நிதி உலகம் மாறிக்கொண்டே வருவதுடன் அதன் தொழில் வல்லுனர்களையும் அம்மாற்றங்களை ஏற்குமாறு நிர்ப்பந்திக்கிறது. கல்லூரி மாணவர் முதல் பட்டயக்கணக்காளர்கள் வரை நிதித்துறையில் உள்ள அனைவரையும் தன்னியக்கவாக்கமானது பாதிக்கின்றமையால் வணிக வாய்ப்புக்கள் மற்றும் அமைப்புகளிற்கு செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு தேவைகளுக்காக மேலதிக திறன்கள் அவசியமாகின்றன. இந்த திறன்களை வழங்கும் சுமை முழுவதுமாக நாளைய நிதித்தலைவர்களின் தலை மீது வீழ்கிறது.
American Institute of CPAs (AICPA) மற்றும் Chartered Institute of Management Accountants (CIMA) ஆகியவற்றால் இயக்கப்படும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ கணக்காளர்கள் சங்கம் நவம்பர் 2019 இல், உலகளவில் தொடங்கப்பட்டது, CGMA நிதி தலைமை திட்டம் ஆனது ஒரு நிகழ்நிலை கற்றல் திட்டம் ஆகும். நிதி / வணிக நிபுணராக வெற்றிபெறத் தேவையான தொழில்நுட்ப, வணிகம், மக்கள், டிஜிட்டல் மற்றும் தலைமைத்துவ திறன்களைக் கற்பிக்கும் இத்திட்டம் ஒரு முதுகலை பட்டத்திற்கான நோக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஒத்திருக்கிறது. .
நிதித்துறையில் ஒரு சிறந்த தலைவராக இருப்பதற்கு என்ன தேவை என்பதையும், அடுத்த தலைமுறை நிதித் தலைவர்களை உருவாக்குவதில் CIMA வின் பங்கு என்பன குறித்து திரு. வெங்கட் ரமணன் அவர்களிடம் பேசினோம். மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள Petaling Jaya வை தளமாகக் கொண்ட ரமணன், ஒரு புகழ்பெற்ற முன்னாள் CIMA மாணவரும், The Association ன் ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் தற்போதைய பிராந்திய துணைத் தலைவரும் ஆவார்.
- ஒரு CIMA பட்டதாரியாக நிதி மற்றும் நிர்வாக தொழிலுக்கு உங்களை எவ்வாறு தயார்படுத்தினீர்கள்?
“இது நான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவு செய்த ஒன்று. அதுவே இன்று வரை நான் வாழவும் வளரவும் வழி செய்து வருகிறது.”
“CIMAற்கான மிகப்பெரிய கோணம் யாதெனில் அது வணிகத்தை நிதியத்துடன் இணைக்கிறது. இது தலைமைத்துவம், சகாக்களுடன் இணைந்து பணியாற்றும் தகைமை மற்றும் முக்கியமான நபர்கள் எவ்வாறு தாக்கம் மிக்க பெறுபேறுகளை பெறுகின்றனர் என்பதை அறிதல் ஆகிய தகைமைகளை அளிக்கிறது. எமது பட்டம் மற்றும் கல்வி திறன்கள் மட்டுமே சரியாக இருந்தால் மாத்திரம் நாம் இத்துறையில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் அதேவேளை எம் துறையிலும் எமது அணிக்குள்ளாகவும் என்ன நடக்கிறது என்பதை அறியும் வண்ணம் நாம் இருக்க வேண்டும், நாம் தலைமைத்துவத்தினை உட்கொணர்வதுடன் செல்வாக்கு செலுத்துதல், ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களின் சிறப்பை வெளிக்கொணர்தலுடன் பணியாற்றல் ஆகியவற்றை எவ்வாறு செவ்வனே செய்தலென அறிந்திருத்தல் வேண்டும்.”
“அனைத்தும் விரைவாக மாறிக்கொண்டிருக்கும் உலகிலேயே நாம் வாழ்கின்றோம். நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நாளை ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு தீர்வு சொல்லும் கையேடு எம்மிடம் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கலந்துரையாடலை கற்பனை செய்து பாருங்கள், ஏதோ நடந்ததாக யாரோ சொல்கிறார்கள். யாரும் ஒரு கையேட்டை எடுத்து 52ம் பக்கத்தை திருப்பி பார்க்க போவதில்லை. ஆகையால் விருப்பங்கள் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எங்கள் அணுகுமுறையில் நாம் சுறுசுறுப்பாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும், முடிவுகளை உறுதியாக எடுக்க வேண்டும்.”
