நிதியியல் துறையில் சிறந்த மற்றும் வலுவான தொழில் தகைமையை கட்டியெழுப்புவது எப்படி?

நிதி என்பது ஒரு பன்முகப்பட்ட ஆற்றல் மிக்க துறையாகும், ஆனால் மிக முக்கியமாக, இது இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது வளர்ச்சிக்கான எண்ணற்ற சாத்தியங்களை விரிவுபடுத்துவதுடன், அவற்றின் தற்போதைய எல்லைகளுக்கு அப்பால் ஆராய விரும்புவோருக்கான வாசலாக அமைகிறது. நிறைய தனிநபர்கள் நிதித்துறையில் ஒரு உயர்வான தொழிலை விரும்புகிறார்கள், ஆனால் அந்த இலக்கை எவ்வாறு அடைய முடியும் என்பது பற்றிய அறிதல் பலரிடமும் காணப்படுவதில்லை.

தொழில்துறையில் ஒருவர் தங்கள் வழித்தடத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி அறிய, நிதித்துறையில் இரு ஆளுமைகளிடம் பேசினோம்: உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் மற்றும் அல்மாஸ் அமைப்பு மற்றும் கார்லைன்ஸ் ஹோல்டிங்ஸின் நிறைவேற்று அதிகாரி 

இம்தியாஸ் புஹர்தீன்; மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளரும் CIMA சபையின் உறுப்பினருமான மனோஹரி அபேசேகர.

எனவே, உங்கள் நிதி வாழ்க்கையை வளர்ப்பதற்கான சில வழிமுறைகளும், உத்திகளும் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

நிறைய தனிநபர்கள் நிதித்துறையில் ஒரு உயர்வான தொழிலை விரும்புகிறார்கள் <படஉதவி: RODNAE Productions from Pexels>

அறிவுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு, உங்கள் அறிவுத் தளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ள தொழில் துறை பாதை குறித்து அறிந்துகொள்வது, தொடர்புடைய விடயங்களை தேடிப் படிப்பது மற்றும் தொழில்துறை தலைவர்கள் பேசுவதைப் பார்ப்பது அல்லது கேட்பது இதற்கான சிறந்த வழியாக அமையும். 

தான் எது குறித்து மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என்பதைப் பற்றி இம்தியாஸ் கூறினார்: “பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பள்ளி நாட்களில் எனக்கு வந்தது. எனக்கு ஒரு நல்ல நண்பர் இருந்தார், அவருடைய தந்தை பங்குச் சந்தையில் பெரிய முதலீட்டாளராக இருந்தார். எனவே, நாங்கள் அவரால் ஈர்க்கப்பட்டோம், அதைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசினோம்.”

மேலும், நீங்கள் எது குறித்துஆர்வமாக உள்ளீர்கள் என்பதைப் பற்றி கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்: “நான் நிறைய வாசிப்பேன். பொருளாதாரம் மற்றும் நிறுவன முதலீடுகள் என்பவற்றை நான் மிக நெருக்கமாக பின்தொடர்வதுண்டு. நான் எப்பொழுதும் CSE இணையதளத்தில் அறிவிப்புகள், ஆண்டறிக்கைகள், தலைவர்கள் அல்லது நிறைவேற்று அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களை படிக்கும் பொருட்டு அடிக்கடி செல்வதுண்டு. மேலும் அவர்களின் கணக்குகளைப் பகுப்பாய்வு செய்யவும் கூட நேரத்தை ஒதுக்கிக்கொள்வதுண்டு.”

இது பளுவான வேலை போல் தோன்றினாலும், நீங்கள் இதன் மூலம் பெறும் நன்மைகள் விலைமதிப்பற்றவை.

உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் மற்றும் அல்மாஸ் அமைப்பு மற்றும் கார்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் CEO, இம்தியாஸ் புஹர்தீன்

உரிய தகுதிகளைப் பெறுங்கள்

உங்களுக்காகப் படிப்பதும், கற்றுக்கொள்வதும் உங்கள் சொந்த அறிவு மற்றும் திறன்களில் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவும் அதே வேளையில், துறைசார் தகுதிகள் உங்கள் அறிவையும் திறமையையும் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு அல்லது சாத்தியமான முதலாளிகளுக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஒரு தகுதி என்பது உங்கள் திறன் மற்றும் நீங்கள் வைத்திருக்கும் அறிவு என்பவற்றை உறுதிப்படுத்தும் சான்றாகும்.

