கொரோனா தோன்றியது எப்படி என்று உலகம் நம்பும் 5 கோட்பாடுகள்

கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்கிற மர்மம் நிறைந்த கேள்வி, இன்று உலகம் முழுவதும் விதம்விதமான கோட்பாகுகள் கொண்ட விவாதத்தை தூண்டியுள்ளது. தொடக்கத்தில், வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட சதி என்றே கோட்பாடுகள் நிலவிவந்தன; இன்று, ஒரு இயற்கை வைரஸ் தற்செயலாக ஆராய்ச்சி மூலம் பரவியதா என்பது போன்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

பரவிவரும் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த 5 கோட்பாடுகளை இங்கே சுருக்கமாக விவரிக்கின்றோம்.

கோட்பாடு 1  – வௌவால் சூப்


சீனாவின் ஹூபே மாகணத்தில் உள்ள வெட் மார்க்கெட் எனப்படும் வுஹான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வௌவால் சூப் மூலம் கொரோனா பரவி இருக்கலாம். வௌவால் சிறுநீர் கலந்து இருந்த சூப்பினை யாராவது குடித்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போதும் சீனா அரசாங்கம் இந்த தகவலில் உறுதியாக இருக்கிறது.

கோட்பாடு 2 –  Bio War

இந்த வைரஸ் சீனா மூலம் பயோ வாருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும்.

ஜனவரி மாதம் சீனா, ஹூபே மாகாணத்தை முழுமையாக முடக்கிய நிலையில், அமேரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கையானது, முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் மேற்கொண்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஹூபேயின் தலைநகரான வுஹானில் “சீனாவின் உயிர்வேதியியல் திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்”என்று குறிப்பிடிருந்தது.

இக்கட்டுரையில், வுஹான் தேசிய உயிர் பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆகியவை உயிரியல் போரில் ஈடுபட்டுள்ளன என்று பரிந்துரைத்தது. இரண்டு நிறுவனங்களும் உண்மையானவை – அவை இரகசியமாக செயற்படுவதுவும் உண்மை – ஆனால் இந்தக் கோட்பாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதுவும் கவனிக்கபடவேண்டியது.

கோட்பாடு 3- ஆய்வக விபத்து

இந்த வைரஸ் பயோ ஆயுதமாக உருவாக்கப்பட்டு இருக்காது. ஆனால் சீனா தனது கட்டுப்பாட்டில் இருந்த ஆய்வகத்தில் இதை ஆராய்ச்சி செய்து வந்திருக்கலாம். அந்நிலையில் வுஹானில் இருக்கும் வைராலஜி சோதனை மையத்திலிருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம்.

வுஹான் உணவு சந்தையில் இருந்து சில மைல் தொலைவில் தான் மனிதனின் தொற்று நோய்களை ஆராய்ச்சி செய்யும் சீனாவின் ஒரே ஒரு (நான்காம் நிலை) உயிர் பாதுகாப்பு ஆய்வகம் அமைந்துள்ளது.

கோட்பாடு 4- இலாபம் உழைக்கும் திட்டம்

மேற்சொன்ன கோட்பாடுகளில் இருந்து வேறுபடும் ஒரு அதிர்ச்சிமிக்க கோட்பாடு இதுதான்.

உலகில் மருத்துவ துறையை கட்டுப்படுத்தும் சில கோடீஸ்வரர்கள் இந்த வைரஸை உருவாக்கி, தங்கள் இலாபம் உழைக்கும் நோக்கத்திற்காக பரப்பி விட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அமேரிக்க அதிபர் டிரம்பின் நண்பர் ரோஜர் இதன் அடிப்படியிலேயே உலகறிந்த கோடீஸ்வரர் பில் கேட்ஸ் மீது புகார் அளித்துள்ளார். இது போல பல கோடிஸ்வரகள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் மீது இப்படி கொரோனாவை உருவாக்கியதாக பலவித புகார் உள்ளது.

கோட்பாடு 5 – இயற்கையின் சதி

பலநாட்களாக உலக மக்கள் பலரது கவனத்தில் இருந்துவரும் கோட்பாடு இது.

இந்த வைரஸ் இயற்கையாக உருவாகி பரவி இருக்கலாம். உலகம் தன்னை தானே காத்துக்கொள்ள இது உருவாகியிருக்கலாம் என்பது பலரது விவாவதம் ஆகும். வேறு எங்காவது தோன்றி பின் வுஹான் நகரத்திற்கு வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீனாவும் இந்தக் கருத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளது.

எது எப்படியிருப்பினும் மேற்சொன்ன கோட்பாடுகள் எமக்கு ஒன்றை மட்டும் உறுதியாக நிரூபிக்கின்றது. ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது, பலர் அதை தடுப்பதை பற்றி எண்ணும் அதேசமயத்தில் அதற்காக குற்றம் சாட்டவும் யாரையாவது தேடுகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. பிழையிலிருந்து கற்றுக்கொள்வது ஒருதேவை என்றால், இது மீண்டும் நிகழாமல் தடுப்பதில் முன் ஆயத்தங்களை பேணுவது அதிமுக்கியம் ஆகும்.

Related Articles

Exit mobile version