இலங்கை என்பது பல்வேறு கலாசாரங்களை கொண்ட நாடாகும். சாதி- மத அடிப்படையிலான நாட்டின் கலாசார பன்முகத்தன்மை காரணமாக நாட்டின் அழகும் செழிப்பும் மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
ஒருவரை பார்த்தவுடன் கலாசார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பிரதான காரணியாக உடை விளங்குகிறது. அதில் பெண்களின் உடை மிக முக்கியம் வாய்ந்தது ஆகும். எமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சேலை, ஒசரி மற்றும் சுடிதார் ஆகிய இனங்களுக்கிடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய உடைகளின் வரலாறு பற்றியும், தற்காலத்தில் அந்த உடைகள் பாரம்பரிய முறையில் சரியாகவும், மேனியின் அழகை மெருகூட்டிக் காட்டும் வகையில் அணிவது குறித்தும் இந்த கட்டுரையின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சேலை
இந்தியாவினால் எமக்கு வழங்கப்பட்ட ஒரு பாரம்பரிய பொக்கிசமாக சேலையைக் குறிப்பிட முடியும். இலங்கையில், சேலையானது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. திரௌபதியின் முடிவில்லாத வஸ்த்திரம் என போற்றப்படட்டு ஆதி காலத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான சேலையானது, தற்போது இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கை பெண்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஆடையாக மாறியுள்ளது. சேலை அணிவதானது, இந்தியர்களால் எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கலாசாரத்தின் அடிப்படையில் எமது நாட்டு பெண்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
இந்திய பெண்களின் சேலை கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டு கால வரலாறு கொண்டதாகும். இந்திய பெண்களின் ஆடைகளில் ஒன்றாக பிரபலமடைந்த சேலையானது, இன்றைய காலத்தில் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை பெண்களின் நிரந்தர பாவனையாக உருமாறியுள்ளது. தென்னிந்தியாவின் செல்வாக்கின் காரணமாக கண்டி யுகம் தொட்டு சிங்கள பெண்களும் சேலை அணிந்துள்ளனர். இதேவேளை, பலவித நவீன பாணியில் அணிவதற்கும் சேலை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று முதல் இன்று வரை சேலை இலங்கை சமூகத்தின் மத்தியில் பிரபலம் வாய்ந்தது போலவே முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இந்த நவீன காலத்தில் நவநாகரீக ஆடை முறைக்கு ஏற்ப சேலையை பயன்படுத்திக் கொள்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
ஒசரிய
17ஆம் நூற்றாண்டில் சிங்களவர்களின் ஆடை பயன்பாடானது குலத்தை அடிப்படையாகக் கொண்டே விளங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி உன்னதமாக குலத்தினர் தங்கம், வெள்ளி, முத்து, கற்கள் பதித்த ஆபரணங்களுடன் கூடிய ஆடம்பரமான பாணியில் உடை அணிவர். சாதாரண மக்கள் முழங்காலில் இருந்து சற்று கீழே பாதி மூடப்பட்ட வகையில் உடை அணிவர்.
மேலைத்தேய மன்னர் காலத்திலிருந்தே ஒசரி பாவனையில் இருந்தமைக்கு சாட்சிகள் உள்ளன. இந்திய இளவரசிகளின் உடை பாணியை அடுத்து கண்டிய இராச்சியத்தினரின் உடை பாவனை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன். சேலை மற்றும் ஒசரிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் சேலை வகைகளை ஒசரியாக வடிவமைத்துக் கொள்ள சிங்கள பெண்கள் பழகிக் கொண்டுள்ளனர்.
சுடிதார்
கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஆடையாக சுடிதார் விளங்குகிறது. இது பொதுவாக பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆடை என்ற போதிலும், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் கிரேக்க மற்றும் ஒட்டோமான் துருக்கியர்களின் அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட பால்கன் ஆகிய பகுதிகளில் பாவனையில் இருந்துள்ளது.
பழங்காலத்திலிருந்து சேலை முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் காணப்பட்டதுடன், சேலையின் முந்தானையால் தலையை மூடி, தங்களது கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையிலும் செயற்பட்டனர்.
உடல் அழகை மெருகூட்டும் வகையில் ஆடை அணிதல்
சேலை, ஒசரி மற்றும் சுடிதார் போன்ற ஆடைகளின் மூலம் உடலின் அழகை மேலும் மெருகூட்டி காட்ட வேண்டுமாயின், சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவது அவசியமாகும். இதில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டியது உள்ளாடை தெரிவிலேயே. சேலை, ஒசரி மற்றும் சுடிதார் ஆகிய ஆடைகளுக்கு என அவை ஒவ்வொன்றுக்கும் பொருந்தும் வகையிலான உள்ளாடைகள் தற்போது விற்பனையில் உள்ளன.
