உலகின் மிகபெரிய பாலூட்டியான நீலத்திமிங்கிலங்கள் தற்போது உலகில் வேகமாக அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களாக மாறி வருகின்றன. கொழுப்பு மற்றும் எண்ணெய்க்காக இவை வேட்டையாடப்பட்டு வருவதுடன், கடல் நீர் மாசுப்படுதல், நீண்டகால காலநிலை மாற்றங்கள் மற்றும் பாரிய கப்பல்களின் இரைச்சல் போன்ற காரணங்களினாலும் அழிந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.