இலங்கையில் மாற்றுத்திறனாளிகளை செயற்பாடுகளில் உள்ளடக்குவதன் மூலம் அவர்களது நலன்பேணலை மேம்படுத்துதல்

சமீபத்திய ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளை, குறிப்பாக, மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமிகளை அனைத்து செயற்பாடுகளிலும் உள்ளடக்குவதன் மூலம் அவர்களது நலன்பேணல் மேம்படுத்தலில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது மொத்த மக்கள் தொகையில் 15% மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால், அவர்கள் சமமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக முக்கியமாகும்.

பெண்களிடையே மாற்றுத்திறனாளிகள் அதிகமாக காணப்படுவதால், முன்முயற்சிகளை மேற்கொள்ளும்போது இயலாமை உள்ள பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும். 19.2% சதவிகிதமான பெண் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றனர், இதற்கு மாறாக ஆண்கள் மத்தியில் 12%  சதவீதம் மாத்திரமே மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றனர்.

2012 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடித்தொகை மதிப்பீட்டில், அனைத்து வயதுக் குழுக்களிலும் மாற்றுத்திறனாளிகளானபெண்களின் எண்ணிக்கையானது ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, ஆனால் தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளில்  15% மட்டுமே பெண்களாக காணப்படுகின்றனர்.

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் மாற்றுத்திறனாளிகளானபெண்களின் பிரதி நிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெண்களிடையே கணிசமான அளவு  அதிகமாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளானஆண்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்புகளை  பெறுவதில் மட்டுமல்லாமல், கொள்கைவகுப்பு மற்றும் ஊடகங்களிலும் கூட பெரிதும் குறைவாகவே வாய்ப்பளிக்கப்படுகின்றனர்.  இதனால் இவர்கள் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன், இவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகம் வீதமும் அதிகரிக்கிறது. மேலும் கல்வி, சுகாதாரம்; பாலியல் சுகாதாரம் உட்பட, நீதி, தகவலறியும் உரிமை, பொதுச் சேவை மற்றும் குடிமை மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் மிகக் குறைந்தளவு வாய்ப்புக்களே வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளானபெண்கள் அதிகளவிலான குறுக்கீடுகளில் சமூக பாகுபாடுகள், ஒதுக்கீடுகள் மற்றும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள் ஆகையால் மாற்றுத்திறனாளிகளானபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான இவ்வாறான தடைகளை நீக்குவதில், முன்பை விட இப்போது அதிகளவு கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள்  போன்றவற்றிற்கும் மற்றும் பல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளும் இதில் அடங்கும்.

பேண்தகு வளர்ச்சி மற்றும் நலன்பேணல்

 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் ஒன்றாக இணைந்து 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) ஏற்றுக்கொண்டனர், இவ் இலக்குகள் அனைத்தும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நா. உறுப்பு நாடுகளால் அடையப்பட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்.டி.ஜி) உலகெங்கிலும் தீவிரமாக வளர்ந்து வரும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதையும் அவற்றை தீர்ப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் நலன்பேணலை மேம்படுத்துவது அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இதில் ஐந்து குறிக்கோள்கள், மாற்றுத்திறனாளிகள்  தொடர்பான சிக்கல்களுக்கான தீர்வுகளை ஆராய்கின்றன: இலக்கு 4 (மாற்றுத்திறனாளிகள்  உள்ளடங்கிய கற்றல் சூழல்களை உருவாக்குவதன் மூலம் சமமான மற்றும் அணுகக்கூடிய கல்விக்கு உத்தரவாதம் அளித்தல் மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்); இலக்கு 8 (மாற்றுத்திறனாளிகளை  உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், பூர்ண மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்புக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சந்தையை முழுமையாக அணுக அனுமதிக்கும்), இலக்கு 10 (மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நலன்பேணலை வலியுறுத்துதல்); இலக்கு 11 (அணுகத்தக்க நகரங்கள் மற்றும் நீர்வளங்களை உருவாக்குதல், மலிவான அணுகத்தக்க மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், பாதுகாப்பான, அணுகக்கூடிய பசுமையான மற்றும் நலன்பேணும் பொது இடங்களுக்கு பொதுப்படையான அணுகலை வழங்கல்); மற்றும் இலக்கு 17 (தரவு சேகரிப்பு மற்றும் எஸ்.டி.ஜி களின் கண்காணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுதல், மாற்றுத்திறனாளிகள்  அடிப்படையில் பிரிக்கப்படாத தரவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கல்).