உதாரணத்திற்கு மனோஹரியை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் பல்கலைக்கழகத்தில் சேரும் போது ஏற்கனவே ஒரு பகுதி-தகுதி பெற்ற பட்டயக் கணக்காளராக இருந்தார். நாட்டில் ஜே.வி.பி கிளர்ச்சி காரணமாக அவர் உயிரியல் பிரிவில் இருந்து கணக்கியலை நோக்கி  தனது பாதையை மாற்ற வேண்டியிருந்தது, இது இரண்டு ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு வழிவகுத்தது. தனது பல்கலைக்கழகப் பட்டம் மற்றும் CIMA சான்றிதழ் இரண்டையும் முடித்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் தற்போது, பொருத்தமான தகுதி அனுபவத்துடன் பெருநிறுவன ஆளுமையாக வளர்ந்துள்ளார்.

அவரது சமீபத்திய சாதனைகள் மற்றும் அவரது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் அவர் தன்னை வாங்கக்கூடிய நெகிழ்வுத்தன்மையைப் பற்றி பேசுகையில், அவர் கூறினார்: “நான் ஜூன் 2021 இல் CIMA UK சபையின் உறுப்பினராக மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். முன்னதாக, CIMA இன் நூற்றாண்டு விழாவான 2019 இல் CIMA Sri Lanka Network இன் தலைவராகவும் நான் பணியாற்றியிருந்தேன். கூடுதலாக, நான் இலங்கை இயக்குநர்கள் நிறுவனத்தின் சங்க உறுப்பினராக பணியாற்றுகிறேன் மற்றும் நான் பெண் நிறுவன இயக்குநர்கள் – இலங்கை அத்தியாயத்தின் நிறுவனர்/உறுப்பினர். கடந்த காலத்தில், நான் ஹெய்லியில் 18 ஆண்டு பணிபுரிந்தேன், அதன் போது நான் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை கையகப்படுத்தினேன். இன்று, நான் ஒரு சுயாதீன நிறுவன இயக்குநராக பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஒரு பெண் சுயாதீன இயக்குநராக எனது அறிவைப் பகிர்ந்துகொண்டு, நிர்வாகத்திற்கு வித்தியாசமான பரிமாணத்தையும் அனுதாபத்தையும் கொண்டு வந்துள்ளேன். தற்போது, நான் என்எஸ்பி மற்றும் அதன் துணை நிறுவனமான என்எஸ்பி ஃபண்ட் மேனேஜ்மென்ட்டில் தணிக்கைக் குழுவின் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன இயக்குநர்/தலைவராக உள்ளேன். கொழும்பு பங்குச் சந்தையில் வெற்றிகரமாக பட்டியலிடப்பட்ட கப்ருகா குழுவில் இணைந்து கொள்ளவும் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.”

தேசிய சேமிப்பு வங்கிப் பணிப்பாளர் மற்றும் CIMA சபை உறுப்பினர் மனோஹரி அபேசேகர

சவால்களுக்கு சளைக்காதீர்கள்

உங்கள் வாழ்க்கையை வலுப்படுத்துவதற்கான மற்றொரு முக்கியமான படி, உங்கள் வழியில் வரும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது. ஆபத்து காரணி என்பது நிலையானது, ஆனால் விஷயங்களை சுழற்சியில் வைத்திருப்பது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை வியத்தகு முறையில் மேம்படுத்தும்.

