பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணி!

Dialog Axiata PLC, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், Citi Bank, Sunshine Holdings குழுமம், சர்வோதயா சிரமதான அமைப்பு மற்றும் PwC Sri Lanka ஆகியவை இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணியை முன்னெடுத்துள்ளனர். 

இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் இயங்கும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது, கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மிகவும் வறிய நிலையில் உள்ள சமூகங்களை அடையாளம் கண்டு, 200,000க்கும் மேலான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணத்தை வழங்கவுள்ளன. PwC Sri Lanka ஒரு சுயாதீன கணக்காய்வு பங்குதாரராகவும், ITN, சியத, ஸ்வர்ணவாஹினி, TV தெரண மற்றும் வசந்தம் தொலைக்காட்சி ஆகியன ஊடக அனுசரணையாகவும் இந்த திட்டத்தில் இணைகின்றன.

கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 10, 2022 அன்று தொடங்கப்பட்டதுடன் 25 மாவட்டங்களில் வாழும் அவசர தேவை நிலவும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2022 ஜூன் 9ம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 60,000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அவசரகால நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது.

ஒரு நிறுவனமாக உங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், தனி நபராக உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதற்கும் எம்மோடு நீங்கள் இணையலாம். இந்த செயற்திட்டத்திற்கு  ஆதரவளிக்க, Dialog Manudam Mission வலைப்பக்கத்திற்குச் சென்று, இந்த உன்னதமான மனிதாபிமான செயற்பணியில் உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை எளிய வழிமுறையில் வழங்குங்கள். அல்லது 0766421421 என்ற எண்ணுக்கு ஏதேனும் தொகையை ரீலோட் செய்வதன் மூலம் எங்களுடன் கைக்கோர்க்கவும், அல்லது உங்களால் இயன்ற பங்களிப்பை Ez Cash, Genie, Star Points மூலம் வழங்கி நம் மக்களை ஊக்குவிப்பதில் இணையுங்கள்.

Related Articles

Exit mobile version