இவை ஐந்தாவது அல்லது பாலின சமத்துவக் குறிக்கோளோடு சேர்ந்து ‘பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம், ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் சமமற்ற பிரிவினை, மற்றும் பொது அலுவலகங்களில் காட்டப்படும் பாகுபாடு’ ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் முழுமையாக பங்குகொள்ள முக்கிய தடைகளாக எடுத்துக்காட்டுகின்றன.

கொள்கை மற்றும் சட்டமியற்றல்

எஸ்.டி.ஜிக்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், இலங்கை அரசு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் (சி.ஆர்.பி.டி) 2007 மார்ச் மாதம் கையெழுத்திட்டது, இது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை ஒப்பந்தமாகும், இதன் பிரதான நோக்கம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது. இவ் ஒப்பந்தம் பிப்ரவரி 2016 இல் அங்கீகரிக்கப்பட்டது.

சி.ஆர்.பி.டியை அமுல்படுத்துவதற்கு இணங்க, மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டாமைக்கு இலங்கை அரசியலமைப்பு உத்தரவாதங்களை அளித்து, அவர்களின் மரியாதை, கெளரவம் மற்றும் தனிப்பட்ட சுயாட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயல் திட்டத்தை (என்.ஏ.பி.டி) 2014 இல் அரசாங்கம் முன்வைத்தது, இது மாற்றுத்திறனாளிகள்  எதிர்கொள்ளும் பல தடைகளை நிவர்த்தி செய்து, அவர்களது சம உரிமைள் பாதுகாக்கப்படுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. NAPD ஏழு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகின்றது:வலுப்படுத்தல்; சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு; கல்வி; வேலை மற்றும் வேலைவாய்ப்பு; பிரதானப்படுத்தப்பட்ட மற்றும் இயல்தகு சூழல்கள்; தரவு மற்றும் ஆராய்ச்சி; மற்றும் சமூக நிறுவன ஒத்திசைவு.

என்.ஏ.பிடிக்கு ஏற்ப அரசு, மாற்றுத்திறனாளிகளை  தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பதற்கும் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் நடு ஆண்டு வரவுசெலவு கட்டமைப்பில் (2014-2016) ரூ. 65 பில்லியன் ஒதுக்கியது.

ஆனால் இலங்கையில் வாழும் மாற்றுத்திறனாளிகளது நலன்பேணலை முழுமையாக  காண்பதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.

எண்ணக்கருத்துக்களை மாற்றியமைத்தல்

சி.ஆர்.பிடியை செயல்படுத்துவதில், இலங்கை பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சர்வதேச இன ஆய்வுகளுக்கான மையத்தின் (ஐ.சி.இ.எஸ்) 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டை நடத்துவதற்கான தடைகளில், கலாச்சார தடையே பாரிய தடையாக விளங்குகின்றது, ஏனெனில் இலங்கை வாழ்  பெற்றோர்கள் தங்களின் மாற்றுத்திறனாளிகளான குழந்தைகளை ‘வீட்டிற்குள் அடைத்து வைப்பதன் மூலம்’ அவர்களை சமூகத்தின் பார்வையில் இருந்து மறைப்பது பொதுவான வழக்கம் என்பது வெளிப்படுகிறது.

மாற்றுத்திறனாளியான குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கொண்டிருப்பது குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் மீது எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது, மேலும் இது ஏனைய குடும்ப உறுப்பினர்களின்  திருமணத் தகுதியைப் பாதிக்கும் அளவிற்கு செல்லும் என்பதும் ஆய்வின் பங்கேற்பாளர்களின் மூலம் அறியமுடிந்தது.

