ஆகப்பெரிய அதிசியம் சீனப்பெருஞ் சுவர்

பல்பரிமாணக் கலாச்சாரச் சூழலுக்குள் சிக்கிக் கொண்டு பல்வேறு வாய்ப்புகள் இருப்பினும் கலை, அறிவியல் வளர்ச்சியில் மிகப் பெரிய தொய்வைச் சந்தித்து வருகிறது இன்றைய இளைய தலைமுறை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தகவமைத்து முன்னேற வாய்ப்பும், வழியும் பெரிதுமற்ற காலத்தில் உலகை உவந்து ஆய்ந்ததோடு உலகெங்கிலும் வாழ்ந்த அக்காலப் பெருமக்கள் கலை, அறிவியல் வளர்ச்சியில் நுட்பமான அறிவு பெற்றுத் திகழ்ந்த வரலாற்றை மீளாய்வு செய்வது ஓரளவிற்காவது அறிவியல் வளர்ச்சியில் பயன் தரும்.

அந்த வகையிலே நாட்டின் எல்லைப் பாதுகாப்பையும், வர்த்தகப் பாதையின் பாதுகாப்பையும் உறுதி செய்து பல நூறு ஆண்டுகளாகப் பல பேரரசுகளின் பெரும் முயற்சியில் உருவான சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களுள் ஒன்றானது. வர்த்தகப் பண்பாட்டை உலகறியச் செய்த சீனர்களின் காலம் கடந்த ஞானமும், அதன் தொடர்ச்சியும் அதற்கு வித்திட்ட பேரரசுகளையே சேரும்.

படம் : ancient-origins

சீனாவின் மிகப் பெரிய அடையாளமாகவும், அதன் நீண்ட மற்றும் புராதண  வரலாறுகளையும் கொண்டது சீனப்பெருஞ்சுவர்.பல சுவர்களையும், கோட்டைகளையும் உள்ளடக்கிய இது மூன்றாம் நூற்றாண்டில் கிங் ஷி ஹுவாங் (259-210 B.C.) பேரரசர் முதலில் உருவாக்கத் தொடங்கினார். பார்பேரியன் நாடோடிகளின் ஊடுருவல்களைத் தடுக்கும் வகையில் சீனப் பேரரசுகளால் கட்டப்பட்ட மிகவலுவான மற்றும் விரிவான கட்டுமான திட்டங்களில் ஒன்று சீனப்பெருஞ்சுவர். மவுண்ட் வம்சத்தின் (1368-1644) காலத்தில் அதாவது 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டுகளில் இதன் மிகச்சிறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் கட்டப்பட்டது. படையெடுப்பாளர்கள் சீனாவில் நுழைவதற்குப் பெரிதளவிலான தடையாக இது இருக்கவில்லை என்றாலும் கூட சீன நாகரீகத்திற்கும், உலகிற்கும் இடையில் ஒரு உளவியல் ரீதியான தடையாக செயல்பட்டு வந்தது.மேலும் சீனாவின் நீடித்த வலிமைக்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாகவும் உள்ளது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனப் பெருஞ்சுவர் கட்டத் துவங்கியதாக அறியப்பட்டாலும் கல்வெட்டுகள் சீனப் பேரரசுகள் உடைந்தபொழுதே அதாவது அதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாகவே கட்டத் துவங்கியதாக உணர்த்துகிறது. கி.மு. 220இல், ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங், மாநிலங்களுக்கு இடையேயான முந்தைய கோபுரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், வடக்கு எல்லையோரத்தில் உள்ள சுவர்கள் பலவற்றுடன் ஒரே ஒரு அமைப்பாக இணைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது சீனாவிற்கு எதிராக வடக்கிலிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து சீனாவை காப்பாற்றுகிறது.

படம் : the hindu

கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகவும் பெயர் பெற்றதாகும். இதன் மிகச்சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருக்கிறது.இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம்வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச்சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச்சுவரின் கட்டுமானப் பணிகளின்போது சுமார் 20 முதல் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் கணிக்கப்படுகிறது.

கின் ஷி ஹுவாங் மற்றும் குயின் வம்சத்தின் வீழ்ச்சிக்கு பிறகு சீனப் பெருஞ்சுவர் மிகவும் சீர்குலைந்துவிட்டது. ஹான் வம்சத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் (206கி.மு-220 கி.பி)வடகிழக்கில் உள்ள எல்லைப்புற பழங்குடியினர் இதன் கட்டுப்பாட்டைக்  கைப்பற்றினர். இவற்றில் மிகவும் சக்திவாய்ந்ததாக வடக்கு வெய் வம்சம் (386-535 ஏ.டி.) இருந்தது.அது மற்ற பழங்குடியினரிடமிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாத்து தற்போது இருக்கும் சுவரை காப்பாற்றியது.

