மின்னழுத்தி சேகரிப்பில் சாதனை படைத்தது – உருமேனியா அருங்காட்சியகம்

அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் காட்சிப்படுத்துகைகள், நிலையானவையாகவோ அல்லது தாற்காலிகமானவையாகவோ இருக்கலாம். உலகின் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் அருங்காட்சியகங்கள் எனக் குறிப்பிடலாம்.

அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும். இந்த வகைகளுக்கு உள்ளேயே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்களைக் குறிப்பிடலாம்.

ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் திகதி சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகின்றது. ICOM எனும் சர்வதேச அருங்காட்சியக மையம் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு வருடம் வெவ்வேறு கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் மக்கள் அருங்காட்சியக வல்லுநர்களை சந்திக்கவும் அருங்காட்சியகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

அந்தவகையில் உருமேனியா நாட்டில் மியூசியம் ஆப் உருமேனியன் ரெகார்டஸ் ( Museum of Romanian records) எனும் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு சற்று வித்தியாசமான அரும்பொருட்களின் சேகரிப்புக்கள் காணப்படுகின்றன. திருகு வகைகள், மின் அழுத்தி வகைகள், வெவ்வேறு வடிவங்களில் தாங்குச்சட்டம், உருமேனியா தபால் தலைகள், புகைப்பட கருவிகள் என ஏராளம். அவற்றுள் கின்னஸ் சாதனைப் படத்தை மின்னழுத்தி வகைகள் பற்றி பார்போம்.

உலகிலேயே மிகப்பெரிய மின் அழுத்தி சேகரிப்பு

2016 இல் உலகிலேயே 35000 க்கும் மேற்பட்ட இரும்பு மின் அழுத்தி சேகரிப்பில் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மின் அழுத்திகள் சில இதோ. இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் புராதன காலங்களிலேயே நாம் இன்று உபயோகப்படுத்தும் வடிவங்களில் மின் அழுத்திகள் செய்யப்பட்டுள்ளன.

கற்களால் செய்யப்பட்ட மின் அழுத்தி. கற்களாலான மின்னழுத்தியை பயன்படுத்தி துணிகளில் இருந்து சுருக்கங்களை நீக்குவது எளிதான காரியமல்ல.

 

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி போட்ஸ் என்ற பெண்மணி இதனை கண்டுபிடித்துள்ளார். இரட்டை கூர்மையான வடிவத்துடன் கைப்பிடியை கொண்ட மின் அழுத்தி.

 

மின் அழுத்திகள் துணிகளில் சுருக்கங்களை நீக்க பயன்படுத்தப்பட்ட அதேசமயம் சட்ட காலர்களில் மடிப்பை உருவாக்கவும் பயன்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு மின்ழுத்திதான் கோபரிங் மின்னழுத்தி. இது வேரறுக்க குழாய்களை கொண்டமைக்கப்பட்டது. காலர்களில் மடிப்பை உருவாக்கும் பொது சூடான கம்பி அதனுள் செருகப்பட்டது.

 

இது சற்று வித்தியாசமானது. இதில் மின் அழுத்தியை சூடாக்க எண்ணெய்,மண்ணெண்ணெய் மற்றும் மது போன்ற திரவ எரிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் கொள்கலன் பொருத்தப்பட்ட இந்த வகை அபாயத்தை ஏற்படுத்தியதால் விளக்கு எண்ணெய் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இது சீனாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மின் அழுத்தி. இதன் வடிவம் சீன பாத்திரம் போல் இருப்பதால் சீனா பேன் என்று அழைக்கப்பட்டுள்ளது. கரித்துண்டுகள் ஆடைகளை கரையாக்கும் என்பதால் இவர்கள் மணலை சூடாக்கி துணிகளில் சுருக்கத்தை நீக்கியுள்ளனர். இம்முறை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது.

 

இது கரித்துண்டுகளை கொண்டு சூடாக்கப்பட்ட மின்னழுத்தி வகை. இவற்றில் துளைகளும் போடப்பட்டன. அவை அத்தியாவசிய காற்றோட்டத்தை வழங்கியுள்ளது. இம்முறை பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சுவாரஸ்ய விடயம் என்னவென்றால் இந்த மின் அழுத்திகள் அந்த காலத்தில் கணவரிடமிருந்து மனைவிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள சம்பிரதாயம் இருந்துள்ளது. அதிலும் சிலர் அதில் தங்கள் மனைவியின் பெயரை பொருத்தி பரிசளித்துள்ளனர்.

 

கரித்துண்டுகளில் இருந்து வரும் கரி துணியை கரையாக்கும் என்பதால் ஒரு பக்கம் மட்டும் திறப்புக் கொண்ட மின் அழுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பின் புறத்தில் கரித்துண்டுகளை போடும் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துணிகள் கறை படியாமல் அழுத்தப்பட்டுள்ளன.

ஆடைகளின் வடிவமைப்பு சமுதாயத்தில் என்றைக்கும் ஒரு முக்கிய பங்கைக்கொண்ட விடயம் ஆகும். ஒவ்வொரு வரலாறு காலமும், இடங்களும் வெவ்வேறு வகை துணிகளை உருவாக்கியது. மனிதர்களின் ஆடைகளை பற்றி மூன்று பிரிவுகளாய் பிரித்தால், முதலாவது அதனை உருவாக்குவது இரண்டாவது சுத்தம் செய்வது நிச்சயம் அதனை பராமரிக்க சுருக்கங்களை நீக்கி அழுத்துவது என்றே கூறவேண்டும்.

ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் தோற்றத்தை மெருகேற்றிக்கொள்ள ஆடைகளை பிரதானமாக கொண்டுள்ளனர். அந்தவகையில் அவற்றை பாராமரிக்கும் பணியை மின் அழுத்திகள் சிறந்த முறையில் காலம் காலமாக செய்துவந்துள்ளன.

Related Articles

Exit mobile version