மாற்றுத்திறன் கொண்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பல வகையான அடக்குமுறைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இலங்கையில் முதன்முறையாக ஐ.நா. பெண்கள் அமைப்பின் ‘மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான அவர்களது அணுகல்’ எனும் அறிக்கையானது மாற்றுத்திறனாளி பெண்களின் பொருளாதார நிலை குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தப்பட்டுள்ளது
டிசம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஆய்வின் மூலம் நாம் பெற்றுகொண்ட விளக்கங்கள் எமது சமூதாயத்தின் இருண்ட சில பக்கங்களுக்கு விடையாக அமைந்திருந்தமை குறிப்பிடதக்கது