இந்தியாவில் ஜல்லிக்கட்டு இழுபறி !! – ஸ்பெய்னில் கோலாகலக் காளைச்சண்டை

ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், PETA, விலங்குகளின் மீதான ஜீவகாருண்யம், பாரம்பரியங்கள்,விலங்கு வளர்ப்பு என்றெல்லாம் பேசப்படும் இந்தக் காலத்தில், இந்தியாவில் தமிழரின் ஆதிகால வீர விளையாட்டுகளில் ஒன்றான காளையடக்குதல் – ஏறு தழுவுதல் எவ்வாறு தமிழ்ப்பாரம்பரியத்துடன் நெருங்கி நிற்கிறது என்பதை வீராவேசமாகவும், உணர்ச்சிமயமாகவும் ஜல்லிக்கட்டுக்காகப் போராடி வருவோர் உலகுக்கு அறிவித்துவரும் நிலையில், இன்னும் ஒரு பக்கம் தமிழரின் பண்டைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும்  ஸ்பெய்னின் பிரபலமான வீர விளையாட்டான காளையடக்குதல் – காளைச்சண்டைக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்கள், பல்வேறு இடங்களின் மூலம் பரவிவருகின்றன.

காளைச்சண்டை – ஏறு தழுவுதல் – தமிழகம், ஸ்பெயின் என்று ஒற்றுமை, வேற்றுமைகளைப் பலரும் அலசி, ஆராயும் காலகட்டத்தில் ஸ்பானியாக் காளைச்சண்டை பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை.

(i2.mirror.co.uk)

ஸ்பானிய சுற்றுலா அமைச்சின் உத்தியோகபூர்வத் தகவல்களில் 1700களில் இருந்தே, கட்டமைக்கப்பட்ட காளைச்சண்டைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. (i2.mirror.co.uk)

தமிழரின் ஏறு தழுவுதல் மிக நீண்ட வரலாறு கொண்டதும், சங்க இலக்கியங்கள் முதல் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டு வந்ததுமாகும். ஆனால், ஸ்பானிய காளைச்சண்டையின் வரலாற்றுக் காலம் சில நூறு ஆண்டுகள் என்றே பதியப்பட்ட உறுதியான சான்றுகள் கூறுகின்றன. 1100களில் ஸ்பெயினில் ஆரம்பித்த இந்தக் காளைச்சண்டைக் கலாசாரம், அப்போதைய மத்திய கால ஐரோப்பாவின் வேறு பல நாடுகளிலும் பொழுதுபோக்கின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. தென் பிரான்ஸ், போர்த்துக்கல் போன்ற இடங்களிலும் காளைச்சண்டைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஸ்பானிய சுற்றுலா அமைச்சின் உத்தியோகபூர்வத் தகவல்களில் 1700களில் இருந்தே, கட்டமைக்கப்பட்ட காளைச்சண்டைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

1700 களிலிருந்துதான் நவீன ஸ்பானிஷ் காளைச்சண்டை வழக்கத்தில் உள்ளது. அப்போது ஆண்கள் வெறுங்காலுடன் களமிறங்கியே காளைகளை கட்டுப்படுத்தினர்.

எனினும் காளை அல்லது வீரன்இறந்தபின்னரே போட்டி முடிவுக்கு வரும். இது சில காலத்தின் பின்னர் மாற்றப்பட்டது. அதுவரையில், காளையடக்கும் காளைச்சண்டை குதிரையின் மேல் தான் முற்றிலும் நடக்கும். குதிரை வீரர்கள் காளையை வெல்வது என்பது ஓரளவு இலகுவென்பதால், ஒரு மனிதன், ஒரு கேப் (தடுக்கும் கேடயம்) மற்றும் ஒரு வாள் கொண்டு, ஒரு காளையைப் போராடி அடக்குவது கூட்டத்தை கவர்ந்தது. விரைவில் இந்த விந்தையைக் காண அரங்கங்கள் திறக்கப்பட்டன. மிகப்பிரமாண்டமான அரங்கங்கள் வார இறுதி நாட்களில் நிறைந்திருக்கும். காலப்போக்கில் இந்தக் காளைச்சண்டை ஸ்பெயினின் அடையாளமாக மாறியது.

