COVID-19 வைரஸ் தொற்று – நடப்பது என்ன? | LIVE BLOG


தற்போது  உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் COVID-19 கொரோனா வைரஸ் தொற்றை பற்றிய  தகவல் பகிரும் Live Blog வலைப்பதிவாகும்.  இங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அறிக்கைகள், இற்றைப்படுத்திய மற்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் ஆவணப்படுத்தப்படும்.


எல்லாத் தரவுகளும் அரசாங்க சுகாதார மேம்பாட்டு பணியகம், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மற்றும்  COVID-19 ஐ தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்
ஆகியவற்றிலிருந்து கிடைத்தவை எனதை நினைவில் கொள்க. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு இரையாகாதீர்கள். நம்பகமான ஆதாரங்களில் இருந்து உங்கள் தகவல்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12 

21:59  COVID-19 தொற்றுடையவர்கள் இனம்காணப்பட்டமையைத் தொடர்ந்து ராஜாங்கனய பிரதேச செயலகத்திற்கான அஞ்சல் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

21:35 அனைத்து கத்தோலிக்க தனியார் பள்ளிகளும் நாளை முதல் ஜூலை 17 வரை பாடசாலைகளை மூடுவதற்கான அரசாங்கத்தின் முடிவைப் பின்பற்றும் என தெரிவித்துள்ளது.

10:38 COVID-19 தொற்றுப்பரவல் அதிகரித்துள்ளதால் அரசாங்க விடுமுறை கிடைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுவந்த வதந்திகளை அரசாங்க தகவல் துறை மறுத்துள்ளது.

19:10 ஜூலை 13-17 வரை அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் பிரிவேனா சமயசார் கல்வி ஸ்தாபனங்களுக்கும்  விடுமுறை அளிப்பதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை, ஜூலை 11

23:50 ஐம்பத்தேழு (57) புதிய COVID-19 பதிவுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

22:58 ராஜாங்கனய பகுதியில் இன்று COVID-19 பரிசோதனையில் தொற்றுடையவராக இனம்காணப்பட்ட ஆலோசகருடன் தொடர்புடையவர்கள் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

14:43 ராஜாங்கனய பகுதியில் வசிக்கும், கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட இரண்டாவது ஆலோசகர், COVID-19 தொற்றுடையவராக இனம்காணப்பட்டார். 70 குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை, ஜூலை 10 

22:31 வெலிகட சிறைச்சாலையைச் சேர்ந்த மற்றொரு கைதியும் COVID-19 தொற்றுடையவராக இனம்காணப்பட்டார். இன்று அடையாளம் காணப்பட்ட மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

20:16  இன்று COVID-19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 296 ஆக உயர்கிறது: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய மூன்று பேர், இந்தியாவிலிருந்து ஒன்பது பேர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஒருவர். கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 283 இதில் அடங்குவர்.

09:24 கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மேலும் 196 பேர் COVID-19 தொற்றுள்ளதென உறுதியானது. மொத்தமாக, இவ் மையத்தில் இதுவரை 252 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதென அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

07:40 COVID-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கந்தகாடு தனிமைப்படுத்தல் மையம், மருத்துவமனையாக மாற்றப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, ஜூலை 09 

20:23 COVID-19 தொற்று0க்கு உள்ளான கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் ஆலோசகருடன் தொடர்பில் இருந்த சிலாபத்தைச் சேர்ந்த 10 வீடுகளில் இருந்து 42 பேர், சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

15:31 வெலிகட சிறைக்கு மாற்றப்பட்ட COVID-19 நோயாளருடன் – மற்றும் COVID-19 தொற்றுக்கு உள்ளான ஆலோசகருடன் தொடர்பு கொண்டவர்கள் என, கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து 56 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை, ஜூலை 08 

22:04 பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட வெலிகட சிறைச்சாலையில் உள்ள 315 கைதிகள் COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் இல்லையென அறியப்பட்டுள்ளது.

06:15 உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.

15:22 பங்களாதேஷில் இருந்து திரும்பிய இரண்டு இலங்கையர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் கோவிட் -19 தொற்றுடைவர்களாக இன்று அறியப்பட்டனர் .

12:55 அடுத்த அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் அறிவித்தார்.

செவ்வாய்க்கிழமை, ஜூலை 07 

21:40 பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ COVID-19  தொற்றுக்கு ஆளானதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

18:34 இன்று இதுவரை மூவர் கோவிட் -19 க்கு தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டனர்; மாலுமி ஒருவரும், எத்தியோப்பியாவிலிருந்து திரும்பி வந்தவரும் மற்றும் வெலிகட சிறைச்சாலையிலிருந்து வந்த கைதியுமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர்.

14:48 சிறைத் திணைக்களம் பார்வையாளர்களை ,வெலிகட சிறை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காது என்று அறிவித்துள்ளது.

14:20 வெலிகட சிறையில் இருந்து கண்டறியப்பட்ட COVID-19 நோயாளருடன் தொடர்பில் இருந்த 174 பேர் மற்றும் கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவினர் இன்று பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

09:46 சமீபத்தில் வெலிகட சிறைக்கு மாற்றப்பட்ட கைதியொருவர் COVID-19  தொற்றுடன் இனம்காணப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை, ஜூலை 06

07:00 COVID-19 ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், பல கட்டங்களாக மீண்டும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05 

19:50 ஜிந்துதுபிட்டி கோவிட் -19  நோயாளரென சந்தேகிக்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தொடர்ச்சியாக ஐந்து பி.சி.ஆர் சோதனைகள்  எதிர்மறையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து குறித்த நபர் மற்றும் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட 154 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வியாழக்கிழமை, ஜூலை 02 

23:40 கொழும்பு 13 ஜிந்துபிட்டியவிலிருந்து COVID-19 க்கு தொற்றுக்கு ஒருவர் ஆளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 150 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் முகாமில் இரண்டு வாரங்களிலிருந்து திரும்பிய நிலையில், குறித்த அந்த நபர் அவரது இல்லத்தில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் இருந்துவந்த போது தொற்றுக்கு உள்ளானவர் என அறியப்பட்டுள்ளார். சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க, இதனால் சமூக பரவலுக்கான இடமில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 30 

23:00 இன்று இதுவரை ஐந்து புதிய COVID-19 நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இவர்கள் அனைவரும் ஓமானில் இருந்து திரும்பியவர்கள். முப்பத்து மூன்று (33) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 325 சிகிச்சைபெறும் நோயாளர்கள் உள்ளனர்.

திங்கட்கிழமை, ஜூன் 29 

23:50 இன்று இதுவரை ஐந்து புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதினேழு (17) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 353 சிகிச்சைபெறும் நோயாளர்கள் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28 

23:50 நாட்டில் நான்கு புதிய COVID-19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 365 ஆக உள்ளது.

11:58 இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

07:00 உலகம் முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட COVID-9 வழக்குகளின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாகும். வைரஸால் 500,625 பேர் இறந்துள்ளனர், 5.4 மில்லியன் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர்.

சனிக்கிழமை, ஜூன் 27

11:58 முகக்கவசம் அணிய மறுக்கும் எவருக்கும் 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

19:40 பத்தொன்பது (19) புதிய COVID-19 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 383 ஆக உள்ளது. இன்று இருபது மீட்டெடுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, ஜூன் 26 

23:59 இன்று இதுவரை நான்கு பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 384 ஆக உள்ளது. இன்று பதினேழு மீட்டெடுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை, ஜூன் 25

18:32 இன்று இதுவரை புதிதாக ஒன்பது COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இதில் ஆறு கடற்படை வீரர்கள் மற்றும் மூன்று கடற்படை மார்ஷல்கள் உள்ளனர். நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 397 ஆகும்.

புதன்கிழமை, ஜூன் 24

20:17 இன்று வரை பத்து புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன; இதில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஏழு பேர் மற்றும் மூன்று கடற்படை வீரர்கள் உள்ளனர். தொற்றுக்குள்ளானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இப்போது 2,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டில் தற்போது 428 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

12:33 இலங்கையில் இதுவரை 100,000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 23

22:28 இன்று இதுவரை நாற்பது புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்;  இதில் மும்பையைச் சேர்ந்த 29 வணிகக் கடற்படையினரும், அமெரிக்காவிலிருந்து திரும்பிய 11 பேரும் உள்ளனர்.

திங்கட்கிழமை, ஜூன் 22

23:50 மாலைத்தீவில் இருந்து திரும்பி வந்த ஒருவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்படுள்ளது.  இலங்கையில் இப்போது 414 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21

23:59 தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிதாக COVID-19 நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இருபத்தி ஆறு (26) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் 441 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சனிக்கிழமை, ஜூன் 20

23:59 இன்று புதிதாக COVID-19 நோயாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இருபத்தி ஆறு (26) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை, ஜூன் 19 

23:50 இன்று இதுவரை மூன்று புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருபத்தைந்து (25) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது  493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாயழக்கிழமை, ஜூன் 18

23:59 இன்று இதுவரை இருபத்தி இரண்டு புதிய COVID-19 நோயார்கள் பதிவாகியுள்ளனர்; துபாயில் இருந்து திரும்பிய 18 பேர், கத்தார் நாட்டிலிருந்து இரண்டு, ரஷ்யா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து தலா ஒருவர் இதில் அடங்குவர்.  மொத்தமாக 515 நோயாளர்கள்  தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதன்கிழமை, 2020 ஜூன் 17

23:59  இன்று இதுவரை புதிதாக ஒன்பது COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இதில் இரண்டு கடற்படையினர், பங்களாதேஷில் இருந்து திரும்பி வந்த இருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஐந்து பேர் உள்ளனர். 26 நபர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

10:00 சீனாவில் இந்த வாரம் மாத்திரம் புதிதாக 106 பேர் COVID-19 நோயாளர்களாக பதிவாகியுள்ளதால், பிரதான விமான நிலையமான பெய்ஜிங்கில் வருகைதரவிருந்த மற்றும் புறப்படவிருந்த பயணங்களில் ஏறக்குறைய 70 சதவீதம் ரத்து செய்யப்பட்டன. வெறும் ஐந்து நாட்களில், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பெய்ஜிங் அதன் தடுப்பு நடவடிக்கைகளை அவசர அவசரமா உயர்த்தி வருவதோடு, மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாம் நிலையிலிருந்து  இரண்டாம் நிலைக்கு அவசரகால நடவடிக்கைகளை உயர்த்த முடிவு செய்தது.

செவ்வாய்க்கிழமை, 2020 ஜூன் 16

21:40 இன்று இதுவரை புதிதாக பத்து பேர் COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன; ஆறு கடற்படையினர் மற்றும் ஈரானில் இருந்து திரும்பிய நான்கு பேர் இதில் அடங்குவர். 29 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

07:01 சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் முன்னேற்பாடுகளுடன், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படும்.

திங்கட்கிழமை, 2020 ஜூன் 15

22:45 பதினாறு COVID-19 நோயாளர்கள் இன்று புதிதாக பதிவாகியுள்ளனர். இதில் மூன்று கடற்படை அதிகாரிகள், பங்களாதேஷில் இருந்து திரும்பி வந்த ஒருவர், பாகிஸ்தானில் இருந்து ஒருவர், குவைத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் மாலத்தீவில் இருந்து திரும்பிய 6 பேர்அடங்குவர்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஜூன் 14

23:45 இன்று இதுவரை ஐந்து பேர் புதிதாக COVID-19 தொற்றுடன் பதிவாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடற்படை வீரர்கள்.

சனிக்கிழமை, 2020 ஜூன் 13

23:55 இன்று இதுவரை நான்கு பேர் புதிதாக COVID-19 தொற்றுடன் பதிவாகியுள்ளனர். இதில் ஒரு கடற்படை அதிகாரி, கத்தார் நாட்டிலிருந்து திரும்பி வந்த இருவர் மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பியவர் ஆகியோர் அடங்குவர். ஐம்பத்தாறு (56) பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

12:29 நாளை (ஜூன் 14) முதல் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 04.00 மணி வரை முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

வெள்ளிக்கிழமை, 2020 ஜூன் 12

23:50 இன்று இதுவரை மூவர் புதிதாக COVID-19 தொற்றுடன் பதிவாகியுள்ளனர். இதில் இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் கத்தாரிலிருந்து திரும்பி வந்த ஒருவரும் அடங்குவர். நாற்பத்தாறு நபர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை, 2020 ஜூன் 11

23:50 இன்று இதுவரை எட்டு பேர் வரையில் COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 716 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1150 ஆக உள்ளது.

புதன்கிழமை, 2020 ஜூன் 10

23:00 இன்று இதுவரை 10 பேர் புதிதாக COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இதில் எட்டு கடற்படை வீரர்கள் மற்றும் கத்தார் மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இருவர் உள்ளனர். மொத்த எண்ணிக்கை 736 ஆக உயர்ந்துள்ளது.

22:15 இன்று 65 நபர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1122 ஆக உயர்கிறது.

செவ்வாய்க்கிழமை, 2020 ஜூன் 09

23:50 இன்று இதுவரை 2 பேர் புதிதாக COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 791 ஆகக் கொண்டு வந்துள்ளது.

16:15  ஜூன் 12 முதல் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றுவர அரசு அனுமதியளித்துள்ளது. 50 பேருக்கு மாத்திரமே அனுமதி.

15:00 பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜூன் 29 அன்று பணியினை மீண்டும் ஆரம்பிக்கமுடியும். அதன்படி, 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகள் ஜூலை 6 ஆம் திகதியும், தரம் 10 மற்றும் 12 ஆகியவை ஜூலை 20 ஆம் திகதியும், தரம் 3-9 வரையான வகுப்புகள் ஜூலை 27 ஆம் தேதியும் மீண்டும் தொடங்கும். க.பொ.த உயர்தரத் தேர்வானது  செப்டம்பர் 7 மற்றும் அக்டோபர் 2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்ப்ரிசில் பரீட்சைத் தேர்வு செப்டம்பர் 13 அன்று நடைபெறும்.

12:30 COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் குணமடைந்தவர்களின் தொகை இலங்கையில் 1,000 ஐ தாண்டிவிட்டது. இன்று இதுவரை 67 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1057 ஆகும்.

திங்கட்கிழமை, 2020 ஜூன் 08 

23:50 நாற்பத்தொன்பது (49) COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 990 ஆக உள்ளது.

19:49 இதுவரை புதிதாக இருபத்தி இரண்டு (22)  COVID-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 10 கடற்படை அதிகாரிகள், சென்னையில் இருந்து திரும்பிய நான்கு பேர், குவைத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளனர். நாட்டில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 856 ஆக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஜூன் 07

22:52 இன்று இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளான 21 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

13:16 ஐம்பது (50) நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 941 உயர்ந்துள்ளது.

09:57 பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு தேவாலயங்களை ஆராதனைகளுக்காக மீண்டும் திறந்துவிடுமாறு அராசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனிக்கிழமை, 2020 ஜூன் 06

22:50 இன்று இதுவரை புதிதாக 13 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 33 நபர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை, 2020 ஜூன் 05

23:00 இன்று இதுவரை புதிதாக நால்வர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  19 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை, 2020 ஜூன் 04

23:00 இன்று இதுவரை 48 புதிய COVID-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 36 பேர் கடற்படை அதிகாரிகள், மற்றவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். செயலில் உள்ள நோயாளார்களின் எண்ணிக்கை 947 ஆகவும், 839 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுமுள்ளனர்.

புதன்கிழமை, 2020 ஜூன் 03

23:24 இன்று இதுவரை ஐம்பத்து இரண்டு (52)  COVID-19 நோயாளர்கள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று பதிவாகியுள்ளவர்களில் 31 பேர் கடற்படை அதிகாரிகள், மற்றவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள். இது செயலில் உள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 888 ஆகக் உயர்த்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 ஜூன் 02

23:59 நாற்பது பேர் COVID-19 நோயாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து திரும்பியவர்கள் 32 பேர் அடங்குவர். நோயாளர்களில் ஏழு கடற்படை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரியின் நண்பரொருவரும் உள்ளனர்.

திங்கட்கிழமை, 2020 ஜூன் 01

23:29 இன்று இதுவரை பத்து COVID-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அவற்றில் இரண்டு கடற்படை அதிகாரிகள், இருவர் முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளரின் தொடர்புகள் மூலம் தொற்றுக்குள்ளானோர் மற்றும் ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இது தற்போது செயலில் உள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 821 ஆக உயர்த்தியுள்ளது.

17:17 புதிதாக COVID-19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்; இது இலங்கையில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 812 ஆக உயர்த்தியுள்ளது.

13:04 இன்று புதிதாக 10 COVID -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை இப்போது 811 ஆகும்.

08:42  இலங்கையில் COVID-19 இனால் ஏற்பட்ட 11வது மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் குவைத்தில் இருந்து திரும்பிய 45 வயதானவர், ஹோமகாமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மே 31

23:26 இன்று இதுவரை பதின்மூன்று (13) COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 13 பேரில், நான்கு பேர் கடற்படை அதிகாரிகள் மற்றும் ஒன்பதுபேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.

