Covid 19தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல். பெண்கள் தமது வாழ்வாதாரங்களை வேகமாக இழக்கத் தொடங்கியிருந்தனர் பெரும்பாலானோர் தமது வீட்டுப் பொருட்களை தக்கவைத்துக் கொள்ளவும், குடும்பத்துக்கு உணவளிப்பதற்கும், பிள்ளைகளை கற்பிப்பதற்கும் இடர்ப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாதவாறு பெண்களுடைய உடலியல் மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பற்ற நிலை மற்றும் சமத்துவமற்ற நிலை எமது அமைப்புகளின் வழியே ஊடுறுவியுள்ளதை இந்த தொற்றுகாலம் எமக்கு புகட்டியுள்ளது.
பெண்களுடைய பொருளாதார வலுவாண்மை மீட்கப்படவேண்டிய நிலைக்கு தற்போது மாறியுள்ளமை தொடர்பான கூறப்படாத உதாரணம் சில, தொற்றுப்பரவல் காரணமாக பொருளாதார நிலையில் பாதிப்புற்ற பெண்கள் தமது சுயதொழில் வாய்ப்புகளை விஸ்தரிப்பதற்கான திட்டத்தை இலங்கையின் பெண்களுக்கான ஐ.நா அமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு, பாடசாலை உட்பட்டமைப்பு மற்றும் கல்விச்சேவைகள், முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, சேவைகள் என்பவற்றோடு இணைந்து ஜப்பானிய அரசின் உதவியோடு முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சியானது இலங்கை வாழ் பெண்கள் பொருளாதார ரீதியாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தற்போதும் எதிர்காலத்திலும் முகங்கொடுப்பதற்கு வலுவூட்டப்பட்டுள்ளமையை உறுதியாக்கியுள்ளது.