ஸ்பெய்ன் பாணியிலான காளைச்சண்டை ஒரே நேரத்தில் மூன்று காளையடக்கும் வீரர்கள் (matadores) தலா இரண்டு காளைகள் வீதம் மொத்தம் 6 காளைகளை வாளும் கேடயமும் கொண்டு அடக்குவதாகும். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு உதவியாட்கள் இருப்பார்கள். குதிரைகளை பார்த்துக்கொள்வோர், மாற்று வாளினை தயார் செய்து வைத்திருப்போர் போன்றோரும் அடங்குவர்.

(c.o0bg.com)

Banderillero என்றழைக்கப்படும் சக காளையடக்கும் வீரர்களுடன் பிரதானமான matador – இவர் தான் இறுதியாகக் காளையைக் கொல்லவேண்டியவர். ,(c.o0bg.com)

போட்டியாளர்களின் பங்களிப்பு, ஆடைகள், ஆயுதங்கள் மட்டுமில்லாமல், விளையாடவிடப்படும் காளைகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. 4 முதல் 6 வயதுடையவையாகவும், 460 கிலோகிராமுக்கு குறையாத எடையுடையவையாகவும் இருக்கவேண்டும். ஸ்பெயினில் ஆரம்பித்த இந்த நவீன காளையடக்கும் விளையாட்டானது பின்னர் ஸ்பானியக் காலனித்துவ நாடுகளான மெக்சிக்கோ, பிரேசில், கொலம்பியா, ஈக்குவடோர், வெனிசுவேலா, பெரு போன்ற நாடுகளிலும் பரவியது. மிகப்பெரும் பணப்பரிசுகள், வருடாந்த வெற்றிக்கிண்ணங்கள், திருவிழாக்காலப் போட்டிகள் என்று கலாசாரத்தின் ஓரங்கமாகவே இந்த நாடுகளில் காளைச்சண்டை மாறிப்போனது.

பெரும்பான்மையாக ஆடப்படும் இந்த வகை ஸ்பானியக் காளைச்சண்டைகளில் காளைகள் கொல்லப்படுவதாக இருந்தாலும், Recortes என்ற இன்னொரு வகை காளைச்சண்டையில் இரத்தக் காயங்களோ, காளைகளின் மரணங்களோ இடம்பெறுவதில்லை. காளைகள் – ஜல்லிக்கட்டைப் போல, போட்டி முடிந்தவுடன் தமது இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்படும். வீரர்களும் பாரம்பரிய உடையணியத் தேவையில்லை. சாதாரண ஆடைகளை அணிந்தே காளைகளை பிடிக்கலாம்.

(edia.npr.org)

ஸ்பெய்னின் சுயாட்சியுடைய பிரதேசமான கட்டலோனியாவும் பல இழுபறிகள், வழக்குகளுக்குப் பிறகு 2009இல் காளைச்சண்டைக்கு முற்றாகத் தடை விதித்தது. (edia.npr.org)

பாரம்பரிய விதிமுறைகள் இல்லாத காரணத்தால் விரும்பிய வகைகளில் காளைகளை அடக்கலாம். சாகசங்களையும் காண்பிக்கலாம். அணிகளாக இந்த விளையாட்டு சில போட்டிகளில் நடைபெறும்போது புள்ளிகளை நடுவர்கள் வழங்குவார்கள். இது ஸ்பெய்னின் வலென்சியா, நவரா, லா ரெஜோய்சா போன்ற சில பிரதேசங்களில் விளையாடப்பட்டு வருகிறது. எனினும் பெரியளவு வரவேற்பு இல்லை. இதன் வேறுபட்ட வடிவங்கள் நகைச்சுவையாகவும் பல்வேறு இடங்களில் விளையாடப்படுகின்றன.