17:50 இன்று இதுவரை எட்டு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேர் ரஷ்யாவிலிருந்து திரும்பியவர்கள், ஒருவர் கடற்படை அதிகாரி. பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 817, குணமடைந்தோர் எண்ணிக்கை 801.

சனிக்கிழமை, 2020 மே 30

19:30 மேலும் 5 COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்; இன்று இதுவரை 8 பேர் புதிதாய் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 775 ஆகும்.

16:47 இன்று இதுவரை புதிதாக 3 COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்ருவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 770 ஆகும். குணமடைந்தோர் மொத்த  780 பேர்.

வெள்ளிக்கிழமை, 2020 மே 29

23:50 மேலும் பதினெட்டு () நபர்கள் பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் COVID-19 தொற்று பரிசோதனைகளால் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இன்று இதுவரை 28 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தற்போது நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 794 ஆக உயர்த்துகிறது.

8:45 இன்று இதுவரை 10 புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இவர்களுள் ஏழு பேர் கடற்படை அதிகாரிகள், மற்ற மூன்று பேர் துபாயிலிருந்து திரும்பியவர்கள். செயலில் உள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 776, குணமடைந்தோர் எண்ணிக்கை 756.

வியாழக்கிழமை, 2020 மே 28

23:59 மேலும் இருபத்தேழு (27) COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்; இதுவரை மொத்தமாக 61 பேர் இன்று  பதிவாகியுள்ளனர். இது இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 775 ஆக உயர்த்தியுள்ளது.

18:50 மேலும் பதினேழு (17) COVID-19  நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்று இதுவரை 34 பேர் பதிவாகியுள்ளனர்; 32 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் இரண்டு பேர் கடற்படை அதிகாரிகள். இது இலங்கையில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 748 ஆக அதிகரித்துள்ளது.

18:30 இன்று இதுவரை பதினேழு (17) COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 731 ஆக உயர்த்தியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 745.

புதன்கிழமை, 2020 மே 27

21:00 மேலும் இருபத்தி எட்டு COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள்; மொத்தம் 134 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

20:53 இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட நூற்று ஆறு (106) நோயாளர்களுள்; 53 பேர் கடற்படை வீரர்கள் மற்றும் 53 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள்.

14:05 மேலும் இருபது (20) COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 732 ஆக உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 மே 26

22:00 புதிதாக COVID-19 தொற்றுடன்  39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அனைவரும் குவைத்திலிருந்து திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவர்; மொத்தமாக 135 புதிய நோயாளர்கள் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 595 ஆகக் உயர்த்தியுள்ளது.

19:36 எழுபத்தொன்பது (79) பேர் COVID-19 தொற்றுடன் புதிதாய் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; மொத்தம் 96 புதிய நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர். அவர்களில் 88 பேர் குவைத்தில் இருந்து திரும்பியவர்கள், தற்போது திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற எட்டு பேர் கடற்படை அதிகாரிகள் ஆவர்.

16:20 இதுவரை பதினேழு (17) நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளது.

12:45 பதினைந்து (15) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 710 ஆகும்.

05:00 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்த்து  தளர்த்தப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களைக் கோரியுள்ளதுடன், சுகாதார நடைமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.

திங்கட்கிழமை, 2020 மே 25

21:06 வெளிநாடுகளில் திரும்பி வருபவர்களில் பலரும் COVID-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளமை காரணமாக, இலங்கையர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கத்தார் விமானம் ஒத்திவைக்கப்பட்டது.

19:30 இன்று இதுவரை நாற்பத்தியொரு (41) கோவிட் -19 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

17:05 பத்தாவது COVID-19 மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. இறந்தவர் குவைத்தில் இருந்து திரும்பி திருகோணமலையில் தனிமைப்படுத்தலில் இருந்த 51 வயது பெண் ஆவார்.

13:46 இருபத்தியொரு (21) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் இப்போது மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 695 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மே 24

23:15 COVID-19  தொற்றுக்குள்ளான இருபத்தி மூன்று (23) பேர் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர். இதன் மூலம் இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்கிறது. ஜனவரி முதல் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையின் படி இதுவே அதிக பதிவுகளை கண்ட நாளாகும். இன்றைய பதிவுகளில், 49பேர் குவைத் நாட்டிலிருந்து திரும்பியவர்கள், ஒருவர் கடற்படை அதிகாரி மற்றும் மற்றொருவர் இந்தோனேசியாவிலிருந்து திரும்பியவர். நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 458 ஆகும்.

18:50 புதிதாக இருபத்துநான்கு COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இன்று இதுவரை 29 பேர் பதிவாகியுள்ளனர். இது நாட்டில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 435 ஆகக் கொண்டுவருகிறது.

14:45 நான்கு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இவர்கள் அனைவரும் குவைத்திலிருந்து திரும்பியவர்கள். திருகோணமலை தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 411 ஆகும்.

14:21 பதினான்கு (14) COVID -19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை இப்போது 674 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை , 2020 மே 23

23:57 பதினொரு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நாட்டில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 420 ஆகக் கொண்டுவருகிறது.

17:05 பத்து புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அனைவரும் கடற்படை வீரர்கள் ஆவர். இது இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை 409 ஆகும்.

13:45 நாற்பது (40) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்தமாக இதுவரை 660 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை , 2020 மே 22

19:59 மேலும் இரண்டு COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்; நான்கு பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தற்போது நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 430 ஆகக் கொண்டுவருகிறது.

18:54 மேலும் இரண்டு COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்; அவர்கள் இருவரும் கடற்படை வீரர்கள் ஆவர். இது இலங்கையில் தற்போது செயலில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 428 ஆகக் கொண்டுவருகிறது.

13:30 மேலும் பதினாறு COVID-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது நாட்டில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 620 ஆகக் கொண்டுவருகிறது.

வியாழக்கிழமை , 2020 மே 21

23:58 COVID-19 தொற்றுள்ள மேலும் பத்து பேர் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர்; இதுவரை இன்று 27 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தற்போது நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 442 ஆகக் கொண்டுவருகிறது.

18:21 இலங்கையில் இதுவரை பதினேழு புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. முல்லைடிவ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்த இந்த கடற்படை அதிகாரிகளில் இருவர், மேலும் 15 பேர் துபாயில் இருந்து திரும்பி வந்தவர்கள், தற்போது ஜிரகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் இப்போது 432 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

13:25 இருபது கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது நாட்டில் மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 604 வரை கொண்டுவருகிறது.

புதன்கிழமை, 2020 மே 20

14:50 மேலும் பதினைந்து COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 584 ஆகும்.

செவ்வாய்க்கிழமை , 2020 மே 19

23:59 COVID-19 க்கு மேலும் ஐந்து நோயாளிகள் நேர்மறை பரிசோதனையுடன் இனம்காணப்பட்டுள்ளனர். இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆகும்; அனைவருமே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையை 449 ஆகக் கொண்டுவருகிறது.

19:05 இன்று இருபத்தி எட்டு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்த கடற்படை அதிகாரிகள் ஆவர். இது தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை 442 ஆக உயர்த்தியிருக்கிறது.

13:45 மேலும் பத்து COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 569.

திங்கட்கிழமை, 2020 மே 18

20:05 இன்று இதுவரை ஐந்து புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 418 ஆகும்.

12:49 இருபத்தியொரு (21) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 559 ஆக உயர்த்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மே 17

23:45 புதிதாக பதினொரு  COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இன்று இதுவரை மொத்தமாக 21 பேர்  பதிவாகியுள்ளனர். இது தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 434 ஆகும்.

22:03 இன்று அடையாளம் காணப்பட்ட பத்து புதிய COVID-19 நோயாளர்களுடன், தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையானது இலங்கையில் 423 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 209 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

13:00 பதினெட்டு COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 538 ஆகவும், பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் 413 ஆகவும் உள்ளனர்.

சனிக்கிழமை, 2020 மே 16

21:06 புதிதாக 12 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்; அனைவரும் இலங்கை கடற்படை வீரர்கள். இது தற்போது நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை 420 ஆகக் கொண்டுவருகிறது.

19:03 இன்று இது வரை இரண்டு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீயான்குளம் மற்றும் கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். இது இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள் நபர்களின் எண்ணிக்கையை 408 ஆகக் கொண்டுவருகிறது.

15:07 நாற்பத்து மூன்று (43) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மீட்டெடுக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 520 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 மே 15

14:00 மேலும் முப்பத்திரண்டு COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை, 2020 மே 14

19:30 இன்று இது வரை COVID-19 தொற்றுள்ள ஒருவர் மட்டுமே புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆகும்.

13:11 அறுபத்து மூன்று (63) கோவிட் -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 445 .

புதன்கிழமை, 2020 மே 13

19:58 இன்று இது வரை நான்கு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 502 ஆக மாறியுள்ளது.

13:19 மேலும் பதினாறு COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், இது இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 382 ஆக உயர்த்தியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 498 ஆக உள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 மே 12

23:55 இலங்கையில் ஏழு புதிய COVID-19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது.

19:18 அடையாளம் காணப்பட்ட பத்து புதிய COVID-19 தொற்றுடையவர்களுடன், தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 507 ஆக உயர்த்துகின்றது; பதிவான 10 புதிய நோயாளர்களுள் 09 கடற்படை வீரர்களுடன் கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள நபரொருவரும் அடங்குவார்.

17:00 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆனது, லண்டன், டோக்கியோ (நரிட்டா) மெல்போர்ன் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான பயணிகளுக்கு வெளிச்செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. இவ்விமானங்கள் பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச்செல்லும்.

16:00 ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில், கடுமையான வழிமுறைகளின் கீழ், பேருந்துகள் (இலங்கை போக்குவரத்து வாரியத்துடன் இணைக்கப்பட்டவை, மற்றும் தனியாருக்கு சொந்தமானவை) மற்றும் ரயில் போக்குவரத்து நாளை (மே 13) மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

13:50 மேலும் இருபத்தி மூன்று COVID-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 366 ஆக உள்ளது.

 

திங்கட்கிழமை, 2020 மே 11

ஞாயிற்றுக்கிழமை, 2020 மே 10

21:05 கொழும்பு மற்றும் கம்பாஹா தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு தினமும் இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும்.

18:10 எட்டு புதிய COVID-19 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 525 ஆக உள்ளது.

14:05 COVID-19 நோயாளர்கள் 61 பேர் குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 321 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை, 2020 மே 09

21:30 மேலும் நான்கு புதிய COVID- 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்; அனைவரும் இலங்கை கடற்படை வீரர்கள். இது இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 577 ஆக உயர்த்தியுள்ளது.

16:45 இன்று ஒன்பது புதிய COVID-19  நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினரிடையே இருந்துதான் இந்த 9 பேரும் பதிவாகியுள்ளனர். 

13:24 பதினைந்து COVID-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை இப்போது 255 ஆகும்.

09:59 ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு பங்குச் சந்தை, மே 11 திங்கள் முதல் வர்த்தகத்திற்காக மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 மே 08

23:59 COVID-19 தொற்றுள்ள மேலும் 11 பேர் புதிதாக பதிவாகியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 586 ஆகும்

13:55 மேலும் எட்டு COVID-19 நேர்மறை நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், மொத்த மீட்டெடுப்புகள் 240.

01:03 பதினெட்டு புதிய COVID-19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, தற்போது பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையை 583 ஆகக் கொண்டு வந்துள்ளது. 232 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை, 2020 மே 07

22:56 COVID-19 தொற்றுகளை அடையாளம் காண நடத்தப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என்று இலங்கை அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கூறுகிறது.  பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே, ராஜகிரிய, மோதரை மற்றும் கொலன்னாவ நோயாளிகளுக்கு மே 5 அன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

18:00 இலங்கையில் இதுவரை ஏழு புதிய கோவிட் -19 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இவர்களில் 6 பேர் கடற்படை அதிகாரிகள், மற்றவர் கடற்படை அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒரு நபர்.

12:52 மேலும் பதினேழு COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 232 ஆக உயர்த்தியுள்ளது.

புதன்கிழமை, 2020 மே 06

19:30 இலங்கையில் இன்று மேலும் மூன்று புதிய கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; மூவரும் கடற்படை அதிகாரிகள்.

செவ்வாய்க்கிழமை, 2020 மே 05

23:22 இலங்கையில் இன்று இருபது COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 549 ஆக அதிகரித்துள்ளது.

21:15 கொலன்னாவ, கொழும்பு 15, மற்றும் ராஜகிரிய பகுதிகள் மற்றும் கண்டகாடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இன்று இதுவரை ஒன்பது  COVID-19  தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டவர்களுள் நான்கு கடற்படை அதிகாரிகளும் உள்ளனர்.

17:21  கண்டியில் உள்ள ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கொலபிஸ்ஸவைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

14:15 ஒன்பதாவது COVID-19 தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. இறந்தவர் ஐ.டி.எச் இல் சிகிச்சை பெற்று வந்த மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண் ஆவார். 

06:36 திங்கள் (மே 4) அன்று COVID-19 க்கு மொத்தமாக முப்பத்து மூன்று (33) பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் 31 பேர் இலங்கை கடற்படை வீரர்கள், மற்ற இருவர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்து கண்டறியப்பட்டனர். இலைங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 549 ஆக உள்ளது.

திங்கட்கிழமை, 2020 மே 04

19:36 எட்டாவது COVID-19 தொடர்பான மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது பெண். இறந்தவர் குருநாகளை பிரதேசத்தில் வசித்தவர் ஆவர்.

19:18 COVID-19 க்கு மேலும் இரண்டு பேர் பதிவாகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.

13:58 மேலும் மூன்று COVID-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கையை 187 ஆகக் உயர்த்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மே 03

23:20 மேலும் பத்து பேர் COVID-19 நோயாளர்களாக இனம் காணப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 527 ஆகும். இன்று இதுவரை 13 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18:15 இன்று இதுவரை இரண்டு பேர் COVID-19 தொற்றுள்ளவர்களாக பதிவாகியுள்ளன. இது தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 518 ஆக உயர்த்தியுள்ளது.

13:22 COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அக்குரனை மற்றும் பேருவல பகுதிகள் இப்போது மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியுள்ளன.

12:40 மேலும் பத்து COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை, 2020 மே 02

22:40 COVID-19 தொற்றுக்குள்ளானோர் இன்று 12 பேர்வரையில் இனம் காணப்பட்டனர். நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 523 ஆகும்.

14:40 COVID-19 முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், மேற்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த 350 க்கும் மேற்பட்ட நபர்கள், இன்று போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திட்டத்தின் முதல் கட்டமாக, கர்ப்பிணித் தாய்மார்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடு திரும்பும் முன் மருத்துவ பரிசோதனை மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட அனுப்பிவைக்கப்பட்டனர்.

13:20 மேலும் பத்து COVID-19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தத்தில், நாடு முழுவதும் இருந்து 172 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, 2020 மே 01

23:24 COVID-19 தொற்றுடைய புதிய நோயாளர்கள் மேலும் பத்தொன்பது (19) பேர் அடையாளம் காணப்பட்டனர். இலனகையில் தற்போது பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 521 ஆக உயர்த்தியுள்ளது. இன்றைய நாளில் இதுவரை மொத்தம் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

20:30 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளநிலையிலும், மே 11 முதல் பொது மற்றும் நிறுவன நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பும்ம் என்றும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மே 11 வரை தொடரும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பிற பகுதிகளுக்கான ஊரடங்கு உத்தரவு மே 4 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படும். இது மே 6 வரை தொடரும்.

17:29 COVID-19 தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . மொத்தத்தில், இன்று இதுவரை ஆறு புதிய நோயளர்கள் பதிவாகியுள்ளனர்; நாட்டில் தற்போது பாதிக்கப்படுள்ள நபர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

15:00 மேலும் இரண்டு COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 504 ஆக மாறியுள்ளதோடு, 145 பேர் தற்போது மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

13:01 மேலும் மூன்று COVID-19 நோயாளர்கள் குணமடைந்துள்லனர். குணமடைந்தவர்கள் மொத்தம் இப்போது 157 ஆக உயர்ந்துள்ளது.

12:42 இன்று COVID-19 தொற்றுள்ள ஒருவர் இனம்காணப்பட்டார் . இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 502 ஆகும்.

வியாழக்கிழமை, 2020 ஏப்ரல் 30

23:16 COVID-19 தொற்றுடன் பாதிக்கப்பட்டிருந்த  பதினைந்து பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 154 ஆகும். 

19:09 நான்கு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், இது தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 507 ஆக உயர்த்தியுள்ளது. நான்கு பேரும் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

14:45 ஐக்கிய இராஜ்ஜியம் (UK) மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள  இலங்கை கடவுச்சீட்டு வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன் விமான சேவை நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கைக்கு திருப்பி வர விரும்பும் நபர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் தங்களை விரைவாக பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.

