புதிய கொரோனா வைரஸ் COVID-19 : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

COVID-19 தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் அது தொடர்பான தகவல்களும் விரைவாக மாறிக்கொண்டே வருகின்றன. எங்கள் சமீபத்திய கட்டுரைகள், எங்கள் நேரடி வலைப்பதிவின் இற்றைப்படுத்திய LIVE BLOG அல்லது எங்கள் ட்விட்டர் தளத்தில் உடனுக்குடன் நீங்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்


இலங்கையில் இதுவரை 42 பேர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், அவர்களில் முதலாவது நோயாளியான 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி, பூரண குணம் பெற்று கடந்த மாதம் பிப்ரவரி 19ம் திகதி அன்று தனது நாட்டிற்கு திரும்பினார். மற்றும் ஏனைய 41 நோயாளர்களும்  தற்போது தேசிய மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 31ம் திகதி முதல் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று தொடர்பான தகவல்களை சேகரித்து தொகுத்து வழங்கி வரும் LIVE BLOG நேரடி வலைப்பதிவின் மூலம், Roar தமிழ் உங்களுக்கு சரியான தகவல்களை உடனுக்குடன் வழங்கிவருவதைக் காணலாம்.

முதன்மை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் பரவுகின்ற செய்திகள் மாத்திரமின்றி தவறான தகவல்களாலும் மக்கள் மத்தியில் பீதிநிலை ஏற்பட்டு, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளில் அமுலில் உள்ள பயணத்  தடை உத்தரவுகள் மற்றும் முடக்கநிலை போன்றவை நம்நாட்டிலும் ஏற்படலாம் எனும் அச்சத்தாலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற எண்ணங்களுடனும் மக்கள், பல்பொருள் அங்காடிகளிலும் மற்றும் சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்யவும் அலை மோதுகிறார்கள். இதனால்  பலரும் பல இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கநேரிடுகிறது. 

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று பற்றிய சரியான தகவல்கள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம்: ஆகவே பாதுகாப்பாக மற்றும் முன்னெச்சரிக்கையாக இருக்க, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மிகவும் அடிப்படையான விடயங்களை, அனைவருக்கும் அறியப்படுத்த  வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் இவ் வழிகாட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதுவரை; ஓர் பார்வை

அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றது.

இலங்கையினுள் நுழையக் கூடிய அனைத்து இடங்களில்  (விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்) மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களில் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றைக் கட்டுப்படுத்த அரசு, ராணுவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து செயற்படுகின்றனர்.

இலங்கையில் இனங்காணப்பட்ட முதல் நோயாளியான சீனச் சுற்றுலாப் பயணி, இலங்கைத் தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர், பெப்ரவரி 19ம் திகதியன்று வெற்றிகரமாக நாடு திரும்பினார்.

‘Patient zero’ என அறியபட்ட இத்தாலிய சுற்றுலாப் பயணி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இரண்டாவது நோயாளி (முதல் இலங்கை நோயாளி) 51 வயதான சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிபவர், 60 பேருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என அறியப்பட்டதை தொடர்ந்து. அறுபது பேரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ் அறுபது பேரில் காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் கொண்டிருந்த ஐந்து பேர் மேலதிக பரிசோதனைகளுக்காக தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது சுற்றுலா வழிகாட்டி 25 பேருடன் தொடர்பு கொண்டிருக்கிறார். இவ் 25 பேரில் காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் கொண்டிருந்த  எட்டு பேர் (அனைவரும் குடும்ப உறுப்பினர்கள்) மேலதிக பரிசோதனைகளுக்காக தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமையன்று (மார்ச் 14), அடுத்தடுத்து, COVID-19 தொற்றுக்குள்ளான ஐவர் இனங்காணப்பட்டதை அரசு உறுதிப்படுத்தியது (இதனால் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது) – இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் ஏற்கனவே தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். மேலும் இந் நோயாளிகளில் ஒருவர் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் 17 வயதுடைய பெண் உறவினர் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) COVID-19 தொற்றுக்குள்ளான பதினோராவது நோயாளியாக ஜெர்மனியில் இருந்து திரும்பிய 45 வயதான நபரொருவர் இனங்காணப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

திங்கட்கிழமை (மார்ச் 16) இலங்கையில் மேலும் பத்துப்பேர் COVID-19 தொற்றுக்குள்ளானார்கள் என சுகாதார அமைச்சகம் உறுதிசெய்தது. இவர்களுடன் மொத்த நோயாளர் எண்ணிக்கை 28 ஆகா உயர்ந்துள்ளது. இனம்காணப்பட்ட புதிய நோயாளிகளில் 13 வயது சிறுமியும் 34, 50 மற்றும் 73 வயதுடைய மூன்று ஆண்களும் அடங்குவர்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இலங்கையில் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பாரியளவில் முயன்றுவருன்கிறது என்பதனை நம்மால் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

முன்னெச்சரிக்கையுடன் செயற்பட,

பல நிறுவனங்களை மற்றும் ஸ்தாபனங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அனைத்து விதமான ஒன்றுகூடல்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 15 முதல் இரு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

COVID-19 சீனாவின் வுஹானில் தோன்றி அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளதால், நம் நாட்டிற்குள் நுழைவதற்கான அனைத்து நுழைவுப் புள்ளிகளும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது.

