2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, இலங்கை கோழிப்பண்ணை தொழில்துறையானது 1,963 மில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட 2,934 மில்லியன் முட்டைகளுடன் ஒப்பிடுகையில் 34 வீழ்ச்சியாகும்.
இந்நிலை குறித்து கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ‘இது தொழில்துறையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, 2023 ஆம் ஆண்டில் முட்டை மற்றும் கோழி பண்ணை தொழிந்துறைக்கு மிகுந்த சவாலதன கால கட்டமாக அமையும். ஏனெனில் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் அவற்றிற்கான தீவனங்களின் அளவு பெருமளவில் குறைக்கப்படவுள்ளதால் இந்த பிரச்சினை மேலும் வலுப்பெற வாய்ப்புண்டு.
2021 ரசாயன பசளைகளுக்கான தடை காரணமாக கால்நடை தீவன உற்பத்தி கனிசமான அளவு குறைவடைந்துள்ளது அதுமட்டுமின்றி நாடு எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி, நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இவ்வாறான காரணிகளால் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழிற்துறை பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதுடன் 2023ம் ஆண்டு இதனையும் விட பாரிய சவால்களை இத்தொழிற்துறை எதிர் நோக்க வேண்டி வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.