CIMA ஆனது, வெளிப்புறச்சூழலை, உள்ளக மக்கள் மற்றும் வணிகத்துடன் இணைக்கும் நோக்குடன் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு நாம் அறிந்தவற்றை பிரயோகிக்கும் வகையில் ஆவணம் செய்துள்ளது.
- நல்ல நிதி தலைமைத்துவம் என்றால் என்ன?
“நாங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் மையமாக நிதி உள்ளது, ஏனெனில் நாங்கள் வணிகத்திற்கான பணத்தை நிர்வகிக்கிறோம். யாராவது ஒரு புதிய வணிக வாய்ப்பைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. நிறுவனத்திடம் பணம் இருந்தாலும் அல்லது வெளிப்புறமாகச் சென்றாலும், நீங்கள் என்ன செய்யவிருக்கிறீரோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.”
“பெரும்பாலும் தமது உள்ளார்ந்த சிந்தனைக்காக நிதித்தலைமைகள் மதிப்பாய்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவதுடன் ஒரு முடிவை எடுப்பதற்கு அனைத்து எண்சார் அணுகுமுறைகளையும் கவனிக்கிறார்கள். அவர்கள் பண்புசார் காரணிகளை கருத்தில்கொள்வதில்லை. அளவுசார் காரணிகளையே கருத்தில் கொள்கின்றனர்.
“ஒரு நிறுவனம் முதலீடு செய்யலாமா இல்லையா என்ற ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் நிதி வல்லுனர்களை எதிர்நோக்கியுள்ளனர். தொழில்நுட்பமானது வாடிக்கையாளர் தேவைகளை மாற்றுகிறது என்பதை அவர்கள் (நிதி வல்லுநர்கள்) புரிந்து கொள்ளாவிட்டால், ‘மன்னிக்கவும், இந்த ROI அர்த்தமற்றது’ என்று சொல்வது மிகவும் நிச்சயமற்றதாக இருக்கும். ஆனால் ஒரு நிதித் தலைவர் கூறுவார், ‘குறுகிய காலத்தில், இம்முதலீடு அர்த்தமற்றதாக இருந்தாலும், எதிர்காலத்திற்கு இது அவசியமானது வாடிக்கையாளர்கள் அதை விரும்புகிறார்கள் அவர்கள் சொல்வதை நான் கேட்கிறேன். எனவே, இது எங்கள் வாடிக்கையாளர்களை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் நிலைக்கச்செய்யுமா? ‘அவர்கள் வணிகத்தில் மற்றவர்களுடன் இணையக்கூடியவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு விற்பனையாளரிடம் ‘எதிர்வரும் ஆண்டுகளில் நீங்கள் Trending ஆக எவற்றை எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் வாடிக்கையாளர்களை பொருத்தமட்டில் என்ன மாறுதல் இடம்பெற்றுள்ளது?’ போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும்.
அத்துடன் தலைமை தகவல் அதிகாரியிடம் ‘எமது வணிகம் தொடர்புடையதாக நிலைத்திருக்குமாறு எவ்வாறு தொழில்நுட்பத்தால் எம் வணிகத்தின் இயலளவை மாற்றியமைக்க முடியும்? என வினவ முடியும்.
“நிதித் தலைவர்களானவர்கள் அமைப்பின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய மற்றும் அமைப்பை நிலையானதாக நிலைத்திருக்க செய்யக்கூடிய ஒரு பயனுள்ள தளத்தை உருவாக்க மற்றும் தொடர்புகொள்வதற்கு தம்மைத்தாமே தேட வேண்டும்,. அவர்களே நிதித் தலைவர்கள்.”
- ஒரு நல்ல நிதித்தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் யாவை?
“’கற்றுக்கொள், மற, மீளக்கல்’ என்றொரு கூற்று உள்ளது. நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு தகுதி பெற்றேன். அதற்காக நான் அனைத்தும் அறிந்தவன் என்று அர்த்தம் அல்ல. 2017ல் வெளியான McKinseyன் ஆய்வுப்படி 2030ல் தமது வேலையை மாற்றாமலோ புதிய திறன்களை கற்றுக்கொள்ளமலோ இருக்கும் 375 மில்லியன் மக்கள் வேலையை இழப்பர். இப்போது அனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கிய திறன் யாதெனில் தேவையற்ற விடயங்களை மறந்துவிட்டு புதிய விடயங்களை காலத்திற்கு ஏற்ப கற்க வேண்டும்.”
“குழுப்பணி மற்றும் தகவல்தொடர்பு அனைத்தும் நாம் வாழும் உலகில் கொடுக்கப்பட்டவை. குழுப்பணி என்பது வெவ்வேறு நபர்களின் திறன்களை தங்களுக்காக வேலை செய்வதை விட அமைப்புக்காக போராடும் விதத்தில் பிரயோகிப்பதாகும்.
