அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுமனமான நாசா (NASA), சுமார் 50 ஆண்டுகளின் பின் நிலவுகக்கான தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தொரு விடயமாகும். ஆர்டிமிஸ் என பெயரிடப்பட்டள்ள இந்த நிலவுக்கான பயணத்திட்டத்தை தொழிநுட்ப கோளாறு காரணமாக இரண்டு தடவைகள் பயண ஏற்பாடுகள் போது ரத்துசெய்துள்ளது.
ஆகஸ்ட் 29ம் திகதி நிலவுக்கு பயணமாகவிருந்த ஆர்டிமிஸ்-1 தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 3 திகதி நிலவுக்கு பயணமாக தயார் செய்யப்பட்டது. பயணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மீண்டும் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆர்டிமிஸின் நிலவுக்கான பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் பயணம் ஒத்திவைக்கப்பட்டதால், நிலவுக்கான பயணச் செலவு நிலவையே தொடுமளவுக்கு உயர்ந்து வருகின்றது.
அப்படி என்ன தான் கோளாறு?
நிலவுக்கு பயணமாகும் ஆர்டிமிஸ் இதுவரை நாசா அனுப்பிய ராக்கெட்களில் மிகப் பெரிய ராக்கெட் ஆக ஆர்டிமிஸ்-1 விளங்குகின்றது. இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கசிவு தான் இந்த தொழிநுட்ப கோளாறுக்கு பிரதான காரணம். வின்வெளிக்கான பயணத்தில் பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்படும் திரவ ஐதரசன் இன்று நாசாவுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது. இந்த திரவ ஐதரசன் (LH2) ஆனது நம் அண்டத்தில் காணப்படும் மிகச்சிறிய அணுவினால் ஆன மூலக்கூறாகும். இது -423F உறை நிலையை கொண்டிருப்பதாலும், அதீத உறைதன்மை சடப்பொருட்களை சுருக்கி அதில் விரிசலை ஏற்படுத்தவதாலும், எரிபொருளை கொண்டு செல்லும் குழாய், சேமிக்கும் கொள்கலன் என அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன.
இது முதல் முறையாக இடம்பெறும் பிரச்சனையா? என்றால், இல்லையென்பதே அதற்கு பதிலாக அமையும். 1990 களில் நாசாவினால் வின்வெளிக்கு ஏவப்பட்ட STS-35 கொலம்பியா ஸ்பேஸ் ஸட்டல் அவ்வருடம் மே 30, செப்டம்பர் 6, செப்டம்பர் 18 என 3 தடவைகள் இதே எரிபொருள் கசிவு பிரச்சனையால் தள்ளி போடப்பட்டது.
அதிகரிக்கும் நிலவுக்கான பயணச் செலவும், எலான் மஸ்க் வழங்கிடும் தீர்வும்.
ஆர்டிமிஸ்-1 க்கான செலவு 4 பில்லியன் அமெ. டொலர்கள் அமையும் என நாசா திட்டமிட்டு பின்னர் 10 பில்லியன் வரை அதிகரித்த போதும், இந்த LH2 கசிவு பிரச்சனை ஆர்டிமிஸ்-1 பயணத்துக்கான செலவை தற்போது இரண்டு மடங்காக்கியுள்ளது.
தொழிநுட்பமும், அறிவியலும் வளர்ந்து வருகின்ற உலகில் இதற்கு மாற்றீடு பொருள் கண்டுபிடிக்கப்படவில்லையா? என்ற கேள்வி எழலாம், எரிபொருளுக்கு மாற்றீடு இருந்த போதும் LH2 வழங்கிடும் சக்திக்கு இணையான ஒன்று இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணப்பாட்டில் அமெரிக்காவின் விண்வெளி கனவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ள எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளுக்கு திரவ மீதேனை (LCH4) பயன்படுத்தி LH2 பிரச்சனைக்கு தீர்வு வழங்கியுள்ளார். திரவ ஐதரசனை பார்க்கிலும் 3 மடங்கு குறைவான சக்தியை பிறப்பாக்கம் செய்தாலும், இதன் உறைநிலை -259F இருப்பதால் நாசா தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் கசிவு பிரச்சனையை இது சரிசெய்யும் என எலான் மஸ்க் ஆணித்தரமாக கூறிவருகிறார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றுவதை நோக்காக கொண்டு செயற்படும் SpaceX நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மீதேன் அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்துக்கான சுற்றுப் பயணத்தில் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளை அக்கிரகத்திலேயே உருவாக்க முடியும் என்பதாலும், திரவ மீதேனை ராக்கெட்டுக்களுக்கான பிரதான எரிபொருளாக பயன்படுத்துவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.
ஆர்டிமிஸ் திட்டமும் எலான் மஸ்கின் ஆட்டமும்
2025 ஆண்டில் ஆர்டிமிஸ்-3 இல் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க செய்வதற்கு நாசா திட்டமிட்டுள்ள நிலையில் அத்திட்டத்தின் முக்கியமான பகுதியாக விளங்கும் லேண்டர்கள் (Lander – செங்குத்தாக தரையிறங்கி மீண்டும் விண்வெளி நோக்கி பயணமாக கூடிய ராக்கெட்), கேட்வே (Gateway- நிலவுக்கான பயணப்பாதையில் நுழைவாயிலாக மட்டுமன்றி அமையப்போகும் தரப்பிடமாக அமையப்போம் விண்வெளி ஆய்வுமையம்) மற்றும் ரோவர்களை (நிலவில் போக்குவரத்துக்கான வாகனம்) எலான் மஸ்கின், SpaceX நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது. அத்துடன் ஆர்டிமிஸ்-3 இல் ஸ்பேஸ் எக்ஸின் வகிபாகம் பாரிய அளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக SpaceXன் லேண்டர்களில் பிரதான எரிபொருளாக திரவ மீதேன் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிமிஸ்-1 உட்பட நாசாவின் பெரும்பாலான விண்வெளி பயணத்திட்டங்கள் போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்தினால் முன்னெடுக்கபபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகலாவிய விண்வெளி ஆய்வு மையங்களின் சிம்மசொப்பணமாக திகழும் நாசாவின் விண்வெளி திட்டங்களின் பங்களராக விளங்கும் போயிங் ஸ்டார்லைனர், நிறுவனம் விண்வெளி ஆய்வில் புதிய ஆட்டக்காரனாக களமிறங்கியுள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால ஆட்டங்கண்டு போயுள்ளது என்றே கூறவேண்டும்.
நிலவுக்கு மனிதர்களை கால்பதிக்க வைக்கும் ஆர்டிமிஸ்-3 திட்டத்தில் நாசாவுடன் கைகோர்க்கும் எலான் மஸ்க், ஆர்டிமிஸ்-1 இன் தொடர்ச்சியான பயணத் தடங்கல்களுக்குள் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை கண்டுகொண்டிருப்பதாக விண்வெளி ஆய்வு தொடர்பான செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.