KPMG நாடாத்திய ஒரு ஆய்வானது, குறிப்பாக பெண்கள் சவால்களுக்கு முகம் கொடுப்பதன் நீண்டகால நன்மைகளை எடுத்துக்காட்டியது. “இன்றைய வணிக உலகில் தலைமைப் பதவிகளுக்குச் செல்ல விரும்பும் பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக அபாயங்களை ஏற்றுக்கொள்ள முன்வருவதன் மூலம் பயனடையலாம். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 43% க்கும் குறைவானவர்களே புதிய வேலைக்கான இடங்களை மாற்றுவது, தொழில் மாறுதல், உயர்தர திட்டத்திற்குச் செல்வது, ஒரு பெரிய விளக்கக்காட்சியைச் செய்ய முன் வருவதுஅல்லது ஊதிய உயர்வை குறித்து நேரடியாக கேட்பது  போன்ற பெரிய சவால்களை எடுக்கத் தயாராக உள்ளனர்.அத்தகைய அபாயம் மிக்க சவால்களை எடுக்கத் தயாராக இல்லாதது ஒருவரின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

கூடுதலாக, நீங்கள் தேர்ந்தெடுத்த தொழிலுக்கான தோராயமான பாதையை வரைபடமாக்குவது என்பது, நேரம் வரும்போது எந்த வாய்ப்புகள் மற்றும்/அல்லது சவால்களை எடுக்கலாம் என்பதைக் கண்டறிய உதவும்.

வலையமைப்பு என்பது ஒரு சொத்து

நிதித்துறையில், நெட்வொர்க்கிங்(வலையமைத்தல்)  ஒரு முக்கியமான கருவியாகும். பெரு நகரங்கள் எதுவும் ஒரே நாளில் கட்டப்படவில்லை, ஆனால் அவை தனித்து ஒரு நபரால் மாத்திரமும் கட்டப்படவில்லை. தொழில்முறை வெற்றியை அடைய, வலுவான வலையமைப்புகளை உருவாக்குவது அவசியம்.

“நெட்வொர்க்கிங் நிச்சயமாக முக்கியமானது. நீங்கள் மக்களுடன் தொடர்ந்து பேசி, கற்றுக்கொள்ள முயற்சித்தால், அவர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். எனவே, இது மிகவும் முக்கியமானது. நீங்கள் [சேர அல்லது பின்தொடர] ஏராளமான வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் [ட்விட்டர் கணக்குகள்] உள்ளன. நீங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நம்ப வேண்டியதில்லை, ஆனால் குறைந்தபட்சம் உங்களிடம் இருக்கும் சில தகவல்கள் நீங்கள் ஜீரணித்து அதிலிருந்து சிறந்ததை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பங்குத் தரகர் அல்லது முதலீட்டாளர் சமூகத்திற்குள், இது நிச்சயமாக பேருதவியாக இருக்கும், ஏனென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள முடியும், ”என்று இம்தியாஸ் கூறினார்.

உங்களின் தற்போதைய வேலைக்கு அப்பாலும் வலையமைப்பு ஒன்றை உருவாக்குவது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி மனோஹரி கூறினார்: “தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது உங்கள் வாழ்க்கையின் அடித்தளம் மட்டுமே. உங்கள் நேர்மையை விட்டுக்கொடுக்காமல் செய்யாமல் நல்ல மதிப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கூட்டத்திலிருந்து தனித்து நிற்க நீங்கள் கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும். நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும், உங்களுக்கான வாய்ப்புக்களையும், வலையமைப்பையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஒரு வர்த்தக நாமத்தை உருவாக்க நீங்கள் சேவை செய்யும் நிறுவனத்தை சாராது உங்கள் அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் செலவிடுங்கள்.”

நிதியில், நெட்வொர்க்கிங் என்பது ஒரு முக்கியமான கருவியாகும் <வரவுகள்: முகமது ஹாசன்>

தடைகள் உங்களைத் தடுக்க விடவேண்டாம்

உங்கள் தொழில் விருப்பத்தைத் தாண்டி தடைகள் எந்தநேரத்திலும் தோன்றலாம். எந்த தடையையும் கடக்க மிக முக்கியமான சாதனம் விடாமுயற்சி. எதிர்பாராத தடைகள் எழும்பும்போது, மன உளைச்சலுக்கு உள்ளாகுவது எளிது, ஆனால் விடாமுயற்சியுடன் செயலாற்றும் போது, நீங்கள் எதையும் சமாளிக்க முடியும்.