COVID-19 எதிர்த்துப் போராடும் முயற்சியில்,

அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளகின்றது,

மார்ச் 17 நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு கத்தார், பஹ்ரைன் மற்றும் கனேடிய பிரஜைகளை இலங்கையில் தரையிறக்க அனுமதிக்க மாட்டோம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு டிரான்சிட் பிரயாணிகளுக்கு பொருந்தாது என்றாலும் அவர்கள் 1. மேற்சொன்ன நாட்டினர் அல்லாதவராக 2. மேற்கூறிய மூன்று நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் விஜயம் செய்யாதவராக மற்றும் 3. முன்னர் அதிக ஆபத்து உள்ள நாடுகளுக்கு (இத்தாலி, ஈரான், தென் கொரியா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், பெல்ஜியம், நோர்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, டென்மார்க்) விஜயம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும்

மேலும்,

உள்நுழைவின்போது வழங்கப்படும் விசாவானது, அனைத்து நாடுகளுக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான், இத்தாலி, தென் கொரியாவிலிருந்து வருகை அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், அதன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

ஏனைய அனைவருமே குறைந்தபட்சம் இரு வாரங்களாவது சமூகத்திலிருந்து  விலகி சுயமாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மார்ச் 1-10 க்கு இடையில் நீங்கள் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா என்று அழைத்து பதிவு செய்துகொள்ள ஐந்து தொலைபேசி எண்களை புதிதாக போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

011 2 44 44 80
011 2 44 44 81
011 5 97 87 20
011 5 97 87 30
011 5 97 87 34
119அல்லது மின்னஞ்சல்: lahd@police.lk

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்:

ஒருவேளை நீங்கள் நாட்டினுள் உட்பிரவேசிக்கும் வேளை, பின்வரும் அறிகுறிகள் உங்களிடத்தே தென்படுமாயின்,

நீங்கள் உடனடியாக:

நீங்கள் உட்பிரவேசித்த விமான நிலையத்தில் அல்லது துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் அங்கு கடமையிலிருக்கும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுவீர்கள்.

அதனைத் தொடர்ந்து Ambulance வண்டி மூலம் அருகிலுள்ள இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு என்று நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்படுவீர்கள்.

நீங்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பின்னர் அல்லது வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பின்னர் அல்லது ஏதாவதொரு பொதுக் கூட்டத்தில் அல்லது நிகழ்வொன்றினில் கலந்து கொண்ட பின்னர், COVID-19 தொற்றுக்கான அறிகுறிகளை உங்களிடத்தே கொண்டிருந்தால் – நீங்கள் வழமையாக செல்லும் வைத்தியரை அணுகுங்கள். அவர் உங்களை, அருகிலுள்ள இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையை உங்களுக்கு பரிந்துரை செய்வார். அல்லது உங்களுக்கு அருகிலுள்ள, இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, நீங்களே சென்று உங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

தனியார் மருத்துவமனைகளுக்கு COVID-19 க்கான மருத்துவ பரிசோதனைகளை  மேற்கொள்ள அனுமதியளிக்கப்படவில்லை – எனவே பாரியளவிலான  பணச் செலவுகளை   செய்வதைக் காட்டிலும், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுவதே சரியானது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.

‘தனிமைப்படுத்தல்’ என்றால் என்ன?

1897 ஆம் ஆண்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளை மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR-2005) மூலம் தனிமைப்படுத்தல் செயல்படுத்தப்படுகிறது.

“மேற்கண்ட இடங்களை தேர்வு செய்வதற்கான முக்கிய கரணம் யாதெனில் ஏராளமான மக்கள் தங்குவதற்கான இடவசதிகள் இங்கு உண்டு என்பதனாலேயே” என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாபா பலிஹவதன விளக்கினார், மேலும் சில ஆய்வறிக்கைகள் படி இவ்விடங்களை தேர்ந்தெடுப்பதற்கான மற்றுமொரு காரணம் இவ்விடங்கள் முக்கிய நகரங்களை விட்டும் தொலைவில் மக்கள் பரம்பல் மற்றும் நடமாற்றம் குறைந்த பகுதிகளில் அமைந்திருப்பதேயாகும். 

இம் முகாம்களில் பொதுவாக சுமார் 2000 முதல் 2500 பேர்வரை தங்கவைக்க முடியும், இங்கு 5-6 மருத்துவ குழுக்கள், தற்காப்பு உபகரணங்கள் (PPE), மருத்துவ படுக்கைகள், தினசரி உணவு மற்றும் சிற்றுண்டிகள், Wi-Fi இணைய வசதிகள், சலவை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்பன உள்ளன. இவ் அனைத்து வசதிகளும் அரசினால் வழங்கப்படுகின்றன.