13:45 COVID-19 தொற்றுடன் பாதிக்கப்பட்டிருந்த  மூன்று நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் குணமடைந்தவர்கள் மொத்தம்  139 ஆகும்.

புதன்கிழமை, 2020 ஏப்ரல் 29

21:35 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும், மீண்டும் இரவு 8 மணிக்கு விதிக்கப்படும். திங்கட்கிழமை (மே 4) அதிகாலை 5 மணி வரை இது தொடரும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

21:06 ஐந்து புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இது தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 484 ஆக மாற்றியுள்ளது. மேலும், இரண்டு நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

14:00 மூன்று புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை நாட்டில் 481 ஆக உயர்ந்துள்ளது.

10:30 கொழும்பு மன்னிங் சந்தை இன்று வர்த்தகத்திற்க்காக திறக்கப்பட்டது. COVID-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக சந்தை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயற்பாட்டாளர்களால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, 2020 ஏப்ரல் 28

20:34 COVID-19 தொற்றுடைய புதிய 15பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 470 ஆக உயர்த்தியுள்ளது. இன்று மொத்தம் 23 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.

17:23  இலங்கையில் COVID-19  தொற்றுடைய நான்கு புதிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இது இன்றைய தொற்று எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தியுள்ளது. இதில் ஐந்து கடற்படை அதிகாரிகள், புனானி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ளவர்களில் மூவர் அடங்குவர்.

15:38 நான்கு புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; எனவே தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை இலங்கையில் 451 ஆகும்.

14:00 எட்டு பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை  134 ஆகும். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 447 ஆக உள்ளது.

10:05 சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கே பிரசவத்தை எதிர்நோக்கும் தாய்மாருக்கான வழிகாட்டுதல் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, மார்பு / வயிற்று வலி, கருவின் அசைவுகள் குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக மருத்துவமனை தேவையினை நாட வேண்டும்.

கிளினிக்குகளுக்கு செல்லும் கர்ப்பிணித் தாய்மார்களும் மருத்துவமனைகளில் நெரிசலைத் தவிர்ப்பதற்கென, முன் நியமனங்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திங்கட்கிழமை, 2020 ஏப்ரல் 27

21:52 COVID-19  தொற்றுடையவர்கள் மூவர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்;  இன்றையநாளில் இதுவரை 61 பேர் பதிவாகியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது.

20:00 இலங்கையில்COVID-19 தொற்றுடைய மேலும் பத்து பேர் இனம்காணப்பட்டனர்; இத்துடன் இன்றையநாளில் இதுவரை 58 பேர் பதிவாகியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது.

19:00 இராணுவ முகாம்களிலும் தளங்களிலும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பணிக்குழுவிற்கு விமானப்படை மார்ஷல் மற்றும் மேற்கு மாகாண ஆளுநர் ரொஷான் கூனதிலக தலைமை தாங்குவார்.

18:15 இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில், இதுவரை 180 கடற்படை அதிகாரிகள் COVID-19 னால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 112 அதிகாரிகள் வெலிசர கடற்படை தளத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 68 பேர் விடுப்பில் இருந்தனர். ஐம்பத்தெட்டு (58) கடற்படை குடும்பங்கள் மிஹிந்தலே மற்றும் பூசாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

18:05 மேலும் நான்கு புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தற்போது பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 438 ஆகக் கொண்டுவந்துள்ளது. இன்று இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவர்கள் நாற்பத்தெட்டு (48) பேர் ஆவர்.

16:50  COVID-19 தொற்றுடைய மேலும் பத்து பேர்  பதிவாகியுள்ளனர். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 434 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவர்கள் நாற்பத்து நான்கு (44) பேர்.

15:00 இன்று பதிவாகியுள்ள முப்பத்தி நான்கு புதிய COVID-19 தொற்றுடைவர்களுடன், தற்போது பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 424 ஆக உயர்ந்துள்ளது.

13:20 COVID-19 இனால் பாதிப்படைதிருந்த மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இலங்கையில் மொத்தமாக இதுவரை 126 பேர் குணமடந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஏப்ரல் 26

22:10 இருபது பேர் புதிதாக COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 378 ஆக அதிகரித்துள்ளது.

20:41 COVID-19 தொற்றுடன் மேலும் எட்டு பேர் இனம்காணப்பட்டுள்ளனர் ; இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 358 ஆக மாறியுள்ளது.

20:00 நாட்டின் சில பகுதிகளில் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட வேண்டியிருந்த ஊரடங்கு உத்தரவு, அந்தந்த முகாம்களுக்கு முப்படை பணியாளர்களைத் மீண்டும் அழைக்கும் வசதிகருதி தளர்த்தப்படாது.
ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, அன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும்.

18:50 COVID-19 தொற்றுடைய மேலும் ஆறு பேர் பதிவாகியுள்ளனர் . தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை  350 ஆக உயர்ந்துள்ளது.

16:41 நான்கு புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன; இது தற்போது சிகிச்சைபெறும் நோயாளர்களின் எண்ணிக்கையை 344 ஆகவும் , மீட்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆகவும் பதிவு செய்கிறது.

15:30 கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை அதிகாரி எலி காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காரணமாக காலமானார். இலங்கை கடற்படை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அந்த அதிகாரி காலமானார் என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது. அந்த அதிகாரி COVID -19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், வெலிசர கடற்படைத் தளத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, உடல் COVID-19 முறைப்படியே அகற்றப்படும்.

14:02 COVID-19 தொற்றுடையமேலும் ஐந்து  பேர் இனம்காணப்பட்டனர், தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 340 ஆகும்.

12:07 இரண்டு புதிய COVID-19 பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இது தற்போது சிகிச்சைபெறும் நபர்களின் எண்ணிக்கையை  335 ஆக உயர்த்தியுள்ளது

சனிக்கிழமை, 2020 ஏப்ரல் 25

22:09 நாட்டில் இன்று மொத்தம் 32 பேர்  COVID-19 தொற்றுள்ளவர்களாக பதிவாகியுள்ளனர். சிகிச்சை பெறுவோர்களது மொத்த எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது; 118 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18:30 புதிதாக 13 பேருக்கு COVID-19  தொற்றுள்ளமை பதிவாகியுள்ளது. இவர்களில் ஏழு பேர் கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், ஒருவர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர்,வெலிசரா கடற்படைத் தளத்தைச் சேர்ந்த நான்கு பேர், மற்றும் மொனராகல மருத்துவமனையிலிருந்து ஒருவர் அடங்குவர். இத்துடன் சிகிச்சை பெறுவோர் மொத்தம் 310 ஆகவும் ; 118 பேர் மீண்டுள்ளனர் எனவும், 237 பேர் தற்போது மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர் எனவும் பதிவாகிறது.

18:15 தேசிய அடையாள அட்டைகளின் (NIC) கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான ஒரு புதிய முறையை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற பொருட்கள் அல்லது மருந்து வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கடைசி இலக்கங்களாக,

  • 1 மற்றும் 2 உடன் முடிவடையும் தே.அ.அட்டைகளுக்கு திங்கட்கிழமை

  • 3 மற்றும் 4 உடன் முடிவடையும் தே.அ.அட்டைகளுக்கு செவ்வாய்க்கிழமை

  • 5 மற்றும் 6 உடன் முடிவடையும் தே.அ.அட்டைகளுக்கு புதன்கிழமை 

  • 7 மற்றும் 8 உடன் முடிவடையும் தே.அ.அட்டைகளுக்கு வியாழக்கிழமை

  • 9 மற்றும் 0 உடன் முடிவடைகின்ற தே.அ.அட்டைகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கைகள் எப்போது அமுலாக்கப்படும் என்கிற அறிவிப்பு குறிப்பிடப்படவில்லை.

18:04 கொழும்பு, கம்பஹா, களுத்தறை, புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு மே 4 காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், ஏப்ரல் 27 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, அன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்கம் செய்யப்படும். இந்த நடைமுறை மே 1 வரை தொடரும் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

12:36 புதிதாக ஏழு COVID -19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 116 ஆகக் கொண்டுவருகிறது. செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 297 ஆகக் குறைந்துள்ளது.

01:25 கொழும்பு உட்பட அனைத்து உயர் ஆபத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை (27) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என்று இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிற பொலிஸ் பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும்.

மேலும் அறிவிப்பு வரும் வரை கொழும்பு, கம்பஹா, களுத்தறை, புத்தளம் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது.

வெள்ளிக்கிழமை, 2020 ஏப்ரல் 24

22:05 மேலும் இரண்டு COVID-19 பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன, இன்று இதுவரை பதிவாகியுள்ளவை 48 வழக்குகள். பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 300. 183 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளன.

18:38 மேலும் இரண்டு COVID-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், குணமடைந்தோர் மொத்தம் 109 பேராவர்.

18:26 மேலும் ஐந்து COVID-19 பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 300 ஆகும்.

17:39 வெலிசர கடற்படை முகாமில் இணைக்கப்பட்டுள்ள மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு COVID- 19 தொற்றுள்ளமை உறுதியானது. இது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையை 295 ஆகக் கொண்டுவருகிறது. இன்று இதுவரை 41 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

17:18 COVID-19 சோதனைக்கு இன்று மேலும் ஆறு பேர் நேர்மறை முடிவுகள் பெற்றனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 265 ஆகும்.

15:42 வெலிசர கடற்படை முகாமில் இணைக்கப்பட்டுள்ள 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இவர்களில் சிலர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுவார்கள்.

11:17 மேலும் ஐந்து COVID- 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். தற்சமயம் சிகிச்சை மொத்த எண்ணிக்கை 259 ஆகும்.

10:45 COVID-19 நோயாளிகளை அடையாளம் காண நேற்று (ஏப்ரல் 23) 1,142 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிக பி.சி.ஆர் சோதனைகள் இதுவாகும்.

07:18 பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேலியகொடை மீன் சந்தையைச் சேர்ந்த 530 பேர், COVID-19 தொற்று பரிசோதனைக்கு எதிர்மறையான முடிவுகளை பெற்றுள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க கூறியுள்ளார்.

வியாழக்கிழமை, 2020 ஏப்ரல் 23

13:45 – தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் COVID-19 நோயாளிகளைக் கண்டறிய தினமும் 1,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, தினசரி  800 பி.சி.ஆர் சோதனைகளை சிகிச்சை பெறுவோர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்கள் மற்றும் தொற்றுநோயுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது நடத்துகின்றன. நான்கு பெரிய தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் COVID-19 நோயாளிகளை அடையாளம் காண கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

14:00 –  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சிக் குழு  SARS-CoV2 (COVID-19) வைரஸின் மரபணு குறியீட்டை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியுள்ளது. இவ்வகை ஆராய்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் முறையாகும். வைரஸின் பரிணாம வளர்ச்சியைக் கண்காணிக்கும் சர்வதேச open source திட்டமான Nextstrainனுடன் குறித்த இத் தரவு பகிரப்பட்டுள்ளது.

13:58 – இன்றுநான்கு புதிய COVID-19 நோயாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை 222 ஆகக் உயர்த்தியுள்ளது.

புதன்கிழமை, 2020 ஏப்ரல் 22

00:18 இலங்கையில் மேலும் ஏழு COVID-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 22 அன்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 218 ஆகும்.  மருத்துவமனை காண்காணிப்பில் உள்ளவர்கள் 148 பேர்.

17:40 – பொலன்னறுவை மருத்துவமனையில்  COVID-19 தொற்றுடைய ஒருவர் பரிசோதனை மூலம் கண்டறிப்பட்டுள்ளார்.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 211 ஆகும்.

13:53 –  Covid-19 தொற்ற்றுடையவர்கள் மேலும் 11 பேர் இனம்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

12:40 – COVID-19 தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் குணமடைதுள்ளனர். இலங்கையில் மொத்தம் 104 பேரி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 2020 ஏப்ரல் 21

19:10  வராக்காபொலையில்  COVID- 19 தொற்றுள்ள நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இது இன்று பதிவானவர்களின் எண்ணிக்கையை 6 ஆகக் கொண்டுவருகிறது. செயலில் உள்ள சிகிச்சை பெறுவோரின் பதிவுகள் தற்போது 203 ஆக உள்ளது.

11:58 COVID-19 தொற்றுடைய மேலும் 5 பேர் பதிவாகியுள்ள நிலையில் செயலில் உள்ள மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 204 உயர்த்தியுள்ளது.  98 பேர் குணமாடைந்துள்ளனர், 122 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

திங்கட்கிழமை, 2020 ஏப்ரல் 20

16:49 இன்று  COVID-19 தொற்றுடயவர்கள் மேலும் எட்டு பேர் இனம்காணப்பட்டதை தொடர்ந்து இன்று  பதிவானவர்களின் மொத்த எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தியுள்ளது. இலங்கையில் செயலில் உள்ள COVID-19 சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இப்போது 199 ஆக உள்ளது.

09:55 இன்று காலை புதிதாக இருபத்துநான்கு COVID-19 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இந்த 24 பேரும்  கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். இது மொத்த எண்ணிக்கையை 192 ஆக உயர்த்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஏப்ரல் 19

18:53 – COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த  ஐந்து நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 91 ஆக உயர்ந்துள்ளது. தற்போது COVID-19 தொற்றுக்குள்ளான 156 பேர்வரை சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 103 பேர்வரை மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

17:35 – இன்று இதுவரை மொத்தம் 15 புதிய COVID-19 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தே இனம்காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 171 ஆகும். 

00:03 – COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவர்கள் பேரும் வெலிசர தனிமைப்படுத்தல் மையத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை, 2020 ஏப்ரல் 18

19:21 – COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளிகள் ஒன்பது பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 86 ஆக உயர்ந்துள்ளது.

19:00 – COVID-19 பரவுவதைத் தடுக்க அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, கண்டி, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டம் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவானத்து திங்கட்கிழமை (20) அன்று அதிகாலை 5:00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 08:00 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இது தினமும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள அலவத்துகொடை, அக்குறனை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பத்து பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவானது திங்கட்கிழமை அன்று தளர்த்தப்படமாட்டாது.

கொழும்பு, களுத்துறை, புத்தளம், மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்படமாட்டாது. புதன்கிழமை (22) அன்று அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மீதமுள்ள பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இது தினமும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படமாட்டாத பொலிஸ் பிரிவுகள் பின்வருமாறு:

கொழும்பு: கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹுவலை பொலிஸ் பிரிவுகள்.

கம்பஹா: ஜா-எல, கொச்சிக்கடை, மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகள்.

புத்தளம்: புத்தளம், மாரவில, வெண்ணப்புவ பொலிஸ் பிரிவுகள்.

களுத்துறை: பண்டாரகமை, பாயகல, பேருவளை, மற்றும் அலுத்கம பொலிஸ் பிரிவுகள்.

18:15 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் நான்கு நோயாளிகள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதில் மூவர் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில்  தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் மற்றொருவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தபோது அறிகுறிகள் தென்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 163 ஆகும்.

வெள்ளிக்கிழமை, 2020 ஏப்ரல் 17

17:19 – புனானை தனிமைப்படுத்தல் மையத்தில் COVID-19 நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் மூவர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. இன்று 530 PCR சோதனைகள் சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்டது.
 
வியாழக்கிழமை, 2020 ஏப்ரல் 16

20:00 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், தற்போது இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 68 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 163 ஆகவும்,  அதேவேளை 161 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர்.

12:45 – COVID-19 தொற்றுக்குள்ளான இரு நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டனர், COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆகவும் அதேவேளை  161 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர்.

புதன்கிழமை, 2020 ஏப்ரல் 15

21:52 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் இரு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர், தற்போது இலங்கையில் சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 167 ஆக உள்ளது.

14:00 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் இரு நோயாளிகள் தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆகும்.