மாற்றுத்திறனாளிகள்  பெரும்பாலும் அதிகளவிலான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் ஆய்வில் பங்கேற்றவர்கள் வாதிட்டனர், இதனால் இவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது, கல்விகற்ற செல்வது அல்லது பொது அலுவலகங்களில் பணிபுரிவது போன்றவற்றில் ஈடுபட்டு செயல்திறன் மிக்க பிரஜைகளாக சமூகத்தில் பங்கேற்பதிலிருந்தும் தடுக்கப்படுகிறார்கள்.

இது போன்ற  தடைகள் மற்றும் புறக்கணிப்புகள் வேலைவாய்ப்பு அரங்கிலும் காணப்படுகிறது. வினைத்திறன்/இயலுமை தொடர்பாக ஒரே விதமான முன்மாதிரி மனநிலையைக் கொண்டிருப்பதால் மாற்றுத்திறனாளிகளை  பணியில் அமர்த்த நிறுவனங்களும் நிறுவன உரிமையாளர்களும் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஆய்வில் பங்கேற்று பதிலளித்த மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பைக் கையாளும் அமைப்புகள் முன்னிலைப்படுத்திய கருத்துகளுக்கு அமைய, இலங்கையில் பொதுவாக மாற்றுத்திறனாளிகளை  அடிமட்ட ஊழியர்களாகவே கருதப்படுகின்றனர்.

Source: Yomex Owo on Unsplash

கல்வி வாய்ப்பு

 ஐ.சி.இ.எஸ் அறிக்கையின்படி, இவ் ஆய்வில் பங்கேற்றவர்கள் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள்  என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். இருதரப்பினரும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர், சிலர் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மிகைப்படுத்தியதாகவும் மற்றவர்கள் தங்களை குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும் கூறினர்.

மேலும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள் குறித்த கவலைகள் நிலவின, பங்கேற்பாளர்கள் அத்தகைய குழந்தைகளால் ஒருங்கிணைந்த வகுப்புகளில் தொடர முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேகத் திட்டங்கள் பல நாடுகளில் இன்று பொதுவாக காணப்பட்டாலும், இலங்கையில் இவ்வாறான திட்டங்கள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. எமது கல்வி தளத்தில் அதிகளவில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கவும், அனைத்து குழந்தைகளும் சமமான உயர் தரமுடைய கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

Source: David Knudsen on Unsplash

ஆரம்பப் படிகள்

 மிகவும் ஒத்திசைவான மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும்  சமுதாயத்தை கட்டியெழுப்ப, தடையாக இருப்பவற்றை களைய நாம் அடித்தளத்திலிருந்து செயற்படவேண்டும், அதனை மேற்கொள்ள நாம்  மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காணப்படும்  எதிர்மறையான சமூக எண்ணங்களை களைவதில் தீவிரமானதொரு நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள்  பற்றிய  மூடநம்பிக்கைகளை எதிர்கொள்வதும் இதில் அடங்கும்.

மாற்றுத்திறனாளிகளான அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்ற வகையில், தரமான கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் மேலும் எந்தவொரு குழந்தையும் புறக்கணிக்கப்படுவதை தடுக்கவும் இலங்கையின் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஒரு சாத்தியமான தேர்வாக இருக்க வேண்டும், இதன் அர்த்தம் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மாற்றுத்திறனாளிகளை  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொது அலுவலகங்கள் அணுகக்கூடியவையாக உள்ளனவா என்பதனையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

இப் போராட்டத்தின் முக்கிய அம்சமானது யாதெனில் கொள்கை வகுத்தலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்திற்கு அதிகளவிலான முக்கியத்துவம் வழங்கலாகும் , அதேவேளை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் சிறந்த சட்டங்கள் நமக்கும் இன்னும் தேவைப்படுகிறது.

பாலின சார்புகளை நீக்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கான சூழலை உருவாக்குதல் என்பன இச் சமூகத்தை மேம்படுத்துவதில் நம்மை நீண்ட தூரம் அழைத்துச்செல்லும், மேலும் அவர்கள் ஏனையோருக்கு சமமாக மதிக்கப்படுவதையும் சமூகத்தின் உற்பத்தி உறுப்பினர்களாக கருதப்படுவதையும் உறுதிசெய்யலாம்.

Related Articles

Exit mobile version