சாதாரண ஆடைகளையே விழாக்களுக்கும் பயன்படுத்தலாமா?

இந்த ஆக்கத்தை வழங்கியோர்

விழாக்கள், பண்டிகைகள், ஒன்றுகூடல்கள், இப்படியான கோலாகல நிகழ்வுகளுக்கு அழகு சேர்ப்பது அந்நிகழ்வுக்கான அலங்காரங்கள் மற்றும் அழகுக்கு அழகுசேர்த்தாப்போல் அங்கு வரும் பெண்கள்.

பண்டைய நாட்களிலிருந்து இன்றைய டிஜிட்டல் உலகு வரை விழாக்களுக்காக பெண்கள் செய்கின்ற ஏற்பாடுகள் மற்றும் அலங்கார ஒப்பனைகள் மாறவேயில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பெண்கள் அலங்காரம் செய்துகொள்ள ஆரம்பித்தால் ஒருவேளை கலந்துகொள்ளவேண்டிய விழாவே முடிந்துவிடும் என்று ஆண்டாண்டுகாலமாக ஆண்கள் கேலி செய்யும் அளவுக்கு தங்கள் அழகு, உடை மற்றும் ஒப்பனை மீதான பெண்களின் கரிசனம் அளவுகடந்தது.

கொடியிடை, நூலிடை, மெல்லிடையாள் என்றெல்லாம் இலக்கியங்கள் சொன்ன பெண்களை இன்று அதிகம் காணக் கிடைப்பதில்லை. அதற்கு இன்றைய பெண்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் மற்றும் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளை காரணம் காட்டலாம். பரம்பரை ரீதியாக மெல்லிய உடலமைப்பை கொண்டவர்களையும், உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்துபவர்களையும் தவிர பெரும்பாலான பெண்கள் தங்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் உடலமைப்பை பேண முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் திடீரென வருகின்ற நிகழ்வுகள், விழாக்களில் தங்கள் கற்பனைக்கேற்ற அழகிய உடைகளை அணிவதில் அவர்கள் வெற்றி காண்பதில்லை .

அதுமட்டுமன்றி, தேர்ந்தெடுக்கின்ற ஆடைகளை உரிய முறையில் அணிந்துகொள்வதில் உள்ள நுணுக்கங்களையும் பல பெண்கள் மறந்துவிடுகின்றனர். எங்கள் கற்பனைக்கேற்ற தேர்வுகளை உரிய முறையில் அணிந்து விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பிப்பது எப்படி? முன்பு குறிப்பிட்டதுபோல் அதற்கான நுணுக்கங்கள் என்ன? தேர்ந்த உடை வடிவமைப்புக்கள் உள்ளாடைகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. நீங்கள் அணிகின்ற உள்ளாடைகளின் வடிவமைப்பு, தோற்றம், கட்டமைப்பு போன்றவை உங்கள் ஆடையின் அழகிய தோற்றத்தில் பங்களிப்புச் செய்வதை நம்மில் பலர் கண்டுகொள்வதில்லை.

விழாக்களுக்கு தகுதாற்போல் உள்ளாடைகளை தேர்வுசெய்யும் உத்திகள் 5

ஆடையமைப்பு

எவ்வாறான ஆடைகள் எம்மை அழகாகக் காட்டும்? இது பல பெண்களும் எண்ணித் தவிக்கும் கேள்வி. ஒவ்வொரு விழாவின்போதும் தனக்கான ஆடையை தேர்வுசெய்வதில் பெண்கள் செய்கின்ற நேர விரயம் இதனாலேயே ஆகும். உண்மையில் தங்களுக்கு செளகரியமாக இருக்கின்ற ஆடைகளே எம்மை அடுத்தவர்க்கு அழகாகக் காட்டும் என்பது எழுதப்படாத உண்மை. ஒரு பெண் அணிந்துசெல்கின்ற ஆடை அவளது இயக்கத்திலோ, செளகரியத்திலோ இடர்பாடுகளை கொடுக்கும்போது அவளது உடல்மொழி மற்றும் ஆளுமைசார் குறைபாடுகளாக அவை வெளித் தெரியும். இங்கு ஆடை என்று சொல்லப்படுவது உள்ளாடைகளையும் சேர்த்தே!

எந்தவொரு விழாவும், பண்டிகையும் பெண்ணின் தனித்துவ இயல்பை மாற்றிவிடாது, அவரவரின் இயல்புக்கேற்ற செளகரியமான ஆடை வடிவமைப்புக்களை வெளிக்கொணர்தல் சிறப்பு

திருமண ஆடைகள்

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

இன்றைய காலகட்டத்தில் திருமணங்களின் கலாச்சாரங்கள் பெருமளவு மாறுபட்டு வருகிறன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது கலாசார முறைமைகளோடு கூடிய திருமண வைபவங்கோடு சேர்த்து, மாறுபட்ட கலாசார அமைப்பைக்கொண்ட வைபவங்களையும் கொண்டாட்டங்களையும்  பின்பற்றுவதை காண்கிறோம். அதுமட்டுமன்றி ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு உடையமைப்பையோ, நிறக்குறிப்பையோ அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கிறது. இந்நிலையில் மணப்பெண்களும், மணப்பெண் தோழிகளும் அணிகின்ற ஆடைகளுக்கும் அதன் வடிவங்களுக்கும் எல்லையே இல்லை எனலாம்.