செவ்வாய்க்கிழமை, 2020 ஏப்ரல் 14

22:30 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். தொடர்பு தடமறிதலின் விளைவாக தனிமைப்படுத்தப்பட்டவர்களிலேயே இந் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 165 ஆகும். மேலும் 142 பேர்வரை மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

13:51 – தனிமைப்படுத்தப்பட்டு முடக்கலுக்கு உள்ளாகியிருந்த பண்டாரகமையில் உள்ள அட்டலுகம பகுதியில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

13:00 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளிகள் தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

09:00 – பேருவளைக்கு உட்பட்ட இரு ஊர்களான – பன்னில மற்றும் சீனா கொட்டுவ ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை, 2020 ஏப்ரல் 13

சமூக ஊடகங்களில் COVID-19 குறித்து தவறான வதந்திகளை பரப்பிய ஏழு நபர்கள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஏப்ரல் 12

20:21 – இலங்கையில் இன்று COVID-19 தொற்றுடைய மேலும் 11 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்சமயம் நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

15:40 –  COVID-19 தொற்றினால் இறந்த நபரொருவரின் தகனம் தொடர்பாக புதிய விதிமுறையொன்றை அரசாங்கம் வர்த்தமானி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை, 2020 ஏப்ரல் 11

17:17 – இலங்கையில் COVID-19 தொற்றுடைய மேலும் ஒரு நபர் கண்டறியப்பட்டுள்ளார். தற்சமயம் நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 ஏப்ரல் 10

12:50 – COVID-19 தொற்றுடைய மேலும் ஒருவர் குணமடைந்து வெளியேற்றிச் சென்றுள்ளார். இது இலங்கையில் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 50 ஆகக் கொண்டுவந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட 133 பேர் தற்சமயம் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 224 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

வியாழக்கிழமை, 2020 ஏப்ரல் 09

12:44 – COVID-19 தொற்றுக்குள்ளகி சிகிச்சை பெற்றுவந்த மூவர் குணமாகி மீண்டுள்ளனர். இலங்கையில் குணமடைந்து வெளியானவரகள் எண்ணிக்கை இப்போது 47 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை, 2020 ஏப்ரல் 08

16:15 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளது.

12:40 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். தற்போது இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இனங்காக்கணப்பட்ட COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின்எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.

10:44 – 09/11 அன்று உலக வர்த்தக மையத் தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தற்போது நியூயார்க் நகரத்தில் COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ கடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 ஏப்ரல் 07

22:03 – COVID-19 தொற்றுநோயின் ஆரம்பப் புள்ளியான சீன நகரமான வுஹான் அதன் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது, இரு மாதகாலத்துக்குப் பின் இம் முடக்குதல் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

17:28 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 135 ஆகும் மற்றும் தற்போது 255  பேர்வரை மருத்துவகண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

13:12 COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர்   குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

11:22 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 136 ஆகும் மற்றும் 257 பேர்வரை மருத்துவகண்காணிப்பில் உள்ளனர்.

10:51 – COVID-19தொற்றினால் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது COVID-19 தொற்றினால் ஏற்பட்ட ஆறாவது மரணமாகும். தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதானவரே மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை, 2020 ஏப்ரல் 06

19:15 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர்  மற்றும் தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

13:46 -COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார், தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஏப்ரல் 05

16: 54 இலங்கையில் இன்று COVID -19 தொற்றுடையவர்கள் என இதுவரை நான்கு பேர் புதிதாக இனம்காணப்பட்டுள்ளனர். தற்சமயம் சிகிச்சைபெறுவோரின் மொத்த எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை, 2020 ஏப்ரல் 04

19: 30 COVID-19 இலிருந்து இரண்டு பேர் மீண்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 27 ஆகக் கொண்டு வந்துள்ளதோடு. இலங்கையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 130 ஆகும்.

07:13 இலங்கையில், ஐந்தாவது COVID-19 நோயாளரின் மரணம் இன்று காலை பதிவாகியுள்ளது. பலியானவர் 44 வயதான ஹோமாகமவில் வசித்துவந்த ஆண் ஆவார். இவர் இத்தாலியில் இருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார். மார்ச் 23 அன்று அவர் வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மார்ச் 26 அன்று ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு வேறு வியாதிகள் எத்வும் இருகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 ஏப்ரல் 03

22:40 புதிதாக மேலும் 7 பேர், COVID-19 தொற்றுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இது இலங்கையில் தற்சமயம் சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 131 உயர்த்தியுள்ளது.

20:28 – இலங்கையில் COVID-19 தொற்றுனால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு புதிய நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆகும் . ஒரு புதிய நோயாளர் இன்று பதிவு செய்யப்பட்டு, மொத்தமாக தற்சமயம் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாழக்கிழமை, 2020 ஏப்ரல் 02

21:53 – COVID-19 தொற்றினால் நான்கவதாக மேலும் ஒருவர் மரணமடைந்துடைந்துள்ளார். தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 58 வயதுடைய ஆணொருவரே மரணமடைந்துள்ளார். இவருக்கு நியூமோனியா தொடர்பான சிக்கல்கள் இருந்தமையினாலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21:50 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர், தற்போது இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆகும்.

12:21 COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர், இதனால் தற்போது இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆகும்.

புதன்கிழமை, ஏப்ரல் 01 2020

23:39 இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் மரணமடைந்துள்ளார்; இவ்வாறு மரணமடைந்தவர் மரதானை பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவராவார். இவர் தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.   மேலும் இவர் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினைகள், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.

17:33 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 3 நோயாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்துடன் COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

12:32 – மற்றொரு COVID-19 நோயாளி குணமடைந்து வெளியேற்றப்பட்டார். இலங்கையில் இதுவரையில் குணமடைந்தோர் 18 பேர். கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 173 லிருந்து 231 ஆக உயர்ந்துள்ளது.

9:36 – நாட்டின் (அதிக அபாயம் கொண்ட கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் தவிர) அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு அமுலில் இருக்கும். மீண்டும் ஏப்ரல் 06 அன்று காலை 06 மணிக்கு நீக்கப்பட்டு அன்று பிற்பகல் 2 மணிக்கு மறுசீரமைக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை, 2020 மார்ச் 31

19:45 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் புதிய 10 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இதனால் இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இனங்காணப்பட்ட 10 நோயாளர்களுடன் இன்று புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆகும், இன்றே ஒரே நாளில் அதிகளவில் COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

16:15 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் ஏழு நோயாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது, இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

13:00 – தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த COVID-19 தொற்றுக்குள்ளான இரு நோயாளிகள் தற்போது குணமடைந்து வெளியேறியுள்ளனர். தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது; மேலும் தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 104 ஆகும். இன்று இதுவரை இத் தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

12:00 – வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மேலும் குழுவில் 173 ஆண்களும் மற்றும் 33 பெண்களும் அடங்குவர். இக் குழுவில் இரு வெளிநாட்டினரும் உள்ளடங்குவர்.

திங்கட்கிழமை, 2020 மார்ச் 30

18:57 – நீர்கொழும்பு தேசிய மருத்துவமனையில் COVID-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 64 வயதுடைய மற்றுமொரு நோயாளி மரணமடைந்துள்ளார். தற்போது COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

18:22 – கொழும்பு, கம்பஹா, களுத்தறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை (ஏப்ரல் 01) காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

10:48 – ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் பகுதிகள் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும் எனவும் பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், பிரதேச மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும்  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இருப்பினும் இச் செய்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

09:47 இலங்கையில் மேலும் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 108 ஆக மாறி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மார்ச் 29

20:22 – COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார். இதனால் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின்  எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 104 ஆகும். 

13:24 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார். இதனால் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின்  எண்ணிக்கை  10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 104 ஆகும். 

09:32 – பேருவளையில் அட்டுளுகமை கிராமமும், கண்டியில் அக்குறனைப் பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இப் பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

09:27 – கொழும்பு, கம்பஹா, கழுத்தறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை (மார்ச் 30) காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும்.

சனிக்கிழமை, 2020 மார்ச் 28

20:30 – மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட புதிய 3 நபர்கள் இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103 ஆக மாறி உள்ளது.

20:08 – இலங்கையில் COVID-19 தொற்றினால் நிகழ்ந்த முதல் மரணம் அறிவிக்கப்பட்டது. மாரவிலையைச்  சேர்ந்த 60 வயதான இவர், IDH இன் தீவிர சிகிச்கை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவராவார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர் என்றும் நீரிழிவு நோயாளி மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜசிங்க கூறினார்.

16:22 – COVID-19 தொற்றுடைய மேலும் ஒரு புதிய நோயாளர் இனம்காணப்பட்டுள்ளார். தற்போது மொத்த எண்ணிக்கையை 101 ஆகக் கொண்டு வந்துள்ளது. 199 பேர் இன்னமும் கண்காணிப்பில் உள்ளனர்.

15:43 – (15:03 இற்றைப்படுத்தியது) இன்று புதிய 3 தொற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100, தற்போது கண்காணிப்பில் உள்ளவர்கள் 199, குணமானவர்கள் 9 பேராவர்.

09:41 – இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த பின்னர் 300 க்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட குழு இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை, 2020 மார்ச் 27

16:16 ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போது விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. COVID-19 பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதென்பதையும், காவல்துறையினரால் வழங்கப்படும் விசேட அனுமதி தவிர்த்து, தெருக்களில் நடமாடுவதும் வாகனங்களில் பயணம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொதுமக்களுக்கும், விதிமுறைகளை கட்டாயமாக்கும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என காவல்துறை மற்றும் முப்படையினருக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

14:35 தேவைப்படும் மருந்துகளை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் புதிய வழிமுறை ஒன்றையும் இதற்கென நாடுமுழுவதும் பல மருந்தகங்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்போது ஆன்லைனில் பணம் செலுத்த முடியும் அல்லது கொண்டுவருபவரிடம் பணம் செலுத்தலாம். மருந்தகங்களின் பட்டியல் மற்றும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

13:09 COVID-19 தொற்றிலிருந்து மேலும் ஒருவர் மீண்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி, மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 7 ஆக மாறியுள்ளது. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆகவும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 238 ஆகவும் உள்ளது.

09:47 சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதான இலங்கை ஆண் ஒருவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை (மார்ச் 25) காலமானார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் இலங்கையின் புங்குடுத்தீவைச் சேர்ந்தவர் எனவும் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, 2020 மார்ச் 26

21:44 – COVID-19 தொற்றுக்குள்ளான நால்வர் இன்று இனங்காக்கணப்பட்டுள்ளனர், தற்போது தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

18:30 – இலங்கை அரசாங்கம், மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ வாரமாக அறிவித்துள்ளது. இந்த காலம் அரசாங்க விடுமுறையாக கருதப்படாது. அத்தியாவசியமாக அறிவிக்கப்பட்ட  சேவைகளைத் தவிர்த்து இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பொருந்தும்.

புதன்கிழமை, 2020 மார்ச் 25

17:00 – புதிதாய் COVID-19 தொற்றூடையவர்கள் எவரும் இதுவரை (நேரம் 16.30) பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

12:12 – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிவரங்களின் படி இலங்கையில் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆக (சீனப் பெண்மணி உட்பட உயர்ந்துள்ளது. தற்போது இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த  எண்ணிக்கை 99 ஆகவும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 255 ஆகவும் உள்ளன.

09:40 – தற்போது  COVID-19 தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 100 என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 229 ஆகும். மற்றும் இருவர் குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 2020 மார்ச் 24

19:28 சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 102 என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

16:42 இன்று COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் புதிதாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ கண்காணிப்பிலிருக்கும் சந்தேகத்திற்கிடமானோரின் எண்ணிக்கை 229 உள்ளன. மேலும் இருவர் இவ் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டனர்.

15:28 – இலங்கையில் Covid-19  பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான 229 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளன. இரண்டு பேர் குணமான நிலையில் வெளியேற்றப்பட்டனர்.

14:21 – COVID-19 தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள உயர் அபாயமுடைய பிரதேசங்களாக கொழும்பு, கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அரசினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

10:28 – 
300 க்கும் மேற்பட்ட நபர்கள் -கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்த 108 பேரும், புனானி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்த 203 பேரும் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

திங்கட்கிழமை, 2020 மார்ச் 23

22:55 – இலங்கையில்  COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை இப்போது 95 ஆக உயர்ந்துள்ளதாக  சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

15:51 – 52 வயதான சுற்றுலா வழிகாட்டியான COVID-19 பாதிப்பிற்குள்ளான முதல் இலங்கையர் சுகமடைந்ததாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

18:04 COVID19 பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளார் டாக்டர் அனில் ஜசிங்க கூறுகிறார். சுகாதார மேம்பாட்டு பணியக தரவுகளின்படி, கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 222 முதல் 227 ஆக உயர்ந்துள்ளதாக குறிக்கிறது.

12:22 கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (24) காலை 6 மணிக்கு நீக்கப்படும், மீண்டும் நண்பகல் 12 மணி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரை மீண்டும் விதிக்கப்படும்.

மற்ற மாவட்டங்களில், இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு வியாழக்கிழமை (26) காலை 6 மணி வரை தொடரும். அதே நாளில் நண்பகலில் மீண்டும் விதிக்கப்படும்.

06:04 – COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக ஐவர் இனம்காணப்பட்டனர். மொத்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மார்ச் 22

17:20 – சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜசிங்க  அவர்கள் COVID-19 தொற்றுக்குள்ளான  நால்வர் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

16:35 – வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அப்பிரதேசங்களில் அமுல்படுத்தப்படும்.

COVID-19 தொற்றுக்குள்ளான பரிசோதித்த சுவிஸ் நாட்டு மதபோதகருடன் தொடர்பு கொண்ட நபர்களைக் கண்டறிவதற்காவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15:54 COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர், தற்போது சிகிச்சை பெற்றுவரும் COVID-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

06:54 – COVID19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முல்லேரியாவாவில் உள்ள ஹோமகாமா ஆதார வைத்தியசாலை சந்தேகத்திற்கிடமான நோயாளர்களையும், தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கட்டிட வளாகம் மற்றும் தொற்றினால் தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு கே.டி.யு மருத்துவமனை ஐ.சி.யூ பிரிவு என்பன பயன்படுத்தப்படும்.

சனிக்கிழமை, மாரச் 21 2020

19:03 COVID-19 இன் தொற்றுடைய மற்றொருவர் கண்டறியப்பட்டுள்ளார். தற்போது தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

18:06 ஏப்ரல் 25 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தல்களை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மே 14 க்குப் பிறகு தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும்.

18:03 கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான  வார இறுதி ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அன்று காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அப் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.  திங்கட்கிழமை (மார்ச் 23) காலை 6 மணிக்கு ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்

16:20: அனுராதபுர மருத்துவமனையில் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு புதிய நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

15:20 இன்று, COVID-19 தொற்றுக்கு ஆளான புதிய நோயாளிகள்எவரும் இதுவரை இனங்காணப்படவில்லை. தற்போது COVID-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 71 ஆகவும், மேலும் 245 பேர்வரை மருத்துவமனைகளில் கண்காணிப்பிலும்
உள்ளனர்.

12:12 ஹோமாகம பொது மருத்துவமனையை COVID-19 சிகிச்சை மையமாக சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.  தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அடுத்துவரும் இரு நாட்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வீட்டிற்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, மார்ச் 20 2020

17:14 இலங்கையில் தற்போது 70 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

13:03 – தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 23ஆம் திகதி அன்று மாலை 18:00 முதல் காலை 06:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை அனைத்து குடிமக்களையும் வீட்டிலேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

13:03 – தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 23ஆம் திகதி அன்று மாலை 18:00 முதல் காலை 06:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை அனைத்து குடிமக்களையும் வீட்டிலேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


11:46
இலங்கையில் COVID-19 நோய்த்தொற்றுக்கு ள்ளானவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

09:09 இலங்கை முழுவதும் இன்று (மார்ச் 20) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (மார்ச் 23) காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி காரியாலயம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை, மார்ச் 19 2020

21:58 வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 10 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை தற்காலிக போலீஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

16:18 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜசிங்க, COVID-19 தொற்றுக்குள்ளான மூன்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேலும் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

15:50 சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க அவர்கள், COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு இலங்கையர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனால் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது எனவும் அறிவித்துள்ளார்.

15:45 இன்று (மார்ச் 19) மற்றும் நாளை (மார்ச் 20) இந்தியாவிலிருந்து, சிறப்பு விமானத்தில் திரும்பும் இலங்கை யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

14:15 நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாத்த முடியாது, எனவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் ஒத்திவைக்கப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

12:43 சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட இரு இலங்கையர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது, இதனால் COVID-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

09:12 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 8,017 பேர்வரை இவ் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதுடன் வாஷிங்டன், டி.சி மற்றும் மூன்று அமெரிக்க ஒன்றியப் பகுதிகளும் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 140 பேர்வரை இவ் வைரஸ் தொற்றினால் இறந்துள்ளனர்.

07:56 கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பின்னர் முதல்முறையாக, நேற்று முன்தினம்  சீனாவில் புதிதாக இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான உள்ளூர்வாசிகள் எவரும் இனங்காணப்படவில்லை. COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 34  பேர் புதிதாக இனங்காணப்பட்டாலும், இவர்கள் அனைவரும் வேறு இடங்களிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என உறுதி  செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

07:05 இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகயீன விடுமுறை, வேலையின்மைக்கான சலுகைகள், இலவச COVID-19 பரிசோதனை, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நிவாரண சலுகை அதிபர் டொனால்ட் டிரம்ப் இனால் அங்கீகரிக்கப்பட்டது. இச் சலுகைகளுக்கான அங்கீகாரம் கடந்த வாரம் செனட் சபை  அளித்த அதிகளவிலான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

புதன்கிழமை, மார்ச் 18 2020

16:28 கடுமையான நிபந்தனைகளின் கீழ் தனியார் மருத்துவமனைகள் COVID-19 தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார். மேலும் இவ் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மாத்திரமே பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சோதனைகளை மேற்கொள்ள ரூ. 6,000 க்கு அதிகமாக அறவிடக்கூடாது என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தான் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

16:19 COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் எட்டு பேர் இன்று இனங்காணப்பட்டதாக அரசு தகவல்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  மொத்த எண்ணிக்கையை 50 ஆக உயர்ந்துள்ளது.

