கிட்டத்தட்ட எழுபத்து ஒரு வருடங்களாக உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றை ஏற்றுக்கொண்ட பிறகு, இறுதியாக இந்தியா கொண்டாட முடியும்படி, மோசமான காலனித்துவ கால ஆட்சி விதிகளை, பிரிவு 377, ‘இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக, எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ அல்லது விலங்குடனோ, தாமாக முன்வந்து எவரொருவருவரும் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வது’ என்பதனை குற்றமாக்கியதை, அதன் தண்டனை குறியீட்டிலிருந்து அகற்றியது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பானது, அவ்வளவும் உடலுறவினைப்பற்றியதல்ல, அது சுதந்திரம் பற்றியது – இந்திய குடிமகன்கள், அரசின் தலையீடு இல்லாது, மகிழ்வுடன் சொந்த வாழ்க்கையில் அவர்களது உரிமைகளான சமத்துவம், கண்ணியம் மற்றும் தனியுரிமை ஆகியற்றை அனுபவிக்கும் சுதந்திரம்.
பிரிவு 377, ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையேயான, ஆண்குறி-யோனிக்கு அப்பாற்பட்ட எந்த உடலுறவினையும்—’இயற்கை ஒழுங்குமுறைக்கு எதிரானது’ என எந்த உடலுறவினையும், அதிகாரம் கொண்ட அதிகாரிகள் முடிவு செய்யும்பட்சத்தில்—அது சட்டவிரோதமாக இருக்க வேண்டும், என்கிறது. வயது வந்தோரின் தனிப்பட்ட பாலியல் விருப்பங்கள், இயற்கை அவர்களை படைத்ததைப்போல் உண்மையாக உள்ளது, மற்றும் அவர்கள் அவர்களாக இருப்பது சட்ட ரீதியானதும் கூட, என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிப்படையாக இது, அவர்களுடைய பாலியல் நோக்குநிலையினை பிரதிபலிக்கும் அந்த ‘இயற்கை’ பற்றிய கருத்தினைக்கொண்ட, LGBTQ சமூகத்தோருக்கு பெரிய செய்தியாகும். ஆனால், இது திருமணமான எதிர்பால் தம்பதியினருக்கும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள வாய்வழி பாலியல் செயல் கூட சட்டவிரோதமானது என்பதற்கு கோட்பாட்டளவில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டிருக்கவில்லையெனில், நிச்சயமாக, அது மோசம் தான். பில் கிளிண்டன் ஒரு இந்தியராய் இருந்திருந்தால், மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்திற்கு பிறகு குற்றச்சாட்டுடன் வாழ்ந்திருக்கலாம், ஆனால் பிரிவு 377-ன் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
பரவலாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும்—ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் குறைவான கைது நடவடிக்கைகள் பிரிவு 377 கீழ் நிகழ்ந்தது—, சட்டம், இந்தியாவிலிருக்கும் பாலியல் சிறுபான்மையினரை துன்புறுத்தல், தொந்தரவு செய்தல், மற்றும் மிரட்டுதல் போன்றவைகளுக்கு கருவியாக இருந்தது. பல மில்லியன் திருநங்கை, ஆண் மற்றும் பெண்களை பயத்தில் மற்றும் இரகசியமாக வாழ வலியுறுத்தியதற்கு அப்பால், பிரிவு 377 எச்.ஐ.வி தடுப்பு முயற்சிகளையும் வலுவிழக்கச்செய்தது மற்றும் மன அழுத்ததிற்கும், தற்கொலைகளுக்கும் பங்களித்தது. உலக வங்கியால் 2014-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, பகுத்தறிவற்ற ஓரினச்சேர்க்கை பற்றின வெறுப்பின் காரணமாக, இந்தியா 0.1 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதம் வரையிலான ஜிடிபி இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் முடிவு, இந்திய வயது வந்தோர் அவர்களது படுக்கையறையில் இணக்கமாக என்ன செய்கின்றனர் என்பதை கட்டுப்படுத்தும் அதிகார நிலையை அடையாளப்படுத்துகிறது, பிரிவு 377, அரசியலமைப்பு உரிமைகளான, கண்ணியம், தனியுரிமை மற்றும் சமத்துவத்தினை பேணும் கட்டுரைகளான 14, 15 மற்றும் 21 ஆகியவற்றை மீறுகிறது. அதன் முடிவின் அர்த்தம், வயது வந்தோர் ஒப்புதலுடன், பாலினம் மற்றும் பால் பண்பு எதுவாக இருப்பினும், அனைத்து இணக்கமான உடலுறவும், இப்போது சட்டபூர்வமானது. தவறான தகவல்களை பெற்ற சமூக வலைதள விமர்சகர்கள் குற்றஞ்சாட்டும், கட்டாய உடலுறவு, விலங்குகளுடன் உடலுறவு, பெடோபிலியா அல்லது பெடரஸ்ட்டி ஆகியவற்றுக்கு, இது பொருந்தாது.