குறிப்பாக திருமணங்கள் ஒரே நாளில் முடிந்துவிடும் நிகழ்வுகளல்ல. திருமண நாளுக்கு முன்னும் பின்னும் பல்வேறு சம்பிரதாய நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் எடுக்கப்படுவதுண்டு. இவையனைத்திற்கும் வெவ்வேறு விதமான ஆடை வடிவமைக்களும் பண்பாடுகளும் பின்பற்றப் படுவதனால் அந்தந்த ஆடைகளுக்கு ஏற்ற உள்ளாடைகளை பொருத்தமான முறையில் தேர்வுசெய்வதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கின்ற தோற்றத்தை அவை திறம்படக் கொண்டுவரலாம்

வெளித்தெரியாத உள்ளாடைகள்

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

எமது கலாசாரத்தைப் பொறுத்தவரை உள்ளாடைகளின் அமைப்போ பாகங்களோ வெளித்தெரிவதை பல பெண்கள் விரும்புவதில்லை. பொதுவாக எமது பெண்கள் உள்ளாடைகள் வெளித்தெரிவதை தவிர்க்கவே முயல்வர். இருந்தாலும் அணிகின்ற ஆடையின் தன்மை, துணிவகையின் மென்மை போன்றவை உள்ளாடைகளின் தோற்றத்தை வெளிக்காட்டுவதில் செல்வாக்குச் செலுத்தும். இறுக்கமான மற்றும் மெல்லிய துணிவகைகளிலான ஆடைகள் போன்றவற்றை அணியும்போது உள்ளாடைகள் பற்றிய கவலை பெண்களுக்கு ஓர் பெரும் தலைவலி எனலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வாறான ஆடைகளை செளகரியமாக அணிந்துகொள்ளும் வகையில் அதற்குப் பொருத்தமான உள்ளாடைகளை அறிந்து அணிந்துகொள்ளல் உங்களது தன்னம்பிக்கையையும் செளகரியத்தையும் உறுதிசெய்யும்.

உடலமைப்பு

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

சாதாரண நாட்களில் அணிகின்ற ஆடைகளை விழாக்களுக்கும் நாம் அணிவதில்லை. விழாக்களுக்கென்றே பல்வேறு வகையான, இன்றைய நாகரிகத்தோடு ஒத்துபோகின்ற ஆடைகளையே பெண்கள் தேர்வுசெய்ய விரும்புவர். அவ்வாறான ஆடைகள் உங்கள் உடலமைப்புக்கு பெரும்பாலும் பொருந்தாமல் போகலாம். சாதாரணமாக அழகாக தெரிகின்ற ஆடைகள் உங்கள் உடலமைப்பிற்கு பொருந்தாமல் போகின்றபோது நீங்கள் எதிர்பார்த்த அளவு அழகிய தோற்றத்தை பெறமுடியாமல் போகும். எந்தவிதமான ஆடை அணிகின்றபோதும், அவ்வாறான ஆடைகளை தேர்வுசெய்ய முன்னர், உங்கள் உடலமைப்பைப் பற்றிய தெளிவான அனுமானமும்  உங்களுக்கு இருத்தல் அவசியம்.

உடல் தோற்றத்தையும், அணிகின்ற உடையையும் ஒருசேர ஒருங்கிணைக்கும் வேலையை திறம்படச் செய்யக்கூடிய உள்ளாடைகள்  பற்றி பல பெண்கள் சிந்திக்கத் தவறுகின்றனர். இதனால் அணிகின்ற ஆடை தமது உடலமைப்புக்கு பொருந்தாது போகின்றபோது விழாக்களை எவ்வாறு முழுமையாக அனுபவிக்க இயலும்?

இடத்திற்கேற்ற உடை

IMAGE COPYRIGHT; MAS BRANDS (PVT) LTD (amanté)

பண்டிகைகளில் அணிகின்ற ஆடைகளை விழாக்களில் அணிய முடியாது, விழாக்களுக்கான ஆடைகளை ஒன்றுகூடல்களுக்கோ, விருந்துபசாரங்களுக்கோ அணிய முடியாது. இப்படி இடத்திற்கேற்ப அணிகின்ற ஆடைகள் வேறுபட்டுக்கொண்டே இருக்கும். அதுபோன்றே, ஆடைகளின் தன்மைக்கேற்ப அணிகின்ற உள்ளாடைகளும் மாறுபடும். ஒவ்வொரு சந்தற்பத்திற்கும், சூழலுக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உள்ளாடைகளும் மாறுபட்ட வண்ணமே இருக்கும்.  பல்வேறு அலங்காரங்கள், நிறங்கள், வேலைப்பாடுகளுடன்கூடிய உள்ளாடைகள் கூட்டங்கள், விருந்துபசாரங்கள், களியாட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலநிலை, நேரம், சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்வதன்மூலம் நீங்கள் பங்குகொள்கின்ற நிகழ்வை எவ்வித இடர்பாடுக்களுமின்றி முழு மனதோடும் இசைவாக்கத்தொடும் அனுபவிக்க முடியும்.

பெண்கள் பெரும்பாலும் தமது சுய தேவைகளை விடுத்து தனது குடும்பம், பிள்ளைகள், உறவினர்களின் செளகரியங்களையே அதிகம் கவனத்தில் கொள்வர். பண்டிகை விழாக்கள் என்று வரும்போது அவர்களது கடமைகள் பல மடங்கு இரட்டிப்படைந்துவிடும். அனைத்து ஆயத்தங்களையும் தலைமேல் போட்டுக்கொண்டு அனைவருக்காகவும் இயங்கும் பெண்ணின் இயல்பான அழகை மென்மேலும் மெருகேற்ற பெண்களே! மேற்சொன்ன விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்

மேலும் விபரங்களுக்கு https://global.amantelingerie.com/collections/bras என்ற இணையியைச் சுட்டவும்.

Featured Image : pixabay.com

Related Articles

Exit mobile version