும் பணிகளில் இலங்கை சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களில் பலர் இளைஞர்களே, இவர்கள் டிஜிட்டல் ஊடகங்களின் சக்தியை அவர்களின் காரணத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு திறமையும் கொண்டவர்கள். 

இளைஞர் தலைமை மற்றும் செயல்பாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கருவி

ஐக்கிய படைப்பாளிகள் என்பது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான ஒரு மெய்நிகர் திட்டமாகும்.  இது இலங்கை மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த இளைஞர் தலைவர்களுக்கு வெறுப்புணர்வை எதிர்த்து நிற்கவும், நேர்மறையான செய்திகளைப் பெருக்கவும், உண்மையான சமூக மாற்றத்தை உருவாக்கவும் உதவும் ஆக்கபூர்வமான டிஜிட்டல் பிரச்சாரங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image Credit: Shanuki de Alwis

இந்த முயற்சியானது, சமூகப் பிரிவினைக்கு பங்களிக்கும் இணைய வெறுப்பு பேச்சு, பன்முகத்தன்மைக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மை மற்றும் உண்மையான உலகில் வெறுப்பின் வெளிப்பாடு போன்ற வன்முறை தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும் விடயங்களை எதிர்கொள்ள ஐ.நா வளர்ச்சித் திட்டம் மேற்கொண்டுள்ள பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

விரிவான தேர்வு செயல்முறை ஒன்றைத் தொடர்ந்து, இந்த திட்டம் 29 இளம் டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் 15 நாட்கள் பிரத்தியேக மெய்நிகர் பயிற்சி, வழிகாட்டல் மற்றும் டிஜிட்டல் தாக்கத்தை உருவாக்குவதற்கான கருவிகள் மற்றும் பேஸ்புக், ஐ.நா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்தான நிபுணர்களிடமிருந்து சிறப்பு வகுப்புக்கள் என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில், மொத்தம் ஏழு அணிகள் உருவாக்கப்பட்டன, ஒவ்வொன்றும் பின்வரும் மூன்று முக்கிய கருப்பொருள்களில் ஒன்றின் கீழ் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கி, செயற்படுத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன:

  • நேர்மறை  இணையப் பரப்புக்களை ஊக்குவித்தல்
  • இளைஞர்களின் குரல்களையும் தேர்வுகளையும் விஸ்தரித்தல்
  • சமூக ஊடகவியல் 

அணிகளாகப் பிரிக்கப்பட்டதும், இந்த இளைஞர் தலைவர்கள் காமிக் வரைவுகள், காணொளிகள், அனிமேஷன் மற்றும் விளக்க வரைபடங்கள் போன்ற பலவிதமான படைப்பு ஊடகங்களில் நேர்மறையான சமூக செய்திகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

இலங்கையில் இருந்து வெளிவந்த வெற்றிகரமான பிரச்சாரம் #NotCoolBro ஆகும், இது பாலின சமத்துவத்திற்காக வாதிட ஆண்களையும் சிறுவர்களையும் தூண்டியதுடன், பெண்களுக்கு எதிரான தவறான பதிவுகளுக்கும்   மற்றும் கருத்துக்களுக்கும் எதிராக குரல்கொடுக்க அவர்களை ஊக்குவித்தது. அவர்களின் பிரச்சாரம் பெரும்பாலும் ஆண் பார்வையாளர்களை ஈர்க்கின்ற டிஜிட்டல் இடங்களை குறிவைத்து நடைபெற்றது. இதில் நகைச்சுவை மீம் பக்கங்கள் மற்றும் இணைய மன்றங்கள் உட்பட பாலின வழக்கங்கள், வன்புணர்ச்சி கலாச்சாரம் மற்றும் இருண்ட நகைச்சுவை என்ற போர்வையில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்பிவந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன. 

Image Credit: Cool Bro

ஓர் அநாமதேய ஆளுமையான ‘The Cool Bro’ ஐ செய்தியிடலுக்கான வாகனமாகப் பயன்படுத்துவதன் மூலம், பிரச்சாரத்தின் பின்னால் உள்ள படைப்பாளிகள் பாலின அடிப்படையிலான வெறுப்பு பேச்சின் வடிவங்களை சீர்குலைக்க முடியும் என நம்புகிறார்கள். இந்த பிரச்சாரம் டிக்டோக்கில் பல காணொளிகளின் கலவையை பயன்படுத்தியது.  இது பார்வையாளர்களை குறித்த காணொளிக்கு எதிர்வினையாற்றவும், உரையாடல்களுக்கும், விளக்கப்படங்களுக்கும் பதிலளிக்கவும் ஊக்குவிப்பதுடன், மீம் பக்ககங்களுக்கு குறிப்பான கருத்துப் பின்னூட்டல்களை வழங்கவும் நேயர்களை தூண்டியது. 

சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், டிக்டோக் மற்றும் யூடியூப் தளத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள், ஐ.நா.வைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் அடிப்படை அமைதி கட்டமைப்பு குறித்த பல அமர்வுகளை ஒழுங்கு செய்ததன் மூலம், யுனைடெட் கிரியேட்டிவ்ஸின் பங்கேற்பாளர்கள் பல முக்கிய போக்குகள் மற்றும் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தனர்.

  • சமாதானமும் அபிவிருத்தியும். 
  • டிஜிட்டல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தேவையான தந்திரோபாயங்கள்.
  • வெறுப்பை மற்றும் எதிர்மறையை எதிர்கொள்ள பரிவுணர்வு செய்தியிடலின் முக்கியத்துவம். 
  • போலியான தகவலை எவ்வாறு எதிர்கொள்வது. 
  • பன்முகத்தன்மை மற்றும் சமூக உள்ளடக்க மரியாதையை ஊக்குவிக்கும் கதை சொல்லும் நுட்பங்கள். 

நிலையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் நீண்டகால குறிக்கோளுக்கு ஏற்ப, யுனைடெட் கிரியேட்டிவ்ஸ் ஏற்கனவே நம்பிக்கையூட்டும் வகையிலான முடிவுகளை அளித்துள்ளது. திட்டத்தின் காலத்திற்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட பங்கேற்பாளர்களின் கணக்கெடுப்பொன்று, “89% பங்கேற்பாளர்கள் இணையத்தில் சமூக தாக்கத்திற்கான பயனுள்ள கதைகளைச் சொல்லும் திறனில் நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்பதை காட்டுகிறது. இதனுடன், “திட்டத்தில் ஈடுபட்டுள்ள 96% இளைஞர் தலைவர்கள், எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளல், பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கும் பதிவுகள்/ஆக்கங்களை தொடர்ந்து உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்” என கூறினர்.

சமூக ரீதியான நேர்மறையான பிரச்சாரங்களை உருவாக்க இளம் தலைவர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வலுவூட்டுதலில் யுனைடெட் கிரியேட்டிவ்ஸ் போன்ற முன்முயற்சிகள், மாற்றத்தை உருவாக்க ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கு  நேர்மறையான மாற்றம் மற்றும் வாதங்களை இயக்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வளங்களைப் பெறக்கூடிய சூழலை வளர்ப்பதில் மிக முக்கியமானவை. இதனால் அவர்களின் இணைய சமூகங்களுக்குள் வெறுக்கத்தக்க பேச்சு, பாகுபாடு மற்றும் தவறான தகவல் போன்ற அதிகரித்து வரும் சிக்கல்களைச் சமாளிக்கும் திறன் அவர்களுக்கு கிடைக்கும். 

Related Articles

Exit mobile version