2013-ல், உச்சநீதிமன்றம், தாராளவாத டில்லி உயர்நீதிமன்றத்தின், பிரிவு 377-ல் தடுமாறி வழங்கிய தீர்ப்பினை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிறகு, சொர்க்கம் வீழ்ந்துவிடவில்லை; இந்திய சமூகம் தகர்ந்துவிடவில்லை. ஆனாலும், குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவர்கள், முடிவை திரும்பப்பெற மனு அளிக்க, 2013-ல் இறுதியாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை தள்ளுபடி செய்தபோது, இந்தியாவில் திருனர் உரிமைகளுக்கான கடிகாரம் மீண்டும் திருப்பிவைக்கப்பட்டதில் வெற்றிபெற்றது.
பல இந்தியர்களைப்போல, நான் 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பினை இந்தியாவின் பொறுப்புகளான, பல அடையாளங்களை தழுவி வழங்கப்படுகிற, அடிப்படையால் பாலியல் சார்பு உட்பட, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு முரணானதாக கண்டறிந்தேன். அதனால், டிசம்பர் 2015-ல் பிரிவு 377 திருத்தப்பட மற்றும் அவர்களது பாலினம் எதுவாக இருந்தாலும், வயதுவந்தோரின் இணக்கமான உடலுறவு குற்றமற்றதாக்கப்பட, ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த முயன்றபோது, ஆளுங்கட்சியின் குரல் பிரிவு ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள், என் முயற்சியை, பாராளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தும் முன்பாகவே தோற்கடித்துவிட்டனர். மார்ச் 2016-ல் நான் மறுமுறை முயன்றபோதும் அதுவே நடந்தது. அந்த மசோதாவில் என்னுடைய தனிப்பட்ட அக்கறை பற்றி மரியாதையற்ற வன்மையான கருத்துக்கள் கூறப்பட்டது, அதற்கு நான் விலங்குகளின் உரிமைகளை பாதுகாக்க, ஒருவர் பசுவாக தான் இருக்கவேண்டும் என்பதில்லை என பதிலளித்தேன்.
பி.ஜெ.பி-யின் வாக்கு பல மட்டங்களிலிலும் பொருத்தமற்றதாக இருந்தது, ஆனால், அதன் ஆயிரக்கணக்கான நிராகரிப்புகள் மிக வெளிப்படையாக, பிரிட்டிஷ் காலனித்துவ சட்டத்திற்கு சாதகமான இந்திய நடைமுறைதான் (அதில் பிரிட்டிஷார் கூட வளர்ச்சியடைந்துள்ளனர்). பாலின வேறுபாட்டை நோக்கிய இந்திய பண்பாடு, தாராளவாத வரலாற்றை கொண்டிருக்கிறது, பாலின ஹெட்ரோடாக்சியின் துன்புறுத்தல் அல்லது வழக்கினை, புராணம் அல்லது வரலாறு வெளிப்படுத்துகிறது. உண்மையில், இந்து காவியங்கள், புள்ளி வைத்து காட்டும் கதாபாத்திரங்களான, மகாபாரதத்தில் பிறக்கும்போது பெண்ணாகவும், பிறகு ஆணாகவும் மாறிய சிக்கண்டி; பல இந்துக்கள் வழிபடும், பாதி-ஆண், பாதி-பெண் ஆன அர்த்தநாரீஸ்வரர், மற்றும் ஓரினச்சேர்க்கை செயல்களை சித்தரிக்கும் இந்தியா முழுவதும் உள்ள கோவில் சிற்பங்கள். ஆனால் பி.ஜெ.பி, இந்து பேரினவாத கட்சி, இந்த இந்து பாரம்பரியத்தினை தவிர்ப்பதை தேர்வு செய்கிறது.
