இலங்கை அபிவிருத்தி அடைவதற்கு வெளிநாட்டு முதலீட்டின் உள்வருகை மிக அவசியாமாகவுள்ளது. இவ்வருவாயைத் தொடர, இலங்கையின் அபிவிருத்தி பாதையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, உலகளாவிய சிறந்த நடைமுறைக்கேற்ப ஒரு நிலையான மற்றும் நம்பகமான நிதி மற்றும் முதலீட்டுத் தொழில்முறை தேவைப்படுகிறது.
இலங்கையின் எதிர்கால நிதியியல் சந்தைகளில் நமது உள்ளூர் நிதி நிபுணர்களின் பங்களிப்பானது ஒரு முக்கிய அங்கமாக நோக்கப்படுகின்றது. இந்தநிலையில், கடந்த 26ம் திகதி ஜீன் மாதம், ஆறாவது முறையாக இடம்பெற்ற CFA முதலீட்டு சந்தை விருது வழங்கும் விழாவில் முதலீட்டு தொழில்முறையாளர்களுக்கு பின்வரும் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
- முதலீட்டாளர் தொடர்புகள். (investor relations)
- ஆய்வு குழுக்கள். (research teams)
- நம்பிக்கை பொறுப்பு நிதிகள். (unit trust funds)
- துறைரீதியான அறிக்கைகள். (sector reports)
- முதலீட்டு ஆய்வு அறிக்கைகள். (equity research reports)
இவ்விருது வழங்கும் நிகழ்வானது இலங்கை CFA சங்கத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தொழிற்துறை நிகழ்வாகும்.இது நிதி நிபுணர்களை நேர்மைத்தன்மை மற்றும் தொழில்முறை உயர்தரங்களை நிலைநிறுத்த மற்றும் ஊக்குவிக்க மேற்கொள்ளும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இலங்கை CFAயினால் செய்யப்படுபவை
இலங்கை CFA சங்கமானது சர்வதேச Chartered Financial Analyst (CFA) எனும் தகுதியினை இங்கே பிரதிநிதித்துவபடுத்துகின்றது. இந்த தகுதியானது முதலீட்டு மேலாண்மை துறையில் அதியுச்சமான தகுதியாக உள்ளத்துடன்,இலங்கையில் தற்போது மட்டும் 200க்கும் மேற்படடவர்கள் இந்தத் தகுதியை கொண்டவர்களாக உள்ளார்கள்.
CFA தகுதியை முழுமையாக பெற்றுக்கொள்ளுவதென்பது மிக இலகுவான காரியமில்லை. இந்த தகுதியை கல்விகற்க வரும் ஐந்தில் ஒருவரே பூரண தகுதியை பெற்றுக் கொள்ளுகிறார்கள். CFA இலங்கை சமூகத்தின் தலைவர் Rachini Rajapaksa அவர்களின் கருத்துப்பிரகாரம், இந்த தகுதியை பெற்றுக்கொள்ளும் உறுப்பினர் ஒருவர் சராசரியாக 1,000 மணித்தியால படிப்பினையும், நான்குவருட தொழிற் துறை அனுபவத்தையும் கொண்டிருப்பது அவசியமானது என்கிறார். இதற்க்கு மேலதிகமாக, அனைத்து தகுதியையும் கொண்டிருக்கும் பட்டய நிதியலாளர்கள் வருடாந்தம் CFA நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் தொழில்முறை நடத்தை தரநிலைகளை உருத்திப்படுத்தி கொள்ளுவது அவசியமாகும்.
“உலகெங்கிலும் 150,000-க்கும் அதிகமான நிபுணர்கள் CFA சான்றிதழை கொண்டிருப்பதுடன்,CFA தகுதியுடையவர்கள் நிதிமுகாமைத்துவம்சார் தொழிற் துறையினை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி பிரமுகர்களாக இருக்கிறார்கள்” என Rajapaksa தெரிவிக்கிறார்.
முதலீட்டின் எதிர்காலம்
தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தங்க விருதினை வென்ற முதலீட்டு தொடர்பாளர் Roar ஊடகத்துடன் பேசுகையில், நாட்டின் எதிர்கால முதலீடுகளானது நாட்டின் பொருத்தமான சூழலின் அடிப்படையிலேயே தங்கியுள்ளதாக சுட்டிகாட்டினார்.
