உலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

‘சட்டம்’ ஒரு நாட்டையும் மற்றும் நாட்டின் குடிமகனையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள் வியந்து விடுவீர்கள். அந்தளவுக்கு வினோத சட்டங்கள் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன.

எதற்கு நேரத்தை வீணடிக்க, வாங்க உலகம் முழுவதும் இருக்கும் வினோத சட்டங்களை சில நிமிடத்தில் பார்த்து வருவோம்.

 சுவிங்கதுக்கு தடை

மது, புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்களை தடை செய்ததை தான் நாம் பார்த்துள்ளோம் ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மென்று சுவைக்கும் சுவிங்கத்தை தடை செய்ததை பற்றி அறிந்தது உண்டா?

ஆனால் இது ஒரு உண்மையான  சட்டம்தாங்க. இந்த சட்டம் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கபூர் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் சிங்கபூர் தனது நாட்டை தூய்மையாக வைத்து கொள்ள விரும்புவது மட்டுமே.

நீங்கள் சிங்கப்பூரில்  சுவிங்கத்தை இறக்குமதி கூட செய்ய முடியாது. விமான நிலையத்திலேயே பிடித்துவிடுவார்கள். ஆதலால் சிங்கபூர் செல்லும் எமது நண்பர்களே இந்த சட்டத்தை எப்போதும்  நினைவில் வைத்துகொள்ளவும்.

Chewing Gum (Pic: flanagansmiles)

கடற்கரையில் காலணிகளுக்கு தடை

என்னடா முட்டாள்தனமான சட்டமா இருக்கே என நீங்க நினைக்கலாம் ஆனால் இது உண்மை, இந்த சட்டம் இத்தாலி நாட்டு சட்டமாகும். கேட்க வியப்பாக இருக்கும். ஆனால் இதற்கு பின்னாலும் காரணம் உள்ளது.

இத்தாலி நாட்டில் பெரும்பாலான மக்கள் ரப்பர் காலணிகள் பயன்படுத்துவார்கள். கடற்கரையிலும் மக்கள் ரப்பர் காலணிகள் அணிந்தே வருவார்கள். இங்கு காலணிகள் அணிவது பிரச்சனை இல்லை அதனை கடல் நீரில் நனைப்பதுதான் பிரச்சனை

நனைந்த பின்பு வருகின்ற சத்தம் பலருக்கும் பிடிக்காது என்ற காரணத்தினால் இத்தாலி நாட்டு கடற்கரைக்கு காலணிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Slippers Illegal (Pic: 1zoom)

உருளைக்கிழங்கு வாங்கினால் சிறை

இந்த வினோத சட்டத்திற்கு சொந்தமான நாடு ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலியாவில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் குறைவு இதனால் இதற்கு இங்கு மிகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்கள் கூறுகையில் நீங்கள் அந்த நாட்டில் குறிப்பிட்ட அளவுக்குமேல் உருளைக்கிழங்குகளை சாலைகளில் எடுத்து செல்ல முடியாது. இதனை கண்காணிக்க தனிப்பட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Potato Law (Pic: bestlifeonline)

சொந்த வீட்டிலும் சுதந்திரம் இல்லை

சிங்கப்பூர் நாட்டின் மற்றுமொரு வினோத சட்டம். இதனை கேட்டால் பலருக்கும் பிடிக்காது ஆனால் இதுதான் உண்மை. சிங்கப்பூரில் எந்தவொரு குடிமகனும் தங்களது வீட்டில் நிர்வாணமாக இருக்க முடியாது.

எந்தவொரு நபரும் மீறி இருந்தால் அவருக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனை என அந்நாட்டில் சட்டமுள்ளது. இதற்கான காரணம்  என்னவென்றால் சிங்கபூர் நாட்டில் ‘போர்னோகிராபி’ என்பார்கள். சிங்கப்பூரில் ஏற்கனவே போர்னோகிராபி சம்பந்தப்பட்ட அனைத்து செயல்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

Underwear Will Always Useful (Pic: Pinterest)

 கோழி/சேவல் முதலில் சாலையை கடக்கட்டும்

ஜியார்ஜியா நாட்டு  மக்களுக்கு கோழி என்றால் அவ்வளவு பிரியம் என இந்த சட்டத்தை பார்த்தால் தெரிகிறது. ஆமாங்க ஜியார்ஜியா நாட்டின் இந்த சட்டம் என்னவென்றால் கோழிகள் சாலையை கடக்கும்போது வாகனங்களை நிறுத்தி கோழிகளுக்கு வழி தரவேண்டும் இதனை மீறினால் சிறைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

‘யாருயா அவரு எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு’ இது என்னுடைய மைன்ட் வாய்ஸ்

Chicken Cross Law (Pic: pasaulis)

மனைவி பிறந்தநாளை மறந்தால் தண்டனை

உலகில் உள்ள அனைத்து கணவன்மார்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்கும் பிரச்சனை மனைவியின் பிறந்தநாளை மறப்பது. மறப்பது நமது தேசிய வியாதி அது நமக்கு இப்ப தேவையில்லை. சமோனா என்கிற நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்றத்தை செய்து பலரும் சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது

நல்லவேள நம்ம இந்த ஊர்ல பிறக்கல!