16:02 இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கை யாத்ரீகர்கள், மீண்டும் இலங்கை வந்தவுடன் தனிமைப்படுத்தப்படுவார்கள் என ராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.

01:41 புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 11 பொலிஸ் பிரதேசங்களுக்கும், சிலாபம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 7 பொலிஸ் பிரதேசங்களுக்கும், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்கும், பாதுகாப்புத்துறை இன்று மாலை 4.30 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

11:00 பூசா கடற்படை முகாமில் 136 பேரை தங்கவைக்கக் கூடிய புதிய தனிமைப்படுத்தல்  மையத்தை இலங்கை கடற்படை நிறுவியுள்ளது.

07:00 தொற்றுநோய் பரவல்களின் போது ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி, மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் பிரவேசித்த அனைவரையும் மீண்டும் மெக்ஸிகோவிற்கே  திருப்பி அனுப்பும் திட்டத்தை  அமரிக்க அதிபர்  டிரம்பின் நிர்வாகம் பரிசீலனை செய்துவருகின்றது. சட்டவிரோத குடியேற்றங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றான இது, மிகவும் கடுமையானது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:40 COVID-19 தொற்றுப் பரவல் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அந் நாடுகளுக்கு,வெளிநாடுகளில் இருந்து பயணிகள் 30 நாட்களுக்கு பயணம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை, 2020 மார்ச் 17

21:47 தற்போது நாட்டில் நிலவும் அவசர நிலமையைக் கருத்திற் கொண்டு நிவாரண நடவடிக்கையாக வாடிக்கையாளர்களிடம் ஆறு மாதங்களுக்கு கடன்களை திருப்பிப் பெற வேண்டாம் என வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

19:37 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் வழங்கும் துறை அறிவித்துள்ளது.

17:05 மார்ச் 1 முதல் 10 திகதிக்கு இடையில் நீங்கள் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா என்று அழைத்து பதிவு செய்துகொள்ள ஐந்து தொலைபேசி எண்களை புதிதாக போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

011 2 44 44 80
011 2 44 44 81
011 5 97 87 20
011 5 97 87 30
011 5 97 87 34
119அல்லது மின்னஞ்சல்: lahd@police.lk

16:57 – கண்டறியப்பட்டுள்ள COVID -19 நோயாளர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

15:27 – தற்போதைக்கு நாடு தழுவிய முடக்கத்தை தொடங்க வேண்டிய அவசியம்  ஏற்படவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். “இது பெரிய அளவில் பரவவில்லை. நாங்கள் அதைக் கட்டுப்படுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

12:23 – இன்று (மார்ச் 17) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு கத்தார், பஹ்ரைன் மற்றும் கனேடிய பிரஜைகளை இலங்கையில் தரையிறக்க அனுமதிக்க மாட்டோம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு டிரான்சிட் பிரயாணிகளுக்கு பொருந்தாது என்றாலும் அவர்கள் 1. மேற்சொன்ன நாட்டினர் அல்லாதவராக 2. மேற்கூறிய மூன்று நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் விஜயம் செய்யாதவராக மற்றும் 3. முன்னர் அதிக ஆபத்து உள்ள நாடுகளுக்கு (இத்தாலி, ஈரான், தென் கொரியா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், பெல்ஜியம், நோர்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, டென்மார்க்) விஜயம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும்.

11:32 – தியதலாவாவில் உள்ள அனைத்து இராணுவ விடுமுறை இல்லங்களையும் தற்காலிகமாக, வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்ற இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. வன்னி, வவுனியாவில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் மேலும் ஐந்து கட்டிடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையமாகப் பயன்படுத்தப்படும்.

08:12 – மார்ச் 1-15 திகதிகளுக்கு இடையில் தென் கொரியா, ஈரான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த அனைத்து பயணிகளும் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்வதன் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும் என காவல்துறை தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

08:00 – தனிமைப்படுத்தலைத் தவிர்த்துவிட்ட இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதந்த 170 இலங்கையர்கள் உடனடியாக போலீசில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் இதற்கு இணங்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது;

07:40 – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

07:20 – உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7138 அதிகரித்து 181,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒவ்வொருவருவரையும் COVID-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.

00:31 – தொற்றுநோய் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று, சோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை பரிசோதித்துவருவதாக அசோசியேட் பிரஸ் எனும் செய்தியமைப்பு தெரிவிக்கிறது.

திங்கட்கிழமை, 2020 மார்ச் 16

23:57 – மூன்று நாள் (17, 18, 19) விசேட பொது விடுமுறை  ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இவ் விடுமுறையானது சுகாதாரம், உணவு வழங்கல், போக்குவரத்து, வங்கிகள், மாவட்டம், பிரதேச செயலகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து சேவைகளுக்கும் செல்லுபடியாகும்.

22:56 – விமான மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன், COVID-19 தொறுக்குள்ளானவர் என்றறியப்பட்ட முதல் அதிகாரியுடன் விமானங்களை இயக்கிய அனைவரிடமும்  சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 14 மற்றும் 15 அன்று அவர் பார்வையிட்ட உருவகப்படுத்துதல் பயிற்சி மையமும் சுத்திகரிப்புக்காக மூடப்பட்டுள்ளதுடன், அதன் பயிற்றுனர்கள் சுய தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

21:25 – மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் மார்ச் 18-31 வரை நாட்டில் அனைத்து பொது நடவடிக்கைகளையும் தடுத்துநிறுத்த உத்தரவிட்டுள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை மலேசியாவிலேயே (553) அதிகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

21:11 – இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் வழங்கும் துறை அறிவித்துள்ளது.

16:47 – அரச தகவல் வழங்கும் துறை, இலங்கையில் COVID-19   தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 22-வது நோயாளியை  அறிவித்துள்ளது. 73 வயது ஆணான இந் நபர் கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

14:42 – இலங்கையில் மேலும் மூன்று COVID-19 தொற்றுள்ள நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களுடன் மொத்த நோயாளர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இனங்காணப்பட்ட புதிய நோயாளிகளில் 13 வயது சிறுமியும் 34 மற்றும் 50 வயதுடைய இரு ஆண்களும் அடங்குவர்.

12:31 – மேலதிக அறிவிப்பு வரும் வரை நாட்டின் 11 அருங்காட்சியகங்களையும் தற்காலிகமாக மூட புத்தசாசனா, கலாசார மற்றும் மத விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

10:10 – நியூசிலாந்து, 500 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாரிய ஒன்று கூடல்களை அண்மையில் அதனை செய்த நாடுகளில் ஒன்றாக  மாறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான அறிக்கையில் இத்தாலியில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 368ஆல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,809 ஆகவும், சனிக்கிழமை 21,157 ஆக இருந்த நோயாளர் எண்ணிக்கை 24,747 ஆகவும் அதிகரித்துள்ளது என்று நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மார்ச் 15

20:48 – புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஏழு நோயாளிகள் இலங்கையில் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஆண்களாகும், மேலும் தற்போது இவர்கள் அனைவரும் கண்டகாடு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது இலங்கையில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

18:27 – இலங்கையில் பதினொன்றாவதாக புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளி இனங்காணப்பட்டுளார். ஜெர்மனியில் இருந்து திரும்பிய 45 வயதான இவர் தற்போது தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

18:04 – அரசாங்க தகவல் திணைக்களம் 117 என்ற அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது – இவ் எண்ணிற்கு அழைப்பதன் மூலம் நீங்கள் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றை எதிர்த்து செயற்பட்டு வரும் ஜனாதிபதிப் செயலணிக் குழுவை தொடர்பு கொள்ளலாம், மேலும் அவ் எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் இத் தீவிர தொற்று பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம்.

16:50 – இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கான அனைத்து விமானங்களும் திங்கள் 16ம் திகதி இரவு முதல் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும்.

15:55 – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வார காலத்திற்கு மூடப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

14:30 – பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், ரஷ்யா, சுவீடன் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் வந்தவுடன் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

13:15 வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகை மற்றும் ஏனைய ஐவேளைத் தொழுகைகளை பள்ளிவாயில்களில் கூட்டாக தொழுவதையும் மற்றும் ஏனைய பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதையும் மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஐமிய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.

13:06 பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை என்பதால் பொதுத் தேர்தலுக்கான வைப்புத்தொகைகள் மற்றும் வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

12:22 புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு புனித யாத்திரைகள் மற்றும் பயணங்களைத் தவிர்க்குமாறு புத்தசாசனா அமைச்சகம் பொது மக்களைக் வேண்டிக் கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவர், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் அமெரிக்க அதிபர் தனது புளோரிடா உல்லாசவிடுதியில், பிரேசிலிய அதிகாரி ஒருவரை சந்தித்திருந்தார், பின்னர் அவ் அதிகாரி இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்க அதிபரின் உடல்நிலை குறித்து கவலை நிலவிவந்தது.

அனைத்து குடிமக்களையும் தங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது – மேலும் உணவுத் தேவை, பணிக்குச் செல்ல, மருத்துவ உதவி நாட அல்லது வயதானவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கு உதவி புரிய மட்டுமே வெளியேற முடியும்.  ஸ்பெயினில் சுகாதார அதிகாரிகளால் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான 1,500 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இதுவே ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட அதிகூடிய நோயாளர் எண்ணிக்கையாகும். இதனால் அந்நாட்டில் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,753 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கொரோனா வைரஸின் COVID-19) தீவிர தொற்றினைத் தொடர்ந்து உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் திரைப்பட அரங்குகள் ஆகிய  கேளிக்கை வணிகங்களை இன்று நள்ளிரவுடன் மூடுவதாக பிரான்ஸ் அறிவித்தது.

சனிக்கிழமை, 2020 மார்ச் 14

இலங்கையில், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் ஒன்பதாவது மற்றும் பத்தாவதாக பாதிக்கப்பட்ட இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்; இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 56 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் முன்னர் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் பாதிக்கப்பட்ட நோயளரொருவரின் 17 வயதுடைய பெண் உறவினர் ஆகிய இருவரே தற்போது இனங்காணப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மறைமாவட்டம் மற்றும் சிலாப  மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் எட்டாவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்;  42 வயதான ஆணொருவரே கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து இனங்காணப்பட்டு பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மார்ச் மாதம் 17ம் திகதி முதல், அரச தூதரக கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தவிர்த்து ஏனையோருக்கு விசா வழங்குவதை ஐக்கிய அரபு இராச்சியம் இடை நிறுத்தவுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதிகம வனச்சுற்று பூங்கா என்பன நாளை 15ம் திகதி முதல் இரு வாரங்களுக்கு மூடப்படும்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 5,421 ஆக உயர்ந்துள்ளது.  உலகளவில் குறைந்தபட்சம் 145,627 பேர்வரை இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அமெரிக்க காங்கிரசும் வெள்ளை மாளிகையும் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பாரிய நிவாரண ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார், தீவிரமாக பரவிவரும் வரும் இத் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, அனத்து மாநிலங்களுக்கும் மற்றும் பிரதேசங்களுக்கும் 50 பில்லியன் அமெரிக்க டாலர் கூட்டாட்சி நிதியை ஒதுக்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அடுத்துவரும் இரு வாரங்களுக்கு பாரியளவிலான பொதுக்கூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 மார்ச் 13

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு பயணத் தடை விதிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தீவிரத் தொற்றுநோயின் மையமான ஹூபே மாகாணத்திற்கு வெளியே அமைந்துள்ள முக்கிய சீன நிறுவனங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை மீண்டும் இயங்கத்  தொடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்துக்கு வருகை தந்திருந்த பிலிப்பைன்ஸ் தூதுக்குழுவைச் சேந்த பெண் தூதகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது, பரிசோதனகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. இவரே நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இனங்காணப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஆவார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ட்ரூடோ, புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.  கனடாவின் முதல் பெண்மணி அண்மையில் பிரிட்டனிலிருந்து திரும்பி வந்ததாகவும், அப்போது லேசான காய்ச்சல் மற்றும் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட  அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி செயலகம் முன்பு அறிவித்திருந்தது. தற்போது ஜனாதிபதி  ட்ரூடோ தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தீவிரத் தொற்றினால் அயர்லாந்து, போர்த்துக்கல், பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தெற்கு மாநிலமான கர்நாடகாவில் 76 வயதானவர் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணமடைந்துள்ளார். இது புதிய கொரோன வைரஸ் (COVID-19) தொற்றினால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் மரணம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று 13ம் திகதி நண்பகல் முதல், பொது கடவுசீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கான இலத்திரனியல் பயண அங்கீகாரம் (E-Visa) மேலதிக அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இத் தடையினால் சிங்கப்பூர், மாலத்தீவு மற்றும் சீஷெல்ஸ் குடிமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மார்ச் 15 முதல் 29 வரை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என சிவில் விமான ஆணையம் அறிவித்துள்ளது.  ஐரோப்பியர்களுக்கு விசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  இதற்கிடையில், ஐரோப்பாவிலிருந்து வரும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் மூவர்  புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 37 மற்றும் 43 வயதுடைய இருவர், இத்தாலியிலிருந்து வருகை தந்து கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  41 வயதான மூன்றாவது நபர் ஜெர்மனியில் இருந்து வருகை தந்தவராவார்.

வியாழக்கிழமை, 2020 மார்ச் 12

முக்கிய செய்தி: புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றானது உலக சுகாதார அமைப்பால் தொற்றுநோய் ஒன்றாக உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 4,633 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் குறைந்த பட்சம் 126, 367 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

சவுதி அரேபியர்களுக்கு மற்றும் அங்கு குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பல நாடுகளுக்கிடையிலான விமானசேவைகளையும் இடை நிறுத்தியுள்ளது. இத் பயணத்தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கே விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் ஏற்பட்ட முதல் இறப்பை கிரீஸ் பதிவுசெய்துள்ளது. இவ்வாறு இறந்த 67 வயதுடைய நபர் அண்மையில் இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில்  ஒரு மாதகால புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பியிருந்தார்.

டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

ஐக்கிய இராச்சியம் தவிர்த்து, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கான ஏனைய அனைத்து பயணங்களையும் அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது. மேலும் இத் தடை ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளான முதல் இலங்கையருடன் தங்கும் அறையைப் பகிர்ந்துகொண்ட மற்றுமொரு இலங்கையரும் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாவது நோயாளி 44 வயதுடையவர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பள்ளிகளும் மார்ச் 26 வரை மூடப்படும் என்று கத்தோலிக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் மார்ச் 13ம் திகதி முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சர் டல்லாஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசு தகவல்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஆகியவை இணைந்து பொதுமக்கள் இலகுவாக சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அழைக்க வேண்டிய அவசரத் தொடர்பு எண்களைஅறிவித்துள்ளது. அத் தொடர்பு எண்கள் பின்வருமாறு: 0710107107 அல்லது 0113071073

புதன்கிழமை, 2020 மார்ச் 11

தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு உள்ளாகி இருப்பது முதற்கட்ட சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரே இவ் வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஆவார்.

இதனிடையே,  புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 4,299 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் குறைந்தபட்சம் 119,220 பேர்வரை இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் 250க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொள்ளும் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பனாமாவில் இதுவரை எட்டு பேர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என அந்நாட்டு  சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதும், இதுவே மத்திய அமெரிக்காவில் இவ் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அரசில் கடமை புரியும் பிரதி சுகாதார அமைச்சரான நடைன் டோரிஸ் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளாகி தனிமை படுத்தப்பட்டுள்ளார். 62 வயதான அவர் தற்போது குணமடைந்து வருகிறார், ஆனால் தனது 84 வயதான தாயின் உடல்நலம் குறித்து கவலைப்படுவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 2020 மார்ச் 10

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,831 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால்  குறைந்த பட்சம் 110,092 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 4,027 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் குறைந்த பட்சம் 114,422 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

160-க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலிருந்து திரும்பிய இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் புனானி மற்றும் கண்டகாடு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் .

