நவீன தந்தைத்துவ வரையறை (Modern Fatherhood ) உருவாக்கும் தாக்கங்கள்.
உலகெங்கிலும் உள்ள தந்தையர், தமது (traditional gender roles) பாரம்பரிய பாலின பாத்திர வரையறைகளை உடைத்தெறிந்து, தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் அவர்களின் வளர்ச்சிப் பாதையில் தீவிரமாக பங்கேற்பதற்காகவும் செயற்பட்டு வருவது தெளிவாகின்றது. இந்தப் போக்கானது பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் விரிவான நன்மைகளையே வழங்குகிறது. தந்தையரின் மாறிவரும் இவ் வரையறைகளையும் மற்றும் தந்தையர் தம் குழந்தைகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் இந்தத் தந்தையர் தின சிறப்புக் கட்டுரைக்காக ஆராய விளைகிறோம்.