இன்று சர்வதேச மகளிர் தினம். உலகனைத்தும் பெண்கள் தொடர்பில் பல்வேறு செயற்திட்டங்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் சகிதம், வாழ்த்துகளும் பாராட்டுகளும் பகிரப்பட்டவண்ணம் இருக்கும் தருணம் இது.
போற்றுதலுக்குரிய பல சாதனைகளை படைத்திட்ட பெண்களை சரித்திரம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இலங்கை எனும் அழகிய நாட்டின் பெருமைமிகு அம்சங்களுள் “உலகின் முதலாவது பெண் பிரதமர்” என்பதுவும் உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற ஒன்று தான். இவைதவிரவும் நம் நாட்டின் பெருமைக்கு பல பெண்கள் பங்களித்துள்ளனர். அதேபோல பல பெண்கள் பல்வேறு துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கைப்பெண்களும் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பலமுறை நிரூபித்து இருக்கின்றனர்.
இலங்கையின் தமிழ்ப் பெண்கள் பலரும் மருத்துவர், ஆசிரியர், பேராசிரியராக எண்ணிக்கையில் அடக்கமுடியாத சாதனைகளை புரிந்திருக்கிறார்கள். நவீன உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு வெற்றிநடை போடும் ஒவ்வொரு பெண்ணும் சரித்திரத்தில் இடம்பிடிக்கவேண்டியவர்கள் தான்.
பாரதியின் கும்மியடி பாடலின் உட்கருத்தை வலியுறுத்தி, பழைய மாதர் அறங்களை நீக்கி புதிய பாதையில் மாட்சி பெறச்செய்து வாழும் இலங்கை தமிழ்ப் பெண்கள் சிலரை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்வதில் roar தமிழ் பெருமைகொள்கிறது.
நீங்கள் அறிந்த சாதனைமிகு இலங்கைத் தமிழ்ப்பெண்களை பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்தி roar தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.