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கான சிகிச்சைமுறை மேம்பாட்டை விரைவுபடுத்த உதவும் வகையில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை நண்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளது. இதனால் இவ் வைரஸ் தொற்றுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகள்  இலகுவாக மலிவு விலையில் என்பதை உறுதி செய்வதற்காக இந்த பணம் கருதப்படுகிறது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் வுஹானுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை இனங்கண்ட ஆறு நாட்களுக்குள் மங்கோலியா அரசு நாட்டுக்குள்  எவரும் உள்நுழைய அல்லது நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, சமீபத்தில் அவர் கலந்து கொண்ட மாநாடொன்றில் கலந்து கொண்ட இரு சட்டமியற்றுபவர்கள் தம்மை சுயமாக தனிமைப்படுத்தப்படுத்திய பின்னர், அதிலொரு பிரதிநிதிக்கு புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பனாமாவில் 40 வயதான பெண்னொருவர் அந் நாட்டின் புதிய கொரோனா வைரஸ் (COVID-19)  தொற்றுக்கு ஆளான முதல் நோயாளி என இனங்காணப்பட்டார்.


திங்கட்கிழமை, 2020 மார்ச் 09

இந்தியாவுக்கான தம்பதிவ யாத்திரை சுற்றுப்பயணங்கள் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று புத்த சசனா அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,831 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால்  குறைந்த பட்சம் 110,092 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே கைச்சாத்திட்ட அரச உத்தரவிற்கு அமைய  மில்லியன் கணக்கான மக்களை கொண்ட வடக்கு இத்தாலி பிரதேசம் முழுவதும் தற்போது மூடப்பட்டு அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இம் முன்னறிவிப்பில்லாத திடீர் அவசர நடவடிக்கையினால்  லோம்பார்டி பிராந்தியம் முழுவதும் உட்பட, மேலும் 14 மாகாணங்கள் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசதமானது புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று குறித்து நிலவும் அச்சத்தின் காரணமாக அனைத்து வெளிநாட்டினருக்கும் உள்நுழைவு மறுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும் – அதாவது இந்திய குடியுரிமை அற்ற எந்தவொரு நபரும் அங்கு வருகை தர, அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் மாநிலத்திற்குள் நுழைய அதற்கான ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக கத்தார், மார்ச் 9 முதல் இலங்கை உட்பட 14 நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மார்ச் 08

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,600 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால்  குறைந்த பட்சம் 106,193 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் 442 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.

தென்கிழக்கு சீனாவில்  கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மையமாக பயன்படுத்த ஹோட்டல் இடிந்து விழுந்ததில் சுமார் 70 பேர் அதன் இடிபாடுகளில் சிக்கியதை அடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

சனிக்கிழமை, 2020 மார்ச் 07

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,497 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால்  குறைந்த பட்சம் 102,237 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றை கட்டுப்படுத்த தேவையான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ஏற்பட்டிருக்கும் திடீர் பொருளாதார நெருக்கடியை சமாளித்து அதனை சீரமைக்கவும் உறுதியளித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 மார்ச் 06

புதிய கொரோனா வைரஸ் (COVID-19)  தொற்று அச்சத்தின் மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பயிற்சி போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை, மலை ஏறும் போட்டி நிகழ்வொன்றை ரசிகர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள கூடாது போன்ற  சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற அனுமதித்தனர்.

வத்திக்கான் நகரில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19)  தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியொருவர் இனங்காணப்பட்டுளார், இந் நோயாளி நேர்மறையாய் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவரை பரிசோதித்த சுகாதார சிகிச்சையகம் வெளிநோயாளர் சேவைகளை இடை நிறுத்தியதாக அறிவித்துள்ளது.

58 வயதான பிரெஞ்சு நாட்டவரொருவர் புதிய கொரோனா வைரஸ் (COVID-19)  தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை கேமரூன் பதிவு செய்துள்ளது.

செர்பியாவின், சுகாதார அமைச்சர் ஸ்லாடிபோர் லோன்கார் வெள்ளிக்கிழமை அன்று, 43 வயதான நபரொருவர் செர்பியாவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால்  பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 2020 மார்ச் 05

பாலஸ்தீனிய நகரில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு நோயாளர்கள் இனங்காணப்பட்டத்தை அடுத்து, இஸ்ரேல் அரசும் பாலஸ்தீனிய ஆணையமும் பெத்லகேம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை  மூடி அவற்றின் மீது போக்குவரத்து தடை உத்தரவை பிறப்பித்துள்ளன.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவர்கள், தற்சமயம் அதிகாரிகளின் கூற்றுக்கமைய எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) சோதனைகளுக்கு ஏற்படவுள்ள கேள்வியினை பூர்த்தி செய்ய போதுமான அளவு கொரோனா வைரஸ் (COVID-19) சோதனைகள் அமெரிக்காவிடம் இல்லை என அறிவித்துள்ளார்.

புதன்கிழமை, 2020 மார்ச் 04

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,203 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இதுவரை 93,160 பேர் இந் நோய்த்தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தீவிர தொற்றினால் தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே-இன் மார்ச் இல் ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்திட்டத்தை கைவிட்டுள்ளார். தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றே சீன பெருநிலப்பரப்புக்கு வெளியே ஏற்பட்டுள்ள பாரிய தொற்று நிலையாகும்.

வைரஸ் தொற்றுக்கான அபாய நிலை காணப்பட்ட போதிலும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானின் ஒப்பந்தத்தின் கீழ் போட்டிகளை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 2020 மார்ச் 03

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 3,125 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இதுவரை 90,932 பேர் இந் நோய்த்தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிப்படைந்த முதல் இலங்கையர், இத்தாலியில் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாறு நோய்த்தொற்றுக்கு உள்ளானவர் ஹொரானா பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணொருவராவார், இத்தாலியின் ப்ரெசியாவில் உள்ள மருத்துவமனையில் இவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் இலங்கைப் பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் குறிப்பாக லோம்பார்டி பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தொடர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 104,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதமானோர் பேர் பிராந்தியத்தில் வசிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய ஷின்சியோன்ஜி-யேசுவிற்கான தேவாலயத்தின் நிறுவனர் லீ மேன்-ஹீ, நடமாடும் ஆய்வுக்கூடத்தில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது  அவ் வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையாக முடிவுகளைப் பெற்றார்.  இத் தேவாலயம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றுக்கான முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது, மேலும் இவ் வைரஸ் தொற்று குறித்து அத் தேவயாலத்தின் கருத்துக்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதன்பின்பு லீ மேன்-ஹீ மன்னிப்புக்கோரி, இவ் வைரஸ் தொற்றுநோயை “பாரிய பேரழிவு” என்று குறிப்பிட்டார், ஆயினும் உள்ளூர் ஆளுநர் ஒருவர் அவரை அச்சுறுத்தும் வரை பொது அதிகாரிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட  அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அதனது உயிரியல்-பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தும் என அவுஸ்திரேலியவின் சட்டமா அதிபர் கிறிஸ்டியன் போர்ட்டர் தெரிவித்துள்ளார். இச் சட்டத்தை பயன்படுத்தி அரசு சில பிரதேசங்களை தடைசெய்யப்பட்ட மற்றும் வரையறைக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்க அல்லது நோயாளியொருவரை  வீட்டுக் காவலில் தனிமைப்படுத்தி  தடுத்து வைக்க முடியும்.

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயுஷாஸ், தற்போது நமது உலகம் இவ் வைரஸ் தொற்றினால் தெளிவற்றதொரு நிலையிலேயே உள்ளது, ஏனெனில் இவ் வைரஸ் தொற்றானது குறிப்பிட்டதொரு  சமூகத்தின் ஊடாக பரவும் அதேவேளை, அதனை கட்டுப்படுத்தவும் முடியும்.

திங்கட்கிழமை, 2020 மார்ச் 02

புதிய இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை (The New England Journal of Medicine) புதிய கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த அதனது அறிக்கையை அண்மையில்  வெளியிட்டது, அதில் 30 மாகாணங்களில் உள்ள 552 மருத்துவமனைகளில் இருந்து 1, 099 நோயாளிகள் தொடர்பான தரவுகளை சீனாவில் உள்ள தன்னாட்சி பகுதிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து பிரித்தெடுத்தது. நோயாளிகளின் சராசரி வயது 47 ஆண்டுகள் என்றும் நோயாளிகளில் 41.9% பெண்கள் என்றும் ஆய்வின் முக்கிய புள்ளிகள் தெரிவிக்கின்றன; 5% சதவிகிதமான மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் மற்றும் 1.4% சதவிகிதமானோர் மரணித்துள்ளனர் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் அதிக கூடிய மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடான இந்தோனேசியாவில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்; ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரு இந்தோனேசியர்கள் இவ் வைரஸ் நோய்த்தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 மார்ச் 01

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை தற்போது உலகளவில் 3,053 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 89,075 ஆகா அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இருந்து வருகை தந்த இரு இலங்கையர்கள், தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பொது நோய்த்தொற்றுக்கு எதிர்மறையான முடிவுகளைப் பெற்றனர்.

தென் கொரியாவின் சியோலைச் சேர்ந்த அதிகாரிகள், புதிய கொரோன வைரஸ் தொற்றுதலின் மையமாக கருதப்படும் தேவாலயத்திற்கு எதிராக கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கறிஞர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷின்சியோன்ஜி-கிறிஸ்தவ தேவாலயத்தின் தலைவர்களே இவ் வைரஸ் தீவிரத் தொற்றுக்கு பொறுப்பானவர்கள் எனவும், தென் கொரியாவில் அத் தேவயாலத்தின் தலைவர்களுகே முதன் முதலில் இவ் வைரஸ் தொற்று ஏற்பட்டது எனவும், அவர்கள் அந் நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நியூயார்க்கின் ஆளுநரான ஆண்ட்ரூ கியூமோ, ஈரானில் இருந்து சமீபத்தில் திரும்பிய ஒருவருக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது நேர்மறையான முடிவுக்ஸ்ல் கிடைக்கப்பட்டன என அறிவித்துள்ளார். இவ் அமெரிக்க மாநிலத்தில் இவ் இஜர்ஸ் தொற்றுக்கு ஆளான முதல் நோயாளி ஆவார்.

இவ்வைரஸ் தீவிரத் தொற்று “உச்சகட்டத்தை” அடைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


சனிக்கிழமை, 2020 பெப்ரவரி 29

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,978 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் குறைந்தபட்சம் 86,991 பேர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

லக்சம்பர்க் இல் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளார், சமீபத்தில் இத்தாலியில் இருந்து திரும்பிய நபரொருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார். 40 வயதான இந் நபர் இவ் வாரத்தின் ஆரம்பத்திலேயே இவ் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிக்காட்டியுள்ளார் மற்றும் லக்சம்பர்க் இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் வாஷிங்டன் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார், இவரே அமெரிக்காவில் இவ் தொற்றினால் முதன்முதலில் மரணமடைந்தவராவார். இவ்வாறு மரணடைந்தவர் 50 வயதுடைய பெண்ணொருவர்  என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இத்தாலியில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

கத்தார் சுகாதார அமைச்சகம் அந்த நாட்டில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை இனங்கண்டுள்ளது. இவ்வாறு இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர் நோயாளி 36 வயதான கத்தார் பிரஜையாவர், அவர் சமீபத்தில் ஈரானில் இருந்து புறப்பட்ட அரசாங்க பட்டய விமானத்தில் பயணம் செய்துள்ளார் மேலும் அங்கிருந்து புறப்பட்ட ஏனையவர்களுடன் தனிமை படுத்தப்பட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை, 2020 பெப்ரவரி 28

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,859 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் குறைந்தபட்சம் 83, 387 பேர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைத் தொடர்ந்து பின்னர் இத்தாலியில் இருந்து வருகை தந்த இரு இலங்கையர்கள் தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, பெலரூஸ், ​​நியூசிலாந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளான முதல் நோயாளர்கள் இனங்காணாப்பட்டுள்ளனர்.

வைரஸ் ஒன்றினை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்ப விளையாடுபவர்களை அனுமதிக்கும் பிரபலமான வீடியோ கேம் சீனாவில் உள்ள ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இணையவெளி கண்காணிப்புக் குழு “சட்டவிரோத” உள்ளடக்கத்தை நீக்க உத்தரவிட்டதை அடுத்து, சீனாவை தளமாகக் கொண்ட பயனர்கள் வெள்ளிக்கிழமை முதல் “பிளேக் இன்க்” பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என இங்கிலாந்தை தளமாகக் கொண்ட என்டெமிக் கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.

மங்கோலியா ஜனாதிபதி கல்ட்மகின் பட்டுல்கா மற்றும் அவருடன் சீனாவுக்குச் சென்ற ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தீவிர தொற்றுக்கு மத்தியில் சீனாவுக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டுத் தலைவர் பட்டுல்கா ஆவார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அனைத்து நாடுகளும் இவ் வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜெனீவாவில் வைத்து “இவ் வைரஸ் பெரும்பரப்புத் தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது” எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த 12 மணி நேரத்தில் சுமார் 12 நாடுகள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை பதிவு செய்துள்ளன.

வியாழக்கிழமை, 2020 பெப்ரவரி 27

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,807 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் குறைந்தபட்சம் 82,393 பேர் வரை இவ் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் யப்பான் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூடவுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் வசந்தகால விடுமுறைகள் தொடங்கும் வரை அனைத்து ஆரம்ப, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை மூடுமாறு பிரதமர் ஷின்சோ அபே கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானிய பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆணையத்தின் தலைவர் மொஜ்தாபா சோனூர், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

எசுத்தோனியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எசுத்தோனியாவில், ஈரானில் இருந்து திரும்பிய ஒருவர் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது  எஸ்தோனிய சுகாதார அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டென்மார்க்கில், ​​வடக்கு இத்தாலியில் பனிச்சறுக்கு விடுமுறையிலிருந்து திரும்பி ஒருவர் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந் நபர் அவரது இல்லத்தில்  தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான கியாஞ்சியாங்கில், அங்கு குடியிருப்பவர்கள்  இவ் வைரஸ் தொற்றின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிவித்து பரிசோதனையின் பின்னர் அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 1000 யுவான் (1,425.96 அமெரிக்க டாலர்) வரை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை, 2020 பெப்ரவரி 26

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,764 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் குறைந்தபட்சம் 80,997 பேர் வரை இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவ வீரரொருவருக்கு கொரோன வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவர் அவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. 23 வயதான இவ் இராணுவ வீரர், தென்பகுதியில் நிலைகொண்டுள்ள 28,500 அமெரிக்க இராணுவ வீரர்களில் இத் தொற்றுக்குள்ளான முதல் வீரர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தீவிரத் தொற்றினால் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளூர் அவசரநிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை அங்கு எவரும் இத்தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்க அதிகாரிகள் தங்கள் சமூகங்களுக்குள் தொற்றுநோய்கள் பரவுவதற்கு அமெரிக்கர்களை வலியுறுத்தினர்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க இன்னும் அவகாசம் உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் – ஆயினும் தயார் நிலையில் இருக்கவேண்டிய நேரம் இதுவென்றும் அவ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினர் அவரது நிர்வாகத்தை விமர்சித்தபோதும் இவ் வைரஸ் தொற்று குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் வெளிப்படையாக ‘அனைத்தும் நன்மையில் முடியும்’ என்ற தளராத நம்பிக்கையுடன் காணப்படுகிறார். 

“சி.டி.சி மற்றும் எனது நிர்வாகமும் கொரோனா வைரஸ் தொற்றினை கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயற்படுகின்றது, மேலும் உலகின் சில பகுதிகளுக்கு எங்கள் நாட்டின் எல்லைகளை மூடுவதும் இதில் அடங்குகின்றது. இது டெம்ஸால் அவசியமற்ற நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டபோதும் இதுவே சரியான முடிவு என விரைவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயற்பட்டாலும், நாங்கள் மோசமாகவே செயற்படுகிறோம் என்பது ஜனநாயகக் கட்சியினரின் கருத்தாகும். நாளையே இவ் வைரஸ் இல்லாதொழிந்து விட்டாலும், நாங்கள் மிகவும் மோசமான, திறமையற்ற செயற்பாடுகளையே மேற்கொண்டோம் என அவர்கள் கூறுவார்கள். இது நியாயமற்றது, எனினும் இதுவே நிலைப்பாடாகும். எவ்வாறாயினும் இதுவரை ஒரு மரணம் கூட ஏற்படவில்லை, இவ்வாறே மேலும் தொடருவோம்!” என அவர் ட்வீட்டரில் அறிவித்துள்ளார்.

இதுவரை ஈரானில் இவ் வைரஸ் இணை கட்டுப்படுத்த அவர்கள் போராடிவரும் நிலையில் இவ் வைரஸ் தொற்றினால் 15 பேர்வரை மரணமடைந்திருக்கிறார்கள் மேலும் அந்நாட்டின் துணை சுகாதார மந்திரி ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகிய இருவருக்கு புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 பெப்ரவரி 25

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,701 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,150 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் சுமார் 60% சீன நிறுவனங்கள் செயற்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவற்றில் குறைந்தது 6% நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் நிலையிலும் மேலும் 20% நிறுவனங்கள் தற்காலிக இடைநீக்கத்தையும் எதிர்நோக்கியுள்ளன. கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் வெறும் 5% நிறுவனங்களே எவ்விதமான தாக்கங்களையும் சந்திக்கவில்லை என குளோபல் டைம்ஸ் கணக்கெடுப்பு அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளன.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினை கட்டுப்படுத்தி அதனை முடிவுக்கு கொண்டுவர 1.25 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவியை வெள்ளை மாளிகை கோரியுள்ளது, அத்துடன் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அவசர நிதியில் கூடுதலாக 535 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.