படம் : china highlights

சுய் வம்சத்தினரின் வீழ்ச்சி மற்றும் டங் வம்சத்தின் எழுச்சியுடன் (618-907), சீனப் பெருஞ்சுவர் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.ஏனெனில் சீனா வடக்கில் டுஜூ பழங்குடியை தோற்கடித்து சுவர் மூலம் பாதுகாக்கப்பட்ட அசல் எல்லைகளை கடந்தும் விரிவடைந்தது. சாங் வம்சத்தின் (960-1279) போது சீனர்கள் வடக்கே லியாவோ மற்றும் ஜின் மக்களிடமிருந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிப் பின் தள்ளப்பட்டனர்.அவர்கள் சீனப் பெருஞ்சுவரின் இரு பக்கங்களிலும் பல பகுதிகளை எடுத்துக்கொண்டனர். செங்கிஸ்கான் நிறுவிய சக்திவாய்ந்த யுவன் (மங்கோலிய) வம்சம் (1206-1368) இறுதியில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளையும் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் கட்டுப்படுத்தியது. மங்கோலியர்களுக்கு இராணுவ அரணாக சீனப் பெருஞ்சுவர் இருந்த போதிலும், இக்காலக்கட்டத்தில் பட்டுச் சாலையின் வழிகளில் பயணிக்கும் வணிகர்கள் பாதுகாக்கப்படுவதற்காக பல மனிதர்கள் சித்திரவதைக்கப்பட்டனர் .

சீனப் பெருஞ்சுவரின் கட்டுமான காலம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும் இன்று இருக்கக்கூடிய அதன் பெரும்பகுதிமங் வம்சத்தின் (1368-1644) போது கட்டப்பட்டது. மங்கோலியர்களைப் போலவே, ஆரம்பகால மங்கோலிய  ஆட்சியாளர்களும் எல்லைக் கோட்டைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை.15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருஞ்சவரின் எல்லை வரையறுக்கப்பட்டது.1421 ஆம் ஆண்டில், மங் பேரரசர் யாங்லீ சீனாவின் புதிய தலைநகரான பெய்ஜிங்கை, முன்னாள் மங்கோலிய நகரமான டாடு தளத்தில் பிரகடனப்படுத்தினார். மிங் ஆட்சியாளர்களின் வலுவான ஆட்சியில் சீனக் கலாச்சாரம் செழித்தோங்கியது. அந்தக் காலப்பகுதியிலேயே பாலங்கள், கோயில்கள் மற்றும் பகோடாக்கள் ஆகிய பல கட்டுமானங்கள் உருவாகத் தொடங்கியது. பிராந்திய விரிவாக்கத்தின் ஆரம்ப கட்டத்திற்குப் பிறகு, மிங் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்தார்கள். அவர்களது சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு கட்டுமானத்தில் அவர்கள் காட்டிய அசுர வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருந்தது.

படம் : paccm

17 ஆம் நூற்றாண்டின் நடுவில், மத்திய மற்றும் தெற்கு மன்சூரியாவில் உள்ள மன்சஸ் பெரிய சுவர் வழியாக உடைத்து பெய்ஜிங்கை ஆக்கிரமித்து, இறுதியில் மிங் வம்சத்தின் வீழ்ச்சியையும் கிங் (மன்சு) வம்சத்தின் (1644-1912) தொடக்கத்தையும் வழிவகுத்தது. இன்றுசீனப் பெருஞ்சுவர்  வரலாற்றில் மிகவும் சுவாரசியமான கட்டிடக்கலை அம்சங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டில், யுனெஸ்கோ ஒரு பெரிய உலகப் பாரம்பரியத் தளத்தை நியமித்தது. பல ஆண்டுகளில்,  பல இடங்களில் சாலைகள் சுவரின் வழியாக வெட்டப்பட்டுவிட்டன. அதனால் அதன் நீண்ட பகுதியின் பல பிரிவுகள் மோசமடைந்துள்ளன. பீஜிங்கின் வடமேற்கில் 43 மைல் (70 கி.மீ) தொலைவில் உள்ள சீனா-பாடல்லிங் என்ற இடம் பெருஞ்சுவரின் மிகச் சிறந்த பகுதியாகும்.1950களின் பிற்பகுதியில் மீண்டும் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஒவ்வொரு நாளும் ஈர்க்கிறது. நெடுங்காலமாகச் சென்ற நூற்றாண்டு வரையிலே கூட நிலவிலிருந்து தெரியும் ஒரே கட்டமைப்பு என்ற பெருமையைத் தக்க வைத்தது இது ஒன்றுதான்.

எண்ணற்ற கதைகளையும், மொழிகளையும், மக்களையும், பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் கண்ட சீனப் பெருஞ்சுவர் பழங்கால சீனர்களின் வணிகக் கலாச்சாரத்தையும், தொழில்நுட்பத் திறனையும் இன்றைய நவீன உலகிற்கு உணர்த்துவதாக உள்ளது. பெரும்படைகள் கொண்ட சீனப் பேரரசுகள் நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் கொண்ட உறுதியான நிலைப்பாடு அவர்களது மற்றுமொரு அரசியல் அடையாளம். இன்றளவும் வல்லரசான சீனா எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை உலகின் வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது. எனவே அரசியல் ரீதியாகவும் அதன் எல்லைப் பாதுகாப்பின் அவசியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. படையெடுப்புகளுக்கு இனியொரு வாய்ப்பை சீனா ஒருபோதும் தராது. அதற்குச் சீனப் பெருஞ்சுவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்பே ஆகப்பெரிய சான்று.

Related Articles

Exit mobile version