Venture Engine 2017  ‒ உங்கள் வியாபாரத்தை புதிய தொடுவானை நோக்கி கொண்டு செல்லல்

ஒரு தொழில்முனைவாளர் என்ற வகையில், புதிய வியாபாரமொன்றை ஆரம்பிப்பது பெருமளவு கடினமான ஒரு விடயமாக இருக்கலாம். முதலீட்டாளர்களைத் தேடிக்கொள்வதில் உள்ள தடைகளை வெற்றிகொள்வதும், வியாபாரமொன்றை நடாத்திச் செல்வதற்கான அனுபவத்தை பெறவும், வியூகங்களை கற்றுக்கொள்ளவும், புதிதாக நுழைந்துள்ள துறையில் ஒரு வியாபாரத்தை நிலையாக்கிக்கொள்வதற்கும் சற்று உழைக்க வேண்டும். எவ்வாறாயினும், தொழில்முனைவாளர்களுக்கு தமது வியாபாரங்களை உயிரூட்டுவதற்குத் தேவையான பிரதான அடிப்படையை தயாரித்து வழங்கவும், தற்போது சுய முயற்சியால் வியாபாரத்தை வளர்த்திருக்கும் அளைவ விட, தமது வியாபாரத்தை விஸ்தரிப்பதற்குமான தளத்தை தயாரித்து வழங்குவதற்குமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் உள்ளது.

Venture Engine என்பது இவ்வாறான ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும். 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்முனைவு நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாவது, வியாபாரங்களை உருவாக்குவோருக்கு வெற்றிகரமான வியாபாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு தளங்களிலும் தேவைப்படுகின்ற உதவிகளை வழங்குவதாகும்.

இந்த Venture Engine நிகழ்ச்சித்திட்டமானது Blue Ocean Ventures மற்றும் Indian Angel Network ஆகிய வியாபார வலையமைப்புக்களின் ஒத்துழைப்பில் ஆரம்பிக்கட்டதாகும். இந்த நிகழ்ச்சித்திட்டமானது முதலீட்டாளர்களை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. அத்தோடு, முன்னணி முதலீட்டாளர்கள், தொழில்முனைவாளர்கள் மற்றும் நிபுணர்களினால் நடாத்தப்படும் பயிற்சிப்பட்டறைகளையும், ஆலோசனைகளையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் கொண்டிருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கெடுக்கும் வியாபாரங்கள், நிதியைப் பெற்றுக்கொண்டாலும், பெறாவிட்டாலும், பெறுமதிவாய்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளும்.

தொழில்முனைவாளர்கள் தமது கருத்துக்களை, முதலீட்டாளர்களிடம் நேரடியாக முன்வைத்து, அவற்றுக்குக் கிடைக்கும் பதில், ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, வியாபார திட்டங்களை முன்னேற்றுவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து தொழில்முனைவாளர்களும், மிகவும் வெற்றிகரமான வியாபாரத் திட்டங்கள் மற்றும் சிலபோது வியாபாரத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான மூலதனத்தையும் பெற்றுக்கொள்வர்.

Venture Engine 2016 தெரிவுக்குழு – படம் Daily Mirror

நிகழ்ச்சி நடைபெறும் விதம்

Venture Engine ஆனது கருத்து மட்டத்தைத் தாண்டிச் சென்றுள்ள வியாபாரங்களையே எதிர்பார்க்கின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்வதற்கு, இப்போது வருமானமீட்டுகின்ற மற்றும்/அல்லது இப்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்ற வியாபாரமாக இருக்க வேண்டும்.

இந்தத் தகைமைகள் இருக்கின்ற வியாபாரங்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த நிகழ்ச்சிததிட்டமானது பின்வரும் வகையில் நடைபெறும்.

  • திறந்த அழைப்பு – இந்த நிகழ்ச்சித்திட்டமானது, வியாபாரத் திட்டங்களை அனுப்புமாறு கோரி ஜூன் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமது வியாபாரங்களை முன்னேற்ற விரும்புகின்ற எவரும் இந்த நிகழ்ச்சித்தில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பை பெறலாம். விண்ண முடிவுத் திகதி ஆகஸ்ட் 9 ஆகும்.
  • தெளிவுபடுத்தல் – இவ்வாறு கிடைக்கின்ற வியாபாரத் திட்டங்கள், முதலீட்டாளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த வியாபாரத் திட்டங்களை முன்வைப்போர், தமது வியாபாரத்தை தெளிவுபடுத்துவத்காக இரண்டு நிமிடங்களைப் பெறுவர். இந்த வாய்ப்பை பெறும் வியாபாரத்திட்டங்கள் இத்தனைதான் என்ற கணக்கு காணப்படுவதில்லை.
  • பயிற்சிபட்டறைகள்- சிறந்த வியாபாரங்களுக்கு ஆலோசகருடன் பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டு, அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது.
  • இரண்டாம் சுற்று – பயிற்சிபட்டறையில் தாம் பெற்ற அறிவுடன், தமது வியாபாரத்தை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் முதலீட்டாளர்களிடம் முன்வைக்கும் வாய்ப்பை தொழில்முனைவாளர்கள் இச்சுற்றில் பெறுகின்றனர். சிறந்த வியாபாரங்கள், இறுதிச் சுற்றுக்காக தெரிவுசெய்யப்படும். இறுதிச் சுற்றில் பங்கெடுக்கும் வியாபாரங்கள் இத்தனைதான் என்ற கணக்கும் காணப்படுவதில்லை.
  • இறுதிப் போட்டி – தெரிவுசெய்யப்பட்ட தொழில்முனைவாளர்களுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழுவிடம், தமது வியாபார முன்மொழிவை முன்வைக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. பின்னர் கேள்வி – பதில் சுற்று நடைபெறும். இறுதியாக வெற்றிபெறும் சிறந்த மூன்று வியாபாரத் திட்டங்களுக்கு, பிரதான பரிசுகள் வழங்கப்படும்.
  • முதலீடு – இந்த நிகழ்ச்சித்திட்டம் முழுவதும், அதில் கலந்துகொள்ளும் தொழில்முனைவாளர்களை அடையாளம் கண்டு, அவர்களது வியாபாரங்களில் முதலீடு செய்வதற்கு, முதலீட்டாளர்கள் உற்சாகமூட்டப்படுவர். இறுதிச் சுற்றில் வெற்றிபெறுகிறார்களா? இல்லையா? என்பதை கருத்தில்கொள்ளாமல், தமது தெரிவின் அடிப்படையில் சிறந்த வியாபாரங்களில் முதலீடு செய்வதற்கு அவர்களுக்கு முடியும். தமது வியாபாரத்தில் யார் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிவு செய்யும் முழுமையான சுதந்திரமும் போட்டியாளர்களுக்கு உள்ளது.