2013-ல் பிரிவு 377-ஐ மறுமுறை உறுதிப்படுத்திய அதன் தீர்ப்பில், அதன் விதியினை, நீதிபதிகள் அல்ல, சட்டமன்றத்தோர்தான் முடிவு செய்திடும்படி, உச்சநீதிமன்றம் கூறியது. துரதிர்ஷ்டவசமாக, பாராளுமன்றம் இந்த பணியில் அதன் சமமற்ற நிலையை அதுவே நிரூபித்தது; ஆளுங்கட்சியின் விடாப்பிடித்தனமும் ஓரினச்சேர்க்கை எதிர்ப்பும் மற்றும் எதிர்க்கட்சியின் மீதான அதீத அலட்சியமும், பாரபட்சமும், இந்த பிரச்சனையில், நிலையத்தினை, போலித்தனத்தனமான கோவில் போல் காண்பித்தது. உண்மையில், பிரிவு 377-க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்டமன்ற உதவி, பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கும் வரை கிடைத்திருந்திருக்காது.
சட்டமன்ற வழிகள் மூலம், பிரிவு 377-ஐ நீக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ, நான் செய்த என்னுடைய வெற்றியடையாத முயற்சிகளை கைவிடும்போது, நல்ல உணர்வு நீதித்துறையில் மேம்படுத்தப்படும் மற்றும் இந்த ஏற்பாடு இறுதியில் நீதிமன்றங்களால் விவாதிக்கப்படும் எனும் நம்பிக்கையை நான் வெளிப்படுத்தியிருந்தேன். அனைத்திற்கும் பிறகு, அதே சமயம் சட்டமன்ற ரீதியான மாற்றத்திற்கு அரசியல் தைரியம் தேவைப்படும்—நடப்பு இந்திய அரசிடம் தரம் மிகவும் குறைவு—நீதித்துறை அந்த மாதிரியான பரிசீலனைகளினால், தடுக்கப்படுவது இல்லை.
இந்திய உச்சநீதிமன்றம், ஒரு முன்மாதிரியான சட்டங்களை விளக்கும் பதிவினை, நாட்டில் மனித உரிமைகளை விரிவடையவைக்கும் விதத்தினை இன்றைய நற்செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இச்சட்டம் மூலம், அரசியலமைப்பு உள்ளடக்க மதிப்புகளான, தனியுரிமை, சமத்துவம், கண்ணியம் மற்றும் அனைத்து குடிமகன்களுக்கும் பாகுபாட்டின்மை போன்றவற்றை உச்சநீதிமன்றம் தொடர்ந்து நிலைநிறுத்தும் என நம்பிக்கை இருக்கிறது. இன்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், பிரிவு 377-க்கு எதிரான மனுக்கள் விசாரித்த நீதிபதிகள் அமர்வில் ஒருவரான, நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நாரிமன் கூறிய மிகவும் மகிழ்ச்சியூட்டும் வார்த்தைகள்: ‘அதிக வாக்குகளால் பெற்ற, பெரும்பான்மை அரசு ரத்து செய்திடாத, சட்டங்களை நீக்குவதற்கான நீதிமன்ற அதிகாரத்தினை வழங்குவது, அடிப்படை உரிமைகளின் ஒட்டுமொத்த பொருளாகும். நாங்கள் பெரும்பான்மை அரசு சட்டங்களை நீக்குவதற்காக காத்திருக்கவில்லை. ஒரு சட்டம் அரசியலைப்பிற்கு எதிரானது என்றால், அதை நீக்குவது நீதிமன்றத்தின் கடமையாகும்.’
மாற்று—இந்திய சட்டம், நமது சில மக்களுக்கு, இரும்பு கூண்டை போல சேவை செய்ய அனுமதிக்கிறது—இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக அமையப்பெற்றுள்ள அடையாள மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றை அது நேரிடையாகவே சிதைக்கிறது. அதற்கு மேலும், மீதமுள்ள சர்வதேச சமூகத்துடன், இந்தியா ஒரு படி வெளியே தள்ளப்படும், உலகின் பிற ஜனநாயகத்திற்கு முன்னால் நாடு தர்மசங்கடப்படும். LGBT சமூகத்தினருக்கு மட்டுமல்ல—உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயகவாதிகளுக்கும் நன்றி – அவர்கள் பெருமையுடன் தங்கள் சிரத்தினை நிமிர்த்திக்கொள்ள முடியும், மற்றும் இன்று கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும் நடமாட முடியும்.
சசி தரூர், இந்திய பாராளுமன்ற உறுப்பினராவார் மற்றும் இது எழுத்தாளர் தரூரின் சொந்த கருத்தாகும்.
Web Title: The Views of Shashi Tharoor About Section 377 Law, Tamil Article
Featured Image Credit: indiasopinion