எகிப்தில் கிளியோபாட்ரா – VII வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனால் அவள் குறித்த புதிர்கள் உலகில் இன்றுவரை ஓயவே இல்லை. அவளது பிறப்பு, இருப்பு, இறப்பு, அந்த பேரழகு, காதல், திருமணம், வாரிசுகள், என அவள் வாழ்வியல் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையுடையதாக காணப்படுகிறது.