Wife Birthday is important (Pic: newsgeekswant)

சிரிங்கஇல்லைனா சிறைக்கு போங்க 

மிலன் நாட்டு அரசு தனது நாட்டின் அனைத்து மக்களையும் மகிழ்ச்சியாக வைக்க விரும்புகிறது என்பதாலோ இச்சட்டம் இங்கு உள்ளது என்று சொல்லலாம். மிலன் நாட்டின் சட்டத்தின்படி இங்கு வசிக்கும் மக்கள் எந்நேரமும் முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவொரு கவலையோ அல்லது சிரமங்கள் இருந்தாலும் சிரித்து கொண்டே இருக்க வேண்டுமாம். இங்கு இரங்கல் வீட்டில் கூட மக்கள் புன்னகையுடனே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எவரேனும் மீறினால் அபராதம் விதிக்கப்படுமாம்

‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’

Always Smiling Laws (Pic: Lovepanky)

 உள்ளாடையின்றி வெளியே செல்ல தடை

தாய்லாந்தில் இருக்கும் இந்த சட்டம் நாம் இதுவரை பார்த்த சட்டங்களில் மிகவும் வினோதமான ஒன்றாகும்.  தாய்லாந்தில் எந்தவொரு நபரும் உள்ளாடை அணியாமல் வெளியே சென்று சுற்ற முடியாது உள்ளாடையின்றி நீங்கள் பிடிபட்டால் அதிகபட்சமான அபராதம் விதிக்கப்படுமாம்.

இந்த சட்டம் எதற்கு உள்ளது என்பது தாய்லாந்து மக்களுக்கே மர்மமாக உள்ளது.

Underwear Must Here (Pic: saxon)

அரசுதான் குழந்தைக்கு பெயர் வைக்கும்

ஒவ்வொரு தாய்-தந்தைக்கும் இருக்கும் ஆசை தான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது. ஆனால் டென்மார்க்கில் நீங்கள் இதனை செய்ய இயலாது. அங்கு ‘பெர்சனல் பெயர்‘ என ஒரு சட்டம் அமலில் உள்ளது.

அந்த சட்டத்தின்படி மனதறிந்து எவரும் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கமுடியாது அது அந்த குழந்தையின் பெற்றோராக இருந்தாலும் சரி.

அரசு தருகின்ற பட்டியலில் இருந்துதான் பெற்றோர்கள் பெயரை தேர்ந்தேடுத்து வைக்க முடியும்.

இதற்கான காரணம் பெற்றோர்கள் எந்தவொரு வினோதமான பெயரை வைக்ககூடாது என்பதே.

இதனை மீறியும் குழந்தைக்கு பெயர் வைக்க விரும்பினால் முதலில் ஆலயம் மற்றும் அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும்.

Govt Names to Born Baby (Pic: audioburst)

இரவில் கழிவறையில் ஃபிளஷ் பயன்படுத்த தடை

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு 10  மணிக்குமேல் கழிவறையில் ஃபிளஷ் செய்ய முடியாது. இதற்கான காரணம் சுவிட்சர்லாந்து அரசு ஒலி மாசுவை கட்டுப்படுத்த முயன்று வருவதே. இது எந்தளவிற்கு வெற்றிகரமாக இருக்கின்றது என்பது அந்த நாட்டு மக்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே தெரியும்.

Flushing Ban in This Country (Pic: odyssey)

 வீட்டில் சண்டையிடுவது சட்டவிரோதமானது அல்ல

சரியாதான் படிச்சிங்க, ஆர்கன்சஸ் என்ற நாட்டில் கணவன் மனைவியை வீட்டில் அடிக்கவோ அல்லது தாக்கவோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே மனைவியை அடிக்க முடியுமாம்.

Husband Can Beat Wife (Pic: GH)

கணவனை மனைவி கொல்வதற்கு அனுமதியுண்டு

ஹாங்காங் நாட்டில் இருக்கும் சட்டம் மிகவும் வினோதமானது மட்டுமின்றி கொடூரமானதும் கூட ஏனென்றால் குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம்

இதுபோன்ற சட்டத்தை வினோதம் என்று கூற முடியாது இது நமது நாட்டுக்கு தேவையான ஒரு சட்டம் என்பதில் மாற்று கருத்தில்லை.

Women Have Right to Kill Cheating Husband (Pic: rebelcircus)

நின்றுகொண்டு பியர் குடிக்க முடியாது.

பியர் குடிப்பதே கேடு என்பது இங்கு பிரச்சனை இல்லை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள சட்டம் என்னவென்றால் ஒரு நபர் நின்றுகொண்டு மூன்று முறைக்கும்மேல் பியர் குடிக்க முடியாது என்பதுதான் இங்குள்ள வினோத சட்டம். இதனை மீறினால் சிறை அல்லது அபராதம் செலுத்திட நேரிடும்

Never Drink Beer By Standing (Pic: shutterstock)

 உலகத்துல இப்படியும் சட்டம் இருக்குமா… என நீங்கள் கூட யோசித்திருக்க மாட்டீர்கள். ஆனால் மேதைகள் சொல்வதுபோல் இவ்வுலகில் எதுவும் சாத்தியமே.

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துக்கொள்ள எங்களை பின்பற்றவும், இந்த  வினோதங்கள் எப்படி இருந்தது என்பதை தயவுசெய்து கமென்ட் செய்து எங்களுக்கு தெரிவிக்கவும்

Featured Image Credit: wmky

Related Articles

Exit mobile version