Venture Engine 2014 நடுவர்கள் கலந்துரையாடல் – படம் Sunday Times

கலந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Venture Engine 2017 நிகழ்ச்சித்திட்டதில் கலந்துகொள்வதன் மூலம் மாத்திரம், தொழில்முனைவாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமான நன்மைகள் பல உள்ளன. இறுதிப் போட்டியில் மூன்று வியாபாரங்கள்தான் வெற்றிபெறுகின்றபோதும், இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், மிகவும் பெறுமதிவாய்ந்த பயிற்சி வாய்ப்புக்களையும், ஆலோசனைகளையும் பெற்று, தமது வியாபாரத்தை கட்டியழுப்புவதற்கான, அறிவை நன்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன:

  • வியாபார திட்டமிடல் குறித்த அறிவு.
  • முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு, வியாபாரத் திட்டங்களை எவ்வாறு அமைப்பது என்ற ஆலோசனை
  • முதலீட்டாளர்களை அணுகல்
  • வெற்றிகரமான தொழில்முனைவாளர்களுடனான வலையமைப்பு
  • அனுபவம்வாய்ந்த நிபுணர்களின் ஆலோசனை
  • வியாபார திட்டங்கள் குறித்த பதில்களை பெறல்
  • தனியார் பங்கு முதலீட்டாளர் சமூக உறுப்பினர்களை அணுகல்
  • ஊடக வெளிப்பாடு

இதில் நடைபெறும் பயிற்சிப்பட்டறையில், கணக்கியல், நிதியியல், மூலதனத்தை பெறும் முறை, பங்கு உடைமையாளர் உடன்படிக்கைகள், பெறுமதி மதிப்பீடு, வியாபார திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்டு புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஒருவருக்கு தேவைப்படுகின்ற பல்வேறு சட்ட ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்த அறிவைப் பெறலாம்.

Venture Engine நிகழ்ச்சித்திட்டமானது 2012 இல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரையிலும், அனைவரும் அறிந்திருக்கின்ற பல்வேறு வியாபாரங்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. அத்தோடு, 25 உள்நாட்டு வியாபாரங்கள். 2 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான முழுமையான மூலனத்தைப் பெற்றுள்ளன. Omak Technologies, Takas.lk, Saraii, Glitteray, ZigZag.lk, Zacki Herbals, Direct2Door ஆகியவை இவற்றில் சிலவாகும்.

விண்ணப்பியுங்கள்

புதிய தொழில்முனைவாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும், வியாபார வலையமைப்புக்களில் இணைவதும், புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் தொழில்முனைவாளர்களுக்கு மிக முக்கியமான விடயமாகும். அத்தோடு, தொழில்முனைவாளர்கள் பெறுகின்ற ஆலோசனைகள், அனுபவங்கள் மூலம், Venture Engine ஆனது தொழில்முனைவாளர்களை அடுத்த கட்டதுக்கு நகர்த்தும் ஒரு பாரிய தளமாக உள்ளது. இந்தத் தடவை நடாத்தப்படும் Venture Engine 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில், இதற்கு சமாந்திரமாக நடைபெறும் Asian Business Angels Forum ஆனது இலங்கையில் முதற் தடவையாக நடைபெறுவதனால், பெருமளவு சர்வதேச முதலீட்டாளர்களிடம் தமது வியாபாரங்களை முன்வைக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் தொழில்முனைவாளர்கள் மேலதிக விபரங்களைப் பெறவும், கடந்த வருடங்களில் வெற்றி பெற்றோரைப் பார்க்கவும் Venture Engine இணையதளத்தை தரிசிக்கலாம். அத்தோடு, அனைத்து தொழில்முனைவாளர்களுக்கும் அவசியமான அடிப்படை வழிகாட்டல்கள், நிதி வழிகாட்டல்கள், தமது வியாபாரத்தை முன்வைக்கும் முறையை மேம்படுத்தலுக்கான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் பலவும் இங்கு உள்ளன.

Venture Engine 2017 இல் இணைந்து, உங்கள் புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு, உங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 09 ஆம் திகதிக்கு முன்னர் submissions@ventureengine.lk  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Related Articles

Exit mobile version