மேலும் நீங்க அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

தனிமைப்படுத்தல் செயல்முறையை மறுக்க எவருக்கும் ‘சமூக அல்லது தனி உரிமை’ இல்லை என வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவரேனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்ற அக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந் நபருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் , மேலும் ரூ. 2, 000 முதல் 10, 000 வரை தண்டப்பணமும் விதிக்கப்படும்.

இச் செயற்பாடுகளை மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பவர்கள் யார்?

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, மேற்கு மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் இணை செயலாளர் (ஓய்வுபெற்ற) அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, சுகாதார செயலாளர் பத்ரானி ஜெயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜசிங்க, வைத்திய நிபுணர் அனுருத்த பதேனிய, இணை செயலாளர்கள் மருத்துவர் சுனில் டி அல்விஸ் மற்றும் லக்ஷ்மி சோமதுங்க, மருத்துவர் நிஹால் ஜெயதிலக்க, இலங்கை மருத்துவ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன, மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம, பிரிகேடியர் மருத்துவர் கிருஷாந்த பெர்னாண்டோ, தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் மருத்துவர் சுதத் சமரவீர, மருத்துவர் பாபா பலிஹவதன, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஜெயருவன் பண்டார, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி. ஏ. சந்திரசிறி மற்றும் குடிவரவு குயகல்வு கட்டுப்பாட்டாளர் ஒருவர் உள்ளடங்கிய 22 பேர் கொண்ட தேசிய நடவடிக்கைக் குழுவும் மற்றும் மேலதிக ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவும் COVID-19 தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நேரடி முயற்சிகளில் ஈடுபட  ஜனவரி 27 ஆம் தேதி  அமைக்கப்பட்டன.

மேலதிகமாக, COVID-19 தொடர்பான அனைத்து சிக்கல்களையும் கையாள புதியதொரு மத்திய நிலையம் திங்கட்கிழமை மார்ச் 16ம் திகதி நேற்று ராஜகிரியவில் நிறுவப்பட்டது.

ஒருவர் எவ்வாறு ‘சுய தனிமைப்படுத்தலில்’ ஈடுபட முடியும்?

இலங்கையினுள் நுழையும் அனைத்து பயணிகளும் இரு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும்.

இப் 14 நாட்களுக்கும் பொது சுகாதார அதிகாரிகள் உங்களை சந்திப்பார்கள், 14 நாட்களின் முடிவில், COVID-19 தொற்று உங்களுக்கு உண்ட இல்லையா என்பதை உறுதி செய்ய உங்களிடத்தே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதனை உறுதிசெய்வார்கள்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மருத்துவர் சமிதா கினிகே, Roar ஊடகத்திற்கு பின்வரும் தகவலை வழங்கினார், “சுகாதார அமைச்சின் பொது சுகாதார ஊழியர்கள், சரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, சுய-தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு தினமும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். நோய்த்தொற்றின் அறிகுறிகள் அவர்கள் இடத்தே தென்படுகின்றனவா என அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, அவ்வாறு அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.”

முக்கிய விடயம்: எவரும் கலவரம் அடையத்தேவையில்லை

COVID-19 வைரஸ் தொற்று மற்றும் அதன் பரவல்  என்பது கவலைக்குரிய விடயம் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் பட்டம் மற்றும் கலவரம் அடைவதில் எவருக்கும் எவ்வித பயனும் இல்லை. இவ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய பணிக்குழு மற்றும் தேசிய திட்டம் என்பன உள்ளன. ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது:

நம்பகமான மூலங்களிலிருந்து கிடைக்கப்பெறும்  உறுதி செய்யப்பட்ட செய்திகளை மற்றும் தகவல்களை பின்பற்றுங்கள் , போலி செய்திகளுக்கு நம்பி ஏமாந்து அவற்றிற்கு  பலியாகாதீர்கள்
இது பற்றி சரியான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் மேலும் உங்களைச் சூழ உள்ளவர்களுடனும் சரியான தகவல்களைப் பகிர்ந்திடுங்கள்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய பழகுங்கள் மேலும் சுவாசப் பாதுகாப்பு, சுய-தனிமைப்படுத்தல் ஆகியவற்றைப் பின்பற்றுங்கள்

மேலும் சரியான நடவடிக்கை மற்றும்  தகவல்களை பெற்றுக் கொள்ள நீங்கள் அரசினை தொடர்பு கொள்ளக்கூடிய வழிகள் பின்வருமாறு:

சுகாதார மேம்பாட்டு பணியகம் பேஸ்புக் பக்கம்

அரச தகவல் துறை பேஸ்புக் பக்கம்

அரசு தகவல் துறை யூடியூப் பக்கம்

அரசு தகவல் துறை வலைத்தளம்

மேலும், மிகவும் அடிப்படையான மூன்று பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களை இவ் வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மறக்காதீர்கள்:

Related Articles

Exit mobile version