திங்கட்கிழமை, 2020 பெப்ரவரி 24

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2,619-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் குறைந்தது 79,561-க்கும் மேற்பட்டவர்களுக்கு இவ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  600-ஐ கடந்துவிட்டது. தென் கொரியாவில்  கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சர்ச்சைக்குரிய மதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது. 

இத்தாலியில், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வார இறுதியில் மூன்று முதல் 132 ஆக உயர்ந்துள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது, இது இத்தாலியின் வடக்குப் பகுதியில் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு முக்கியதொரு காரணமாக தற்போது இனங்காணப்பட்டுள்ளது. இது ஆசியாவிற்கு வெளியே ஏற்பட்டுள்ள தீவிர கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றாகும்.

ஈரானின் சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் எட்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் இவ்  வைரஸ் தொற்றினால் 43 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிசெய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 பெப்ரவரி 23

உலகளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,462 எனவும், இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,771 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘பிரின்சஸ் டயமென்ட் (Princess Diamond)’ சுற்றுலாக் கப்பலில் இருந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த 23 பயணிகள் மறுபரிசீலனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் இனங்கண்டுள்ளது. இக் கப்பலின் பயணித்த  60 வயதுடைய பெண்ணொருவர், பெப்ரவரி 19 அன்று கப்பலிலிருந்து வெளியேறிய பின்னர் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு நேர்மறை சோதனை முடிவுகளை பெற்றதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில்  கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெற்கு நகரமான டேகுவில் உள்ள சர்ச்சைக்குரிய மதக் குழுவான ஷின்சியோன்ஜியின் ஒரு கிளையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 

தென் கொரியாவில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 433 நோயாளர்களின் குறைந்தது 231 நோயாளர்கள் இம் மதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே இரவில் இந் நோய்த்தொற்றுக்குள்ளான 142 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதை உறுதி செய்த பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் தென் கொரியாவில் பதிவான மொத்த இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை, 2020 பெப்ரவரி 22

உலகளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,251 ஆகவும், இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,277 ஆகவும் உள்ளது.

இத்தாலியின் வடக்கு நகரமான பதுவாவில் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளொருவர் மரணமடைந்துள்ளார். 78 வயதான இந் நபர் இவ் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த முதல் இத்தாலியர்  ஆவார்.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று ஏற்படும் என்ற அச்சத்தினால் ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வருகை தரும் அனைத்து விமானங்களையும் இடை நிறுத்த குவைத்தின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. ஈரானில் இருந்து வருகை தரும் குவைத் நாட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் அல்லது கடந்த இரண்டு வாரங்களில் ஈரானில் இருந்த, நுழைவு அனுமதி பெற்றவர்கள் இரானுக்குள் நுழைவதிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள் என்றும் அவ் ஆணையம் அறிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை, 2020 பெப்ரவரி 21

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் தற்போது உலகெங்கிலும் 2,247 பேர் மரணத்தை தழுவியுள்ளனர் மற்றும் 76,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இவ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டு சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை உக்ரைனில் உள்ள மருத்துவமனையொன்றில் தனிமைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் மத்திய உக்ரைனில் உள்ள மருத்துவமனையொன்றுக்கு வெளியே பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில், புதிதாக கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், மேலும் இச் சரிவு நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது, ஆனால் இச் சரிவு தொடர்ந்தும்  ஏற்படுமா என்பதை அறிந்து கொள்ள மேலும் கால அவகாசம் தேவையெனவும் அது அறிவித்துள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் (COVID-19)  தீவிர தொற்றினால், அண்டைய நாடான ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபிள் (15.7 மில்லியன் அமெரிக்க டாலர்) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 2020 பெப்ரவரி 20

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மத்தியகிழக்கில் ஏற்பட்ட முதல் மரணம் இன்று பதிவாகியுள்ளது. புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கான முதற்கட்ட பரிசோதனைகளின் போது எதிர்மறை முடிவுகளைப் பெற்ற இருவர் அத்தொற்றினால் இறந்துவிட்டதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களிருவரும் ஈரானில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கபப்ட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட முதல் இரு நோயாளர்கள் ஆவர்.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இப்போது 2,120-க்கும் மேற்பட்டவர்கள் மரணத்தை தழுவியுள்ளார்கள், அவர்களில் 6 பேர் தவிர்த்து ஏனைய இறப்புக்கள் சீன பெருநிலப்பரப்பில் பதிவாகியுள்ளது. மேலும் இவ் வைரஸ் தொற்றினால் 75,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஜப்பானில் ‘பிரின்சஸ் டயமென்ட் (Princess Diamond)’ சுற்றுலாக் கப்பலில் இருந்த பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தற்போது வெளியேறத் தொடங்கியுள்ளனர். இக் கப்பலிலிருந்த 624 பயணிகள் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர், மேலும் பல பயணிகள் இத் தொற்றுக்கான அறிகுறிகள் இனங்காணப்பட முன்னர் வெளியேற்றப்பட்டனர்.

இம் மாதத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட  ‘சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கருத்தின் காரணமாக சீன அரசு மூன்று வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நிருபர்களின் பத்திரிகை சான்றுகளை ரத்து செய்துள்ளது.

புதன்கிழமை, 2020 பெப்ரவரி 19

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 75,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது இத் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக இதுவரை 14,555 பேர்வரை இத் தொற்றுநோயிலிருந்து குணமடைந்து இயல்புநிலைக்கு  மீண்டுள்ளனர்.

தேசிய தொற்று நோய் மருத்துவமனையில், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 43 வயதான சீன நோயாளி இன்று காலை முழுமையாக குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டார். இந் நோயாளி ஜனவரி 27 ஆம் தேதி அடையாளம் காணப்பட்டு அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தீவிர தொற்றானது இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதிலும், அது “மிகவும் ஆபத்தான சூழ்நிலையினை தோற்றுவித்துள்ளது” என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஜெனரல் அன்டோனியோ குடரெஸ் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு, தனிப்பட்ட, கல்வி மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக ரஷ்யாவிற்குள் நுழையும் சீன குடிமக்களுக்கு ரஷ்யாவிற்குள் உட்பிரவேசிப்பதற்கான அனுமதிகள் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை, 2020 பெப்ரவரி 18

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் இதுவரை 73,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் தற்போது இத் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,873 எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுமார் 12,000 பேர் வரை இத் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கெப்ரேயஸ், சீனாவிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் “இத் தீவிர தொற்று பற்றிய தெளிவானதொரு புரிதலைப்” பெற்றுக்கொள்ள முடிந்தது எனவும், பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் குணமடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

“இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 80% சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு விரைவில் குணமடையக்கூடிய லேசான நோய்த் தாக்கங்களும், 14% சதவீதமானோருக்கு நியூமோனியா மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கடுமையான நோய்த் தாக்கங்களும், 5% சதவீதமானோருக்கு சுவாசக் கோளாறு, நச்சூட்டு அதிர்ச்சி (Septic Shock) மற்றும் பல்-உறுப்பு செயலிழப்பு உள்ளிட்ட தீவிர நோய்த் தாக்கங்களும் காணப்படுகின்றன, இதில் 2% சதவீதமானோரே அபாயகரமான கட்டத்தில் உள்ளனர். அதிகளவில், வயோதிபர்களே மரணத்தை தழுவும் ஆபத்திலுள்ளனர், ”என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஐ-போன் (iPhone) தொலைபேசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

திங்கட்கிழமை, 2020 பெப்ரவரி 17

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் 29 நாடுகளில் மற்றும் பிரதேசங்களில் 71,334 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இத் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,775 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ‘பிரின்சஸ் டயமென்ட் (Princess Diamond) என்ற பயணக் கப்பலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை, அமெரிக்க அரசு வெளியேற்றியுள்ளது, இக் கப்பல் பல வாரங்களாக ஜப்பானில் தடுத்துவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கனடா, இத்தாலி மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற விமானங்களை அனுப்பியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, 2020 பெப்ரவரி 16

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் உலகளவில் 71,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பெரும்பாலும் சீன பெருநிலப்பரப்பில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக உயர்ந்துள்ளது.

தனக்கு எதிராக சர்வதேச விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று பற்றி தனக்குத் தெரியும் என சீனத் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். உரை ஒன்றை நிகழ்த்திய போது அவர், இவ் வைரஸின் தீவிர தொற்று பற்றி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பே தான் அறிந்திருந்ததாக கூறியுள்ளார். ஜனவரி 7 ஆம் தேதி ஆற்றப்பட்ட அவ் உரையில் அவர் “நோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் மரணித்துள்ளார். ஐரோப்பாவில் பதிவான புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று தொடர்பான முதல் மரணம் இதுவாகும்.

சனிக்கிழமை, 2020 பெப்ரவரி 15

சீன பெருநிலப்பரப்பில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1,523 ஆகவும் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,899 ஆகவும் உயர்ந்துள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

1,700-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஆறு பேர் வரை  மரணித்துள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 பெப்ரவரி 14

சீன பெருநிலப்பரப்பில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் (COVID-19), மரணித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1,488 ஆகவும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,986 ஆகவும்  உயர்ந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

நேற்று வியாழக்கிழமை (13) சீன பெருநிலப்பரப்பில் 14,000 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர். இது  புதிதாக மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு முறைகளின் விளைவேயாகும் எனவும் இது வைரஸ் தொற்று வீதத்தில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, 2020 பெப்ரவரி 13

சீன பெருநிலப்பரப்பில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,113 ஆகவும்  மற்றும் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,653 ஆகவும் உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே ஹாங்காங்கிலும் பிலிப்பைன்ஸிலும் இரு இறப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஜப்பானில் ஏற்பட்ட  முதல் மரணத்தை பற்றி ஜப்பான் அறிவித்துள்ளது. அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர் டோக்கியோவின் எல்லையாக இருக்கும் கனகாவா மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 80 வயது பெண்னொருவராவார்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒன்பதாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உறுதிசெய்துள்ளது, இந் நோயாளியே இலண்டன் நகரில் இனங்காணப்பட்ட முதல் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளியாவார். மேலும் இந் நோயாளி சீனாவில் இருந்தபோது இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து,
கோவிட்-19 (Covid-19) தொற்று உச்சநிலையை அடைந்திருக்கிறதா அல்லது இத் தொற்று எப்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பனவற்றை தற்போதைய நிலையில் உறுதியாக சொல்ல முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார், இந் நோயை கொடூரமானதொரு நோய் என குறிப்பிட்ட அவர்  “அத்தகைய கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சீன சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்தனை செயப்படுகிறது,” என்று போப் ஆண்டவர் வத்திக்கானில் இடம்பெற்ற தனது வாராந்திர பொதுப் பார்வையாளர் சந்திப்பின் போது கூறினார்.

புதன்கிழமை, 2020 பெப்ரவரி 12

உலக  சுகாதார அமைப்பு புதிய கொரோனா வைரஸ் இற்கு ‘கோவிட் -19’ (Covid-19) என்று பெயரிட்டுள்ளது.

கோவிட்-19 (Covid-19) தொற்றினால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 1,107 எனவும், இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,101  எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 பெப்ரவரி 11

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் மொத்தம் 1, 013 உயர்ந்துள்ளது என சீன அரசு இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

சீன பெருநிலப்பரப்பில் திங்கட்கிழமை இறுதியில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42,500 ஆக
ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பரிசோதிக்கப்பட்ட 1,114 பேரில், எட்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பரிசோதனைகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பொது சுகாதாரத்திற்கு தீவிர மற்றும் அவசர அச்சுறுத்தல் மிக்கது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் சீன நகரங்களுகான தற்காலிக விமான சேவை நிறுத்தத்தை மேலும் நீட்டியுள்ளது.

திங்கட்கிழமை, 2020 பெப்ரவரி 10

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளவில் 910 பேர் மரணித்துள்ளனர், மேலும் இவ் வைரஸ் தொற்றினால் சீன பெருநிலப்பரப்பில் 40,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வுஹானிலிருந்து இருந்து கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளையும் அதனைப் பற்றிய விமர்சனங்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்த சென் கியுஷி என்ற பொதுஜன பத்திரிகையாளர் கடந்த வியாழக்கிழமை காணாமல் போனார். அவர் தற்போது வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் உதவ உலக சுகாதார அமைப்பின் (WHO) குழுவொன்று சீனாவுக்கு புறப்புட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 பெப்ரவரி 09

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 813 ஆக உயர்ந்துள்ளது. இன்று வுஹானிலிருந்து இறுதியாக ஐக்கிய இராச்சியத்தை நோக்கி நாடு திரும்பிய விமானத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளும் உட்பட 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

ஜமா (JAMA) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றின் படி, வுஹானில் உள்ள மருத்துவமனையொன்றில் கண்டறியப்பட்ட முதல் 138 நோயாளிகளில் 41% சதவிகிதமானோர் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கருதப்படுகின்றது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், புதிய கொரோனா வைரஸிற்கு தற்காலிக பெயரொன்றை வழங்கியுள்ளது: புதிய கொரோனா-வைரஸ் நிமோனியா, அல்லது என்.சி.பி (NCP).

சனிக்கிழமை, 2020 பெப்ரவரி 08

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 805 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மரணங்கள் சீன பெருநிலப்பரப்பில் பதிவாகியுள்ளன. உலகளவில், இவ் வைரஸ் தொற்றினால் 28 நாடுகளில் 34,400-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட  கொடிய SARS தொற்றின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையையும் கடந்துவிட்டது, சார்ஸ் (SARS) தொற்றினால் 774 மரணங்கள் ஏற்பட்ட நிலையில் மற்றும் அதனால் 8,000 பேரை பாதிப்புக்குள்ளாகினர்.

எதிர்வரும் வாரம் சீனாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிர கொரோனா வைரஸ் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச குழுவை அனுப்பவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 பெப்ரவரி 07

டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முயன்றதற்காக பொலிஸாரால் குறிவைக்கப்பட்ட வுஹான் மருத்துவர் லி வென்லியாங், நேற்றிரவு கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தார்.

முன்னாள் உல்லாசப்பயணம் மேற்கொண்ட சில பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஹாங்காங் மற்றும் ஜப்பானுக்கு வெளியே இரு உல்லாசக் கப்பல்களில் 7,300 க்கும் மேற்பட்ட பயணிகள்  தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் பிரதான நிலப்பகுதியிற்கான அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டு புதிய கொரோனா வைரஸ் இற்கு எதிராக மேலும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான மருத்துவத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை, 2020 பெப்ரவரி 06

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 563 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் 73 பேர் வரை இவ் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அரசாங்க முயற்சியில், பெப்ரவரி மாதம் இறுதி வரையிலான காலப்பகுதி வரை ஷாங்காய் நகரில் அமைந்துள்ள பாடசாலைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட 350 அமெரிக்கர்கள், கலிபோர்னியாவின் இரு இராணுவ தளங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர் செய்திகள் தெரிவித்துள்ளது. இவர்கள் வுஹானில் இருந்து இரண்டாவது தொகுதியாக வெளியேற்றப்பட்ட அமெரிக்கர்களாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பொது சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட நபர்களின் எண்ணிக்கையை இவ் எண்ணிக்கை 400 ஆக உயர்த்தியுள்ளது.

புதன்கிழமை, 2020 பெப்ரவரி 05

சீன பெருநிலப்பரப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,324 ஆக உயர்ந்துள்ளது.

இந் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் வுஹான் நகரெங்கும் கருத்தடை பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

1,800 பயணிகளைக் கொண்ட கப்பலொன்றில் தற்போது 30 பயணிகளிடம் காய்ச்சல் உட்பட கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றுக்கான ஏனைய அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளதாக ஹாங்காங் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தைவானுக்குள் இக் கப்பல் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இக் கப்பல் ஹாங்காங்கில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 2020 பெப்ரவரி 04

உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதானோம், புதிய கொரோனா வைரஸ் நோயாளர்களைக் குறித்த தரவுகளைப் பகிர்வதில் சில செல்வந்த நாடுகள் திரை மறைவிலிருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டினார், மேலும் இவ் வைரஸ் உலகம் முழுவதும் தொற்றுவதை எதிர்த்துப் போராடுவதற்கும்  கட்டுப்படுத்துவதற்கும், உலகளாவிய ரீதியில் ஒற்றுமையாக செயற்பட அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்ஸ், ஐக்கிய இராச்சியத்தை தொடர்ந்து சீனாவிற்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக தொற்றி வருவதனால் தங்கள் நாட்டு பிரஜைகளை சீனாவிலிருந்து வெளியேருமாறு இவ்விரு நாடுகளும் அறிவுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், கூகிள் மற்றும் பிற சமூக ஊடகங்களுடன் இணைந்து இவ் வைரஸ் தீவிர தொற்றுக்கு எதிராக போராடிட வேண்டிய சகல விதமான தகவல்களையும் திரட்டுவதாக, உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய தொற்றுநோய்களின் ஆபத்துத் தயார்நிலையின் அதிபர் அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை, 2020 பெப்ரவரி 03

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது என் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது சீனாவில் 2003-ஆம் ஆண்டு SARS தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின்  எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

வுஹான் மற்றும் ஹூபேயில் வாழும் 600 க்கும் மேற்பட்ட ரஷ்யர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை ரஷ்ய அரசு தற்போது மேற்கொண்டுவருகிறது.