சேலை அல்லது ஒசரியின் அழகை மெருகூட்டுவதற்கு அதற்கு மிகவும் பொருத்தமான சேலை ரவிக்கை அணிதல் வேண்டும். சேலைக்கான ரவிக்கை உடம்புடன் ஒட்டி காணப்படுவதே சேலைக்கான ரவிக்கைக்கும், சாதாரண மேலங்கிகளுக்கும் இடையிலான வித்தியாசம். இவ்வாறு அணிவதன் மூலம் உடலின் வடிவம் அழகாக வெளிக்காட்டப்படுவதுடன், சேலையின் அழகையும் மேலும் மெருகூட்டிக் காட்டும். தற்காலத்தில் நவநாகரீகத்திற்கு ஏற்ற வகையில் நவீன வடிவங்களில் ரவிக்கைகளை தைத்துக் கொள்ள முடியும்.
Amante யினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Classic Shape பிராக்கள் சேலை ரவிக்கைகளுக்கு நன்றாக பொருந்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ரவிக்கை உடலுக்கு அளவாக தைக்கும் போது, பிராக்களை மாரபகங்களைவிட சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ அணிவது உங்கள் அழகை குறைத்துக் காட்டும். ஆனால், இந்த Side Shaper பிராக்களினால் அந்த பிரச்சினை இல்லாமல் செய்யப்படும் அதேவேளை, உடலின் அளவை சிறிதாகக் காட்டவும் உதவும்.
சேலை, ஒசரி போன்றவற்றை அணிவது என்பது அதிக துணியை உடலில் அதிக நேரம் சுற்றிக் கொண்டிருக்க நேரிடும். இதனால் உடல் உஷ்ணத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான பிராக்களை அணிவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது ஒன்றாகும். இங்கு பிராக்களின் கப்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மென்மையான துணியானது நாள் முழுவதும் எவ்வித கஸ்டங்களும் இன்றி அணிந்துக் கொண்டிருப்பதற்கு உதவியாக அமையும். இந்த பிரா வகைகளின் கப்களுக்கு இடையிலான இடைவெளி (center front) மற்றும்
உயரம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதால் முழுமையாக மறைக்கப்பட்டு, சிறந்த அழகான தோற்றத்தை பெற்றுத் தரும்.
கழுத்து அகன்றதாகவும், கையுடனும், கை இல்லாமலும், முன்பகத்தில் அல்லது பின்பக்கத்தில் பட்டன் வைத்தும், பின்பக்கத்தில் முதுகு விளங்கும் வகையிலோ அல்லது முழுமையாக மறைத்தோ ரவிக்கைகளை தைத்துக் கொள்ளலாம்.
உடலுக்கு அளவான ரவிக்கை அணியும் போது உள்ளாடை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்தால் அது தோற்றத்தை அவலட்சனமாகக் காட்டும். அதேவேளை, ப்ராவின் பட்டி ரவிக்கையின் வெளியே தோன்றுவதும் பாரிய பிரச்சினையாகும். இதனை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு ரவிக்கையுடன் கப் வைத்து தைத்துக் கொள்ளலாம்.
அதேவேளை, வெப்பமான காலநிலைக்கு ஏற்ற வகையிலான உள்ளாடை தெரிவிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். அதேவேளை, கப் பயன்படுத்துவதன் மூலம் நாள் முழுவதும் எவ்வித அசௌகரியமும் இன்றி இருக்கலாம். ரவிக்கையின் மூலம் எடல் அழகை வெளிக்காட்ட வேண்டுமாயின், ரவிக்கைகளை பெரிதாக அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பிரா வகைகளில் கப்களுக்கு இடையிலான உயரம் கூட்டப்பட்டுள்ளதால் தோற்றத்தை மேலும் மெருகூட்டிக் காட்டும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள் பெடட் ப்ராக்களை அணிவது அழகை மெருகூட்டும். பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் பெடட் ப்ராக்களை அணிவதை தவிர்க்கலாம். அவ்வாறானவர்கள் மெல்லிய துணிகளால் நெய்யப்பட்ட ப்ராக்களை அணிவது அழகைக் கூட்டிக் காட்டும். இதேவேளை, ரவிக்கையின் நிறத்திற்கே ப்ராக்களை தெரிவு செய்வதும் சிறந்ததாகும். சாதாரணமாக ரவிக்கையிள் நிறத்திற்கு பொருத்தமான பிராக்களை தெரிவு செய்வது அவசியமானது என்பதால், பல வர்ணங்களில் இந்த பிரா வகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்கள்
https://kidworldcitizen.org
https://www.quora.com
பண்டைய சிங்கள பெண்களின் ஆடை – மார்ட்டீன் விக்ரமசிங்க
மேலும் விபரங்களுக்கு அனுகவும்: amante