2019 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த முதல் 10 நாடுகள்

பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது உலக பொருளாதார மன்றம். உலக போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report (GCR)) ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படும் அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 1979 ம் ஆண்டில் இருந்து வெளியிடப்படுகிறது. உலக நாடுகளில் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் இந்த அறிக்கை முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் தரவரிசை பட்டியல் இதோ :

10வது இடம் – சுவிட்சர்லாந்து

2017ஆம் ஆண்டிலிருந்து இதன் நிலையில் மாற்றம் ஏதும் இடம்பெற்றில்லை. சிறிய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து அதன் வணிகம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறை ஆகிய பிரிவுகளில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது. 

வாழ்வாதார தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம்

HSBC இன் 2019 இற்கான குடியமர்வு மதிப்பீட்டில் வசிப்பதற்கும் பணி செய்வதற்கும் சிறந்த நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் வாழ்வாதார தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9வது இடம் –  கனடா 

இந்தமுறை அமெரிக்காவின் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் நிலைபேண்தகைமை மற்றும் விமானப் போக்குவரத்துக்கு சேவை ஆகிய பிரிவுகளில் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளது.

கனடாவின் பிரசித்திபெற்ற டொரொன்டோ விமான நிலையங்களும் சுற்றுலா தளங்களும்

அதுமட்டுமின்றி இந்த வருடம் முதல் ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு சுற்றுலாவிற்கு சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் இருந்துள்ளது.   

8வது இடம் – இத்தாலி 

இத்தாலி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த இடத்தை தக்கவைத்துள்ளது. ரோம் மற்றும் புளோரன்ஸ் போன்ற கலாசார புகழ்பெற்ற தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவதால் போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அறிக்கை குழு அறிவித்துள்ளது. 

இத்தாலியின் போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினைகளை முகம் கொடுக்கும் வெனிஸ்

போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க தவறினால் எதிர்கால தரவரிசையில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

7வது இடம் –  அவுஸ்திரேலிய 

அவுஸ்திரேலியாவின் சிறப்புமிக்க வேறுபட்ட நிலப்பரப்புகள்

மாறுபட்ட நிலப்பரப்புகளுக்கும் தனித்துவமான வன விலங்குகளுக்கும் புகழ் பெற்று விளங்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு போன்ற பிரிவுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை போட்டித்திறன் பிரிவில் கடந்த ஆண்டை விட மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது. 

6வது இடம் –  இங்கிலாந்து 

விலை போட்டித்திறனுக்கு குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் 5வது இடத்திலிருந்து 6வது இடத்தை பெற்றுள்ளது இங்கிலாந்து. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இங்கிலாந்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்

இதனால் நாணய மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அதன் காரணமாக இங்கிலாந்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 5% ல் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உள்வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4% அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கணித்துள்ளனர். 

5வது இடம் – ஐக்கிய அமெரிக்கா 

அமெரிக்காவின் Yosemite National Park, Hawaai மற்றும் The Grand Canyon

இம்முறை அமெரிக்கா பிரித்தானியாவை பின்தள்ளி தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜூன் மாதம் ஐக்கிய அமெரிக்கா நியூஸ் & வேர்ல்ட் வெளியிட்ட உலகின் பத்து சிறந்தவிடுமுறை இடங்களின் அறிக்கையில் அமெரிக்காவின் மூன்று நகரங்கள் இடம்பிடித்துள்ளன.  Yosemite National Park, the Grand Canyon, Maui மற்றும் Hawaai . 

4வது இடம் – ஜப்பான் 

ஜப்பானின் அதிக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் டோக்கியோ நகரமும் உலகிலேயே எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஷிபுயா பாதசாரிகள் கடவையை படத்தில் காணலாம் 

கடந்த ஆண்டு ஜப்பானுக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  31 மில்லியன் என நாட்டின் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக ஒன்பதாவது இடத்தில உள்ளது. ஜப்பானின் தலைநகருக்கு 12.93 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மாஸ்டர்கார்ட் (master) கணித்துள்ளது. 

3வது இடம் – ஜேர்மனி 

Lonely Planet’s ல் பரிந்துரைக்கப்பட்ட Berlin, Munich நகரங்களும் தெற்கில் உள்ள Black forest வனமும் 

கடந்த மூன்று வருடங்களாக ஜேர்மனி தனது மூன்றாவது இடத்தை தக்கவைத்து வருகின்றது. Lonely Planet’s எனும் சுற்றுலா வழிகாட்டி பிரிவு பார்வையாளர்களுக்கான சிறந்த இடங்களாக Berlin, Munich நகரங்களும் தெற்கில் உள்ள வனமும் கூடுதலாக பரிந்துரைக்கப்படுகின்றன. 

2வது இடம் – பிரான்ஸ் 

2018ஆம் ஆண்டு உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது நகரமாக பாரிஸ் இருந்துள்ளதாக மாஸ்டர்கார்ட் ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. 

பிரான்சில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த சில முக்கிய இடங்கள்

19 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனராம். அமெரிக்க நியூஸ் & வேர்ல்ட் அறிக்கையின்படி வருடாந்த சிறந்த விடுமுறை இடங்களின் தரவரிசையில் பிரான்ஸின் மூலதனம் முதலிடத்தில் உள்ளது. 

பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்ட தரவுகளில்  2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 90 மில்லியன் சுற்றுலாப்  பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டும் என பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

1வது இடம் – ஸ்பெயின் 

“மக்களின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட சுற்றுலாத் தளங்களை தன்வசம் கொண்ட ஒரு நாடு” என்று ‘Lonely Planet’ அறிக்கை அறிவித்துள்ளது. கிரனடாவில் உள்ள வரலாறு சிறப்பு மிக்க அல்ஹம்ப்ரா மற்றும் சன் செபாஸ்டியன் கடற்கரை ஆகியவை கட்டாயம் பார்வையிட வேண்டிய பட்டியலில் உள்ளன. 

மக்களின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஸ்பெயினின் சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் ஸ்பெயின் மிகவும் போட்டி நிறைந்த நாடாக திகழ்கிறது என்று உலக பொருளாதார மன்ற அறிக்கை தெரிவிக்கின்றது. 

இதுவே உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 140 நாடுகளுக்கு இடையேயான பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கை. இத்தரவரிசையில் இலங்கை உலக அளவில் 77 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு தரவரிசையில் ஆசியா-பசிபிக் வேகமாக வளர்ந்து வரும் பயண மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Exit mobile version