https://www.indeed.com/career-advice/career-development/overcome-workplace-challenges

உதாரணமாக, நீங்கள் செல்லும் பாதை முடங்குவதாக உணர்ந்தால், ஒரு படி பின்வாங்கி உங்கள் சுவவழலின் நிலைமையை மதிப்பிடுங்கள். நீங்கள் எப்படி அங்கு வந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறுகள் ஏதேனும் இருந்தால், அதிலிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவும். உங்களால் இயலுமானதை சிறப்பாக செய்யவும், உங்களால் இயலாதவற்றை செய்து முடிக்க சரியான உத்திகளையும் கற்றுக்கொள்ளுங்கள். 

தன் அனுபவம் குறித்து இம்தியாஸ் கூறியதாவது: “ஆரம்பக் கட்டங்களில், சந்தைகள் சிறப்பாக இருந்த போதிலும், பெரும்பாலான நேரம் ‘சாண் ஏற, முழம் சறுக்கும்’ நிலையாக இருந்தது என்றே நான் கூறுவேன். ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதே எனது எண்ணமாக இருந்தது. அதுவரை, நான் உண்மையில் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை , சந்தையில் முதலீடு செய்ய போதுமான பணம் இருக்கும்போது கொள்வனவு செய்தது மட்டுமே என்னுடைய பணியாக இருந்தது. நான் அதை ஒரு தடையாக பார்க்கவில்லை. எனக்கு நம்பிக்கை இருந்தது. எனது விடாமுயற்சியின் விளைவாக , நான் முதலீடு செய்த நிறுவனங்களை நம்பியதால் தொடர்ந்து பங்குகளை வாங்கினேன்.”

கோவிட் தோன்றிய பிறகு விஷயங்கள் எவ்வாறு தலைகீழாக மாறியது என்பதையும், 2020 ஒரு கொந்தளிப்பான ஆண்டாக இருந்தது என்பதையும் அவர் எடுத்துரைத்தார், அவர் தொடர்ந்து கூறுகையில் பொது முடக்கங்களின் போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது பல புதிய முகங்களை சந்தையை நோக்கி ஈர்த்தது, இன்று, பங்குச்சந்தை முன்பை விட உயிரோட்டமாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளது.

“உங்களுக்குத் தகுதிகள் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு மற்ற [வெளி] அறிவும் தைரியமும் இருக்க வேண்டும். உங்களிடம் எல்லா அறிவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை என்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. மக்கள் அந்த சவாலை எடுத்து, சந்தைக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும்,” என்றார்.

நிதித்துறையில் ஒரு தொழில் உங்களுக்கு என்ன தருவது ஒரு நுழைவாயிலை. நீங்கள் ஒருமுறை அடியெடுத்து வைத்தால் அங்கு என்ன செய்வது என்பது முற்றிலும் உங்கள் கைகளிலேயே உள்ளது. படிப்பது, தயார்படுத்துவது மற்றும் பயிற்சி செய்வது என்பன மிகவும் முக்கியம், ஆனால் அதை உயர்த்துவதற்குத் தேவையான வளர்ச்சிக்கான ஆர்வத்தை வெளிக்கொணர, சவால்களையும் சுறுசுறுப்பையும் ஒன்றாக அனுபவிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வதும் இன்றியமையாதது.

CIMA போன்ற உலகளாவிய அங்கீகாரம் பெற்ற நிபுணத்துவ கணக்கியல் தகைமையை வெற்றிகரமாக நிறைவுசெய்வது, நிதித்துறையில் ஒரு வலுவான தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எடுக்கும் முதல் படியாக அமையும். இது இலங்கையில் மட்டுமன்றி, வெவ்வேறு வணிகச் சூழல்களில் பணியாற்றக்கூடிய மற்றும் வணிகங்களை முன்னோக்கிச் செலுத்த உதவும் நிதி நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கமாகக் கொண்ட உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புக்களை உண்டாக்கித்தரும்.

Related Articles

Exit mobile version