இவ் வைரஸ் தொற்று குறித்து அதிகரித்து வரும் அச்சங்களுக்கு எதிரொலியாக சீனாவின் முதலீட்டாளர்கள் அபாயமிக்க சொத்துக்களை விற்பதனால் மற்றும் புறக்கணிப்பதனால் சீன பங்கு மற்றும் பொருட்கள் சந்தைகள் பாரிய வீழ்ச்சிகளை சந்திக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை, 2020 பெப்ரவரி 02

கொரோன வைரஸ் தொற்றினால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இதில் சீனாவிற்கு வெளியே ஏற்பட்ட முதல் மரணம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வுஹான் நகரத்தை சேர்ந்த 44 வயதான சீன பிரஜை ஒருவரே மரணித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர், இதுவே சீனாவிற்கு வெளியே அறியப்பட்ட முதல் மரணமாகும். கொரோன வைரஸ் இனால் ஏற்பட்ட “கடுமையான நிமோனியா” காரணமாக சனிக்கிழமையன்று இறந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந் நபர் ஜனவரி 21 ஆம் தேதி வுஹானிலிருந்து பிலிப்பைன்ஸ் இற்கு வருகைதந்துள்ளதாக அறியவந்துள்ளது.

“2019-nCoV தொற்றினால் சீனாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட முதல் மரணம்” என்று பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலக சுகாதார அதிகாரிகள் அவர்களது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளர் கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார். இது இந்தியாவில் வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நோயாளியைப் பற்றி இந்திய அரசு அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை, 2020 பெப்ரவரி 01

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இனங்காணப்பட்ட முதல் நோயாளரான சீனப் பெண்மணி, தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் சுகாதார இயக்குநர் அறிவித்துள்ளார்.

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது, சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) இது தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் 45 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர். சோங்கிங்கில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது, இது நாட்டில் புதிய இறப்புகளின் எண்ணிக்கையை 46 ஆக உயர்த்தியுள்ளது.

வுஹானில் தங்கியிருந்த 33 மாணவர்களும் பாதுகாப்பாக ஸ்ரீ லங்கா விமானசேவையின் சிறப்புப் பட்டய விமானம் (UL 1422) மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த விமானம்  மத்தலையில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவ்வாறு அழைத்து வரப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்காக, தியத்தலாவ இராணுவ முகாமில் அனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் Wi-Fi வசதிகளுடன் கூடிய 100 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட 33 தனியறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 2020 ஜனவரி 31

சீன எல்லைகளை மூடுவதற்கான செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்கின்றது.

மாஸ்கோ – பெய்ஜிங் நகரங்களுக்கு இடையிலான நேரடி புகையிரத சேவையைத் தவிர்த்து சீனாவுடனான ஏனைய அனைத்து புகையிரத சேவைகளையும் இடை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவானது கொரோனா வைரஸ் தொற்றுநோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

வுஹான் நகரிலிருக்கும் 33 மாணவர்களையும் அழைத்துவர ஸ்ரீ லங்கா விமானசேவையின் சிறப்புப் பட்டய விமானம் (UL 1422) இலங்கையிலிருந்து சீனா நோக்கி புறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, 2020 ஜனவரி 30

திபெத் அதன் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளியைப் பற்றி அறிக்கை விடுத்துள்ளது. அதன் பிரகாரம், இந் நோயாளிகள் சீனாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கை உட்பட பல நாடுகள் சீன பிரஜைக்களின் வகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தங்கள் நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள முதல் கொரோனா வைரஸ் நோயாளிகளைக் குறித்து அறிக்கை அளித்தன.

செவ்வாய்க்கிழமை, 2020 ஜனவரி 28

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது இறப்பு எண்ணிக்கை சீனாவில் 131 ஆக உயர்ந்துள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உலகளவில் 4,500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளன.

இதுவரை 200 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. வீ-சாட் (WeChat) ஊடக வுஹான் நகரில் தங்கியுள்ள 33 மாணவர்களுடன் இலங்கை தூதரகம் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது.

சீனாவில் இருந்து வருகை தந்திருக்கும் மாணவர்கள் 14 நாட்களுக்கு, தங்கள் வீடுகளிலேயே தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

புதிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் இலங்கை தோல்வியுற்றால், இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவது குறித்து பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் முடிவெடுப்பார் என  கொழும்பு பேராயர் மறைமாகணம் அறிவித்துள்ளது.

இந் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேருக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சீன சுற்றுலாப் பயணிகளுக்கு, இலங்கைக்கு மேற்கொள்ள விரும்பிய எந்தவொரு பயணத்தையும் ஒத்திவைக்குமாறு இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் தற்போது தங்கியிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சீனப்பிரஜைகளுக்கு; அவர்களது பயணத் திட்டங்களை மாற்றவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும்  கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார அமைச்சகம் இரண்டு அவசர தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது: 0710 170 717 / 0113 071 073

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வருகைதரும் அனைத்து மாணவர்களும் தியதலாவா இராணுவ முகாமில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு மற்றும் மேலதிக பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் வன்னியராச்சி அறிவித்துள்ளார்.

மேலும் இந் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் பணிக்காக 12 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குதிரை மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

– தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (எம்.ஆர்.ஐ)

– கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ராகமை 

– கம்பஹா பொது மருத்துவமனை

– நீர்கொழும்பு பொது மருத்துவமனை

– தேசிய மருத்துவமனை, கண்டி

– போதனா மருத்துவமனை, கராபிட்டி

– போதனா மருத்துவமனை, அனுராதபுரம்

– போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம்

– போதனா மருத்துவமனை, குருநாகல் 

– மாகாண மருத்துவமனை, இரத்தினபுரி

– மாகாண மருத்துவமனை, பதுளை

– போதனா மருத்துவமனை, மட்டக்களப்பு

சீன நாட்டினருக்கான வருகையின் போது வழங்கப்படும் விசா (on-arrival visa) வசதிகளை தற்காலிகமாக இடைநிறுத்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி உத்தரவிட்டுள்ளார். மேலும் விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகளை மட்டுமே அனுமதிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, 2020 ஜனவரி 27

முக்கிய செய்தி: இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை இனங்கண்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இனங்காணப்பட்டவர் 43 வயதான சீனப் பெண்மணி ஒருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு வேகமாக பதிலளித்து வருவதாகவும், தேவையற்ற பீதிக்கு எதிராக எச்சரிப்பதாகவும் சுகாதார பணியகம் கூறியுள்ளது. 

புதிய கோரோனா வைரஸ் (2019-nCoV) பற்றி அமெரிக்க வைத்திய சங்கத்தின் அறிக்கையில் (Journal of American Medical Association) உள்ள கட்டுரையின் கூற்றுப்படி, ‘இதுவரை, 2019-nCoV இன் இறப்பு விகிதம் SARS-CoV மற்றும் MERS-CoV ஐ விடக் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது’. இந் நோய்த்தொற்றின் முழுமையான விளைவுகள் இன்னும் இனங்காணப்படவில்லை.

புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்புமருந்துகளை உருவாக்க உலக சுகாதார அமைப்பு பல நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) இனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ள விசேட வாயில் வழியாக அனுப்பப்படுகிறார்கள்.

சீனாவில் இருந்து 21 இலங்கை மாணவர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தருவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. சீனாவிலிருந்து வருகைதரும் இம் மாணவர்கள் தொடர் மருத்துவ பரிசோதனைகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது.

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 22 பேர் கொண்ட தேசிய நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் மூத்த சுகாதார, மருத்துவ, ராணுவ, சிவில் விமானப் போக்குவரத்து, தொற்றுநோயியல், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அடங்கிய இந் நடவடிக்கை குழு இன்று (27.01.2020) மாலை 5 மணிக்கு கூடுகிறது.

பொதுமக்களை பதற்றமும்  பீதியும் அடைய வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது. காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் முதலில் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது, மேலதிக பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அப்பரிசோதனையின் முடிவுகள் நோய்த்தொற்றுக்கு நேர்மறையாக இருப்பின் மட்டுமே தேசிய தொற்றுநோய் மருத்துவமனைக்கு அந் நோயாளர்கள் மாற்றப்படுவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் பொது மருத்துவர் அனில் ஜசிங்ஹே அவர்களின் கூற்றுப்படி சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணத்திற்காக வருகை தந்த சீனப் பெண்மணிக்கே காய்ச்சல் ஏற்பட்டது. அவரது சுற்றுலாக் குழு இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்புதான் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது, அதன் பின்னரே அவர் புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளின் முடிவுகள் எதிர்மறையானவை என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் முடிவானது நேர்மறையானதாக நிரூபிக்கப்பட்டது.

சீனப் பிரதமர் லி கெக்கியாங், வுஹான் நகருக்குச் சென்று அங்கு செயற்பட்டுவரும் சுகாதாரத் துறையினை ஆய்வு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஜனவரி 26

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் சீனாவின் ஷாங்காய் நகரில் பதிவாகியுள்ளது. அவ்வாறு இறந்துள்ளது 88 வயதுடைய நபரொருவரே ஆகும்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.R.I) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுக்கு அமைய, தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (I.D.H) அனுமதிக்கப்பட்ட சீனப் பிரஜை ஒருவர் உட்பட நான்கு பேருக்கு புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பெய்ஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், வுஹான் நகரில் கல்விகற்ற 33 மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மீட்க, ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் விமானத்தை தரையிறக்குவதற்கான விண்ணப்பம் ஒன்றை சீன அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 150 இலங்கை மாணவர்களையும், ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் இன் சிறப்பு பட்டய விமானம் மூலம் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) இலங்கைக்குள் நுழைவதையோ அல்லது பரவுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நடவடிக்கைக் குழுவை அமைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

சனிக்கிழமை, 2020 ஜனவரி 25

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்கள், வெளியுறவு செயலாளர் ரவீநாத் ஆர்யாசின்ஹ அவர்களுக்கும் மற்றும் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அங்கு வாழும் 33 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்க தேவை ஏற்படுமாயின் வெளியேற்றத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. புகைப்பட உதவி: சீனாவில் உள்ள இலங்கை தூதரகம்

ஐரோப்பாவில் புதிய கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது: புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்று பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பிரான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பெண்ணொருவர் உட்பட இருவர் கொழும்பில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (I.D.H) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது மருத்துவ மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (M.R.I) அனுப்பப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, 2020 ஜனவரி 24

சீனாவிற்கு வெளியே முதன்முதலாக வியட்நாமில், ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு இவ் வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ் (2019-nCoV) இலங்கையில் பரவுவதை தடுப்பதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் இவ் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக வெளியுறவு அமைச்சு அறிவித்தது. வுஹான் நகரில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக ஒரு வீ-சாட் (Wechat) குழுவை உருவாக்கியுள்ளதாகவும் , மேலும் அவர்களை வுஹான் நகரிலிருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கைத் தூதரகம் அறிவித்தது.

வியாழக்கிழமை, 2020 ஜனவரி 23

சீனாவின் பல பகுதிகளிலும் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ் வைரஸின் தொற்றைக் கட்டுப்படுத்த வுஹான் நகருக்கான அனைத்து பொது போக்குவரத்துக்களையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றின் அறிகுறியாக இருக்கக்கூடிய அதிகூடிய உடல் வெப்பநிலை உடையவர்களைக் கண்டறிய மூன்று உடல்வெப்பநிலையை கண்காணிக்கும் காட்சி இயந்திரங்களை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவ இலங்கை முடிவு செய்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில்  நிறுவப்பட்டுள்ள உடல்வெப்பநிலையை கண்காணிக்கும் காட்சி இயந்திரங்கள். புகைப்படஉதவி: Daily News

புதன்கிழமை, 2020 ஜனவரி 22

புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியாக பொது சுகாதாரத்திற்கு அவசர நிலைமை ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிய உலக சுகாதார அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. ஆனால் இக் கூட்டத்தில் உறுதியான மற்றும் நிலையான இறுதி முடிவொன்றை எட்ட முடியவில்லை.

திங்கற்கிழமை, 2020 ஜனவரி 20

சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ், 194 நாடுகளை பிணைக்குமொரு சட்ட அமைப்பாக, “சர்வதேச அளவில் பரவும் நோய்த் தொற்றுக்கு எதிராக மக்களை பாதுகாக்கவும், நோய்ப் பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் அந்நோய்த் தொற்றுக்கு எதிராக பொதுவன சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்…’’ உலக சுகாதார அமைப்பானது (WHO), சீனாவில் வேகமாகப் பரவி வரும் 2019-nCoV பற்றி விவாதிக்க  ஜனவரி 22 ஆம் திகதி அவசரக் குழுவினைக் கூட்ட முடிவுசெய்தது (தாய்லாந்து மற்றும் ஜப்பானும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தன),

அதேவேளை தென் கொரியாவில் இப் புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய முதல் நோயாளி இனங்காணப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஜனவரி 19

சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் மற்றும் பெய்ஜிங்கில் இத் தொற்றுநோய்க்கு உள்ளான நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். வுஹான் நகருக்கு  வெளியே சீனாவின் வேறு சில பகுதிகளில் இப் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டு பதிவாகியது இதுவே முதல் முறையாகும். 

செவ்வாய்க்கிழமை, 2020 ஜனவரி 14

இப் புதிய நோய்த் தொற்று ‘ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு தொற்றுகிறது’ என்ற சந்தேகத்தைத் தூண்டியது.

திங்கட்கிழமை, 2020 ஜனவரி 13

புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன்முறையாக தாய்லாந்தில் பதிவாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர் 61 வயதான சீனப் பெண்ணொருவர் எனவும் இவர் வுஹானை வசிப்பிடமாக கொண்டவர் எனவும், மேலும் இவர்  ஜனவரி 8 ஆம் திகதி தாய்லாந்திற்கு சுற்றுலாப் பயணம் வந்தவர் எனவும் அறியப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, 2020 ஜனவரி 12

தற்போது 2019-nCoV என அழைக்கப்படும் இவ் வைரஸ் தொற்றை தாய்லாந்தில் உள்ள பொது சுகாதார அமைச்சகம் அந்நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. இதன்போதே சீனாவுக்கு வெளியேயும் இத்தொற்று பரவியுள்ளமை முதன் முறையாக கண்டறியப்பட்டது.

வெள்ளிக்கிழமை, 2020 ஜனவரி 10

இவ் வைரஸ் கண்டறியப்பட்ட ஓர் வாரத்திற்குள், சீன ஆராய்ச்சியாளர்கள் வைரஸின் மரபணுக்கள் ஆய்வுக்குற்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் மரபணு கட்டமைப்புகள் வெளியிடப்பட்டன. இது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பின்னர், இத் தகவல் மூலம் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது மற்றும் அதற்குரிய சிகிச்சை முறையை நிர்ணயிப்பதற்கான சாத்தியத்தை வழங்குகின்றது.

வியாழக்கிழமை, 2020 ஜனவரி 09

இப் புதிய கொரோனா வைரஸ் ஆனது நபரொருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்கிடையில் அன்று இத் தொற்றினால் ஏற்பட்ட முதல் மரணம் பதியப்பட்டது.

சனிக்கிழமை, 2020 ஜனவரி 04

இவ் வைரஸ் இனால் நான்கு நாட்களுக்குள் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான  காரணத்தை சுகாதார அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வியாழக்கிழமை, 2020 ஜனவரி 02

இப் புதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 பதிவுசெய்யப்பட்டது.

புதன்கிழமை, 2020 ஜனவரி 01

ஹுனான் கடல் உணவு சந்தைகள் மூடப்பட்டு கிருமிநாசினிகள் மூலம் கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக சீனாவிலிருந்து தகவல்கள் பெறப்பட்டன.

செவ்வாய்க்கிழமை, 2019 டிசம்பர் 31

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில், அறியப்படாத நிமோனியா தொற்றுக்கள் கண்டறியப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அலுவலகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது . கண்டறியப்படாத காரணமொன்றினால் பொது மக்கள் சிகிச்சை பெறுவதாக வுஹான் நகர சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களில் பலர் ஹுனான் கடல் உணவு சந்தையில் பணிபுரியும்  வர்த்தகர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Exit mobile version