எனினும் ஜீவகாருண்ய அமைப்புக்களும் விலங்குரிமை அமைப்புக்களும் காலத்துக்குக் காலம் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தடை செய்யுமாறு குரல் எழுப்பிக்கொண்டே இருந்தன. அதை சட்டவிரோதம் என அறிவித்துத் தடைசெய்தால், நாடே நிலை குலைந்துவிடுமென ரசிகர்கள் இன்றும் கூறுகிறார்கள். ஸ்பெய்னின் சில நகரங்களில் இடைக்காலத் தடை தீர்ப்பானபோது, தமிழகத்தில் எவ்வாறு இளைஞர்கள் வெகுண்டு எழுந்தார்களோ, அதேபோல ஸ்பெய்னிலும் ஒரு கிளர்ச்சி எழுந்தது. நீதிமன்றங்களுக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான அரசியல் இழுபறியாகவும் இந்த விவகாரம் சில மாகாணங்களில் இருந்தது.

ஸ்பானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஆர்ஜென்டீனா,கோஸ்டா ரிக்கா, கியூபா போன்ற நாடுகள் பின்னாட்களில் காளைச்சண்டைகளைத் தடை செய்தன. ஸ்பெய்னின் சுயாட்சியுடைய பிரதேசமான கட்டலோனியாவும் பல இழுபறிகள், வழக்குகளுக்குப் பிறகு 2009இல் காளைச்சண்டைக்கு முற்றாகத் தடை விதித்தது.

எனினும் வன்முறையற்ற Recortes வகைக் காளைச்சண்டைக்கு இன்னமும் அனுமதியிருந்து வருகிறது. அப்படியிருந்தும் கடந்தாண்டில் காளைச்சண்டைக்கு ஆதரவாக எழுந்த மாபெரும் ஸ்பானியக் கலாசாரக் குமுறலை அடுத்து – காளைச்சண்டையை எதிர்த்த விலங்கு நல  அமைப்புக்கள்,முக்கியமாக PETA போன்றவை முடக்கப்பட்டன. ஸ்பானிய உச்ச நீதிமன்றமும் கட்டலோனியா மாகாணத்தைக் கண்டித்து, ஸ்பெய்ன் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காளைச்சண்டையை ஒரு பிராந்தியம் மட்டும் தடைசெய்தது தவறு என்று தீர்ப்பு வழங்கியது.

(glaeserfoto.files.wordpress.com)

உலாசப்பயணிகளுக்கு இன்னும் ஸ்பெயினின் காளைச் சண்டைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன rfoto.files.wordpress.com)

எனினும் விலங்கு நலன்களை முன்னிறுத்தும் அமைப்புக்கள் விடுவதாக இல்லை. கட்டலோனியாவில் மட்டுமன்றி ஸ்பெய்ன் முழுவதும் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து விலங்கு ஆர்வலர்களை ஒன்றாகத் திரட்டி ஸ்பெய்ன் முழுவதிலுமே பல பேரணிகளை நடத்தியிருந்தது. காளைச்சண்டைக்கு ஆதரவாக எழுந்த குரல்களுக்கு இணையாகவே, காளைச்சண்டையைத் தடைசெய்யுமாறும் ஒலித்தன.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்பெய்னின் தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் – குரூரத்தனம் கொண்ட இந்த காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை முற்றாக நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த இழுபறிகளுக்கு மத்தியில் இன்னும் ஸ்பெயின் தன்னுடைய கலாசார அடையாளமாகவும், தேசிய விளையாட்டுக்களில் ஒன்றாகவும் (சட்ட ரீதியாக அல்ல) காளைச்சண்டையை உல்லாசப் பிரயாணிகளுக்கு அடையாளப்படுத்தியே வருகிறது.

Related Articles

Exit mobile version