Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

டொலர்களை விழுங்கிய தாமரை கோபுரத்தின் மறைக்கப்பட்ட கதை!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரத்தை கட்டுகின்றோம் எனக்கூறி சீனாவிடம் கடன்களை வாங்கிக் குவித்து உருவான தாமரைக் கோபுரம் திறக்கப்பட்டு இப்போது மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில், இது வரை தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு இது திறந்து விடப்படவில்லை, மாறாக
கிறிஸ்மஸ் மற்றும் வெசாக் தினமென விசேட தினங்களில் மட்டும் அதன் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இம்மாதம் 15ம் திகதி கட்டணத்துடன் பொது மக்கள் பாவணைக்கு திறக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

article

தன் கவிதைகளுக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் !

அஹ்னாஃப் ஜசீம் இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆவர். 2017 ஆம் ஆண்டில், மாணவராக ஜசீம் தனது முதல் புத்தகமான நவரசம் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் தனது படிப்பை முடித்து புத்தளத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் இலக்கியம் கற்பிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16, 2020 அன்று, அவரது கவிதைகள் மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) மன்னாரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் அவரது தொலைபேசி, மடிக்கணினி மற்றும் அவரது புத்தக அலுமாரிகளை சோதனை செய்த பின், சுமார் ஐம்பது புத்தகங்களையும், நவரசத்தின் பல நூறு பிரதிகளையும் பறிமுதல் செய்தனர். மூன்று நாள் விசாரணைக்குத் தயாராகுமாறு மட்டுமே அவரிடம் கூறியிருந்த நிலையிலேயே.கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

article

அருந்தும் பாலிலும் அரசியல்

இன்று நமக்கான பால்மா வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில்” பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே ” என கருத்திடுவதை பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது . ஆனால் இது எந்த அளவு சாத்தியம் ?

article

கழுத்தை நெறிக்கும் கடன் சுமையினை சமாளிப்பது எப்படி?

முன்பு எப்போதையும் காட்டிலும் இப்போதெல்லாம் கடன் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன என்றால் மிகையில்லை. கடன் கொடுப்பதற்க்கென்றே வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து இழுக்கின்றன வங்கிகள். தொலைக்காட்சிகளில் சரிபாதி விளம்பரங்கள் வீட்டுக்கடன், வாகனக்கடன் வழங்குவது பற்றியே. இதுதவிர தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவ செலவு என அனைத்து வகைகளிலும் கடன் வாங்குவதென்பது இன்று அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்களுக்கான இன்ஸ்டால்மெண்ட், கிரெடிட் கார்ட் போன்றனவும் கடனுடன் சேர்ந்தவையே. ஆக, கடனில்லாத ஒரு வாழ்க்கைய வாழ முடியாது என்பது இன்றைய நியதியாகிப்போனது போலும்! பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, ஒரு சராசரி குடும்பம்கூட ஏதாவது ஒருவகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும் என்பது இன்றைய யதார்தமாகியுள்ளது என்பதை இங்கு எத்தனைபேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

article

“உலகத்தின் முடிவு” என அழைக்கப்படும் ஹோர்ட்டன் சமவெளி! வாழ்வில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டியஇடம்!

நகரத்தின் இறுக்கத்திலிருந்து வெளியே வர நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்டதோர் அழகிய இயற்கை வெளியில் தொலைந்து போக வேண்டும்! வாழ்வில் ஒருமுறையேனும் பயணப்பட வேண்டிய இடங்களை உள்ளடக்கிய உங்கள் Bucket List இல் இந்த இடத்தையும் இன்றே இணைத்துக்கொள்ளுங்கள்… மனதை கொள்ளையிடும் ஹோர்டடன் சமவெளியின் அழகினை பற்றி அறிய வேண்டுமா? இந்த கட்டுரையினை முழுமையாக வாசியுங்கள்

article

சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலை குறித்த ஈரான்!

1988ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான “The Satanic Verses ” அதாவது “சாத்தானின் வசனங்கள்” என்கிற நூலுக்காக ஏராளமான கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர்.

article

இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கும் தொடர் போராட்டம் !

இலங்கையில் 3 தசாப்தங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கானோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். பல்வேறு காரணிகளால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் பல வலுகட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

article

இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்த “கதர் இயக்கப் போராட்டம் “

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமும் அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைதான் இந்த கதர் ஆடை. இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், இந்திய பொருளாதாரத்தின் எழுச்சிகளுள் ஒன்றாக இருந்த “கதர் ஆடை இயக்கப் போராட்டம்” பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

article

கதிர்காம திருவிழாவின் போது மாத்திரம் இயற்கையாகவே தோன்றும் திருநீறு!

உலகிலேயே இயற்கையான திருநீறு உள்ள ஒரே இடம்!

எம் நாட்டில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து கோவில்களிலும் இறையருள் வேண்டி வரும் பக்தர்கள், இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொள்வது வழக்கமாகவே உள்ளது. திருநீறு , விபூதி எனவும் அழைக்கப்படுகின்றது. கதிர்காமத்தில் “கபு” (பூஜை செய்பவர்) தெய்வ ஆசீர்வாதத்தினை பெற்ற திருநீற்றை பக்தர்களின் நெற்றியில் பூசுவார். இத் திருநீறு எனப்படும் புனித பொடி போன்ற பாறைத் தூள் இயற்கையாக கிடைக்கப்பெரும் ஒரே இடம் கதிர்காமம் என்பது குறிப்பிடத்தக்கது.

article

இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?

சீனாவின் ‘Yuan Wang 5’ எனும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நாளை (ஆகஸ்ட் 11, 2022) வருக்கின்றது எனும் தகவல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதென்றே கூற வேண்டும்.

article

வடக்கிலிருந்து கதிர்காமத்திற்கு… பக்தியின் பாதயாத்திரை

யாழ்ப்பாணம், நாகதீபம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக வரும் பக்தர்கள் உகந்தை முருகப் பெருமானுக்கும், கதிர்காமக் கடவுளுக்கும் வணக்கங்களையும், வழிபாடுகளையும் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் காட்டு வழிக்குள் நுழைகின்றனர். மற்றுமோர் குழு மட்டக்களப்பு, கோமாரி, அம்பாறை, பொத்துவில், அறுகம்பே ஊடாக பானம வந்தடைகின்றது.

article

இலங்கைக்கு இப்போது தேர்தல் அவசியமா?

மாகாண சபைத் தேர்தலினை இந்த சந்தர்ப்பத்திலும் நடத்த முடியும் அதற்காக விடயப் பொறுப்பு அமைச்சரின், அரசாங்கத்தின் அனுமதியும் தேவையும் மாத்திரமே அவசியம். காரணம் காலாவதியாகிவிட்ட மாகாண சபை தொடர்பில் ஏற்கனவே பல்வேறுபட்ட சர்ச்சை நிலைகள் காணப்படுகின்றன. அரசியல் கட்சிகளும் இத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தீவிரமாக உள்ளன.

article

End of Articles

No More Articles to Load