- தகுதிகொண்ட நிதித் தலைவர்கள் என்ன திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது செம்மைப்படுத்த வேண்டும்?
“CIMA இன் உள்ளடக்கத்தில், ஒரு முக்கியமான திறமை உள்ளது, அது எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்கும் மையத்தில் இருக்கும் – டிஜிட்டல் திறன்கள் ஆகும். தொழில்நுட்பம் நாம் செய்யும் அனைத்தையும் மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாங்கள் கவனித்தோம்.”
“டிஜிட்டல் திறன்கள் என்பது வணிகச் சூழலில் விஷயங்கள் எவ்வாறு மாறப் போகின்றன, வாடிக்கையாளருடன் விரைவாக இணைவது மற்றும் அந்த மாற்றங்கள் என்ன என்பதைக் கற்றுக்கொள்வது. நமது தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்தில் நம் உலகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் இப்போது எவ்வாறு மாறுகிறது, எமது வணிகத்திற்கு அது எவ்வாறு பங்களிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.”
“எனக்கு மக்கள் சார் திறமைகள் உள்ளன; ஆனால் மக்களுடன் இணைவதற்கு எனது டிஜிட்டல் திறன்களை எவ்வாறு பயன்படுத்துவது? எனக்கு வணிக திறன்கள் உள்ளன; ஆனால் வணிகத்தை நன்கு புரிந்துகொள்ள டிஜிட்டல் திறன்களை எவ்வாறு பயன்படுத்துவது? எனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்; ஆனால் தடையற்ற, திறமையான மற்றும் செலவு குறைந்த சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை நான் எவ்வாறு வழங்குவது?
“டிஜிட்டல் திறன்கள் முக்கியமான மற்றும் தவிர்க்க இயலாத ஒன்றாக தொடர்ந்து உருவாகிவிடும். ஆனால், உங்கள் பிற திறமைகள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தமல்ல. மையத்தில் உங்கள் டிஜிட்டல் திறன்களுடன் அவற்றை இணைக்கிறீர்கள் என்றே பொருள்.”
- இந்த புதிய வழமையை சமாளிக்க நிர்வாக கணக்கியல் துறை எவ்வாறு மாற வேண்டும்?
“நாங்கள் அதை என்றும் இளமையான ஒன்றாகவே கருதுகிறோம். எப்போதெல்லாம் அதாவது விஷயங்கள் வெளிப்புறமாக மாறுகிறதோ அப்போது எங்கள் பாடத்திட்டமும் மாறுகிறது. இது நிலையானது. என்றும் இளமை என்ற பதமானது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் கூட எங்கள் பாடத்திட்டம் காலத்திற்கேற்ற பொருத்தமானது மற்றும் வணிகத்திற்குத் தேவை என்பதை உறுதிசெய்வதற்கான ஒரு பதமாகும்.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாடத்திட்டங்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஒரு சுழற்சி வட்டம் இருந்தது. இப்போது, பாடத்திட்டம் எப்போதும் மாறக்கூடும், அந்த மாற்றத்தை மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்கலாம்.
எனவே, மாணவர்கள் நிர்வாகக் கணக்காளர்களாக வெளியே வந்து வேலை செய்யத் தொடங்கும் போது, நிகழும் மாற்றங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்.”
- ஒரு தொழிலாக நிர்வாக கணக்கியலின் தன்மை தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வதற்கேற்ற எளிதான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
“ஒரு தலைவர் மற்றும் நிர்வாக கணக்காளர் என்ற வகையில், உங்கள் குழுவிடம் நீங்கள் நிறுவ வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம் நம்பிக்கை.
“மக்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள், அலுவலகத்தில் இல்லை. எனது அழைப்புகளை நான் அதிகாலையில் ஆரம்பிப்பதில்லை, ஏனென்றால் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட எனது சக ஊழியர்களை நான் மதிக்கிறேன், பள்ளி நேரங்கள் மற்றும் வேலை நிலுவைகளை அறிந்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வேறு ஏதேனும் வேலை இருந்தால் அழைப்பை மறுக்கும் உரிமை உண்டு, பின்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம். அணிகளிடம் நம்பிக்கையை நிலைநாட்ட தலைவர்களாகிய நாங்கள் எங்கள் வழியிலிருந்து வெளியேற வேண்டும்.
“நீங்கள் அந்த நம்பிக்கையை ஒரு நிலைக்கு உயர்த்த வேண்டும், அங்கு உங்கள் தொடர்பு,மரியாதை மற்றும் நீங்கள் முன்வைக்கும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், அவர்கள் உங்களுடன் செய்யும் வேலையை அவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் செய்து தருகிறார்கள்.