Suvendrini Muthukumarana – நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி துணைத்தலைவர் கலந்துரையாடுகையில், வங்கியானது முதலீட்டு தொடர்புகளுக்கென முதன்மையான குழுவொன்றை கொண்டிருக்கிறது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு பொருத்தமான காலப்பகுதியில் நிதியியல் அறிக்கைகளை வெளியிடுவதில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர், முதலீட்டாளர் சமூகத்துடனும் இணைய வழியாக மற்றும் மன்றங்களுக்கான நிதி முடிவுகளை விவாதிக்கவும் மற்றும் வங்கியின் பெருநிறுவன வலைத்தளத்தில் உள்ள முதலீட்டாளர் உறவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இணைய பக்கங்களை புதுப்பித்து பராமரிக்கவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.
முதலீடானது தற்போதையநிலையில் நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு மிக அவசியானமொன்றாகும் என Muthukumarana தெரிவிக்கிறார். அத்துடன், இலங்கையில் பல வெளிநாடுகளும் பலதரப்பட்ட செயற்திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது முன்னேற்றகரமானது என குறிப்பிடுகிறார். அதுபோல, உள்நாட்டு முதலீட்டாளர்களும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிடுகிறார்.
Muthukumarana குறிப்பிடுகையில், CFAயானது ஒவ்வொரு வருடமும் விருது வழங்கும் பிரிவுகளை அதிகரிப்பதானது ஊக்குவிப்பினை வழங்குவதாக உள்ளதாக தெரிவிக்கிறார். மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்விருதுகள் வழங்கப்படுவதானது முதலீட்டு சந்தையில் பங்குகொள்ளுபவர்கள் மிகசிறந்த நேர்மையான முறைமைகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பதுடன், முதலீடுசார்ந்த அனைத்து துறைகளிலும் அபிவிருத்திக்கு வழிவகுப்பதாகவவுமுள்ளது என்கிறார்.
Capital Alliance Securities (CAL) நிறுவனத்தின் ஊழியரான Udeeshan Jonas மிகசிறந்த முதலீட்டு ஆய்வு அறிக்கைக்கான தங்க விருதினை பெற்றுக்கொண்டவர் குறிப்பிடுகையில், இந்த விருதானது தனக்கும், தனது அணிக்கும், தனது நிறுவனத்துக்கும் மிகப்பெரும் மரியாதையையும் கவனயீர்ப்பையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பங்குதரகர் அணியானது முதலீடு சார்ந்த விடயங்களில் ஈடுபடுகிறது. எனவே, நாம் பொருத்தமான கால அடிப்படையிலான ஆய்வறிக்கைகளை வெளியிடுவதுடன், அனைத்து அறிக்கைகளுமே நிறுவனங்களை ஆய்வு செய்வதாகவும், முதலீட்டாளர்களின் முதலீட்டு கேள்விகளுக்கு விடையளிப்பதாகவும் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
Jonas மேலும் குறிப்பிடுகையில், தாம் வெளியிடும் அறிக்கைகளை முறையாக கண்காணிக்க CFA தவிர்த்தது சந்தையில் யாருமில்லை என்பதுடன், CFA எமது ஆய்வுகளை பொருத்தமான முறையில் தரப்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்.
நிதியியல்சார் தொழில் முறையாளர்களுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள கேல்விநிலையை தொடர்ந்து, CFA இளநகையானது நிதியியல்சார் துறையில் ஒரு தர நிர்ணயத்தை மேற்கொள்ளுவதாக உள்ளது. இலங்கை CFA சங்கமானது இலங்கையின் நிதியியல்சார் துறை அபிவிருத்தியில் ஆர்வம்கொண்டிருக்கும் CFA தகுதியுடையவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருடம் முழுவதும் அதுசார் விழிப்புணர்வு கல்வியை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான மேலதிக தகவலை பெற்றுக்கொள்ள www.cfasociety.org/sri lanka என்கிற பேஸ்புக் பக்கத்தின் மூலமாக அணுக முடியும்.
The CFA program is the gold-standard global finance qualification. Contact CFA Sri Lanka on Facebook or at +94 77 366 1931 for more details.