பொன்னி நதி பாடலின் பின்னணி தெரியுமா உங்களுக்கு ?
பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் ஆறு தசாப்தகால கனவு என்றே சொல்லலாம். இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இருபாகங்களுக்குமான படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவுபெற்று பின்னணி மெருகூட்டல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான DOLBY ATMOS ஒலிக்கலப்பு பணிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பிரபல ஒலிக்கலவை வல்லுனரான Greg Townley தலைமையில் இடம்பெற்று வருகிறது. இவர் 1917, Avengers : Endgame, Blade Runner 2049 மற்றும் Dune ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்நிலையிலே தான் படக்குழுவானது திரைப்படத்தின் முதற்பாடலை அண்மையில் வெளியிட்டது.