உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க் அவர்கள் தற்போது ட்விட்டர் தளத்தின் உத்தியோகபூர்வ உரிமையாளராக இருந்து வருகிறார். இவ்வாண்டு ஏப்ரல் 14ம் திகதி தொடங்கிய எலோனின் ட்விட்டர் கையகப்படுத்தல் சில வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து ஒக்டோபர் 27ம் திகதி பூர்த்தியடைந்தது.
டெஸ்லா நிறுவனத்தின் துணை ஸ்தாபகர் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே, ட்விட்டர் நிறுவனத்தின் நீண்டகால ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பணியிலிருந்து அகற்றப்பட்டனர். பெருமளவு பயனர்கள் தளத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர், மேலும் பேச்சு சுதந்திரம் குறித்து நோக்கும் பொது உலகம் முழுவதும் போலி தகவல்கள் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் உண்டாக்கிய வண்ணம் உள்ளது.
ட்விட்டர் தளத்தின் இந்த நிலைமைக்கு என்ன தான் காரணம்?
இதற்கு முழுக்கமுழுக்க பொறுப்பு எலோன் மாத்திரமே என தற்போது பலரும் விரல் சுட்டுகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் எலோன் மேற்கொண்ட முடிவுகள் மற்றும் அவரது அணுகுமுறைகளை பார்க்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.
ஒக்டோபர் 28, எலோன் ட்விட்டரை பொறுப்பேற்ற அடுத்த நாளே அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் சாம் எட்ஜெட் உட்பட, டிவிட்டரின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் பதவி நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்குரிய தீர்வு காணும் வரையில், எந்தவொரு குறிப்பிடத்தக்க பதிவுக் கட்டுப்பாடு (content moderation) மற்றும் கணக்கு மறுசீரமைப்பு முடிவுகளையும் எடுக்கப்படாது என மஸ்க் தெரிவித்தார்.
நவம்பர் 4 அன்று ட்விட்டர் தனது 7,500 பேர் கொண்ட பணியாளர்களில் பாதியை குறைக்கும் முகமாக பணி நீக்கங்களைத் தொடங்கியது, எந்த வொரு ஊழியருக்கும் முறைமையான அறிவிப்புக்கள் வழங்கப்பட்டவில்லை. மாறாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு “ட்விட்டரில் உங்கள் பங்கு” என்று தலைப்பிடப்பட்டு “இன்றுதான் நிறுவனத்தில் உங்களின் கடைசி வேலை நாள்’ என்ற ஒரு மின்னஞ்சல் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் ட்விட்டர் நிறுவனத்தின் நிதியியல் செயற்பாட்டு நலனுக்காகவே என விளக்கமளித்தார் எலோன். எலோன் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்தார். அதன் போது அந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இலாபம் உழைத்திருந்தது. டிவிட்டரின் இந்த மோசமான நிதியியல் நிலைமையை சரிப்படுத்த என்னியெ ஊழியப்படையின் அளவை குறைத்துள்ளதாக மஸ்க் தெளிவுபடுத்தினார். ஆனால் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து டிவிட்டரின் போக்கு இன்னும் மோசமாகியுள்ளது.
Corporate Giant என அழைக்கப்படும் எலோனின் நடத்தைகள் மற்றும் எண்ணப்போக்குகள் குறித்து எப்போதுமே கோப்பரேட் உலகில் சர்ச்சைக்குரிய மானப்பாங்கே நிலவிவருக்கிறது. எனவே மஸ்க் ட்விட்டர் தளத்தை பொறுப்பேற்ற உடனேயே டிவிட்டருடன் விளம்பர பங்காளர்களாக இருந்த பல நிறுவனங்கள் ட்விட்டர் தளத்துடனான தங்களின் வியாபார ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. ட்விட்டர் தளத்தின் பெரும்பான்மை வருவாய் ஆதாரமாக உள்ளது விளம்பர வருவாயே. எனவே இந்த நடத்தி எலோனுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது.
இந்த இழப்பை ஈடுகட்ட எண்ணிய எலோன் புதிய ட்விட்டர் நடைமுறை சிலவற்றை நடைமுறைக்கு கொண்டுவந்தார், அதில் முக்கியமானது ட்விட்டர் Blue. மாதாந்த கட்டண சேவையாக அறிமுகமாகும் இந்த ட்விட்டர் Blueவில் சில சிறப்பம்சங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது ட்விட்டர் தளத்துக்கான blue check mark ஆகும். பொதுவாக ட்விட்டர் தளத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்/நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த blue check mark அங்கீகாரத்தை மாதோன்றுக்கு $8 என்ற அடிப்படையில் யாற வேண்டுமானாலும் பெறலாம் எனும் புதிய நடைமுறை பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியது. சில தனிநபர்கள் பிரபலமான பல நபர்கள் மாறும் நிறுவனங்களின் பெயர்களில் போலி கணக்குகளைத் திறந்து அதில் 8 டொலர் கட்டணத்துக்கு blue check mark குறியீட்டை பெற்று தவறான தகவல்களை ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினார்கள். அதில் குறிப்பிடத்தக்கது Eli Lilly and Co எனும் பிரபலமான இன்சுலின் விநியோக மருத்துவ நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கனக்கே. இந்த போலிக் கணக்கு இனிமேல் இன்சுலின் இலவசமாக வழங்கப்படும் என கூறியதன் விளைவாக Eli Lilly and Co, நிறுவனத்துக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போலி கணக்குகளை கண்டறிந்து முடக்கும் செயற்பாடு தற்போது நடைபெற்று வந்தாலும் இப்பிழையின் விளைவு வியாபார உலகில் பல்வேறு தீவிளைவுகளை உண்டாக்கிவிட்டது என்பது மறுப்பதற்கில்லை. இறக்கும் சர்ச்சைகளுக்கு மேலதிகமாக தற்போது எலோன் 2021 ஜனவரி மாதம் ட்விட்டர் தளத்தில் இருந்து முடக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் கணக்கை குறித்து இரு தனங்களுக்கு முன்னர் ட்விட்டரில் கருத்துக் கணிப்பொன்றை நாடாத்தினார். அதன் வாக்குகளின் பிரகாரம் நேற்று 21 நவம்பர் அன்று டிரம்ப் அவர்களின் கணக்கு முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. 2021 ஆரம்பத்தில் அமெரிக்க தலைநகரின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அது சார்ந்த வன்முறைகள் குறித்து சாதகமான கருத்துக்களை பகிர்ந்து வன்முறைகளை ஊக்குவித்ததன் விளைவாக டிரம்ப் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன வியாபார உலகில் பல மைல்கற்களை அடைந்து சாதனை மனிதனாக விளங்கிய எலோன் தற்போது ட்விட்டர் விவகாரத்தில் தனது செல்வாக்கையும், செல்வத்தையும் இழந்து வருகிறார் என்பதே உண்மை ஆகும். ஒரு மனிதர் வெற்றியாளர் என்பதனால் மாத்திரமே அவர் தொட்டதெல்லாம் துலங்கும் என்று எண்ணக்கூடாது என்பதற்கு எலோன் வாழும் உதாரணமாக அமைக்கிறார்.