“நீங்கள் தினமும் இதை நிர்வகிக்க தேவையில்லை. சில தலைவர்கள் சொல்வதில் ஒரு பெரிய முரண் உள்ளது.
“முக்கியமானது என்னவென்றால், உங்களுக்குத் தேவையானதை நல்ல தரத்தில் சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து பெறும் இயலுமை உங்களுக்கு இருக்க வேண்டும். எனவே, நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டியது ஊழியரின் மட்டத்தில் அல்ல, தலைவரின் மட்டத்தில் ஆகும். அதைச் செய்ய நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
“மேலும், அவர்கள் அவ்வாறு உங்களுக்கு தேவையானதை வழங்காதபோது நீங்கள் கடினமான உரையாடல்களைக் கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் உங்கள் நிலையை தெரிந்தெடுங்கள். உங்களுக்கு பச்சாத்தாபம் மற்றும் உணர்ச்சிசார் நுண்ணறிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் எவ்வாறான சூழலில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஒரு தலைவர் இந்த கட்டத்தில் நுண் மேலாண்மை அல்லது வெளிப்பாடுகளை விட நம்பிக்கையை வளர்ப்பதில் இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும். நீங்கள் விளைவுகளை நோக்கி பணிபுரிய வேண்டும். ஊழியர்கள் உந்துதல் பெற்றால்தான் முடிவின் தரம் நன்றாக இருக்கும்.”
- கற்றலை டிஜிட்டல் மயமாக்குவது அதை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுமா? அல்லது சவால்களையும் உருவாக்குகிறதா?
“கற்றலை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கிய விளைவு அல்லது நன்மை என்னவென்றால், நீங்கள் கற்றல் பயணத்தின் மீது இறுதி நுகர்வோர் கட்டுப்பாட்டைக் கொடுக்கிறீர்கள்.
“கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலானது அணுகலைத் தடைசெய்யாததால் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் கற்றுக்கொள்ள உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பயணிக்க தேவையில்லை. டிஜிட்டல் உலகில் கற்றலை டிஜிட்டல் செய்வது மற்றும் திறன்களை இயக்குவது மிகவும் செலவு குறைந்ததாக ஆக்குகிறது, ஏனெனில் நீங்கள் இருப்பிடத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.
“கல்வி மற்றும் கற்றலை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், வாடிக்கையாளர் அனுபவம் எல்லாவற்றையும் விட முக்கியமானது. நீங்கள் இப்போது எளிதாகக் கற்றுக் கொள்ளும் கணினியை அணுகுகிறீர்கள். அது அனைத்தையும் நிறைவு செய்யவும், வழங்கவும் உங்களை ஊக்குவிக்கிறது.” CGMA நிதி தலைமைத் திட்டம் ஜனவரி மாதம் இலங்கையில் தொடங்கப்படும்போது, அது உருவாக்கும் வித்தியாசமானதொரு உலகத்தை நீங்கள் காண்பீர்கள்.
- CIMA திட்டத்தில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கு ஏதேனும் ஆலோசனை உள்ளதா?
“நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையில் அச்சமின்றி இருங்கள். CIMA உறுப்பினர்கள் மக்களின் வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் சந்திக்கிறார்கள். நாங்கள் பாடநூல் கணக்காளர்கள் அல்ல. நாங்கள் நிதி அறிந்த வணிகத் தலைவர்கள், எங்களுக்கு அதிகாரம் அளிக்கும் திறன்கள் வணிக வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
“இப்போது, COVID-19 நாடுகளின் பொருளாதார அமைப்புகளைத் தாக்குகிறது, வணிக நம்பிக்கைகளை நிர்மூலமாக்குகிறது மற்றும் பொருளாதாரங்களில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறது. தன்னம்பிக்கை மற்றும் திறமையான மேலாண்மை மூலம் கணக்காளர்கள் ஒரு நிறுவனத்தை நிலையானதாகவும், லாபம் மற்றும் மதிப்பு சார்ந்ததாகவும் வைத்திருக்க முடியும். வணிகங்கள் மீளும்போது, பொருளாதாரங்கள் மீண்டு, நாடுகள் வளர்ந்து மேம்படுகின்றன. இது ஒருபோதும் உள்ளார்ந்து இருப்பது மற்றும் நாம் செய்வதைச் செய்வது போன்ற சூழ்நிலை அல்ல. CIMA உங்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் நம்பிக்கையை அளிக்கிறது, இதனால் அந்த முக்கியமான மாற்றங்கள் இறுதி முடிவு வரை தொடர் தாக்கத்தை விளைவிக்கும்.”